தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
டாக்டர் ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இண்டநேஷனல் தயாரிப்பில், ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படப்புகழ் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி நடித்துள்ளப் படம் ‘சிங்கப்பூர் சலூன்’.
வரும் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து நடிகர் ஆர்.ஜே. பாலாஜி பகிர்ந்து கொண்டதாவது…
“சுய வேலை குறித்த படம் என்பதால், இது இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது எனப் பல மாணவர்களும், அவர்களுடைய பெற்றோரும் எனக்கு டிரெய்லர் பார்த்துவிட்டு சொன்னார்கள்.
தொலைபேசி மூலமாகவும் நேரிலும் நான் சந்தித்த நிறைய பேர் இந்தப் படத்தை தனுஷ் சார் நடித்த ‘விஐபி’ படத்தோடு ஒப்பிட்டுப் பாராட்டி இருந்தார்கள். அந்த உணர்வை இப்படம் ஊட்டினால் அதுவே எனக்கு சாதனை” என்றார்.
வேல்ஸ் இன்டர்நேஷனல், தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கணேஷ் பேசியதாவது…
“ஒரு கல்வியாளராக என்னுடைய மாணவர்களுக்கு அவர்களது அடிப்படையான கல்வியைத் தாண்டி எப்போதும் யோசிக்க வேண்டும் என்று சொல்வேன். வாழ்க்கைக்கு தேவையான பல திறமைகளை அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அப்படியான ஒரு படமாக இது வந்திருக்கிறது” என்றார்.
இயக்குநர் கோகுல் பெருமையோடு கூறியதாவது…
“படங்கள் எப்பொழுதும் ஜனரஞ்சகமாக இருக்க வேண்டும் என நினைப்பவன் நான். பார்வையாளர்களுக்கு, குறிப்பாக இளைஞர்களோடு தொடர்பு இருக்கும் வகையிலான மெசேஜ் சொல்வது முக்கியமானது.
‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் டிரெய்லர் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது. டிரெய்லர் பார்த்துவிட்டு இந்த படம் ‘விஐபி’ படம் போல இன்ஸ்பையராக உள்ளது எனப் பலர் கூறியுள்ளனர். அப்படியான ஒரு ஹிட் படத்தோடு எங்கள் படத்தை ஒப்பிட்டு பேசுவது எங்களுக்கு மகிழ்ச்சி” என்றார்.
Singapore Saloon movie is inspiring like vip says team