First on Net வாழை கொட்டுடிச்சி… வானம் கொட்டட்டும் விமர்சனம்

First on Net வாழை கொட்டுடிச்சி… வானம் கொட்டட்டும் விமர்சனம்

மணிரத்னம் தயாரிப்பில் சரத்குமார், ராதிகா, விக்ரம்‌ பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு, மடோனா, நந்தா, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வானம் கொட்டட்டும்’.

தனா என்பவர் இயக்க, சித்ஸ்ரீராம் இசையமைத்துள்ளார்.

கதைக்களம்…

பாலாஜி சக்திவேல் மற்றும் சரத்குமார் இருவரும் அண்ணன் தம்பி.

சரத்குமாரின் மனைவி ராதிகா. இவர்களுக்கு விக்ரம் பிரபு மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் என இரு பிள்ளைகள்.

தன் அண்ணன் பாலாஜி சக்திவேலுக்காக ஒரு கொலை செய்து ஜெயிலுக்கு செல்கிறார் சரத்குமார்.

இதனால் 16 வருடங்களாக வேலை செய்து தன் பிள்ளை வளர்க்க பாடுபடுகிறார் ராதிகா.

பிள்ளைகள் பெரியவர்கள் ஆனதும் வாழைக்காய் மண்டி வைத்து கோயம்பேட்டில் வியாபாரம் செய்கின்றனர்.

First On Net சீறும் சிறுமிகள்… சீறு விமர்சனம்

சிறையிலிருந்து சரத்குமார் வெளியே வந்த பின்னர் பிள்ளைகள் அவரிடம் சரியாக பேசுவதில்லை. இதனால் வெறுத்து மீண்டும் குடும்பதை விட்டு போகிறார் சரத்.

இதனிடையில் சரத்குமாரை கொல்ல திட்டமிட்டு நந்தா வருகிறார்.

அதன்பின்னர் என்ன ஆனது? சரத்குமார் உயிர் பிழைத்தாரா? குடும்பம் ஒன்று சேர்ந்த்தா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

படத்தில் இளைய நடிகர்கள் நிறைய இருந்தாலும் சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ரொமான்ஸ் மற்றும் காதல் இருக்கிறது. ஒருவேளை நிஜ தம்பதிகள் என்பதால்தானோ என்னவோ அது நிறையவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

இருவரும் தங்கள் நடிப்பில் கச்சிதம். அவர் ஜெயிலுக்கு போய்ட்டு வந்தாலும் அவர் தான் என் புருசன் அவரை விட்டு கொடுக்க முடியாது என்பதில் ராதிகா காட்டும் அன்பும் அக்கறை மெய் சிலிர்க்க வைக்கும்.

சீரியஸ் கேரக்டர் என்றால் அது விக்ரம் பிரபுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி போல. நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். நிறைய பைட் சீன்களை கொடுத்திருக்கலாம். ஆனால் குடும்பம், வாழைக்காய் மண்டி, வரவு செலவு என இப்படியே ஓட்டி விட்டார்கள்.

தங்கை வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலக்கல். சில நேரங்களில் ஓவர் ஆக்டிங் தெரிகிறது.

First On Net காடும்… நாட்டுமிராண்டிகளும்… அடவி விமர்சனம்

சாந்தனு பாவம். சர்போர்ட்டிங் கேரக்டர் போல வந்துள்ளார். இவருக்கும் ஐஸ்வர்யாவுக்கும் உள்ள காதல் உணர்வில்லை. திடீரென பூத்த பூ போல உள்ளது.

அதுபோல் விக்ரம் பிரபு மற்றும் மடோனா காதல் வேஸ்ட். படத்திற்கு தேவையில்லாத காட்சிகள்.

பாலாஜி சக்திவேல் கேரக்டர் பக்கா. யதார்த்த மனிதராக வாழ்ந்திருக்கிறார்.

மதுசூதனன் கேரக்டரை இன்னும் டெவலப் செய்திருக்கலாம். இவரின் மகன் கேரக்டரும் அப்படித்தான்.

வில்லனாக இரட்டை வேடத்தில் நந்தா. இரண்டும் ஓவர் பில்டப் தான். பொருந்தவில்லை. லுக் நல்லா இருக்கு. ஆனா வில்லத்தனம் போதவில்லை.

இடைவேளை கூட இவரை வைத்துதான் நகர்கிறது. ஆனால் சுவாரஸ்யம் இல்லை. இப்படிதான் காட்சி இருக்கும் என தெரிவதால் நம்மால் திரையை பார்க்க முடியவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு சூப்பர். படத்துடன் ஒன்ற வைக்க இது உதவுகிறது.

பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ளார். பாடல்கள் ஆங்காங்கே வந்தாலும் மனதில் ஒட்டவில்லை. கண்ணுத் தங்கம்… பாடல் பரவாயில்லை. அவரின் குரல் ஈர்த்த அளவுக்கு இசை ஈர்க்கவில்லை.

குறைவான நிமிடத்தில் சொல்ல வேண்டிய கதையை ரொம்ப நீட்டிவிட்டார் தனா. எந்த ட்விஸ்ட்டும் இல்லை. நிறைய இளைய நடிகர்கள் இருந்தும் காதல் துளி கூட இல்லை.

தன் குருநாதர் மணிரத்னம் பாணியில் படத்தை கொடுக்க நினைத்துள்ளார். ஆனால் பெரிதாக ஸ்கோப் இல்லை. மனதில் பதிகின்ற போல நச் வசனமும் படத்தில் இல்லை.

அப்பா பிள்ளைகள் உறவு, பழிவாங்கும் கதை என வழக்கமான கதையை கொடுத்துள்ளார். சென்டிமெண்ட் காட்சிகள் குடும்ப பெண்களுக்கு பிடிக்கும்.

ஆக.. இந்த வானம் கொட்டட்டும்.. வாழை கொட்டுடிச்சி

Comments are closed.

Related News

மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தனசேகரன்…
...Read More
குடும்ப உறவுகளை மையப்படுத்தியும், குடும்ப உறவுகளுக்கு…
...Read More