தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தோழர் சேகுவாரா திரை விமர்சனம்
தோழர் சேகுவாரா படத்தை நெப்போலியனின் எழுச்சி.. நெப்போலியன் புரட்சி என இரண்டு பாகங்களாக எடுத்திருக்கிறார்.. தற்போது நெப்போலியன் எழுச்சி என்பது மட்டுமே முதல் பாகமாக வெளியாகி இருக்கிறது
ஸ்டோரி…
ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நாயகன் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறார்.. ஆனால் அதற்கு பல எதிர்ப்புகள் வந்த நிலையிலும் தடைகளைத் தாண்டி கல்லூரியில் சேர்கிறார்.
அதே கல்லூரியில் படிக்கும் வில்லனுக்கும் இவருக்கும் அடிக்கடி மோதல் வலுக்கிறது.
இந்த கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிகிறார் சத்யராஜ்.
இந்த சூழ்நிலையில் கல்லூரி கேண்டினில் பணி புரியும் ஒரு பெண்ணை அவமானப்படுத்தி விடுகிறார் வில்லன்.. இதனை அடுத்து நாயகன் அவரை அடித்து துவைத்து விடுகிறார்.
பலர் முன்னே தன்னை அவமானப்படுத்திய நாயகனை தீர்த்து கட்ட முடிவு எடுக்கிறார் வில்லன்..
அதன் பின்னர் என்ன நடந்தது?இருவருக்குமான மோதல் தீர்வுக்கு வந்ததா? என்பது மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
இதில் சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன், நாஞ்சில் சம்பத், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இவர்கள் நட்சத்திர அடையாளத்திற்காக படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.. கூல் சுரேஷ் வில்லத்தனம் செய்திருப்பது அவரது கேரக்டருக்கும் படத்திற்கும் புதுசு..
இவர்களோடு படத்தின் இயக்குநர் அலெக்ஸ் மற்றும் தயாரிப்பாளர் அனிஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.. இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நாயகன் வில்லன் என தங்கள் கேரக்டர்களில் ஸ்கோர் செய்ய முயற்சித்துள்ளனர்..
வில்லனைப் பார்த்தால் நமக்கே பல இடங்களில் எரிச்சல் வருகிறது.. சாந்தமான நாயகன் பல இடங்களில் சரவெடியாய் வெடித்திருக்கிறார்..
டெக்னீசியன்ஸ் …
பிஎஸ் அஸ்வின் இசையமைத்திருக்கும் இப்படத்தை அனிஷ் எட்மண்ட் பிரபு தயாரித்துள்ளார்… உலகப் புகழ் பெற்ற புரட்சியாளர் ‘தோழர் சேகுவாரா’ பெயரில் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது..
சிறு வயது முதலே தோழர் சேகுவாரா மீது அதிக பற்று கொண்டவர் நாயகன்.. அவர் படத்தை ஒரு சுவற்றில் வரைந்து கொண்டிருக்கும்போது சாதிய மோதல் வெடிக்கிறது.. இதனை வைத்து படத்தை நகர்த்தி இருப்பது சிறப்பு
SC / ST என எந்த இனத்தவராக இருந்தாலும் தடைகளை உடைத்து எறிந்து வந்தால் மட்டுமே தரணியில் வாழ முடியும் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
தோழர் சேகுவாரா.. புரட்சியாளர் என தலைப்பு வைத்து விட்டதுனால என்னவோ படம் முழுக்க ரத்தம் தெரிக்கிறது.. வன்முறையை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்..
Thozhar Che Guevara movie review