தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தீவிர அரசியலில் ஈடுபடப் போவதால் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் இதுவே என் கடைசி படம் என அறிவித்த உதயநிதியின் ‘மாமன்னன்’ படம் இன்று ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
உதயநிதி தயாரித்து இருந்த இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் தொண்டர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு உருவானது.
இதற்கு இன்னொரு முக்கிய காரணம் மாரி செல்வராஜ் அமைத்த கூட்டணி தான். ஏ ஆர் ரகுமான் இசையில் பகத் ஃபாஸில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்ட பல திறமையான கலைஞர்கள் இந்த படத்தில் இணைந்திருந்தனர்.
இதற்கு முன் மாரி செல்வராஜ் இயக்கிய ‘பரியேறும் பெருமாள்’ மற்றும் ‘கர்ணன்’ ஆகிய இரு படங்களும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.
முக்கியமாக இவரது படத்தில் பேசப்படும் ஜாதி அரசியலும் சமூக நீதியும் பட்டியல் இனத்தவர் மத்தியில் பெரும் எழுச்சியை உருவாக்கியது.. இதனால் மாரி செல்வராஜுக்கும் தனி ரசிகர் வட்டம் உருவானது.
இந்த நிலையில் இன்று ‘மாமன்னன்’ ரிலீஸை முன்னிட்டு நெல்லையில் உள்ள ராம் சினிமாஸ் திரையரங்கில் உதயநிதிக்கு நிகராக மாரி செல்வராஜுக்கும் கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது.
தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்களுக்கு ரசிகர்கள் கட் அவுட் வைப்பதை பார்த்திருக்கிறோம்.
தற்போது தான் முதன்முறையாக ஒரு படத்தின் இயக்குனருக்கு கட் அவுட் வைக்கப்பட்டிருப்பது திரையுலகினர் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
Mari Selvaraj fans made huge cut out for Maamannan release