துருவ் விக்ரமுடன் கைக்கோர்க்கும் மாரி செல்வராஜ்…

துருவ் விக்ரமுடன் கைக்கோர்க்கும் மாரி செல்வராஜ்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் மாரி செல்வராஜ் 2018 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான ‘பரியேறும் பெருமாள்’ மூலம் அறிமுகமானார்.

இவர், தனுஷ் நடித்த ‘கர்ணன்’ படத்தை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்தார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரமை நடிக்க வைப்பதாக அறிவித்தார்.

ஆனால், இயக்குனரால் படம் தாமதமானது. உதயநிதி ஸ்டாலின் ‘மாமன்னன்’ படத்தை இயக்கி வருகிறது.

இதற்கிடையில், இயக்குனர் ஒரு வெப் தொடரையும் முடித்துள்ளார், மேலும் தொடர் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

வெப் சீரிஸின் விளம்பரத்தின் போது, ​​மாரி செல்வராஜ் துருவ் விக்ரமுடனான தனது திட்டத்தைப் பற்றி வெளிப்படுத்தினார்.

மேலும் இந்த படம் நிச்சயமாக தனது அடுத்த திட்டமாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தினார்.

Mari Selvaraj confirms his project with Dhruv Vikram

நானி படத்தில் இணைந்த மிருணால் தாக்கூர்

நானி படத்தில் இணைந்த மிருணால் தாக்கூர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நானி நடிக்கவிருக்கும் 30 வது படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. அறிமுக இயக்குனர் ஷௌரியவ் இயக்கும் இப்படத்தை மோகன் செருகுரி (சிவிஎம்), டாக்டர் விஜேந்தர் ரெட்டி டீகலா மற்றும் வைரா என்டர்டெயின்மென்ட்ஸின் மூர்த்தி கேஎஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

மெகாஸ்டார் சிரஞ்சீவி படத்தை தொடங்கி வைத்தார். வைஜெயந்தி மூவீஸின் மூத்த தயாரிப்பாளர் சி அஷ்வினி தத், ‘உப்பேனா’ மற்றும் ஆர்சி17 தயாரிப்பாளர் புச்சி பாபு சனா ஆகியோரும் காணப்பட்டனர்.

‘சீதா ராமம்’ புகழ் மிருணாள் தாக்கூர் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு சானு ஜான் வருகீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Vyra Entertainments launches Nani’s 30th film with Mrunal Thakur

‘தளபதி 67’ படத்தில் விஜய்யுடன் நடிக்க ஓகே சொன்னது ஏன்.? சஞ்சய் தத் விளக்கம்

‘தளபதி 67’ படத்தில் விஜய்யுடன் நடிக்க ஓகே சொன்னது ஏன்.? சஞ்சய் தத் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வாரிசு’ படத்திற்குப் பிறகு ‘தளபதி 67’ படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

‘வாரிசு’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்ற செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

நேற்று ஜனவரி 30 ஆம் தேதி இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.

மேலும் ‘தளபதி 67’ படத்தின் இதர நடிகர் நடிகைகள் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என அறிக்கையில் கூறப்பட்டது.

இந்த நிலையில் இதில் சஞ்சய் தத் இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது.

அந்த போஸ்டரில்…

“தளபதி 67 படத்தின் ஒன் லைன் கதையை கேட்டேன்.. அந்த நிமிடமே இந்த படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என முடிவெடுத்தேன்.. இந்த பட பயணத்தை ஆரம்பிப்பது த்ரில்லாக உள்ளது” என தெரிவித்துள்ளார் சஞ்சய் தத்.

இயக்கம் – லோகேஷ் கனகராஜ்
இசை – அனிருத்
ஒளிப்பதிவு – மனோஜ் பரஹம்சா
ஆக்‌ஷன் – அன்பறிவ்
படத்தொகுப்பு – பிலோமின் ராஜ்
கலை – சதீஷ் குமார்
நடனம் – தினேஷ்
வசனம் – லோகேஷ் கனகராஜ், ரத்ன குமார், தீரஜ் வைத்தி

Sanjay Dutt opens up about acting in Thalapathy 67

முதன்முறையாக ரஜினியுடன் இணையும் சரவணன்.; ரசிகர்கள் திட்டுவது கன்ஃபார்ம்.!

முதன்முறையாக ரஜினியுடன் இணையும் சரவணன்.; ரசிகர்கள் திட்டுவது கன்ஃபார்ம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் இந்திய பிரபல திரை நட்சத்திரங்கள் பலரும் நடித்து வருகின்றனர்.

மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், தமன்னா, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்து வரும் நிலையில் நிலையில் பருத்திவீரன் சரவணன் நடித்து வருகிறார்.

1990-களில் பல படங்களில் நாயகனாக நடித்து வந்த இவர் தற்போது வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

2021ல் வெளியான ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தில் கௌதம் வெண்பா ஆகியோருக்கு தந்தையாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் தன் ‘ஜெயிலர்’ பட அனுபவங்கள் குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது…

“நான் ஏற்கனவே நெல்சன் இயக்கிய ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நடித்திருக்கிறேன்.

அவர் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் ஏதாவது ஒரு சின்ன கேரக்டர் என்றாலும் எனக்கு தர வேண்டும் என கேட்டேன். இதுதான் ரஜினியுடன் எனக்கு முதல் படம்.

இந்த படத்தில் கண்டிப்பாக ரஜினி ரசிகர்கள் என்னை திட்டுவது உறுதி.. அப்படிப்பட்ட கேரக்டரை எனக்கு கொடுத்துள்ளார் நெல்சன்.” என தெரிவித்துள்ளார் சரவணன்.

Saravanan join hands with Rajini for the first time

JUST IN வேலையை பாரு..; ஏர்போர்ட்டில் ரசிகரை கை நீட்டி கண்டித்த ரஜினிகாந்த்

JUST IN வேலையை பாரு..; ஏர்போர்ட்டில் ரசிகரை கை நீட்டி கண்டித்த ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

நெல்சன் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதில் ரஜினியுடன் தமன்னா ரம்யா கிருஷ்ணன் வசந்த் ரவி, யோகி பாபு விநாயகன் நடித்து வருகின்றனர்.

முக்கிய வேடங்களில் மோகன்லால் சிவராஜ்குமார் சுனில் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

கடந்த ஜனவரி 7ந் தேதி ஐதராபாத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் விமானம் மூலம் 15ந் தேதி சென்னை திரும்பினார்.

அதன் பின் தன் உறவினர் ஒய் ஜி மகேந்திரன் இயக்கும் ‘சாருகேசி’ பட விழாவில் கலந்து கொண்டார் ரஜினி. அப்போது பேசிய பேச்சுக்கள் வைரலானது.

இந்த நிலையில் நேபாளத்தில் நடக்க உள்ள அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக டெல்லி வழியாக செல்ல சென்னை விமான நிலையம் இன்று வந்தார் ரஜினி.

அப்போது ரஜினியை கண்டதும் “ஒரே சூப்பர் ஸ்டார்… நிரந்தர சூப்பர் ஸ்டார்.. வணக்கம் தலைவா என்ற கோஷங்களை ரசிகர்கள் எழுப்பினர்.

அதில் ஒரு ரசிகர்… வணக்கம் தலைவா என்று பேசிக்கொண்டு அருகில் வந்தார்.

ஒழுங்கா வேலையை பாரு என கை நீட்டி அந்த அந்த ரசிகரை கண்டித்தபடி விமான நிலையத்திற்குள் நுழைந்தார் ரஜினிகாந்த்.

இந்த வீடியோ தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது..

அந்த ரசிகர் என்ன செய்ய வந்தார்.? ஏன் ரசிகரை அப்படி கைநீட்டி கண்டித்தார்? இதற்கு முன்பே அவர் ரஜினிக்கு அறிமுகமானவரா? என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.

Rajinikanth scolded his fan at chennai airport

‘சந்திரமுகி 2’ பட க்ளைமாக்ஸ் சாங்.; ஒத்திகையில் கங்கனா – கலா குழுவினர்

‘சந்திரமுகி 2’ பட க்ளைமாக்ஸ் சாங்.; ஒத்திகையில் கங்கனா – கலா குழுவினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி. வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் ‘சந்திரமுகி’.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை பி வாசு இயக்க நாயகனாக லாரன்ஸ் நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் கங்கனா ரணாவத், வடிவேலு, ராதிகா நடிக்க இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

சமீபத்தில் உலகப்புகழ் கோல்டன் குளோப் விருதை வென்ற கீரவாணி இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் பாடல் படமாக்கப்பட்டு வருகிறது.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திற்கு டான்ஸ் மாஸ்டர் கலா நடன அசைவுகளை சொல்லிக் கொடுக்கும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

‘சந்திரமுகி’ படத்தின் முதல் பாகத்தில்…” ரா ரா…” என்ற க்ளைமாக்ஸ் பாடல் பட்டையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

சந்திரமுகி 2

‘Chandramukhi 2’ Movie Climax Song updates

More Articles
Follows