இளையராஜா இசையில் 3 கால கேரக்டர்களில் விஜித் & ‘செங்களம்’ ஷாலி நடிக்கும் படம்

இளையராஜா இசையில் 3 கால கேரக்டர்களில் விஜித் & ‘செங்களம்’ ஷாலி நடிக்கும் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

VAU MEDIA ENTERTAINMENT-ன் தயாரிப்பாளர் துரை வீரசக்தி தயாரிப்பில், பாலுமகேந்திரா மாணவர், அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கி வரும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’.

இதுவரையிலான தமிழ் திரை வரலாற்றில் சமூகத்தின் ஏற்றதாழ்வை, புரையோடி நிற்கும் முக்கிய பிரச்சனையை அழுத்தமாக சொல்லும் அற்புதமான படைப்பாக உருவாகி வருகிறது இப்படம்.

“பரியேறும் பெருமாள்”, “அசுரன்” என சமத்துவம் பேசும் தமிழ் சினிமாவின் அழுத்தமான படைப்புகளின் வரிசையில், செல்வத்திலும் கல்வியிலும் உயர்ந்தாலும், ஒருவன் எந்த இடத்தில் இருந்தாலும், மனதில் மேன்மையான எண்ணங்கள் கொண்டவனே உண்மையான சமத்துவ மனிதன்.

வெறும் பட்டங்களால் தன் பெயரை அலங்கரிப்பதை விட, நல்ல சிந்தனைகளால் மனதை அலங்கரிப்பவனே மேன்மையானவன். இப்படி சிந்தனை உள்ள ஒரு சாமானியனை பற்றிய கதைதான் இந்த திரைப்படம்.

இரு குழந்தைகளை காணவில்லை என ஆரம்பிக்கும் விசாரணை, பல அதிர்ச்சியான திருப்பங்களுக்குள் நம்மை இழுத்து செல்கிறது.

1998, 2000, 2022 என மூன்று காலகட்டங்களில் இப்படத்தின் கதை நடக்கிறது. இதற்காக படக்குழு அக்காலத்திய படங்கள் பத்திரிகை செய்திகளை ஆராய்ந்து, கடும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, நேரடி லொகேஷன்களில் தத்ரூபமாக அந்த காலகட்டத்தை திரையில் கொண்டு வருகிறார்கள்.

இப்படத்தில் நாயகனாக புதுமுகம் விஜித் நடிக்கிறார். 20, 23 மற்றும் 46 வயது உள்ளவராக தோன்றுகிறார். மூன்று காலகட்டத்தில் நடக்கும் கதை என்பதால் கடும் பயிற்சி எடுத்து, உடல் எடையை கூட்டி, மீண்டும் குறைத்து இப்படத்தில் மூன்று விதமான தோற்றங்களில் நடிக்கிறார்.

பல படங்களில் நடித்த பிறகுதான் இந்த மாதிரி பெரிய ரிஸ்காக உடல் எடையை குறைப்பது.. கூட்டுவது என முன்னணி நடிகர்கள் செய்வது வழக்கம். அதை புது முகமாகவே உற்சாகத்தோடு.. தோற்றத்தில் மட்டுமல்லாது நடிப்பிலும்.. படபிடிப்பில் கைதட்டல் பெறுகிறார்,நாயகன்.

நாயகன் மட்டுமல்லாது இப்படத்தின் நாயகி மற்றும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களுமே மூன்று காலகட்டங்களில் மூன்று வித தோற்றங்களில் நடிக்கிறார்.
நாயகியாக, செங்களம் வெப் சீரிஸ்’ல்
நாச்சியாராக நடித்து பலரது பாராட்டுகளை வாங்கிய ஷாலி நிவேகாஸ் நடிக்கிறார்.

விஜித், ஷாலி நிவேகாஸ் முக்கிய பாத்திரங்களில் நடிக்க, MIME கோபி, அருள்தாஸ், சுபத்ரா, விஜய் டிவி தீபா, சாய் வினோத் மற்றும் நடிகர் கதிரின் தந்தை லோகு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இத் திரைபடத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். சூப்பர் கிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் #விடுதலை படத்திற்கு பிறகு இந்தத் திரைப்படத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

விடுதலை இயக்குனர் வெற்றிமாறன் பாலுமகேந்திரா உதவியாளர். இப்படத்தை இயக்கிவரும் சிவபிரகாஷ், பாலு மகேந்திராவின் சினிமா பட்டறை மாணவர். பாலு மகேந்திராவின் இந்த இரு இயக்குனர்களுக்கு இளையராஜா இசை அமைப்பது குறிப்பிடத்தக்கது.

‘சத்தம் போடாதே’, ‘மூன்று பேர் மூன்று காதல்’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த JB தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ராமர், படத்தொகுப்பு செய்துள்ளார். இவர் ‘அசுரன்’, ‘விடுதலை’ போன்ற படங்களுக்கு படத்தொகுப்பு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. தரமான படைப்புகளை தந்து வரும், VAU MEDIA ENTERTAINMENT-சார்பில் தயாரிப்பாளர் துரை வீரசக்தி இப்படத்தை தயாரித்து வருகிறார்.

The film stars Vijith & ‘Sengalam’ Shali in 3 period characters

அம்பேத்கர் பற்றி சினிமாவில் சொல்வது உண்மையல்ல.; A PADAM விழாவில் திருமாவளவன் பேச்சு

அம்பேத்கர் பற்றி சினிமாவில் சொல்வது உண்மையல்ல.; A PADAM விழாவில் திருமாவளவன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எழுதியவர் டாக்டர் அம்பேத்கர்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓங்கி குரல் கொடுத்த தலைவர்களில் மிக முக்கியமானவர் இவர்.

தற்போது இவரது முதல் எழுத்தான A என்ற பெயரில் ஒரு படம் உருவாகி உள்ளது. இந்த படத்திற்கு A PADAM என்று தலைப்பிட்டுள்ளனர்.

ராஜகணபதி என்பவர் தயாரித்துள்ள இந்த படத்தை Casteless சிவா கோ இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஏப்ரல் 13-ஆம் தேதி இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற எம் பி யும் விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவருமான தொல் திருமாவளவன் கலந்து கொண்டார்.

மேலும் அந்த கட்சியின் துணைத் தலைவர் வன்னியரசு & நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் தொல் திருமாவளவன் பேசும்போது..

” இந்தப் படத்தின் தலைப்பை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை.. சொன்னால் சரி வராது. (A படம்)

சிவப்பு வண்ணத்தை காட்டினால் அது கம்யூனிசம் என்ற அளவிலே பொருள்பட்டு வருகிறது.

நடிகை இயக்குனர் லட்சுமி பேசும்போது இடதுசாரி கொள்கை குறித்து பேசி இருந்தார்.

அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து அகிம்சையை விரும்புவர்களே இடதுசாரி வாதிகள். நீங்கள் பேசியதும் இடது சாரியின் கொள்கைகள் தான்.

சினிமாவை பொறுத்த வரை ஒரு சேரி பகுதியை குறிப்பிட்டு காட்ட அல்லது தலித் சமுதாயத்தை காட்ட அவர்கள் அம்பேத்கரின் உருவப்படத்தை பயன்படுத்துகின்றனர்.

அம்பேத்கர் என்பவர் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் மட்டுமல்ல அவர் அனைத்து மக்களுக்குமான தலைவர்” என்று பேசினார் தொல் திருமாவளவன்.

Thirumavalavan speech at A PADAM function

400+ திரையரங்குகளில் ஆடவரும் ‘ருத்ரன்’ லாரன்ஸ்.; ரிலீஸ் கன்ஃபார்ம்

400+ திரையரங்குகளில் ஆடவரும் ‘ருத்ரன்’ லாரன்ஸ்.; ரிலீஸ் கன்ஃபார்ம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ருத்ரன்’ படம் தமிழ் புத்தாண்டு பண்டிகைக்கு ஏப்ரல் 14 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

‘ருத்ரன்’ தயாரிப்பாளர்கள் டப்பிங் உரிமை ஒப்பந்தத்தை 4 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் முடித்துவிட்டு, பிரச்சனையில் சிக்கியுள்ளனர்.

இப்படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கப்பட்டதா இல்லையா என்பது ரசிகர்கள் மத்தியில் புதிராக உள்ளது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ருத்ரன் படம் வெளியிடுவதற்கு தடை கோரி திருசஞ்சய் லால்வாணி நிறுவனத்தார் தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்நிலையில் இன்று ஏப்ரல் 13 பட தயாரிப்பாளர் கதிரேசன் நிறுவனத்தினர் நீதிமன்றத்தில் ஆஜராகி சஞ்சய் நல்வாணி நிறுவனத்தினர் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. இதனைஅடுத்து திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிக் கொண்டது கோர்ட்.

மேலும், ‘ருத்ரன்’ படத்தை தமிழகத்தில் 400 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

‘Rudhran’ to release on 400+ screens in Tamil Nadu

ஷாரூக் கான் – நயன்தாரா படகில் ரொமான்ஸ் செய்யும் வீடியோ லீக்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஷாரூக் கான் – நயன்தாரா படகில் ரொமான்ஸ் செய்யும் வீடியோ லீக்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

படத்தின் ஒரு பாடலில் முக்கியமான காதல் தருணத்தின் வீடியோ கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

SRK வெள்ளை நிறத்தில் இருந்தபோது நயன் சிவப்பு நிற உடையில் வசீகரமாக காணப்பட்டார்.

மும்பை கடற்கரையில் நடுக்கடலில் உள்ள சொகுசு படகில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது .

அட்லீ மற்றும் அவரது படக்குழு உறுப்பினர்கள் எப்படி, யார் சட்டவிரோதமாக வீடியோவைப் பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்தார்கள் என்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Shah Rukh Khan and Nayanthara romance on luxury boat, video leaked

THE EAGLE IS COMING ! லியோ படத்தில் நடிக்க இருக்கும் கமல் ஹாசன்

THE EAGLE IS COMING ! லியோ படத்தில் நடிக்க இருக்கும் கமல் ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லியோ படத்தின் கலை இயக்குனர் சதீஸ் குமாரின் சமீபத்திய சமூக வலைத்தள பதிவு வைரலாகி வருகிறது.

கமல் விரைவில் தனது ‘விக்ரம்’ அவதாரத்தில் லியோ படத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

சதீஸ்குமார் ஒரு தங்க கழுகின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அதில் “தி ஈகிள் இஸ் கம்மின்” என்று எழுதியுள்ளார்.

இது ‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசனுக்காக அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த தீம் பாடலாகும்.

LCU ரசிகர்கள் “code word” ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

The eagle ‘Vikram’ entering the ‘Leo’?

வெற்றியின் அடுத்த பட ரிலீஸ் அப்டேட்..; ஜி.பி. முத்துக்கு ‘பம்பர்’ கிடைக்குமா?

வெற்றியின் அடுத்த பட ரிலீஸ் அப்டேட்..; ஜி.பி. முத்துக்கு ‘பம்பர்’ கிடைக்குமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜீவி’ படத்தின் நடிகர் வெற்றி அடுத்ததாக பிக் பாஸ் சீசன்4 புகழ் நடிகை ஷிவானி நாராயணனுடன் இணைந்து நடித்துள்ள படம் ‘பம்பர்’.

இப்படத்தை இயக்குனர் முத்தையாவின் முன்னாள் உதவியாளரான எம் செல்வகுமார் இயக்குகிறார்.

இப்படத்தில் ஹரீஸ் பெரேடி, கவிதா பாரதி, ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வேதா பிக்சர்ஸ் சார்பில் எஸ் தியாகராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது.

இந்நிலையில், ‘பம்பர்’ படத்திற்கு தணிக்கை குழுவால் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

மேலும், ‘பம்பர்’ படத்தை மே மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

பம்பர்

Vetri & Shivani’s ‘Bumper’ censored

More Articles
Follows