First on Net காடும்… நாட்டுமிராண்டிகளும்… அடவி விமர்சனம்

First on Net காடும்… நாட்டுமிராண்டிகளும்… அடவி விமர்சனம்

நடிகர்கள் : வினோத் கிஷன், அம்மு அபிராமி, விஷ்னுப்ரியா, முத்துராமன், ஜெயச்சந்திரன் மற்றும் பலர்
இசை : சரத் ஜடா
ஒளிப்பதிவு : ரமேஷ்.ஜி
இயக்கம் : ரமேஷ்.ஜி
தயாரிப்பு : சாம்பசிவம்

நிறைய பேருக்கு அடவி என்றால் பொருள் தெரியாது.. அடவி என்றால் காடு எனப் பொருள்.

கதைக்களம்…

வழக்கமாக காடு பற்றிய கதை என்றாலே அங்குள்ள மக்களை விரட்டி அங்கு ரிஷார்ட்டு கட்ட ஒரு பணக்கார முதலை கூட்டம் திட்டமிடும். இதிலும் அதே கதைதான்.

கோத்தகிரி காட்டு மலைப்பகுதியில் ஒரு ரிசார்ட் கட்ட முயற்சிக்கிறார் மனோகரன். இதற்காக தாசில்தார், எம்எல்ஏ, போலீஸ் உள்ளிட்டோர்களுடன் தீட்டம் தீட்டி அந்த காட்டில் வசிக்கும் மக்களை விரட்ட திட்டமிடுகின்றனர்.

மேலும் ரேஞ்சர் ரகுவீரனும் (ஜெயச்சந்திரன்) அங்குள்ள பெண்களை மானப்பங்கப்படுத்துகிறார். (இவரின் மீசையே டெரர் லுக் கொடுக்கிறது.)

இவர்களின் திட்டம் அறிந்து முருகன் (வினோத்), வள்ளி (அம்மு அபிராமி) யும் மக்களை ஒன்று சேர்த்து அந்தக் கும்பலை எதிர்த்துப் போராடுகிறார்கள்.

First On Net வாழை கொட்டுடிச்சி… வானம் கொட்டட்டும் விமர்சனம்

இறுதியில் வென்றது யார்? என்பதே மீதிக் கதை.

கேரக்டர்கள்…

நந்தா, நான் மகான் அல்ல, ஆகிய படங்களில் கொடூர வில்லனாக நடித்த வினோத் கிஷன் இதில் நாயகன்.

கிராமத்து நாயகனாக சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். ஆக்சனிலும் கோபத்திலும் சிறப்பு. வள்ளியாக வரும் அம்மு அபிராமி

காட்டுத்தனமான அழகு. பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

First On Net சீறும் சிறுமிகள்… சீறு விமர்சனம்

வள்ளியின் தோழியாக நடித்துள்ள விஷ்ணுப்பிரியா வின் கேரக்டர் நிச்சயம் அனைவரையும் கவர்ந்து விடும்.

இவர்கள் தவிர படத்தின் துணை கேரக்டர்களாக வரும் பாத்திரங்களுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வாய்ப்புள்ளது.

காட்டை அழித்தால் அது நம்மையே அழிப்பதற்கு சமம் என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரமேஷ்.

யானை முதல் குருவிகள் வரை இணைந்து ஒரு காட்டையே உருவாக்கிறது. அதில் இருந்து கிடைக்கும் ஆக்சிஸன் தான் நம் வாழ்வின் ஆதாரம் ஆகாரம் எல்லாம். ஆனால் அந்த காட்டை அழித்து வாழ நினைக்கும் மனிதர்கள்தான் நிஜ காட்டுமிராண்டிகள்.

ஆனால் இவர்கள் காட்டில் வாழ்வதில்லை. நாட்டில் வாழ்வதால் இவர்களை நாட்டுமிராண்டிகள் என்றே சொல்ல வேண்டும்.

இந்த நாட்டு மிராண்டிகள் என்பது புது வார்த்தையாக இருந்தாலும் மிருகங்களை விட கொடியவர்களை இப்படித்தான் சொல்ல வேண்டும்.

ஜாதியற்ற ஜனங்களாவோம்… நாடோடிகள் 2 விமர்சனம் 4/5

அருமையான கதையை இன்னும் அழகாக சொல்லியிருக்கலாம். ஆனால் ஆவணப்பட போல காட்சிகளை நகர்த்தியுள்ளார்.

முக்கியமாக பாடல்கள் ஏனோ தானோ இருக்கின்றன. பாடல் வரிகள் கூட தானே.. தானே.. என வரிகளுக்கு பஞ்சம் போல உள்ளது.

மலைவாழ் மக்களாக வந்த போதிலும் நாயகன் மற்றும் நாயகி மட்டும் ஜொலிக்கின்றனர். கொஞ்சமாவது கிராமத்து சாயலில் காட்டியிருக்கலாம்.

ஒளிப்பதிவில் குறையில்லை. நன்றாகவே உள்ளது.

மலைவாழ் மக்கள் சப்பை என்ற தெய்வத்தை வணங்குவது வழக்கம். சப்பை காட்டுல இறங்கிட்டாள். என ஆரம்பிக்கும் படம் முதலில் எதிர்பார்ப்பை எகிற செய்கிறது. அப்போது 3 போலீஸ்காரர்கள் கூட கொல்லப்படுகிறார்கள்.

அதே வேகம், அதே பயம் ஆகியவற்றுடன் படத்தை கொண்டு சென்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

ஆக இந்த அடவி.. காடும் நாட்டு மிராண்டிகளும்..

Adavi review rating

Comments are closed.