ilaiyaraja Biopic : தனுஷ் படத்தில் கெஸ்ட் ரோலில் இணையும் ரஜினி – கமல்?

ilaiyaraja Biopic : தனுஷ் படத்தில் கெஸ்ட் ரோலில் இணையும் ரஜினி – கமல்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவில் ஈடு இணையற்ற இசையமைப்பாளர் இளையராஜா. இவர் இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார்.

எனவே இவரது வாழ்க்கை படத்தை திரைப்படமாக தயாரிக்க முடிவு செய்து இருந்தார் பாலிவுட் இயக்குனர் பால்கி.

இளையராஜாவின் வாழ்க்கை படத்தில் இளையராஜாவாக நடிக்க இருப்பவர் நடிகர் தனுஷ் என்பது நமக்குத் தெரிந்த செய்திதான்.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கியமான சிறப்பு தோற்றத்தில் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இவர்கள் இளையராஜாவிற்கு நெருக்கமான நண்பர்கள் என்பதும் ரஜினி, கமல் வாழ்வில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் இளையராஜா தந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதுவரை இது குறித்து அதிகாரப்பூர் அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Rajini Kamal will join in ilaiyaraja Biopic

காளிதாஸ் உடன் நடிக்க யோசிக்கனும்.. அவருக்காக மன்னிப்பு கேட்கிறேன்.. – அர்ஜுன் தாஸ்

காளிதாஸ் உடன் நடிக்க யோசிக்கனும்.. அவருக்காக மன்னிப்பு கேட்கிறேன்.. – அர்ஜுன் தாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் நாயகர்களாக நடித்திருக்கும் திரைப்படம் “போர்”.

டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், மெர்வின் ரொஸாரியோ மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இத்திரைப்படம் தமிழ் ஹிந்தி என இரட்டை மொழிகளில் வரும் மார்ச் 1 முதல் வெளியாகவிருக்கிறது.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற

*இயக்குநர் பிஜோய் நம்பியார் பேசியதாவது,*

“போர்” திரைப்படம் ஒரு நேரிடையான தமிழ்ப்படம் எடுக்க வேண்டும் என்பதற்கான என்னுடைய மூன்றாவது முயற்சி ஆகும். ஷோலோ திரைப்படத்தையும் அந்த எண்ணத்தில் தான் உருவாக்கினேன். ஆனால் அதை தியேட்டர்களில் வெளியிட முடியாமல் போயிற்று. பந்த் போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் வந்து அதை தடை செய்துவிட்டது. ”போர்” திரைப்படம் ஒரு முழுமையான தமிழ்ப்படம். இதில் நடித்திருக்கும் முக்கிய நடிகர்கள் மற்றும் துணை நடிகர்கள் அனைவருமே தமிழ் தெரிந்தவர்கள். தமிழ் வெர்ஸனை மிகச் சிறப்பாக உருவாக்க எனக்கு ஸ்ரீகாந்த் உதவினார்.

இது ஒரு கலப்படமற்ற முழுத் தமிழ் திரைப்படம். கல்லூரி கால வாழ்க்கைத் தொடர்பானத் திரைப்படம். எனக்கு எப்போதுமே கல்லூரி தொடர்பான கதைகளை உருவாக்குவதில் ஆர்வம் உண்டு. இப்படம் முழுக்க முழுக்க குறிப்பாக கல்லூரி செல்லும் இளைஞர்களை குறி வைத்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம். தமிழ்த் திரை உலகிற்குள் ஒரு தமிழ் திரைப்படத்தைக் கொண்டு நுழைய வேண்டும். தமிழ் பார்வையாளர்கள் என்னை ஒரு தமிழ் இயக்குநராகவே பார்க்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்படும் மூன்றாவது முயற்சி.

போர்

முதலில் இப்படத்தை மலையாளத்தில் எடுக்க வேண்டும் என்று தான் எண்ணினேன். பிறகு தமிழ் மற்றும் இந்தியில் எடுத்தால் சரியாக இருக்கும் என்று தோன்றியது. எனக்கு எப்போதும் தமிழ் வார்த்தைகளின் மீதும் அந்த ஒலி வடிவங்கள் மீதும், தமிழ் மொழியின் மீதும் ஒரு மயக்கம், காதல் உண்டு. இப்படத்தில் தமிழ் வடிவத்திற்கான வசனங்கள் மிகுந்த கவித்துவத்துவத்துடன் வந்திருப்பதாகத் தோன்றுகிறது. போர் திரைப்படத்திற்காக எனக்கு மிகுந்த ஒத்துழைப்பு நல்கிய நடிகர் நடிகைகள் அனைவருக்கும் நன்றி. ஏனென்றால் ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் ஒரு படத்தை உருவாக்கும் போது நடிகர் நடிகைகளுக்கான சிக்கல்கள் அதிகம். அதைப் பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்த நடிகர் நடிகைகளுக்கும் எங்கள் தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றிகள்.

இரண்டு மொழிகளிலும் இப்படம் எடுக்கப்பட்டாலும் கதையில் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டு மொழிகளிலும் ஒரே கதை தான். அர்ஜூன் தாஸை நான் தான் ஹிந்திக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்கின்ற தேவை இல்லை. அவர் ஏற்கனவே ஹிந்தி திரைப்படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார்.

அர்ஜூன் தாஸுக்கு சண்டைக் காட்சியில் அடிபடும் போது நாங்கள் பாண்டிச்சேரியில் சூட்டிங்கில் இருந்தோம். அடிபட்டவுடன் சூட்டிங்கை நிறுத்திவிட்டு, சென்னை சென்றுவிடுவோம், ஒரு நாள் அவர் ஓய்வில் இருக்கட்டும், பின்னர் சூட்டிங்கை துவங்குவோம் என்று தான் முடிவு செய்தோம். ஆனால் அவர் என்னிடம் வந்து தனியாகப் பேசினார்.

சூட்டிங்கை நிறுத்தினால் தேவையில்லாத பண இழப்புகள் தோன்றும். எனக்கு ஒன்றும் பெரிய அடியில்லை; சூட்டிங்கை முடித்துவிட்டுத் தான் செல்கிறோம் என்பதில் பிடிவாதமாக இருந்தார். அவரது அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு என்னை பிரமிக்க வைக்கிறது.

போர் கல்லூரி தொடர்பான கதை என்றாலும் கூட ஏன் போர் என்கின்ற தலைப்பை தேர்வு செய்தோம் என்பது சுவாரஸ்யமானது. “பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, ஒரு போர்க்களக் காட்சியில் சண்டைக்காட்சி இயக்குநர் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக வந்த தெலுங்கு நடிகர் நடிகைகளிடம் மைக்கில் ‘இது போர், போர், போர்” அந்த முகபாவனையுடன் நில்லுங்கள், இது போர் போர்” என்று சத்தமாகக் கத்திக் கொண்டிருந்தார். எனக்கு அது மனதில் பதிந்துவிட்டது.

உடனே என் நண்பரைக் கூப்பிட்டு அந்த டைட்டிலை பதிவு செய்யச் சொன்னேன். இரண்டு எதிர் எதிர் கதாபாத்திரத்தின் யுத்தத்திற்கு போர் என்கின்ற தலைப்பு சரியாக இருக்கும் என்று தோன்றியது என்றார்.

போர்

*நாயகன் அர்ஜூன் தாஸ் பேசும் போது…

இப்படத்தில் வாய்ப்பு கொடுத்த பிஜோய் நம்பியார் அவர்களுக்கு என் முதல் நன்றி. எனக்கு இப்படத்தின் கதையை ஒரு ஹோட்டலில் வைத்து தான் கூறினார். அதற்கு முன்னரே காளிதாஸ் படத்தில் புக் ஆகி இருந்தார். படப்பிடிப்பின் போது இயக்குநர் எங்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார்.

பொதுவாக இரு மொழிகளில் ஒரு படத்தின் சூட்டிங் போய்க் கொண்டிருக்கும் போது, ஒரு மொழியில் நடிப்பவர்களுக்கு பிற மொழியில் எடுக்கப்பட்ட காட்சிகளைக் காட்டமாட்டார்கள்.

ஆனால் பிஜோய் எங்களுக்கு அதையும் காட்டிவிட்டு இயல்பாக நடிக்கச் சொன்னார். படத்தில் எங்கள் அனைவருக்கும் பேருதவியாக இருந்த உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி. காளிதாஸ் சூட்டிங்கில் இருப்பதால் இங்கு வர முடியவில்லை. அவருக்காக நான் உங்களிடம் மன்னிப்பும் நன்றியும் கேட்டுக் கொள்கிறேன்.

போர் திரைப்படம் ஒரு கல்லூரி கால வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். கொண்டாட்டத்திற்கான திரைப்படம், நட்பும் படத்தில் சிறிய அளவில் இருக்கிறது. வேறு வேறு விதத்திலான உணர்வுகள் படத்தில் கொட்டிக்கிடக்கிறது. இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த தயாரிப்பாளர் மது சாருக்கு நன்றி. T Series குழுவினருக்கு நன்றி. பிரத்யேக உதவி புரிந்த சிகை கலைஞர்கள், ஒப்பனைக் கலைஞர்களுக்கு நன்றிகள்.

காளிதாஸ் ஜெயராமுடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டும். ஏனென்றால் படப்பிடிப்பு தளத்தில் டேக் செல்வதற்கு முன்பு வரை சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பான். ரொம்பவே சேட்டை செய்வான். மற்றபடி மிகச்சிறந்த நண்பன். காளிதாஸ் உடன் சேர்ந்து நடித்த அனுபவம் மகிழ்ச்சியானது’ என்றார்.

போர்

Arjundass speaks about Kalidass at Por Trailer launch

‘ஜகமே தந்திரம் & சார்பட்டா பரம்பரை-யில் பார்க்காத சஞ்சனாவை பார்ப்பீர்கள்.. – சஞ்சனா

‘ஜகமே தந்திரம் & சார்பட்டா பரம்பரை-யில் பார்க்காத சஞ்சனாவை பார்ப்பீர்கள்.. – சஞ்சனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சைத்தான், டேவிட், வாஷிர், ஷோலோ படங்களை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் நாயகர்களாக நடித்திருக்கும் திரைப்படம் “போர்”.

டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், மெர்வின் ரொஸாரியோ மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இத்திரைப்படம் தமிழ் ஹிந்தி என இரட்டை மொழிகளில் வரும் மார்ச் 1 முதல் வெளியாகவிருக்கிறது.

“போர்” திரைப்படத்தை T Series மற்றும் Roox Media இணைந்து தயாரித்திருக்கின்றனர். இப்படத்தின் டிரைலர் வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், போன்றோர் கலந்து கொண்டனர். நிகழ்வில்

*Roox Media தயாரிப்பாளர் மது அலெக்ஸ் பேசியதாவது*

இது எனக்கு தயாரிப்பாளராக முதல் படம். முதல் படத்திலேயே T – Series நிறுவனத்துடன் இணைந்து இருப்பது சந்தோஷம் அளிக்கிறது. நான் இந்த நிகழ்வில் சிலருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். முதலில் கடவுளுக்கும், என் குடும்பத்திற்கும், என் நண்பர்களுக்கும் நன்றிகள். இயக்குநர் பிஜோய் நம்பியார் என் நண்பர் தான். அவருக்கும் நன்றிகள். T – Series தயாரிப்பு நிர்வாகத்தினருக்கு நன்றி. இப்படத்தில் சிறப்பாக ஒத்துழைப்புக் கொடுத்து நடித்த நடிகர் நடிகைகளுக்கு நன்றி. இந்தக் குழு ஒரு இளமையும் அர்ப்பணிப்புணர்வும் புதுமையும் கொண்ட குழு. டிரைலர் காட்சிகளில் நீங்களே பார்த்திருப்பீர்கள் படம் எவ்வளவு இளமையாகவும் சிறப்பாகவும் வந்திருக்கிறது என்று. இரண்டு படங்களுக்கு போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகள் போய்க் கொண்டிருக்கிறது.

இரண்டு படங்கள் புரொடெக்ஷனில் இருக்கின்றன. Roox Media நிறுவனமானது சென்னையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் படத் தயாரிப்பு நிறுவனமாகும். இதன் தலைமையிடம் யு.எஸ்-ல் இருக்கிறது. எங்கள் திரைப்படம் இளம் தலைமுறையை குறியாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் ஆகும். அதனால் எங்கள் படத்தை இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்கும் எடுத்துச் செல்லுங்கள். எங்கள் படத்திற்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஆதரவு தாருங்கள் என்று கேட்டுக் கொண்டு விடை பெறுகிறேன் நன்றி’ என்றார்.

*மெர்வின் ரொஸாரியோ பேசும் போது,*

எல்லோருக்கும் அன்பு கலந்த வணக்கம். இது எனக்கு முதலாவது படம். முதல் படத்திலேயே என்னை இரண்டாவதாகப் பேச அழைத்திருப்பது மகிழ்ச்சியையும் பதட்டத்தையும் கொடுக்கிறது. போர் திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திர தேர்வும் அருமையாக இருக்கிறது. அனைவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். எனக்கு இப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு அளித்த இயக்குநர் பிஜோய் நம்பியார் அவர்களுக்கும் தயாரிப்பாளர் மது அலெக்ஸ் அவர்களுக்கும் மிக்க நன்றி. இப்படத்திற்கு பத்திரிக்கையாளர்களாகிய உங்களின் ஆதரவு கண்டிப்பாக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி” என்றார்.

போர்

*நாயகி டி.ஜே.பானு பேசுகையில்*

நிகழ்விற்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். இந்த மேடையில் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இரு மொழிகளில் உருவாகி இருக்கும் போர் திரைப்படத்தில் இரண்டு மொழிகளிலும் நான் நடித்திருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன்.

முதலில் இரு மொழிகளிலும் எப்படி நடிப்பது என்கின்ற தயக்கம் சிறிது இருந்தது. இயக்குநர் பிஜோய் நம்பியார் தான் எனக்கு நம்பிக்கையும் ஆதரவும் கொடுத்தார். நன்றாக உழைத்து இரு மொழிகளிலும் படத்தை நாங்கள் உருவாக்கிவிட்டோம். நீங்கள் தான் படத்தைப் பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்ல வேண்டும். படம் நன்றாக இருக்கும் பட்சத்தில் இப்படத்திற்கு சிறப்பான ஆதரவை தருவீர்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

நாயகி சஞ்சனா நடராஜன் பேசியதாவது…

ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் எங்களுக்கு மிகச் சிறந்த ஒத்துழைப்பைக் கொடுத்து வருகிறீர்கள். அதற்காக பிரத்யேக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ”போர்” திரைப்படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். எல்லோரும் இதைத்தான் சொல்வார்கள். இருப்பினும் நான் ஏன் சொல்கின்றேன் என்றால் அதற்கு தனிப்பட்ட சில காரணங்கள் இருக்கிறது.

முதலில் படத்தின் இயக்குநர் பிஜோய் நம்பியார் எனக்கு மிகப்பெரிய ஆஃபர் கொடுத்தார். என்னுடைய கேரக்டரை மட்டும் சொல்லாமல், படத்தில் வரும் இரண்டு கேரக்டரையும் என்னிடம் டீட்டெயில் ஆக விளக்கினார். நான் கதை கேட்கும் போது, படத்தில் இப்பொழுது எந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேனோ அந்தக் கதாபாத்திரத்தைத் தான் பின் தொடர்ந்தேன்.

ஆனால் கதை கூறிவிட்டு அதற்கு நேர் எதிர்கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் கூறினார். நான் விடாப்பிடியாக சண்டை போட்டு அந்தக் கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருந்து அந்தகேரக்டரில் நடித்து முடித்துவிட்டேன்.

ஜகமே தந்திரம் மற்றும் சார்பட்டா பரம்பரையில் பார்க்காத சஞ்சனாவை நீங்கள் நிச்சயமாக இப்படத்தில் பார்ப்பீர்கள் என்று உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன்.

போர்

படத்தில் நாயகர்களாக நடித்திருக்கும் இருவரும் எதிர் எதிர் கேரக்டர். காளிதாஸ் பேசிக்கொண்டே இருப்பார். அர்ஜூன் பேசவே மாட்டார். பானு எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். எனக்கு இப்படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. பிஜோய் நம்பியார் இப்படத்தினை மிகச்சிறப்பாக எடுத்திருக்கிறார். கதை, திரைக்கதை, காட்சி அமைப்புகள் எல்லாமே சிறப்பாக இருக்கிறது.

எல்லோரும் அர்ஜூன் தாஸின் குரலைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். அவரின் நடிப்பைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அவர் அவ்வளவு டெடிகேட்டிவ் ஆன ஆர்டிஸ்ட். அவரைப் பற்றி ஒரு நிகழ்வை நான் கண்டிப்பாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் கண்டிப்பாக அதை அவர் சொல்லமாட்டார். படப்பிடிப்பில் ஒரு நாள் கோர்ட் செட்டப்பில் இரவு 2 மணிக்கு கொட்டும் மழையில் ஒரு சண்டைக் காட்சியை படம்பிடித்துக் கொண்டிருந்தோம். நாங்கள் அப்பொழுது தான் ஷாட் முடிந்து கேரவனுக்கு வந்து கொஞ்சம் கண் மூடலாம் என்று படுத்தோம். அதற்குள் அர்ஜூன் தாஸுக்கு சண்டைக் காட்சியில் அடிபட்டு ரத்தம் வருகிறது என்ற தகவல் வந்தது.

பதட்டத்துடன் ஓடிப் போய் பார்த்தால் படப்பிடிப்பு போய்க் கொண்டு இருக்கிறது, அவர் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார். நாங்கள் அங்குள்ளவர்களிடம் கேட்டதற்கு ‘ஆமாம் ரத்தம் வந்தது’ அதைத் துடைத்துக் கொண்டு மீண்டும் சண்டை போட போய்விட்டார் என்றார்கள். ப்ரேக்கின் போது கேட்டதற்கு தரையில் விழுந்து பல் உடைந்துவிட்டது… பல் தானே.. பரவாயில்லை என்று கேசுவலாக கூறினார். எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.. சின்ன தலைவலி என்றாலே பேக்கஃப் சொல்லிவிட்டு செல்லும் இக்காலத்தில் இப்படி ஒரு நடிகரா..? என்று வியந்தேன். இவ்வளவு டெடிக்கேட்டிவ் ஆன ஒரு ஆர்டிஸ்ட்டைப் பார்ப்பது கடினம்.

பானு திரையில் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறார். நேரிலும் சூப்பராக இருக்கிறார். அவர் திரையில் வந்து நின்றாலே காட்சிக்குத் தேவையான ஒன்று கிடைத்துவிடுகிறது. படம் சிறப்பாக வந்திருக்கிறது. எங்கள் படத்திற்கு ஆதரவைத் தாருங்கள். எல்லோருமே மிகவும் கடினமான உழைப்பைக் கொடுத்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். படத்தைப் பார்த்துவிட்டு எங்கள் உழைப்பிற்கான கிரிடிட்ஸ் கொடுங்கள். இந்த தருணத்தில் நான் இந்த இடத்தில் இருப்பதற்கு காரணமான, எனக்கு முழுச் சுதந்திரம் கொடுத்து வளர்த்த என் தாய் தந்தையருக்கு என் நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.” என்று பேசினார்.

போர்

You will see different Sanjana at Por movie says Sanjana

ஒவ்வொரு மனிதனின் மனசாட்சியை கேள்வி கேட்க வரும் சமுத்திரக்கனி

ஒவ்வொரு மனிதனின் மனசாட்சியை கேள்வி கேட்க வரும் சமுத்திரக்கனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிக்கும் ‘திரு.மாணிக்கம்’ திரைப்படத்தின் குரல் பதிவு இனிதே நிறைவுற்றது.

குமுளி… தேக்கடி… மூணாறு பகுதிகளில் படமாக்கப்பட்ட இத்திரைப்படத்தில் நடித்த முப்பதுக்கும் மேற்பட்ட அனைத்து நடிகர்களும்… வட்டார மொழியோடு… தங்களது சொந்த குரலிலேயே பேசியிருக்கிறார்கள்.

இந்த படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் வெறும் வசன உச்சரிப்புகளோடு இல்லாமல் ஆன்மாவின் குரலாக பேசியிருப்பது பார்வையாளர்களை படத்தோடு ஒன்றவைக்கும்.

‘ராஷ்மி ராக்கெட்’ என்ற இந்திப் படத்தின் கதை மூலம் மொத்த இந்தியாவையும் கவனம் ஈர்த்த இயக்குனர் நந்தா பெரியசாமி இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்

ஆதங்கம்… ஆற்றாமை… தவிப்பு… தடுமாற்றம் என பல வித உணர்வுகளோடு கதையின் நாயகன் மாணிக்கமாகவே சமுத்திரக்கனி வாழ்ந்திருக்கிறார். ஒரு முக்கியமான கதாப் பாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜாவும், நாசரும் இதுவரை நாம் பார்க்காத தோற்றத்தில் காட்சியளிக்கிறார்கள்.

இவர்களுடன் தம்பி ராமையா, இளவரசு, சின்னி ஜெயந்த், சாம்ஸ், ஸ்ரீமன், கருணாகரன், இரவின் நிழல் சந்துரு.. ஆகியோர் வேறொரு புதிய பரிமாணத்தில் காட்சியளிக்கிறார்கள்.

சமுத்திரக்கனி மூலம் நாயகியாக அறிமுகமான அனன்யா சமுத்திரக்கனிக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடித்திருப்பது குறிப்பிடதக்கது.

‘சீதா ராமம்’ படத்தின் மூலம் மொத்த இளைஞர்களையும் தன் இசையால் கவர்ந்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் நவீன இசையால் எல்லாத் தரப்பினரையும் இந்தப் படத்தில் கவரவிருக்கிறார்.

பாடலாசிரியர்கள் சினேகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி, போன்ற எழில் கொஞ்சும் இயற்கையான பல இடங்களை இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் மைனா சுகுமார் அள்ளிக் கொண்டு வந்து படம் பிடித்திருக்கிறார்.

ஒவ்வொரு மனிதனின் மனசாட்சியை கேள்வி கேட்கும் அற்புதமான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தை GP ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.

Samuthirakani Ananya starrer Thiru Manickam updates

மார்ச் 8ம் தேதி 8 மொழிகளில் வெளியாகும் ‘ரெக்கார்ட் பிரேக்’

மார்ச் 8ம் தேதி 8 மொழிகளில் வெளியாகும் ‘ரெக்கார்ட் பிரேக்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை ஜெயசுதா மகன் நிஹார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ரெக்கார்ட் பிரேக்’ படம் எட்டு மொழிகளில் எட்டுத் திக்கும் மார்ச் 8 அன்று வெளியாகிறது.

இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

ஸ்ரீ திருமலா திருப்பதி வெங்கடேஸ்வரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சத்லவாதா ஸ்ரீனிவாஸ் ராவ் தயாரிப்பில் நிஹார், நாகர்ஜூனா, ராக்தா இஃப்திகர் நடித்திருக்கும் படம் ‘ரெக்கார்ட் பிரேக்’.

மார்ச் 8 அன்று இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நடிகர் நாகர்ஜூனா…

“இது எனக்கு முதல் படம். இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும் என்ற நம்பிக்கை உண்டு. படம் பார்த்து நிச்சயம் மகிழ்வீர்கள்” என்றார்.

நடிகர் நிஹார்…

“இது என்னுடைய 2வது படம். கடந்த ஐந்து வருடங்களாக இந்த படத்திற்காக நாங்கள் கடுமையாக உழைத்து உள்ளோம். விஎப்எக்ஸ் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும் என விரும்புகிறோம்.

அதனால் தான் தெலுங்கு உட்பட எட்டு மொழிகளில் இந்த படத்தை டப்பிங் செய்திருக்கிறோம். பெரிய திரையில் பார்க்கும்பொழுது அதன் அனுபவத்தை உங்களால் உணர முடியும். யாரும் இல்லாதவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயமாக அவர்களால் சாதிக்க முடியும் என்பதை இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம். உங்களுக்கும் படம் பிடிக்கும்”.

ரெக்கார்ட் பிரேக்

நடிகை ராக்தா…

” நான் முதல் முறையாக சென்னைக்கு வந்து இருக்கிறேன். இந்த படம் ஒரு சிறந்த கருத்தை பேசி இருக்கிறது. தெலுங்கு பார்வையாளர்கள், தமிழ் பார்வையாளர்கள் என இல்லாமல் எல்லோருக்குமான பான் இந்தியா படமாக இது உருவாகி இருக்கிறது.

நீங்கள் எல்லோரும் இந்த படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன். இந்தப் படத்தை உருவாக்கிய ஸ்ரீனிவாஸ் சாருக்கு நன்றி. மார்ச் 8 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகிறது”.

நடிகை சத்யா…

” மார்ச் 8 அன்று இந்த படத்தை நாங்கள் வெளியிடுகிறோம். எட்டு வெவ்வேறு மொழிகளில் இந்த படத்தை டப் செய்து இருக்கிறோம். ரொம்ப வித்தியாசமான கதை இதில் உள்ளது. நீங்கள் நிச்சயம் திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும். உங்கள் ஆதரவு எங்களுக்கு வேண்டும்”.

தயாரிப்பாளர், நடிகர் பிரசன்னா குமார்..

“எட்டு மொழிகளில் மார்ச் 8 அன்று இந்த படம் வெளியாகிறது. மார்ச் 8 மகா சிவராத்திரி மற்றும் பெண்கள் தினம் அதற்கேற்றார் போல ஆன்மீகம் மற்றும் பெண்களுக்கு வலுவான கன்டென்ட் இந்த படத்தில் உள்ளது. அம்மா செண்டிமெட்ண்ட் மற்றும் விவசாயிகள் பிரச்சினையும் இதில் பேசப்பட்டுள்ளது.

ரெஸ்லிங்கில் எப்படி ஹீரோ போட்டிப் போட்டு எதிர்நாடான சீனா, பாகிஸ்தானை ஜெயிக்கிறான் என்பதுதான் ‘ரெக்கார்ட் பிரேக்’. படம் நிச்சயம் ஹிட் ஆகும்”.

ரெக்கார்ட் பிரேக்

இயக்குநர் அஜய்குமார்…

” படத்தின் இயக்குநர் ஒரு புதிய கான்செப்ட்டோடு வந்திருக்கிறார். ஏனெனில், இதில் லவ் ஜானர், ஃபேமிலி ஜானர், க்ரைம்- த்ரில்லர் என எதற்குள்ளும் இதை அடைக்க முடியாத புதிய கான்செப்ட். படம் பார்க்கும்போது உங்களுக்கே புரியும். உங்களுடைய வாழ்த்துக்களை அவர்களுக்கு சொல்லுங்கள்”.

பிரசாத், “ஸ்ரீனிவாஸ் சார் கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவக்கூடிய நல்ல உள்ளம் கொண்டவர். கொரோனா சமயத்தில் திரைத்துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு, இப்போது திறந்திருக்கும் அயோத்தி ராமர் கோவிலுக்கு வுட் (wood) என பல நல்ல விஷயங்களை செய்திருக்கிறார். ‘பிச்சைக்காரன்’ படம் வெளியான சமயத்தில் விஜய் ஆண்டனிக்கு தெலுங்கில் பெரிதாக மார்க்கெட் இல்லை.

ஆனால், கதை மீது நம்பிக்கை கொண்டு ‘பிச்சக்காடு’ என பெயர் வைத்து அங்கு வெளியிட்டார். படம் தமிழை விட தெலுங்கில்தான் சூப்பர் ஹிட் ஆனது. அதேபோல, ‘ஹனுமன்’ படமும் 20-30 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டு பல மொழிகளிலும் சேர்த்து ரூ. 500 கோடி வசூல் செய்தது.

அதேபோல தான் இந்த படத்தின் கதை மீதும் நம்பிக்கை வைத்து எட்டு மொழிகளில் உலகம் முழுவதும் மார்ச் 8 அன்று வெளியிடுகிறோம். படம் நிச்சயம் வெற்றி பெறும்”.

இயக்குநர், தயாரிப்பாளர் சத்லவாதா ஸ்ரீனிவாஸ் ராவ் பேசியதாவது…

“சென்னை விஜயா கார்டனில்தான் எனது சினிமா வாழ்க்கைத் தொடங்கியது. யாரும் இல்லாத கதாநாயகன் சிறுவயதிலிருந்து கிடைக்கும் வேலைகளை கஷ்டப்பட்டு செய்து வருகிறான்.

ஆனால், அவன் வளர்ந்து ஒரு விளையாட்டு ஆர்வத்துடன் போகும் பொழுது என்ன நடக்கிறது என்பதுதான் கதை. மனிதர்களாக நாம் அனைவரும் இங்கு சமம். படத்தின் கதை மீது எனக்குப் பெரிய நம்பிக்கை உண்டு. அதை நீங்கள் திரையரங்குகளில் பார்க்கும்போது உணர்வீர்கள். இந்த படத்தை எனக்கு பிடித்த தமிழ் மக்களுக்கும் காட்டுவது ரொம்ப சந்தோஷம். மார்ச் எட்டு அன்று திரையரங்குகளில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

ரெக்கார்ட் பிரேக்

Record Break set to release on 8th March

NANI32 UPDATE பவருக்குப் பிறகு இந்த லவ்வரிடம் வருவார்

NANI32 UPDATE பவருக்குப் பிறகு இந்த லவ்வரிடம் வருவார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நேச்சுரல் ஸ்டார் நானி, தொடர்ச்சியாக ப்ளாக்பஸ்டர் வெற்றிகளைத் தந்து அசத்தி வருகிறார்.

தற்போது டி.வி.வி என்டர்டெயின்மென்ட் பேனரில் உருவாகும் “சூர்யாவின் சனிக்கிழமை” படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் நானியின் பிறந்த நாள் கொண்டாட்டமாக இப்படத்தின் டீசரை வெளியிட்டு, ரசிகர்களை மகிழ்வித்த தயாரிப்பு நிறுவனம், மற்றொரு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. நானியின் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு இரட்டை விருந்தளித்துள்ளது.

டி.வி.வி என்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ் நானி 32 படத்தைத் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. DVV தனய்யா மற்றும் கல்யாண் தாசரி இணைந்து தயாரிக்கும் இந்த புதிய படத்தை இயக்குநர் சுஜீத் இயக்கவுள்ளார்.

தற்போது படப்பிடிப்பில் இருக்கும் பவர் ஸ்டார் பவன் கல்யாணுடனான “ஓஜி” படத்தை இயக்கி வரும் சுஜீத், தனது அடுத்த படத்தில் நானியுடன் இணையவுள்ளார். சூர்யாவின் சனிக்கிழமை படப்பிடிப்பு முடிந்தவுடன், நானி 32 படத்தின் பணிகள் துவங்கும்.

இது குறித்து நடிகர் நானி வலைத்தளத்தில் “இது முழுமையான சுஜீத் படம். பவருக்குப் பிறகு… இந்த லவ்வரிடம் வருவார் 😉♥️ #Nani32” என்று மகிழ்ச்சி பொங்க பகிர்ந்துள்ளார்.

அதிரடியான ஆக்சன் படமாக உருவாகவுள்ள இப்படத்தின் அறிவிப்பு, ஒரு அழகான கான்செப்ட் வீடியோ மூலம் வெளியிடப்பட்டது. ஒரு வன்முறையாளன் அகிம்சையாளனாக மாறினால், அவனது உலகம் தலைகீழாக மாறும். இதுதான் படத்தின் அடிப்படைக் கதை. இது தனித்துவமானதாக இருக்கும் அதே நேரத்தில் புதிரானதாகவும் அமைந்துள்ளது.

நானி 32வது திரைப்படம் 2025 இல் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்கள்.

நடிகர்கள்: நானி

தொழில்நுட்பக் குழு:
எழுத்து இயக்கம் : சுஜீத்
தயாரிப்பாளர்கள்: DVV தனய்யா, கல்யாண் தாசரி
பேனர்: DVV என்டர்டெயின்மென்ட்
மக்கள் தொடர்பு : சதீஷ்குமார்

NANI32

Nani reveals his 32nd movie update

More Articles
Follows