KILLER CAPTAIN MILLER HIGH LIGHTS உலகளவில் சிறந்த ஆக்டர் தனுஷ்.. குறை சொல்ற கூட்டம் சுத்திகிட்டே இருக்கு..

KILLER CAPTAIN MILLER HIGH LIGHTS உலகளவில் சிறந்த ஆக்டர் தனுஷ்.. குறை சொல்ற கூட்டம் சுத்திகிட்டே இருக்கு..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’.

சத்யஜோதி நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்

இந்த படம் ஜனவரி 12ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஃப்ரீ ரிலீஸ் ஈவன்ட் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சந்தீப் கிஷன் பேசியதாவது…

தனுஷ் அண்ணா ஃபேன்ஸுக்கு நன்றி. அவருக்கும் எனக்கும் இருக்கும் ரிலேஷன்ஷிப் தனித்துவமானது. ஒரு நடிகனாக அவருடைய தாக்கம் என்னிடம் நிறைய இருக்கிறது. நான் நடிகனாக ஆசைப்பட்ட போது, எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது செல்வா சார், தனுஷ் அண்ணா தான்.

என் மீது அவர் நிறைய நம்பிக்கை வைத்துள்ளார். அதைக்காப்பாற்றுவேன். என் வீட்டிலேயே என்னை நடிகனாக நம்பாதபோது, என்னை ஹீரோவாக நம்பி, ஃபர்ஸ்ட் செக் தந்த, சத்ய ஜோதி நிறுவனத்திற்கு நன்றி. சினிமா மேல் காதல் இருந்தால் தான் இப்படிப்பட்ட படம் செய்ய முடியும், அதற்காக சத்ய ஜோதி நிறுவனத்திற்கு நன்றி. தனுஷ் சார், அருண் மாதேஸ்வரனை நம்பி இப்படம் செய்ததற்கு நன்றி.

அருண் உழைப்பு மிகப்பெரிது. கேப்டன் மில்லருக்காக எல்லோருமே கடுமையாக உழைத்துள்ளனர். சிவராஜ்குமார் தங்க மனசுக்காரர், பிரியா ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு. எல்லோருமே காதலுடன் இப்படத்தைச் செய்துள்ளோம். இப்படம் உங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய ஆச்சரியம் தரும் நன்றி.

இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் பேசியதாவது…

கேப்டன் மில்லர், புது வருடத்தில் முதல் ஈவண்ட், மகிழ்ச்சி. தமிழ் சினிமாவும், இந்திய சினிமாவும், பெருமைப்படும் படைப்பாக இப்படம் இருக்கும். எல்லோரும் அவ்வளவு பெரிய உழைப்பைத் தந்துள்ளார்கள்.

சில படங்கள் செய்யும் போது தான் நாம் பெரிய, முக்கியமான படத்தில் வேலை செய்வதாகத் தோன்றும். இந்தப்படம் அந்த மாதிரியான படம். தனுஷ் சாருடன் பொல்லாதவனில் ஆரம்பித்த பயணம். ஒவ்வொரு தடவையும் இதற்கு அவார்ட் கிடைக்கும் என்று சொல்வேன், அதெல்லாம் தரமாட்டார்கள் என என்னைக் கிண்டல் செய்வார்.

ஆனால் ஆடுகளம், மயக்கம் என்ன, அசுரன் எல்லாம் செய்தவுடன், நிறைய விருதுகள் வாங்கி, கலக்கி விட்டார். இப்படத்தில் ரொம்ப புதுசாக ஒன்றைச் செய்துள்ளார். எல்லோருக்கும் பிடிக்கும். படம் ஒரு புதிய அனுபவமாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளர் T.G.தியாகராஜன் பேசியதாவது…

கேப்டன் மில்லர் படத்தைப் பற்றி எல்லோரும் நிறையச் சொல்லி விட்டார்கள். என்னுடைய சினிமா ஜர்னியில் நான் அட்மையர் பண்ணியது என்றால் ரஜினி சார் தான். அவருடன் 5 படங்கள் செய்தோம், அதற்குப் பிறகு, நான் அதிகம் ரசிக்கும் நடிகர் தனுஷ். அவருடன் 3 படங்கள் செய்துவிட்டோம், இன்னும் பயணம் தொடர்கிறது.

அருண் பற்றி முதலில் என் மகன் தான் சொன்னார். அவர் படம் ராக்கி பார்த்தேன், என்னைப் பிரமிக்க வைத்தது. பாரதிராஜா சாரை சந்தித்தபோது, அருண் மிகப்பெரிய திறமைசாலி என்றார். அந்த நம்பிக்கையில் தான் தனுஷ் சாரை அணுகினோம். அருண் ஹாலிவுட் தரத்தில் இப்படத்தைத் தந்துள்ளார்.

எங்கள் நிறுவனத்திலிருந்து பொங்கலுக்கு வந்த, விஸ்வாசம் படம் போல, இப்படமும் எங்களுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும். தனுஷ் சார் மிகக்கடின உழைப்பைத் தந்துள்ளார். சிவராஜ்குமார், சந்தீப், பிரியா அனைவருக்கும் நன்றி. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பேசியதாவது…

T.G.தியாகராஜன் சாருக்கு என் முதல் நன்றி. என்னை நம்பி இவ்வளவு பெரிய படம் செய்ததற்கு நன்றி. முதலில் நான் தேவதாஸ் என்ற கதை எழுதினேன், ஜீவிக்கு தெரியும், அந்தக்கதைக்கே தனுஷ் சாரைத்தான் அணுக முயற்சித்தேன் முடியவில்லை. ராக்கிக்கும் அவர் தான் மனதிலிருந்தார், ஆனால் நடக்கவில்லை.

இந்த வாய்ப்பு வந்த போது, உடனே இந்தக்கதையை அனுப்பி விட்டேன். என்னை நம்பி வந்துவிட்டார். ராக்கி வரும் முன்னரே படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார். அடுத்து இன்னும் ஒரு பெரிய படம் செய்யப்போகிறோம். நான் எந்தக்கதை எழுதினாலும், அவர் தான் முதன் முதலில் மனதில் வருகிறார். என்னை நம்பிய தனுஷ் சாருக்கு நன்றி.

ஜீவி எனக்கு மிகவும் நெருக்கம், அவரோடு படம் செய்தது மகிழ்ச்சி. சிவராஜ்குமார் சாரைச் சந்திக்கப் பெங்களூர் போனேன், அவரைப் பார்த்தது காட்ஃபாதர் பட அனுபவம் போல இருந்தது. அங்கு அவர் அப்படிதான் இருந்தார். தனுஷ் எனக்குப் பிடிக்கும், அவருக்காக நடிக்கிறேன் என்று நடிக்க வந்தார். அவர் ஒரு ஸ்டார், ஆனால் எங்களை எல்லாம் ஈஸியாக வைத்துக் கொண்டார். பிரியங்காவிற்கு முதல் நாள் ஷீட்டிங்கிலேயே, துப்பாக்கி தந்துவிட்டோம், பயந்து விட்டார். கொஞ்ச நாளில் பழகிவிட்டார், அட்டகாசமாக நடித்துள்ளார்.

படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும், நன்றி.

நடிகர் சிவராஜ்குமார் பேசியதாவது…

T.G.தியாகராஜன் சார், அர்ஜூன் எல்லோருக்கும் நன்றி. அருண் வந்து கதை சொன்ன போதே, தனுஷ் சார் நடிக்கிறாரா? நான் நடிக்கிறேன் என்று சொன்னேன். அவரை முதல் படத்திலிருந்தே எனக்குப் பிடிக்கும். சிம்பிள், சூப்பர் ஆக்டர் என்றால் அவர்தான். எப்போதும் அவர் படங்கள் நிறைய முறைப் பார்ப்பேன்.

இந்தபபட ஷீட்டிங் செம்ம ஜாலியாக இருந்தது. அவருக்காக எப்போதும், நான் நடிக்க தயார். இந்தியாவில் மட்டும் இல்லை, உலக அளவில் சிறந்த ஆக்டர் தனுஷ். இப்படத்தில் சந்தீப், பிரியங்கா எல்லோரும் நன்றாக நடித்துள்ளார்கள். ஜீவி பிரகாஷ் சூப்பராக மியூசிக் செய்துள்ளார். உங்கள் எல்லோருக்கும் இந்தப்படம் கண்டிப்பாகப் பிடிக்கும். கொண்டாடுவீர்கள் அனைவருக்கும் நன்றி.

நடிகர் தனுஷ் பேசியதாவது…

சிறு துளி பெரு வெள்ளம், 2002 லிருந்து சேர்த்த துளிகள், ரசிக பெருவெள்ளமாக வந்துள்ளது. உங்களால் தான் நான். கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்.

இந்தப்படம் பற்றி யோசித்தால் மனதில் வருவது உழைப்பு. அசுரத்தனமான உழைப்பை, அனைவரும் தந்து உருவாக்கிய படம். வேர்வை சிந்தி, இரத்தம் சிந்தி, உருவாக்கிய படம். உண்மையில் அருண் மாதேஸ்வரன் தான் இந்தப்படத்தின் டெவில்.

அவரும் அவர் டீமும் கொடுத்த உழைப்பைப் பார்த்த பிறகு, நான் பட்ட கஷ்டமெல்லாம் ஒன்றுமே இல்லை. நான் நிறைய புது இயக்குநரோடு வேலை பார்த்திருக்கிறேன். அருண் மாதேஸ்வரனை பார்க்கும் போது, எனக்கு வெற்றிமாறன் ஞாபகம் தான் வருகிறது. அருண் முதன் முதலில் பார்க்கும் போது, காதில் கம்மல் எல்லாம் போட்டுக்கொண்டு ஆடிடியூட்டோடு இருந்தார். என்ன இவர் இப்படி இருக்கிறார்? என்று தோன்றியது. கதை சொன்னார், இது எல்லாம் பண்ண முடியுமா ? என சந்தேகம் வந்தது. அவரிடமே பண்ண முடியுமா எனக்கேட்டேன், ம்ம்… பண்ணலாம் சார் என்றார்.

இப்போது படம் பார்க்கும் போது தான் அதன் அர்த்தம் புரிகிறது. படத்தில் மிரட்டியிருக்கிறார். பொல்லாதவன் படத்தில் தான் எனக்கு ஜீவி அறிமுகம், அங்கு ஆரம்பித்த பயணம். எனக்காக சூப்பர் ஹிட் சாங்ஸ் நிறைய பண்ணிவிட்டார். எப்போது போன் செய்தாலும், சொல்லு மச்சான் என ஓடி வருவார், ஜீவி ஐ லவ் யூ. சிவராஜ்குமார் சார் என்னோட ஃபேன் எனச் சொல்லிக்கொண்டே இருக்கிறார், அவரது பண்புக்கு, பணிவுக்கு நான் அடி பணிகிறேன். அப்பா பெயரைக் காப்பாற்றுவது எப்படி என்று, உங்களைப் பார்த்துத் தான் கற்றுக்கொள்ள வேண்டும். இப்படி ஒரு படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்க, மிகப்பெரிய ஆதரவு தந்த, சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் சாருக்கு நன்றி. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் சார், திலீப் சார் இருவரின் உழைப்பும் மிகப்பெரிது. கேப்டன் மில்லர் லுக்கை உருவாக்கிய திவ்யாவுக்கு நன்றி. கேப்டன் மில்லர் என்பதன் டேக் லைன், மரியாதைதான் சுதந்திரம் என்பதாகும். ஆனால் இங்கே எதற்கு மரியாதை இருக்கிறது?, எதற்குச் சுதந்திரம் இருக்கிறது?. எது சொன்னாலும், எது செய்தாலும், இங்குக் குறை சொல்ல கூட்டம் சுற்றிக்கொண்டே இருக்கிறது. ஏன் என்றே புரியவில்லை. ஒரு சின்ன கூட்டம், இதை செய்துகொண்டே இருக்கிறது. அதைப்பற்றி கவலைப்படாமல் நம் வேலையைச் செய்வோம். கேப்டன் மில்லர் ஒரு உலகப்படமாக இருக்கும். ரொம்ப புதிதான படமாக, உங்களுக்குப் பிடிக்கும் படமாக இருக்கும். எனக்காக இங்கு வந்த மாரி செல்வராஜ் சாருக்கு நன்றி. ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.

இப்படத்தில் தனுஷ், பிரியங்கா மோகன் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

“கேப்டன் மில்லர்” படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்குகிறார் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். இப்படத்தை G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார். இப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 12 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Captain Miller Pre Release Event highlights

நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர்.; அஞ்சலி செலுத்திய சசிகுமார் பேட்டி

நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர்.; அஞ்சலி செலுத்திய சசிகுமார் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஆண்டு 2023 டிசம்பர் 28ஆம் தேதிமுக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் காலமானார்.

அவரது மறைவு திரையுலகத்தில் மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் பெரும் இழப்பை சந்தித்தது என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் ஒரு ஷூட்டிங்ல் கலந்து கொண்டு சசிகுமார் அப்போது வர இல்லாத காரணத்தினால் தற்போது விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

விஜயகாந்த்

அதன் பின்னர் அவர் பேசியதாவது..

மறைந்த புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய இல்லத்திற்கு இயக்குநர் சசிக்குமார் அவர்கள் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு அன்னாரின் புகைப்படத்தை வணங்கி புகழ் அஞ்சலி செலுத்தினார்!

தேமுதிக தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் பேசியதாவது நடிகர் சங்க‌ கடனை அடைத்து மீட்டெடுத்த மிகப்பெரிய ஆளுமை கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பெயரை புதிய நடிகர் சங்க கட்டிடத்திற்கு சூட்ட வேண்டும் என்று இயக்குநர் சசிக்குமார் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

விஜயகாந்த்

Vijayakanth name for Nadigar Sangam new building says sasikumar

பான் இந்தியா ஹீரோவாகிறார் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின்.; தயாரிப்பாளர் இவரா.?

பான் இந்தியா ஹீரோவாகிறார் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின்.; தயாரிப்பாளர் இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

*ட்ரெண்ட்ஸ் சினிமாஸ் திரு ஜெ.எம். பஷீர் & எம்.டி சினிமாஸ் திரு. ஏ.எம் சௌத்ரி தயாரிக்க பான் இந்தியா திரைப்படத்தில் இயக்குனர் மா வெற்றி இயக்கத்தில் ஹீரோவாக ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெயின் நடிக்கிறார்.

ட்ரெண்ட்ஸ் சினிமாஸ் திரு ஜெ.எம். பஷீர் & எம்.டி சினிமாஸ் திரு ஏ.எம் சௌத்ரி தயாரிக்க, இயக்குநர் மா.வெற்றி இயக்கத்தில் பான் இந்திய ஆக் ஷன் (Action) திரைப்படமாக உருவாகும் பிரம்மாண்டமான ஆக்சன் திரைப்படத்தில், பிரபல ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெயின் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

விரைவில் துவங்கவுள்ள இப்படத்தின் அறிவிப்பை வெளியிடும் விதமாகப் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வினில் ..

*ட்ரெண்ட்ஸ் சினிமாஸ் தயாரிப்பாளர் திரு ஜெ.எம். பஷீர் கூறியதாவது…*

என்னை உங்களுக்குத் தெரியும். தேசியத் தலைவர் முத்துராமலிங்கத் தேவர் படத்தில் நடித்துள்ளேன், விரைவில் அப்படம் திரைக்கு வரவுள்ளது.

நானும் என் நண்பர் சௌத்ரியும் இணைந்து மாஸ்டர் பீட்டர் ஹெயினை வைத்து ஒரு பிரம்மாண்ட ஆக்சன் படம் எடுக்க வேண்டும் எனப் பல காலமாகப் பேசி வந்தோம். இந்தியாவில் உருவான பாகுபலி, ஆர் ஆர் ஆர் போன்ற படங்களில் மாஸ்டரின் பங்கு உள்ளது.

உலகளவில் இந்திய சினிமாவை அறிய வைத்தவர் அவரை கௌரவிக்க வேண்டும் என ஆசைப்பட்டோம். இவரை வைத்து பெரிய அளவில் நானும் நண்பர் சௌத்ரியும் இணைந்து ஒரு படத்தைத் தயாரிக்கவுள்ளோம்.

படம் மிகப்பெரும் பொருட்செலவில் முன்னணி கலைஞர்களுடன் உருவாகவுள்ளது. விரைவில் அது பற்றிய தகவல் அனைத்தும் விரைவில் அறிவிப்போம். இப்படத்தைப் பற்றிய செய்தியை உங்களிடம் பகிர்ந்துகொள்வது மகிழ்ச்சி.

பீட்டர் ஹெயின்

*எம்.டி சினிமாஸ் தயாரிப்பாளர் ஏ.எம் சௌத்ரி கூறியதாவது…*

எங்களுக்கு இயக்குனர் வெற்றியை ரொம்ப காலமாகத் தெரியும். அவர் மாஸ்டரை கவரும்படி ஒரு கதையைச் சொல்லியுள்ளார். சினிமாவில் உலகளவில் மொழிகள் தாண்டி ரசிக்கப்படுவது ஆக்சன் படம், காமெடிப்படம். அந்த வகையில் மாஸ்டரை வைத்து பெரிய ஆக்சன் படம் தயாரிக்கவிருக்கிறோம். முன்னதாக பஷீர் அவர்களுடன் இணைந்து ஒரு படம் தயாரித்தோம். எந்த ஒரு பணியையும் நான் அவருடன் இணைந்து தான் செய்வேன், அவருடன் இணைந்து இப்படத்தைச் செய்யவுள்ளோம். உலகமே வியக்கும் சாதனைகள் செய்த மாஸ்டர் உடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. படம் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

*இயக்குநர் மா.வெற்றி கூறியதாவது..*

எனக்கு ஹாலிவுட் படங்கள் மீது அதிக விருப்பம், அதே போல ஒரு தமிழ்ப்படம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் ஒரு கதை எழுதினேன். மாஸ்டர் நடித்தால் நன்றாக இருக்குமென்று அவரை அணுகினேன், என்னிடம் கதை கேட்டார். உடனே நடிப்பதாகச் சொல்லி, படத்திற்காக அவரே நிறைய விசயங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டார். இப்படத்தில் மாஸ்டருடன் இணைந்து வேலை செய்வது மகிழ்ச்சி.

*ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் கூறியதாவது…*

வெற்றி முதலில் ஒரு ஐடியாவாகத்தான் இதைச் சொன்னார், யார் ஹீரோ என்றேன் நீங்கள் தான் நடிக்கனும் என்றார். நான் முதலில் நடிக்கவில்லை என்றேன். இந்தப்படத்திற்கு நீங்கள் தான் பொருத்தமாக இருப்பீர்கள் என்றார். நீங்கள் எத்தனை ஹீரோக்களுக்கு சொல்லித் தந்திருக்கிறீர்கள் உங்களை மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்றார். எனக்கும் சரியென்று தோன்றியது. முதலில் கதையில் நிறைய மாற்றங்கள் செய்தோம். நான் இதுவரை செய்த வேலைகளில் நேர்மையாக இருந்திருக்கிறேன். இந்தப்படத்தில் நான் என்னால் முடிந்த அளவு சிறப்பாக பணியாற்றுவேன். சௌத்ரி சார், பஷீர் இருவரும் என்னை முழுமையாக நம்பி வந்துள்ளனர். அவர்களுக்கு வெற்றி தரும் படைப்பாக இப்படத்தை அர்ப்பணிப்போடு உருவாக்குவோம். படத்தைச் சிறப்பாகக் கொண்டு வர ஒவ்வொன்றையும் மிக கவனமாகச் செய்யவுள்ளோம்.

இப்படத்தில் காட்டுவாசியாக நடிக்கிறேன், இது புதுமையான ஆக்சன் படமாக இருக்கும் இப்படத்தில் நடிக்கத் தனியாகப் பயிற்சி எடுத்து வருகிறேன். இப்படம் மற்ற மொழிகளிலும் வெளியாக உள்ளது.. தமிழ் சினிமாவில் எல்லா கலைஞர்களுடன் நான் வேலை பார்த்துள்ளேன் அனைவரின் ஆசீர்வாதம் எனக்கு இருப்பதாக நம்புகிறேன். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இப்படத்தில் இசையமைப்பாளராக பணியாற்ற இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் அவர்களைப் படக்குழுவினர் அணுகவுள்ளனர். மேலும் படத்தில் முன்னணி நட்சத்திரங்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றவுள்ளனர்.

அது பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

பீட்டர் ஹெயின்

New movie featuring Stunt Director Peter Hein as Hero

சர்வதேச திரைப்பட விழாவில் லைம்லைட் பிரிவின் கீழ் ‘விடுதலை 1 & 2’

சர்வதேச திரைப்பட விழாவில் லைம்லைட் பிரிவின் கீழ் ‘விடுதலை 1 & 2’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எல்ரெட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘விடுதலை’ படம் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது.

குறிப்பாக ‘விடுதலை 1’ வெளியானதில் இருந்து உலகளவில் பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றது.

ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது, பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இந்தப் படம் ஏராளமான பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இப்போது, இது அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. ‘விடுதலை- பார்ட் 1’ மற்றும் ‘விடுதலை- பார்ட் 2’ ஆகிய இரண்டும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 3 ஆம் தேதிகளில் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ‘லைம்லைட் (LIMELIGHT)’ பிரிவின் கீழ் திரையிடப்பட இருக்கிறது என்பதை ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். இந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் எல்ரெட் குமார், நடிகர் விஜய்சேதுபதி மற்றும் சூரி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இதுகுறித்து ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் பகிர்ந்து கொண்டதாவது…

“ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா போன்ற உலகின் மிகவும் மதிப்புமிக்க நிகழ்வுகளில் ’விடுதலை’ படம் மூலம் நமது இந்தியத் திரையுலகைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எங்களுக்கு பெருமையும் மரியாதையும் ஆகும். நன்மதிப்பு பெற்ற ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் தங்களது படத்தையும் திரையிட வேண்டும் என்பது சினிமாவில் பலருடைய கனவு. இந்த வாய்ப்பு இப்போது எங்களுக்கு கிடைத்திருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது எங்களுக்குக் கிடைத்த வெற்றியாக கருதுகிறோம். பல நம்பிக்கையூட்டும் கதைகள் தமிழ் சினிமாவில் வெளிவந்து வெற்றிப் பெற்றுள்ளது. இது சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. இந்த வரிசையில் ‘விடுதலை பார்ட் 1 & பார்ட் 2’ திரைப்படமும் இணைந்திருப்பது எங்களுக்கு எல்லையில்லாத மகிழ்சியைக் கொடுக்கிறது.

இதில் இயக்குநர் வெற்றிமாறனின் மிடாஸ்-டச் மொழி, பிராந்தியம் போன்ற தடைகளைத் தாண்டி, உலகளவில் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. விஜய்சேதுபதி, சூரி மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினரின் நிபந்தனையற்ற கடின உழைப்புக்கும் ஆதரவிற்கும் நன்றி” என்றார்.

கடந்த மார்ச் 31, 2023 அன்று வெளியான ’விடுதலை- பார்ட்1’ வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பாராட்டைப் பெற்றது.

நடிகர்களின் திறமையான நடிப்பு, இசைஞானி இளையராஜாவின் மாயாஜால இசை மற்றும் சிறந்த தொழில்நுட்பப் பணிகள் என இந்தப் படத்தில் அனைத்தும் அற்புதமாக அமைந்துள்ளது.

இந்த வருடம் 2024, கோடை விடுமுறையில் ’விடுதலை- பார்ட் 2’ படத்தை உலகம் முழுவதும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் எல்ரெட் குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.

Viduthalai 1 and 2 movies will be screened at International film festival

கலைஞர் 100 விழா : ஆறாம் தேதி.. ஆல் இந்தியா ஸ்டார்ஸ்.. ஆறு மணி நேரம்.. அசத்தலான ஏற்பாடு!

கலைஞர் 100 விழா : ஆறாம் தேதி.. ஆல் இந்தியா ஸ்டார்ஸ்.. ஆறு மணி நேரம்.. அசத்தலான ஏற்பாடு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரை உலகில் தனது வசீகரமான வசனத்தால் மக்களை சிந்திக்க வைத்த அற்புதமான வசனகர்த்தா டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி நூற்றாண்டு விழாவினை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் அனைத்து திரை உலக சங்கங்களும் இணைந்து வரும் 06.01.2024 சனிக்கிழமையன்று சென்னையில் கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கோலாகலமாக கொண்டாடுகிறது.

இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்கள் கலைஞானி கமல்ஹாசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தமிழ்திரை உலகின் முன்னணி நட்சத்திரங்கள் தெலுங்கு பட உலகிலிருந்து சிரஞ்சீவி, வெங்கடேஷ் , மலையாள பட உலகிலிருந்து மம்முட்டி, மோகன்லால், கன்னட பட உலகிலிருந்து சிவராஜ்குமார் மற்றும் இந்தி திரை உலகிலிருந்து முன்னணி நட்சத்திரங்கள் என அனைத்து மொழி நட்சத்திரங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

கலைஞர் 100 விழா

ஆறுமணி நேரம் நடைபெற இருக்கும் இந்த விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், கலைஞர் வசனம் தீட்டிய, பாடல்கள் எழுதிய படங்களில் இருந்து பல புதுமையான காட்சி அமைப்புகள் , கலைஞரை பற்றி இதுவரை வெளிவராத தகவல்கள் அடங்கிய ஆவண படங்கள் என பல தரப்பட்ட பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சிகள் மேடையில் மக்களுக்கு காட்டப்பட உள்ளன.

இந்த விழாவிற்காக டெல்லியில் இருந்து ட்ரோன்கள் வரவழைக்கப்பட்டு பிரமாண்டமான ஷோக்கள் பரவசப்படுத்த உள்ளன.

கலைஞர் 100 விழா

இந்த விழவிற்காக 50க்கும் மேற்பட்ட முன்னனி இயக்குனர்கள், 20 க்கும் மேற்பட்ட நடன மாஸ்டர்கள் ரிகர்சல் பார்த்து வருகின்றனர்.

இந்த பிரம்மாண்டமான விழாவிற்காக மிகப்பெரிய மேடை’ 20 ஆயிரம்பேர் அமர்ந்து பார்க்க நாற்காலிகள், 50க்கும் மேற்பட்ட டிஜிட்டல் திரைகள் என வேலைகள் மும்முரமாக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மேற்பார்வையில் , பெப்சி பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

“கலைஞர் – கலைஞர் — 100” விழா குழு

கலைஞர் 100 விழா

All arrangements set for Kalaignar 100 function on 6th Jan 2024

என்னை வெறுப்பவர்களுக்கு பதில் இல்ல.. ஆர்த்தி போல ஒருவர் இருப்பதுதான் காரணம்.. – சிவகார்த்திகேயன்

என்னை வெறுப்பவர்களுக்கு பதில் இல்ல.. ஆர்த்தி போல ஒருவர் இருப்பதுதான் காரணம்.. – சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது….

“இந்த மேடை நிறைய வகையில் ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். ’அயலான்’ வருமா வந்துவிடுமா எப்போ வரும் என்று கேள்வி வரும். பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இன்னொரு படம் ஈசியா பண்ணிவிடலாம். இது இவர்களை தாண்டி பெரிய ஆள் ஆக வேண்டும் என்று நினைத்து பண்ணியதில்லை.

இந்தப் படம் தொடங்கும் முன் பான் இந்தியா இல்லை. இது தமிழ் மக்களுக்காக பண்ணியது. நாம ஆசைப்பட்ட படம் கண்முன் தெரிகிறது. இதில் நாமும் நடித்துள்ளோம் என்பதில் சந்தோஷமாக உள்ளது. இதில் சரக்கு, புகை பிடித்தல், கிளாமர், போதைப் பொருள் கிடையாது. குழந்தைகளுக்கான விஷயங்கள் இருக்கும்.

ஏஆர் ரஹ்மானின் வெறித்தனமான ரசிகர்களில் நானும் ஒருவன். என் படத்தில் ரஹ்மான் இசை வருது என்பதை விட எனது வாழ்க்கையில் வேறு என்ன இருக்கு. படத்தை பார்த்து முதலில் சூப்பர் என்று சொன்னவர் ஏஆர். ரஹ்மான். டீசரை விட ட்ரெய்லர் இன்னும் நன்றாக இருக்கும். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். அன்பறிவு மாஸ்டர்ஸ் போல, நானும் இரட்டையராக இருந்தால் நான் ஒருபடமும் அவர் ஒரு படமும் போய் இரட்டை சம்பளம் வாங்கலாம். எங்க ஒரு படத்திற்கு போனாலே சம்பளம் தரமாட்டேங்குறாங்க.

ரஹ்மான் சார் இசையில் நான் பாடல் எழுதியுள்ளேன். அந்த அனுபவம் மிகவும் சுவாரசியமானது. இப்படத்தில் அயலானாக நடித்த வெங்கடேஷ் நாயகனாக நடித்துள்ள மதிமாறன் திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது அவருக்கும் வாழ்த்துகள். பாய்ஸ் படத்தில் சித்தார்த் அத்தனை அழகாக இருப்பார். அயலானுக்கு குரல் கொடுத்த சித்தார்த்துக்கு நன்றி. பணம் வாங்காமல் பண்ணிக் கொடுத்தார்.‌ இதுபோன்ற படங்கள் வருவது அபூர்வம்.

ஆரம்பத்தில் இருந்து இப்படத்தின்‌ மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. இப்படம் நிச்சயம் உங்களை சந்தோஷப்படுத்தும். நீங்கள் என்னை அண்ணா என்று சொல்கிறீர்கள். சிலர் திட்டுவார்கள். நடிப்பு வரவில்லை என்பார்கள். அதை நான் காதில் வாங்குவதில்லை. என்னை பிடித்தவர்களுக்கு, அவர்களுக்கு பிடித்த படத்தை தொடர்ந்து பண்ண வேண்டும் என்று ஆசை.

என்னை வெறுப்பவர்களுக்கு நான் பதில் கூட சொல்ல விரும்பவில்லை. இந்த படத்துக்கு நான் உதவி செய்தேன் என்கின்றனர். சம்பளம் வாங்காததற்கு ஆர்த்தி மாதிரி ஒருவர் எனக்கு இருப்பதுதான் காரணம். இப்படத்திற்கு பிரச்சினை வரும்போது நம்ம ரவிக்குமார் அண்ணன்தானே என்றார். ’டாக்டர்’ சமயத்திலும் நம்ம நெல்சன் அண்ணன்தானே என்றார். ’கனா’ படத்துக்கும் அப்படியேதான்.

எல்லோரும் கொடுத்த தைரியம் தான் இப்படத்தை இங்கு கொண்டு வந்து நிறுத்த வைத்துள்ளது. கஷ்டப்பட்ட எல்லோருக்கும் இது ஒர்த் என்று தோன்றும். பணம் கொடுத்து பார்க்கும் அனைவருக்கும் இது ஒர்த் என்று தோன்றும். எனது மகன் குகன் முதலில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இதுதான். ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நான் நடிக்கும் படம் அடுத்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளோம். ராஜ்குமார் பெரியசாமி படம் ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. இதனை முடித்துக்கொண்டு பக்கா மாஸ் என்டர்டெயின்மென்ட் படம் பண்ண உள்ளேன்” என்றார்.

I dont want give reply for my haters says Sivakarthikeyan

More Articles
Follows