தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து மாரடைப்பால் காலமானார்.
‘பரியேறும் பெருமாள்’, ‘ஜெயிலர்’, ‘இந்தியன் 2’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் ‘கண்ணும் கண்ணும்’, ‘புலிவால்’ உள்ளிட்ட 2 படங்களை இயக்கினார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் இவர் ஏற்ற குணசேகரன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒன்றாகும்.
இன்று காலை 8.30 மணியளவில் ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்த மாரிமுத்து திடீரென மாரடைப்பால் மயக்கம் போட்டு விழுந்துள்ளது மாரிமுத்துவின் உயிர் பிரிந்தது.
.
நடிகர் மாரிமுத்துவின் உடல், சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை, அவரது சொந்த ஊரான தேனிக்கு உடல் கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து நடிகர் மாரிமுத்துவிற்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில்,
“தம்பி மாரிமுத்துவின்
மரணச் செய்தி கேட்டு
என் உடம்பு ஒருகணம்
ஆடி அடங்கியது
சிகரத்தை நோக்கிச்
சென்றுகொண்டிருந்தவனை
மரணத்தின் பள்ளத்தாக்கு
விழுங்கிவிட்டது
என் கவிதைகளின்
உயிருள்ள ஒலிப்பேழை அவன்
என் உதவியாளராய் இருந்து
நான் சொல்லச் சொல்ல எழுதியவன்
தேனியில் நான்தான்
திருமணம் செய்துவைத்தேன்
இன்று அவன்மீது
இறுதிப் பூக்கள் விழுவதுகண்டு
இதயம் உடைகிறேன்
குடும்பத்துக்கும்
கலை அன்பர்களுக்கும்
கண்ணீரைத் துடைத்துக்கொண்டே
ஆறுதல் சொல்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.
Vairamuthu mourn the demise of actor Marimuthu