சந்திரமுகி 2 விமர்சனம்.. 3.5/5.; சந்தன அழகி

சந்திரமுகி 2 விமர்சனம்.. 3.5/5.; சந்தன அழகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்கதை…

18 ஆண்டுகளுக்கு முன் வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, நயன்தாரா, பிரபு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் சந்திரமுகி. அந்த படத்தின் தொடர்ச்சியாகவே இதன் கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் பி வாசு.

கதைக்களம்….

சுரேஷ் மேனன், ராதிகா, ரவி மரியா, விக்னேஷ் ஆகியோர் சகோதர சகோதரிகள். இவர்கள் குடும்பத்தில் தொடர்ச்சியாக பிரச்சனைகள் அசம்பாவிதங்கள் நடக்க சாமியாரை நாடுகின்றனர்.

நீங்கள் ஒரு மண்டலம் விரதம் இருந்து குலதெய்வ வழிபாட்டை செய்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்கிறார்.எனவே குலதெய்வம் உள்ள கிராமத்திற்கு குடும்பத்துடன் வருகின்றனர்.

ராதிகாவின் மகள் ஓடிப் போய் திருமணம் செய்ததால் பிரிந்திருக்கிறார். இறந்த மகளின் 2 குழந்தைகளை லாரன்ஸ் வளர்த்து வருகிறார். பூஜையில் அவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் லாரன்ஸ் அழைத்து வருகிறார்.

சந்திரமுகி 1 படத்தில் காட்டப்பட்ட அந்த பழைய பங்களாவில் ஒரு மண்டலமாக தங்குகின்றனர். அந்த பங்களாவில் தெற்கு திசையில் செல்லக்கூடாது என கண்டிசன் போடுகிறார் பங்களா ஓனர் வடிவேலு.

அதையும் மீறி சிலர் அங்கே செல்வதால் ஏற்படும் பிரச்சனைகள் தான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

சந்திரமுகி முதல் பாகத்தின் கதை களத்தையே இதிலும் அமைத்து கொஞ்சம் ஆல்டர் செய்திருக்கிறார் பி வாசு.

ரஜினி இடத்தில் ராகவா லாரன்ஸ்.. நயன்தாரா இடத்தில் மகிமா நம்பியார்.. ஜோதிகா இடத்தில் லட்சுமி மேனன் மற்றும் கங்கணா.. சாமியார் வேடத்தில் ரமேஷ் ராவ்.. என ஆல்டர் செய்திருக்கிறார்.

கங்கனா அழகு தேவதை. சந்திரமுகியை பார்த்தால் காதலில் விழுவது நிச்சயம். ஜோதிகாவிடம் இருந்த சந்திரமுகி லுக் இதில் லட்சுமி மேனனிடம் மிஸ்ஸிங்.

வடிவேலு காமெடி சில இடங்களில் சிரிக்க வைக்கிறது. நிறைய இடங்களில் ரஜினியை இமிட்டேட் செய்துள்ள லாரன்ஸ்.

பாண்டியன் & வேட்டையன் என வெரைட்டி காட்டி இருக்கிறார் லாரன்ஸ். அரசர் கால தமிழைப் பேசும்போது ரசிக்க வைத்துள்ளார்.

இவர்களுடன் மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சுபிக்ஷா, சிருஷ்டி டாங்கே, ரவி மரியா, விக்னேஷ், மானஸ்வி உள்ளிட்டோரும் உண்டு.

சாமியார் மனோபாலா வேடத்தில் மனோ பாலாவை இதிலும் நடித்திருக்கிறார். ஆனால் இது நித்தியானந்தா போல அச்சக் பச்சக் என்று 5 பெண்களை அழைத்து வந்திருக்கிறார்.

பெயிண்டர் கோபாலுவாக ஆர் எஸ் சிவாஜி நடித்திருக்கிறார்.

டெக்னீசியன்கள்…

படத்தின் ஒளிப்பதிவு கலை இயக்கம் ஆகியவற்றை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும்.. அரண்மனை அவ்வளவு அருமையாக உள்ளது.. அதைப்போல பாழடைந்த கோவிலும் ரசிக்க வைக்கிறது.

சண்டை இயக்குனர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர். ஆனால் பஸ் எரிந்து கொண்டிருக்கும்போது அதில் லாரன்ஸ் வண்டி ஓட்டி குழந்தைகளுக்கு காப்பாற்றுவது எல்லாம் நம்ப முடியாத ரகமே.

சந்திரமுகி முதல் பாகத்தில் வித்யாசாகர் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற ஆறு பாடல்களும் தேனாறு. இதில் ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி இசையமைத்திருக்கிறார்.

லாரன்ஸ் புகழை பாடுவது போல ஒரு பாட்டு தேவையற்றதாகவே உள்ளது.

இரண்டு பாடல்கள் ரசிக்க வைக்கிறது. கிளைமாக்ஸ் பாடல் ரா ரா என்ற பாடல் அதே வரிகளைக் கொண்டு ஆரம்பிக்கிறது. ஆனால் டியூனை கொஞ்சம் மாற்றி அமைத்துள்ளனர். இது சுத்தமாக எடுபடவில்லை. ரா ரா சரசுக்கு ரா ரா என்ற பாடலையே… படத்தை போல ரீமேக் செய்து இருக்கலாம்.

கங்கனாவை ஒரு காட்டுப் பகுதியில் காப்பாற்றுகிறார் ராகவா லாரன்ஸ். அப்போது கருஞ்சிறுத்தை ஒன்று வருகிறது. அதனுடன் புலி முருகன் ஸ்டைலில் சண்டை போடாமல் ஒரே அடியில் லாரன்ஸ் வீழ்த்துவது சிரிப்பை வரவழைக்கிறது. அதுபோல நான்கு நாய்களை கங்கனா அடிப்பதும் சிரிப்பு ரகமே.

சந்திரமுகி முதல் பாகம் வந்த போது 2K கிட்ஸ் பிறந்த தருணம். எனவே அவர்கள் நிச்சயம் இந்த படத்தை கொண்டாடுவார்கள்.

முதல் பாகத்தை பார்த்தவர்கள் இரண்டாம் பாகத்தை ஒப்பிட்டு பார்க்க கூடாது என்றாலும் அதன் தொடர்ச்சியாகவே பல காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக பேய் வருவதற்கான அறிகுறிகளை ரஜினிகாந்த் வடிவேலுவிடம் பேசுவார். ரஜினி – வடிவேலு வேற லெவல் காமெடி செய்திருப்பார்கள். இதில் எடுபடவில்லை.

இரவு நேரத்தில் திடீர் திடீர்னு சலங்கை ஒலி கேட்க அனைவரும் எழுந்து வந்து பார்க்கின்றனர். எப்போ பார்த்தாலும் ராதிகா அதே மேக்கப் உடன் அழகாகவே வருகிறார். அவரை போலவே எல்லாரும் இரவு நேரத்திற்காக காத்திருப்பது போலவே உள்ளது.

இரண்டாம் பாகத்தில் அரசர் கால கதையை சொல்லி வித்தியாசம் காட்டி இருக்கிறார் இயக்குனர் பி வாசு. பெண்களை கவரும் விதத்தில் நிறைய பெண் கதாபாத்திரங்களை கொடுத்து ரசிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர்.

அதுபோல கிளைமாக்ஸ் காட்சி எதிர்பாராத ஒன்று. முதல் பாகத்தில் ஜோதிகாவே சந்திரமுகியாகவும் நடித்திருப்பார். இதில் கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.

ஆக சந்திரமுகி 2.. சந்தன (மணக்கும்) அழகி

Chandramuki 2 movie review and rating in tamil

‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ விமர்சனம்..; லேசா லேசா லெஸ்பியன் லேசா.?

‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ விமர்சனம்..; லேசா லேசா லெஸ்பியன் லேசா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இரண்டு மதங்களை சேர்ந்த இரு பெண்களின் ஓரின சேர்க்கை (பாலின ஈர்ப்பு) காதல் கதை..

நிரஞ்சனா மற்றும் ஸ்ருதி பெரியசாமி இணைந்து ஜோடியாக நடித்துள்ளனர்.

பிரபல நடிகை நீலிமா இசையும் ஷார்ட் பிளிக்ஸ் என்ற ஓடிடி தளமும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’. இந்த படம் செப்டம்பர் 28ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

கதைக்களம்…

ஷகீரா இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பெண்.. வினோதா இந்து மதத்தைச் சேர்ந்த பெண்.

தன்னுடைய வேலை விஷயமாக தரங்கம்பாடி வரும் வினோதா (ஸ்ருதி) அறிமுகம் இல்லாத ஷகீரா (நிரஞ்சனா) வீட்டில் தங்கு நேரிடுகிறது. கொஞ்ச நாள்களில் இருவருக்கும் காதல் மலர காமமும் மலர்கிறது.

இந்த நிலையில் ஷகீராவிற்கு மாப்பிள்ளை பார்க்கிறார் அவரது வாப்பா உமர். எனவே தன் வருங்கால கணவரிடம் சொல்கிறார் நிரஞ்சனா. முதலில் வெறுக்கும் இவர் வேறு வழி இல்லாமல் சேர்த்து வைக்க நினைக்கிறார்.

இதனிடையில் ஷகீராவுக்கும் வினோதாவுக்கும் இருக்கும் லெஸ்பியன் காதல் இரு விட்டாருக்கும் தெரிய வருகிறது.

நம் மார்க்கத்திற்கு எதிரான செயல் என இரு வீட்டிலும் எதிர்ப்பு வலுக்கவே சமூகத்தை மீறி அந்த பெண்கள் என்ன செய்தனர்.? சமூகம் அவர்களை எப்படி பார்த்தது.? இறுதியில் என்ன ஆனது என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

அழகு நிறைந்தவராக நிரஞ்சனா நெய்தியார்.. அவரது கண்களும் உதடுகளும் நம்மை கண் சிமிட்டாமல் பார்க்க வைக்கிறது. இஸ்லாமிய பெண்ணுக்கு உரித்தான பொருத்தமான முகவெட்டு.

மார்க்கத்திற்கு கட்டுப்பட்டு தயங்கி நிற்பதாகட்டும் தன் காதலை சொல்லாமல் தவிப்பதாகட்டும் என நிறைவான நடிப்பை கொடுத்துள்ளார்.

சினிமா ஆர்வம் கொண்டவராக ஸ்ருதி பெரியசாமி. ஷமீராவுக்காக அவளின் தந்தையிடம் வாக்குவாதம் செய்யும் போது சிங்கப்பெண்ணாக ஜொலிக்கிறார்.

ஷகீராவின் மாப்பிள்ளை இர்ஃபான், உமர், நண்பர்கள் உள்ளிட்டோரும் கச்சிதம்.

ஷகீராவின் உறவுக்கார பெண்ணாக வருபவரும் கொஞ்ச நேரம் என்றாலும் கவனிக்க வைக்கிறார்.. “நான் என்ன பிடித்த வாழ்க்கையா வாழ்கிறேன்? என்று அவர் கேட்கும் போது இல்லத்தரசிகளின் மனக்குமுறலை உணரலாம்.. “நீயாவது உனக்குப் பிடித்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழு” என் அனுப்பி வைக்கும் போது பெண்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறார்

டெக்னீசியன்கள்…

தயாரிப்பாளர் நடிகை நீலிமா இசை.

இயக்கம் : ஜெயராஜ் பழனி.

தர்ஷன் குமார் இசையமைத்துள்ளார். பாடல்களை ஜி கே பி மற்றும் சிவா சங்கர் எழுதியுள்ளனர்.

இசை மனதுக்கு இதம் என்றால் படத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சி.

ஆண் பெண் காதல் என்றாலே சில கிளுகிளுப்பான காட்சிகள் இருக்கும். இதில் லெஸ்பியன் என்றாலும் ஒரே ஒரு லிப்லாக் சீன் மட்டுமே உள்ளது.

இந்த கதைக்களத்தில் இயக்குனர் நினைத்து இருந்தால் கமர்சியலுக்காக கவர்ச்சி சீன்களை வைத்திருக்கலாம் இயக்குனர் ஜெயராஜ் பழனி. ஆனால் அப்படி எதுவுமில்லை.

உங்கள் இஸ்லாமிய மார்க்கத்தில்.. “வட்டிக்கு விடக்கூடாது.. லஞ்சம் வாங்க கூடாது கொடுக்கக் கூடாது.. அடுத்தவர் மனைவியை / கணவனை பார்க்க கூடாது” என பல விஷயங்கள் இருக்கிறது. அதை எல்லாம் நீங்கள் கடைப்பிடிக்கிறீர்களா? ஆனால் எங்கள் காதலை மட்டும் ஏன் எதிர்க்கிறீர்கள்? என ஸ்ருதி பேசும்போது சில கைதட்டல்களை தியேட்டரில் கேட்க முடிகிறது.

சினிமா தொடங்கிய காலத்தில் இருந்து காதலுக்கு ஜாதியில்லை.. காதலுக்கு மதம் இல்லை.. காதலுக்கு கண்கள் இல்லை என பல சினிமாக்களை பார்த்து இருக்கிறோம்.

இதில் காதலுக்கு ஆண் – பெண் என்ற பாலின பேதமும் கிடையாது என் இந்த வாழ்வு தொடங்குமிடம் நீதானே படம் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜெயராஜ் பழனி.

இந்த சமூகம் எதிர்க்கும் என்பதற்காக உங்கள் வாழ்க்கையை விட்டுக் கொடுக்காமல் பிடித்த வாழ்க்கையை வாழுங்கள் என திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர்.

ஆக இந்த காதல் தொடங்குமிடம் நீதானே.. லேசா லேசா லெஸ்பியன் லேசா

வாழ்வு தொடங்குமிடம் நீதானே

vaazhvu thodangum idam neethane movie review and rating in tamil

மால் பட விமர்சனம்.; சிலை கடத்தல் சிக்கல்

மால் பட விமர்சனம்.; சிலை கடத்தல் சிக்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தினேஷ் குமரன் இயக்கத்தில், உருவாகி ஆஹா ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் ‘மால்’.

சமீபத்தில் திரைக்கு வந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ‘ஜெயிலர்’ படத்தில் சிலை கடத்தலை மையப்படுத்தி கதை இருக்கும். அதை கதை களத்துடன் வந்திருக்கும் மற்றொரு திரைப்படம் ‘மால்’.

கதைக்களம்…

ஒரு சிலையை விற்றுத் தர வேண்டும் அதற்கு கமிஷன் தருகிறேன் என ஒரு ஏஜென்ட் வருகிறார். ரூ 100 கோடி மதிப்புள்ள சிலையை 30 கோடிக்கு அவர் விற்க நினைக்கும் போது அதில் உள்ள வியாபாரம் தந்திரம் வெளிப்படுகிறது.

அதன் பிறகு ராஜராஜ சோழர் சிலை கடத்தல் கும்பல் அறிந்த நேர்மையான போலீஸ் அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் இறங்குகின்றனர்.

ஒரு பக்கம் போலீஸ் கஜராஜ் சிலையை தன் வீட்டுக்குள் மறைத்து வைத்து கோடிக்கணக்கில் விற்க முயல்கிறார்.

இன்னொரு கதையில்.. தன் காதலியுடன் தவிக்கிறார் ரிப்போர்ட்டர் விஜே பப்பு. அப்போது எதிர்பாராத விதமாக கார் விபத்து நடக்க கார் ஓட்டியவரை மருத்துவமனையில் அனுமதித்து காத்திருக்கின்றனர். ஆனால் அவனிடம் தான் சிலை இருப்பது என்பது இவர்களுக்கு தெரியாது.

அடுத்த கதையில் அஸ்ரப் மற்றும் தினேஷ் குமரன் இருவரும் ஒரு லட்ச ரூபாய் பைக் வாங்க செயின் திருட முயல்கின்றனர். அதுவும் போலீஸ் கஜராஜ் வீட்டில்..

இந்த நான்கு கதைகளையும் ஒரே இடத்தில் (மருத்துவமனையில்) சேர வைக்கிறார்.

அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

போலீஸ் கஜராஜ் நேர்மையான போலீசாக காண்பித்துக் கொண்டு வில்லத்தனம் காட்டி கதையின் நாயகன் ஆகியிருக்கிறார்

சாய் கார்த்திக்கின் மனைவியாக கெளரி நந்தா. இவரது கண்களும் ரசிக்க வைக்கிறது.

புதுமுக நடிகர் என்றாலும் சாய் கார்த்திக் நம்மை நடிப்பில் ஈர்க்கிறார்.

விஜே பப்பு மற்றும் ஜெ இருவரும் காதலர்கள். ஆனால் ரொமான்ஸ் கெமிஸ்ட்ரி சுத்தமாக இல்லை.

அஷ்ரப் & தினேஷ் குமரன் இருவரும் கொஞ்சம் கலகலப்பு கூட்டி இருக்கின்றனர். இதில் தினேஷ் படத்தின் டைரக்டர் என்பதால் ஓவர்டேக் செய்ய முயற்சித்துள்ளார்.

படத்தில் இரண்டே பெண்கள் தான் கௌரி நந்தா மற்றும் ஜே. ஆனால் ஜெ-க்கு பெரிதாக காதலும் இல்லை காட்சியும் இல்லை. கௌரி ஒரே காட்சியில் வந்தாலும் நம்மை சுண்டி இழுக்கிறார்.

டெக்னீசியன்கள்…

ஒளிப்பதிவு படத்தொகுப்பு என இரண்டையும் நேர்த்தியாக கொடுத்துள்ளார் ஆர். சிவராஜ். 12 மணி நேரத்திற்குள் நடக்கும் இரவு கதை என்றாலும் அதற்கான கேமரா கோணங்களை வைத்து ரசிக்க வைத்திருக்கிறார் சிவராஜ்.

ஒளிப்பதிவாளரே எடிட்டிங் செய்து இருக்கிறார் என்பது சிறப்பான செயல் என்றாலும் திருடர்கள் முகமூடி கூட அணியாமல் திருட செல்வார்களா? இதைக் கூடவா கவனிக்கவில்லை என்பது வருத்தம்.

பத்மயன் சிவானந்தத்தின் இசையில் பின்னணி இசை சில இடங்களில் மட்டுமே ரசிக்க வைக்கிறது.. நிறைய இடங்களில் புதிய இசையமைப்பாளர் போன்ற எண்ணத்தை உருவாக்குகிறது. திரில்லர் படங்களுக்கு உரிய இசையை கொடுத்திருந்தால் இன்னும் ஸ்கோர் செய்திருக்கலாம்.

கடத்தல் கும்பலுக்குள் ஏற்படும் ஈகோவை வைத்துக் காட்சியை ஆரம்பித்திருக்கிறார் இயக்குநர். ஆனால் அதற்குப் பிறகு வரும் காட்சிகளில் விறுவிறுப்பு இல்லை என்பதால் முதல் காட்சி வீணடிக்கப்பட்டுள்ளது.

சிலை கடத்தல்… காதலர்கள் பிரிதல்.. நேர்மையான போலீஸ்.. போலியான (நேர்மையற்ற) போலீஸ்.. கடத்தல் கும்பலுக்குள் ஈகோ பிரச்சனை உள்ளிட்டவைகளை சரியான விதத்தில் கையாண்டு உள்ளார் இயக்குனர் தினேஷ் குமரன்.

ஒரே இரவுக்குள் நடக்கும் 4 கதைகள் இருந்தாலும் இழுத்து முடிச்சு போட்டு கிளைமாக்ஸில் சுபமாக முடித்துள்ளார் இயக்குநர். ஆங்காங்கே லாஜிக் குறைகள் இருந்தாலும் இளம் வயதில் திறமையான கலைஞர்களை நம்பி மால் படத்தை கொடுத்ததற்காகவே இயக்குனரை பாராட்டலாம்.

ஆக மால்… சிலை கடத்தல் சிக்கல்

மால்

Maal movie review and rating in tamil

கடத்தல் விமர்சனம்..; கவனம் தேவை

கடத்தல் விமர்சனம்..; கவனம் தேவை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

வேலை தேடி தன் நண்பன் இருக்கும் ஓசூருக்கு வருகிறார் நாயகன் எம் ஆர் தாமோதர். அப்போது குழந்தை கடத்தலில் ஈடுபட்ட ஒருவனை கண்டுபிடிக்கிறார். அவனை அடித்து அந்த குழந்தையை மீட்டெடுக்கிறார்.

குழந்தைக்கு தாய் தந்தை பெயரோ ஊர் பெயரோ தெரியாத காரணத்தினால் தன்னுடன் வைத்துக் கொள்கிறார் நாயகன்.

போலீஸ்க்கு செல்லலாம் என்ற நிலை இருந்தாலும் ஒரு குற்றச் செயலுக்காக ஒளிந்து இருப்பதை நண்பரிடம் தெரிவிக்கிறார். இந்த கதை ஒருபுறம் இருக்க மற்றொரு பக்கத்தில்…

ப்ளாஷ்பேக்கில்… பதநீர் விற்று தன் அம்மாவுடன் வசித்து வருகிறார் நாயகன். மக்கள் டாஸ்மாக்கை விரும்பி செல்லும் நிலையில் வியாபாரம் இன்றி தவிக்கிறார்.

அப்போது.. “நீ நண்பருடன் இணைந்து உன் வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறாய . உன் நண்பர்கள் நல்லவர்கள் இல்லை. குற்றச் செயல்களை ஈடுபடுபவர்கள். எனவே அவர்கள் நட்பை முறித்துக் கொள் என்கிறார் அம்மா.

தாய் சொல்லை மீற முடியாமலும் தவிக்கும் நாயகன் ஒரு கட்டத்தில் வேறு ஊருக்கு செல்கிறார். அங்கு தன் உறவினர் பங்காளி சிங்கம்புலி நடத்தும் காயலான் கடையில் வேலை செய்கிறார். அப்போது நாயகனை காண வரும் நண்பர்கள் ஒரு நாள் ஒரு குற்ற செயலில் ஈடுபட அது தொடர்பான மோதலில் தன்னை தற்காத்துக் கொள்ள வில்லனின் தம்பியை போட்டு தள்ளி விடுகிறார் நாயகன் தாமோதர்.

எனவே தான் நண்பனை ஓசூருக்கு வந்துள்ளார் நாயகன். அதன் பிறகு என்ன நடந்தது? குழந்தையை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாரா.? அல்லது பெற்றோரிடம் ஒப்படைத்தாரா? தான் நிரபராதி என்பதை நிரூபித்தாரா? அல்லது சிறைக்கு சென்றாரா.? என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்கள்

எம் ஆர் தாமோதர், விதிஷா, ரியா, சுதா , நிழல்கள் ரவி, சிங்கம் புலி, தமிழ்வாணன், ஜெயச்சந்திரன், ரவிகாந்த் , ஆதி வெங்கடாச்சலம், சபாபதி , சந்தோஷ், மோகன் ரெட்டி, மாஸ்டர் தருண், பிரவீன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

முகம் முழுக்க தாடி.. கலைந்த முடி என தமிழ் சினிமாவின் அசல் கிராமத்து இளைஞனாக வருகிறார் எம் ஆர் தாமோதர். ஆனால் இவர் அழும் போதும் சிரிக்கும் போதும் முகத்தை குளோசப்பில் காட்டுவதை இயக்குனர் தவிர்த்து இருக்கலாம்.

விதிஷா ரியா என இரண்டு நாயகிகள் இருந்தும் இவருக்கு பெரிதாக ரொமான்ஸ் இல்லை.. ஆக்சன் காட்சிகளில் கொஞ்சம் பாஸ்மார்க் பெறுகிறார்.

மதுரை முத்து என்ற பெயரில் கெத்து காட்டி இருக்கிறார் வில்லன். இனி இவருக்கு நிறைய படங்களில் வாய்ப்பு வர வாய்ப்பு இருக்கிறது.

சீரியஸ் படத்தை சிரிப்பாக கொண்டு செல்ல சிங்கம் புலி உதவியிருக்கிறார். ஆடையை மற்றும் மாற்றிக் கொண்டு கெட் அப் மாற்றி ஊர் ஊராக சுற்றுகிறேன் என சிங்கம் புலி நம் காதிலும் பூ சுற்றி இருக்கிறார்.

இவரது மனைவியாக கம்பம் மீனா. உன் கணவன் தான் ரவுடியை கொலை செய்தானா? என சிலர் விசாரிக்கும் போது “என்னைத் தொட்டுப் பார்க்கவே அவருக்கு தைரியம் கிடையாது.. இதுல கொலை வேறையா.? எனக் கேட்கும் போதும் பாடி லாங்குவேஜில் கவனிக்க வைக்கிறார்.

நாயகனின் அம்மாவாக சுதா. தன்னுடைய அனுபவ நடிப்பபில் நேர்த்தி.

நிழல்கள் ரவி நடித்துள்ளார். இவருக்கு பதிலாக வேறு ஒருவர் டப்பிங் பேசியிருக்கிறார். நிழல்கள் ரவி போல பேசும் மிமிக்ரி கலைஞரை பயன் படுத்தியிருக்கலாம். செட்டாகவில்லை.

குழந்தை நட்சத்திரமாக துறுதுறு பையன் தருண்.. நன்றாக பேசத் தெரிந்த இவனுக்கு பெற்றோர் பெயர்? ஊர் பெயர் தெரியாதா.? லாஜிக் இடிக்குதே.. இவனுக்கு பதில் இன்னும் சின்ன குழந்தை நடித்திருக்கலாம்.

டெக்னீசியன்கள்..

பி என் பி கிரியேஷன்ஸ் , பிரைம் அசோசியேட்ஸ், சவுத் இண்டியன் புரடக்ஷன்ஸ் சார்பில், செங்கோடன் துரைசாமி, நிர்மலா தேவி, எம் ஆர் தாமோதரன் தயாரிப்பில் உருவான படம் ‘கடத்தல்’.

சலங்கை துரை.. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். இவர் காத்தவராயன்’, ‘காந்தர்வன்’, ‘இ.பி.கோ 302′ உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.

பல நடிகர்களுக்கு வசனங்களுடன் உதடு அசைவு ஒட்டவில்லை. டயலாக் முன்பு வருகிறது. பின்னர் தான் உதடு அசைவு காட்டப்படுகிறது. அதுபோல அடிப்பதற்கு முன்பே சப்தம் வருகிறது. இதைக் கூடவா எடிட்டர் & இயக்குனர் கவனிக்கவில்லை?

ஸ்ரீகாந்த் இசையில் ‘பிச்சிப்பூ’ மற்றும் ‘என்ன பெத்த ஆத்தா’ பாடல்கள் ஓகே.

ராஜ் செல்வாவின் ஒளிப்பதிவில் ஓசூர் பொள்ளாச்சி திருநெல்வேலி காட்சிகள் சிறப்பு. ஓசூரில் நிஜமான விநாயகர் சதுர்த்தி விழாவில் கேமராவை வைத்து காட்சிகளை படமாக்கி இருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம்.

இந்த உலகில் தாய் பாசமும் நட்பும் கிடைப்பது அரிது. தாய் பாசத்திற்கு ஈடு இல்லை.. கூடா நட்பு கேடாய் முடியும் உள்ளிட்ட கருத்துக்களை சொல்லி இருக்கிறார் இயக்குனர் சலங்கை துரை.

கடத்தல் சம்பவத்தை விறுவிறுப்பாக காட்டிய இயக்குனர் அதன் பின்னர் கதைக்களத்தை மாற்றி விட்டார். செயற்கையான நடிப்பு நாடகத்தன்மை ஆகியவைகளால் காட்சிக்கு பலவீனமே.

கிளைமாக்ஸ் காட்சியில் என்கவுண்டர் நோக்கம் என்ன? ஒரு உயர் அதிகாரி சொன்ன பிறகும் என்கவுண்டர் ஏன் செய்கிறார் மற்றொரு அதிகாரி என்பதற்கான விளக்கம் இல்லை. நாயகனை பழிவாங்க அவருக்கு ஏதேனும் உள்நோக்கம் இருந்ததா?

ஆக கடத்தல்.. கவனம் தேவை

Kadathal movie review and rating in tamil

ஆர் யூ ஓகே பேபி விமர்சனம்..; குழந்தையும் குழப்பமும்

ஆர் யூ ஓகே பேபி விமர்சனம்..; குழந்தையும் குழப்பமும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்கதை…

தமிழ் சினிமாவில் தைரியமான நடிகை இயக்குனர் என பெயர் பெற்றவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.

இவர் ‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’, ‘ஹவுஸ் ஓனர்’ ஆகிய 4 படங்களை இயக்கியிருக்கிறார்.

தற்போது அவரே தயாரித்து இயக்கியுள்ள டம் ‘ஆர் யூ ஓகே பேபி’.

இந்தப் படம் இன்று வெள்ளிக்கிழமை செப்டம்பர் 22ஆம் தேதி வெளியாகிறது. இயக்குனர் ஏ எல் விஜய் இந்த படத்தின் விநியோக உரிமையை பெற்று இருக்கிறார்.

அபிராமி, சமுத்திரக்கனி, மிஷ்கின், ‘ஆடுகளம்’ நரேன், முல்லை, சரண்யா ரவிச்சந்திரன், விஜே ஆஷிக், ரோபோ சங்கர், வினோதினி ஆகியோர் நடித்துள்ளனர்.

இளையராஜா இசையமைக்க, லட்சுமி ராமகிருஷ்ணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு சென்னை, ராஜபாளையம், கேரள மாநிலம் பாலக்காடு ஆகிய பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

ஒன்லைன்…

பெற்ற குழந்தையை விற்பதும் அதை வாங்குவதும் சட்டப்படி குற்றமாகும்.. இதில் எதை செய்தாலும் சட்ட அனுமதி பெற்று செய்திருந்தால் சுபம்.

கதைக்களம்…

நாயகன் அசோக் – நாயகி முல்லை இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகெதர் முறையில் வாழ்கின்றனர். அடிக்கடி கருக்கலைப்பும் செய்கின்றனர்.

ஒரு கட்டத்தில் கருக்கலைப்பு செய்ய முடியாத சூழ்நிலையில் குழந்தையை பெற்றெடுக்கிறார் முல்லை. தங்கள் குடும்ப வறுமையின் காரணமாக பெற்ற குழந்தையை நர்ஸ் வினோதினி மூலமாக கேரளாவில் வசிக்கும் சமுத்திரக்கனி – அபிராமி தம்பதிக்கு (யார் என தெரியாமல்) விற்று விடுகின்றனர்.

10 மாதங்கள் ஆன நிலையில் தான் பெற்றெடுத்த குழந்தை தனக்கு வேண்டும் என்கிறார் முல்லை. இதனால் வாங்கிய தம்பதியை தேடி அலைகிறார்.

பணம் பெற்றுக்கொண்டு விற்ற குழந்தையை பெற்று தர முடியாது என தட்டிக் கழிக்கிறார் வினோதினி.

எனவே டிவியில் சொல்லாததும் உண்மை நிகழ்ச்சியில் நடத்தும் லட்சுமி ராமகிருஷ்ணன் உதவியை நாடுகிறார் முல்லை.

இதனிடையில் குழந்தை நலன் துறைக்கும் (CHILD WELFARE COMMITTEE) இந்த விவகாரம் செல்கிறது.

அதன் பிறகு என்ன நடந்தது? ஒரு டிவி நிகழ்ச்சியால் குழந்தையை மீட்டெடுக்க முடிந்ததா ? கோர்ட் என்ன தீர்ப்பு கொடுத்தது? யார் குற்றவாளி.? என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

குழந்தையை விற்ற பெண்ணாக முல்லை. அவரின் நடிப்பும் அவர் கோர்ட்டில் பேசும் வசனமும் கண்கலங்க வைக்கும். கருக்கலைப்பு செய்ததற்கான காரணத்தை கூறும்போது.. காண்டம் யூஸ் பண்ணுனா சுகம் இல்லை என்கிறான் என அவர் பேசும் வசனம் பெண்களின் உணர்ச்சியை காட்டுகிறது.

லிவிங் டுகெதர் கணவனாக ‘முருகா’ அசோக் நடித்திருக்கிறார்.. ஆடிசன் என நினைத்து சொல்லாதது உண்மை டிவியை நிகழ்ச்சியில் அவர் ஆட்டம் போடும்போது ரசிக்க வைக்கிறார். அதுவும் கிளாசிக் நடனம்.

குழந்தை பெற முடியாத தம்பதிகளாக சமுத்திரக்கனி மற்றும் அபிராமி. மலையாளம் கலந்து தமிழ் பேசும் அபிராமியும் அழகு.

ஆரம்பத்திலேயே இவர்களின் காட்சி ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது.

சொல்லாததும் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். இவருக்கு ஏற்கனவே இந்த அனுபவம் இருப்பதால் அதில் அழகாகவே தன் முத்திரையை பதிக்கிறார்.

மிஷ்கின் ஓரிரு காட்சியில் வந்தாலும் மிரட்டல். இவர்களுடன் வினோதினி, சரண்யா ரவிச்சந்திரன், விஜே ஆஷிக் உள்ளிட்டோரும் கவனிக்க வைக்கின்றனர்.

சிபிஐ ஆஃபீஸ்ராக நடித்துள்ளவர் நிஜமான வக்கீல் என்பதால் சட்ட நுணுக்கங்களை அவரிடம் கேட்டு காட்சியாக வைத்திருக்கிறார் இயக்குனர் லட்சுமி.

முக்கியமாக குழந்தை பெறாமல் தாய்ப்பால் கொடுக்க முடியும் என்பதை இந்த படத்தின் மூலம் மக்களுக்கு சொல்லி இருக்கிறார். அதை ஒரு காட்சியாகவும் பயன்படுத்தி இருக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இளையராஜாவின் இசை படத்திற்கு கூடுதல் பலம். அபிராமியின் தவிப்பை காட்டும் போது இசையால் உணர்வை பிரதிபலிக்கிறார். ஆனால் பாடல்கள் கவனம் பெறவில்லை.

கேரளாவின் அழகையும் தமிழ்நாட்டின் அழகையும் நேர்த்தியாக காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர்.

கமர்சியல் படங்கள் போல் அல்லாமல் வாழ்க்கையுடன் ஒன்றிய படங்களை தருபவர் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன். ஆர் யூ ஓகே பேபி படமும் அந்த வகையை சாரும்.

குழந்தை கடத்தல்.. கோர்ட் வழக்கு விசாரணை உள்ளிட்டவைகளை அலசி ஆராய்ந்து இருக்கிறார் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன். குழந்தை கடத்துபவர்கள் விற்ப்பவர்கள் இந்த படத்தை பார்த்தால் நிச்சயம் திருந்துவார்கள் என நம்பலாம்.

ஆக.. ஆர் யூ ஓகே பேபி.. குழந்தையும் குழப்பமும்

Are You Ok Baby movie review and rating in tamil

ஐமா விமர்சனம்..; அறைக்குள் அவர்கள்

ஐமா விமர்சனம்..; அறைக்குள் அவர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்கதை…

ஐமா எனும் சொல்லில் (ஐ ) எனும் எழுத்து தெய்வத்தையும் (மா) எனும் எழுத்து வலிமையையும் குறிக்கிறது. அதாவது ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினைகள் கட்டாயம் உண்டு என்கிறார் இயக்குநர்.

இப்படத்தை எழுதி இயக்கியவர் ராகுல்.ஆர். கிருஷ்ணா. இவர் தமிழ், மலையாளத்தில் சில குறும்படங்களில் பணிபுரிந்துள்ளார்.

எவருக்கும் தீங்கு நினைக்காத இரு மனிதர்களுக்கு ஏற்படும் துரோகம் ஏமாற்றம்.. இவற்றை எதிர்கொள்ளும் சுவாரசியத்தை சொல்லும் ஆட்டமே ‘ஐமா’.

தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் (Tamil Exotic Films ) நிறுவனம் சார்பில் சண்முகம் ராமசாமி ’ஐமா’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் நாயகனாக யூனஸ், நாயகியாக எல்வின் ஜூலியட், முக்கிய கேரக்டர்களில் அகில் பிரபாகரன், மேகாமாலு மனோகரன்,சிஷிரா, சாஜி ஆகியோருடன் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமியும் திருப்புமுனை கேரக்டரில் வருகிறார்.

கதைக்களம்…

விபத்தில் சிக்கிய மரியா (எல்வின் ஜூலியட் ) ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்கிறார்.

மற்றொரு பக்கம் ஆதாம் (யூன்ஸ்) தன் தாயின் சிகிச்சைக்காக அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார்.

சில தினங்களில் இவர்கள் இருவரையும் எவரோ ஒருவர் கடத்தி ரகசிய இடத்தில் அடைக்கின்றனர்.

வாயை கட்டி.. கை கால்கள் கயிற்றால் கட்டப்பட்டு அடைத்து துன்புறுத்துகின்றனர். குடிக்க தண்ணீர் கூட இல்லாத நிலை.

கடத்தியவர்கள் யார்? இவர்களை கடத்த திட்டமிட்டது ஏன்? இருவருக்கும் என்ன தொடர்பு? இருவரையும் ஒரே இடத்தில் அடைத்து வைக்க என்ன காரணம்? உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை அளிக்கிறது.

கேரக்டர்கள்…

நாயகன் – நாயகி இருவரை சுற்றிதான் படம். இடைவேளை வரை இவர்கள் மட்டுமே திரையில் ஆக்கிரமிக்கின்றனர். இடைவேளைக்குப் பிறகு வில்லன் மற்றும் சில கலைஞர்கள் வந்து செல்கின்றனர்.

நாயகனாக யூனஸ் ரசிகைகளை கவரும் லுக்கில் வருகிறார். சேவ் செய்து முகத்தை காட்டும் போது நார்மலான பையனாகவும் தாடி வைத்த பின் 1990களின் நடிகர் விஜய்யை நினைவுபடுத்துகிறார். நடிப்பில் ஓகே ரகம்தான்.

நாயகன் கயிற்றை அவிழ்க்கும் காட்சிகள் 10 நிமிடம் காட்டப்படுகிறது.. ஆனால் நாயகி கட்டை அவிழ்க்கும் காட்சிகள் இரண்டு நிமிடத்தில் முடிந்து விடுகிறது.

அடடா இப்படி கூட கட்டை அவிழ்த்திருக்கலாமே என் நாயகனே நினைக்கும் வகையில் நமக்கும் சிரிப்பு வருகிறது. தவிக்கும்போது எவ்லின் ஜூலியட் முக பாவனைகள் முதிர்ச்சி.

ஒரு சீனில் லிப் டூ லிப் கிஸ் கொடுத்து பெருசுகளையும் சூடேற்றுகிறார் ஹீரோயின் ஜூலியட்

வில்லனாக தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி. வில்லத்தனம் காட்ட முயற்சித்துள்ளார். சில நேரம் பார்ப்பதற்கு விஜய்சேதுபதி போல இருக்கிறார்.

“இவன் அவனில்லை அவன் இவனில்ல” என சொல்லி சொல்லி சுவாரஸ்யம் கூட்டுகிறார் வில்லன் சண்முகம்.

டெக்னீசியன்கள்..

கே ஆர்.ராகுல் இசையில் 10 பாடல்கள். சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில் 10 பாடலா? தேவையற்றது. ரசிகரின் மனநிலை அறிந்து எடிட்டர் கட்டிங் போட்டு இருக்கலாம்.

ஒளிப்பதிவாளர் விஷ்ணு கண்ணனின் பணி பாராட்டுக்குரியது. ஒரே அறைக்குள் முன்பக்கம் பின்பக்கம் தலைப்பக்கம் என ஆங்கிள் மேல் ஆங்கிள் வைத்து ரசிக்க வைத்திருக்கிறார்.

திரில்லர் படமாக தொடங்கி பின்னர் சைன்ஸ் பிக்ஷனாக படம் மாறுகிறது. ஆனாலும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் இயக்குநர்.

இயக்குநர் ராகுல் ஆர்.கிருஷ்ணா.. நாயகன் நாயகியை மையப்படுத்தி கதை சொல்லி அதன் பின்னர் சில முகங்களை திரையில் காட்டி இருக்கிறார் இயக்குனர். இது வித்தியாசமான சிந்தனை தான் என்றாலும் ரசிகர்களுக்கு கதை சொன்ன விதத்தில் தடுமாறி இருக்கிறார். இந்தப் படத்தின் தலைப்புக்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் என்பது இயக்குனருக்கே வெளிச்சம்..

ஆக ஐமா… அறைக்குள் அவர்கள்

AIMA movie review and rating in tamil

More Articles
Follows