மெகா ஹிட்டான ‘பரியேறும் பெருமாள்’ ஹிந்தி ரீமேக் அப்டேட்ஸ்

மெகா ஹிட்டான ‘பரியேறும் பெருமாள்’ ஹிந்தி ரீமேக் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘பரியேறும் பெருமாள்’.

இதில் கதிர் மற்றும் ‘கயல்’ ஆனந்தி முக்கிய வேடங்களில் நடித்தனர்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் 28 செப்டம்பர் 2018 இல் திரையரங்குகளில் வெளியானது.

தமிழ் சினிமாவின் வசூல் சாதனைகளில் இப்படமும் ஒன்று.

ஜாதி ஒடுக்குமுறையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மாரி செல்வராஜ் இயக்குனராக அறிமுகமானது.

இந்நிலையில், தற்போது கரண் ஜோஹர் இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் திட்டத்தில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்படத்தில் சித்தார்த் சதுர்வேதி மற்றும் திரிப்தி டிம்ரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு ‘தடக் 2’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

‘Paraiyerum Perumal’ Hindi remake updates

தாத்தாவானார் நடிகர் ரகுமான். பேரக்குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் வைரல்

தாத்தாவானார் நடிகர் ரகுமான். பேரக்குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் வைரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஹ்மான், மலையாளம் மற்றும் தமிழ் மொழி படங்களில் நீண்ட காலமாக நடித்து வருகிறார்.

அவர் இசைப்புயல் ஆஏ ஆர் ரஹ்மானின் மனைவி சாய்ராவின் தங்கையான மெஹரை மணந்தவர்.

ரஹ்மானுக்கும் மெஹருக்கும் ருஷ்தா மற்றும் அலிஷா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

மேலும் மூத்தவருக்கு திருமணமாகி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2022 இல் ஆண் குழந்தை பிறந்தது.

ரஹ்மான் தனது பேரனுடன் இருக்கும் அபிமான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அது தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

‘Ponniyin Selvan 2’ actor Rahman’s adorable photo with grandson goes viral

PS2 ரிலீஸ்.. No Special shows.; ஆனாலும் 17 கோடியை அள்ளியது

PS2 ரிலீஸ்.. No Special shows.; ஆனாலும் 17 கோடியை அள்ளியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் ‘பொன்னியின் செல்வன் 2’.

இப்படம் உலகம் முழுவதும் நாளை ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் கைப்பற்றியுள்ளது.

FDFS காட்சிகள் நள்ளிரவு 1 மணி அல்லது அதிகாலை நேரங்களில் திரையிடப்படும்.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்தின் FDFS காட்சிகளுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தின் FDFS காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இப்படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் அட்வான்ஸ் புக்கிங் இரு தினங்களுக்கு முன்பு தொடங்கி இதுவரை 17 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ponniyin selvan 2 fdfs shows canceled by tn government

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமந்தா ! ஆக்ஸிஜன் மூலம் தீவிர சிகிச்சை

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமந்தா ! ஆக்ஸிஜன் மூலம் தீவிர சிகிச்சை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு பக்கம் சிகிச்சை மறுபுறம் சினிமா பட வேலையில் ஈடுபட்டிருந்த சமந்தா மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹைபர்பேரிக் ஆக்ஸிஜன் சிகிச்சையை எடுத்துக் கொள்வதாக சொல்லப்படுகிறது.

இந்த சிகிச்சை வீக்கத்தைக் குறைக்கவும், நோய்த்தொற்றுகளைக் குணப்படுத்தவும், சேதமடைந்த திசுக்களை சரிசெய்யவும் உதவுகிறது.

விரைவில் இது மையோசிடிஸ் நோயை குணப்படுத்தவும் உதவும் என்கிறது மருத்துவ உலகம்.

ஆனால், இந்த புகைப்படத்தைப் பார்த்து சமந்தா ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அவர் விரைவில் பூரண நலமடைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டுள்ளனர்.

Samantha underwent Hyperbaric Therapy share emotional post

உங்களுக்கு 2 ஸ்டோரி.. உங்க பெயரில் அன்னதானம்.; விஜய்யை சந்தித்த விஷால் தகவல்

உங்களுக்கு 2 ஸ்டோரி.. உங்க பெயரில் அன்னதானம்.; விஜய்யை சந்தித்த விஷால் தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படத்தின் டீஸர் இன்று மாலை 6:30 மணிக்கு வெளியாக இருக்கிறது.

இதை தொடர்ந்து ‘தளபதி’ விஜய்யை சந்தித்து ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் டீஸரை காண்பிக்க படக்குழுவினர் அனுமதி கேட்டு தொடர்பு கொண்டபோது உடனே அழைப்பு விடுத்தார்.

இதை தொடர்ந்து நடைபெற்ற தளபதி விஜய், புரட்சி தளபதி விஷால் இருவரது சந்திப்பின்போது ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் டீஸரை கண்டு மகிழ்ந்து படக்குழுவினரை வெகுவாக பாராட்டினார் தளபதி விஜய்.

அதற்காக நன்றி தெரிவித்த நடிகர் விஷாலிடம் “நண்பனுக்காக இதை செய்ய மாட்டேனா” என்று விஜய் கூறியது படக்குழுவினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த சந்திப்பின்போது தளபதி விஜய் அவர்களுக்கு மார்க் ஆண்டனி படக்குழுவினர் பூங்கொத்து வழங்கினார்கள்.

ஆனால் நடிகர் விஷால் வழக்கம்போல் பூங்கொத்தை தவிர்த்து, தளபதி விஜய் அவர்களின் பெயரில் அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் உணவு வழக்கியதற்கான ரசீதை அவரிடம் வழங்கினார்.

அதன்பிறகு தனது நீண்ட நாள் விருப்பமான திரைப்படம் இயக்கும் ஆசை ‘துப்பறிவாளன் 2’ மூலம் தொடங்கியுள்ளதாக நடிகர் விஜய்யிடம் கூறினார் விஷால்.

மேலும் தொடர்ந்து திரைப்படங்களை இயக்க உள்ளதாகவும் உங்களுக்கும் இரண்டு கதை தயார் செய்துள்ளேன் என நடிகர் விஜய்யிடம் கூறியபோது…

“நீ வா நண்பா.. நான் இருக்கிறேன்.. சேர்த்து பயணிப்போம்” என்று விஷாலிடம் கூறி மேலும் அவரை உற்சாகப்படுத்தினார் தளபதி விஜய்.

இந்த சந்திப்பின்போது ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ‘மினி ஸ்டூடியோஸ்’ வினோத் குமார், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், ஒளிப்பதிவாளர் அபிநந்தன், நிர்வாக தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

2 stories for you. Vishal about meeting with Vijay

ரஜினியுடன் மோதுவது குறித்து வெளிப்படையாக பதில் அளித்த சிவகார்த்திகேயன்

ரஜினியுடன் மோதுவது குறித்து வெளிப்படையாக பதில் அளித்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜெயிலர்’ ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது என்றும், அது ‘மாவீரன்’ படத்துடன் பாக்ஸ் ஆபிஸில் மோதும் என்றும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் இன்று காலை திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் முதல்வர் முக ஸ்டாலினின் அரிய புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார். அப்போது ‘மாவீரன்’ vs ‘ஜெயிலர்’ பாக்ஸ் ஆபிஸ் மோதல் குறித்து கருத்து தெரிவிக்க சிவகார்த்திகேயனிடம் நேரு ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த சிவா அந்த தேதியில் படம் திரைக்கு வருவதை ‘ஜெயிலர்’ படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்று பதிலளித்தார்.

Sivakarthikeyan’s open reply on ‘Maaveeran’ vs ‘Jailer’

More Articles
Follows