இறுகப்பற்று விமர்சனம் – 3.5/5.. உறவே உயிர்.!

இறுகப்பற்று விமர்சனம் – 3.5/5.. உறவே உயிர்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருமண தம்பதிகளின் காதலும் மோதலும் கலந்த கலவை ‘இறுகப்பற்று’.

கதைக்களம்..

3 தம்பதிகள்…

விக்ரம் பிரபு – ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒரு ஜோடி.

விதார்த் – அபர்னதி ஒரு ஜோடி..

ஸ்ரீ – சானியா ஐயப்பன் ஒரு ஜோடி..

விக்ரம் பிரபு – ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஜோடி வசதியான தம்பதிகள். இவர்களுக்கு குழந்தை இல்லை.

பிரச்னைகளுடன் வரும் தம்பதிகளுக்கு Couples Therapy’ கொடுக்கும் பணி செய்கிறார் ஷ்ரத்தா. எனவே தன் கணவருடன் சண்டை போடாமல் முன்னெச்சரிக்கையுடன் வாழ்கிறார் ஷ்ரத்தா.

விதார்த் – அபர்னதி தம்பதியருக்கு ஒரு கைக்குழந்தை. இவர்கள் நடுத்தர குடும்பம். மனைவி அபர்னதி குண்டாக இருப்பதால் விவகாரத்தை வேண்டும் என்கிறான் விதார்த்.

அடுத்த ஜோடி ஸ்ரீ – சானியா ஐயப்பன். இவர்கள் இளவயது தம்பதியர். இதில் ஸ்ரீ மீடியாவில் வேலை செய்கிறார். இல்லத்தரசியாக இருப்பதால் கணவன் அசிங்கப்படுத்தவே சானியா ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறார்.

இந்த ஜோடிகளுக்கு வில்லனே அவர்களின் ஈகோ மோதல்தான்..

இந்த தம்பதிகளிடையே சின்ன சின்ன மோதல்கள் எழவே பிரச்சனைகளை தீர்க்க ஷ்ரத்தாவிடம் செல்கின்றனர். அவர் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முயல ஒரு கட்டத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஸ்ரத்தாவுக்கும் பிரச்சனை வருகிறது.

மற்றவர்கள் பிரச்சினைக்காக தன்னைத் தேடி வரும் போது தனக்கே ஒரு பிரச்சனை வருகிறதே என தவிக்கிறார் ஷ்ரத்தா. அதன்பிறகு அவர் என்ன செய்தார்.? என்பதுதான் படத்தின் மீதி கதை

கேரக்டர்கள்…

விக்ரம் பிரபு – ஷ்ரத்தா ஜோடியை சண்டையே போடாத ஹைடெக் தம்பதிகள். ஆனால் ஜோடிகளின் புரிதலை அறிய மொபைல் ஆப் கிரியேட் செய்த பின் ஏற்படும் மாற்றங்களை அழகாக சித்தரித்துள்ளார். அதன் பின்னர் விக்ரம் பிரபு காட்டும் ரியாக்சன் கணவனுக்கே உரித்தான கம்பீரம்.

முந்தைய படங்களில் ஆக்சனில் தூள் கிளப்பும் விக்ரம் பிரபு இதில் அமைதியின் உருவமாக வாழ்ந்திருக்கிறார்.

ஷ்ரத்தா-வின் கேரக்டர் சில நேரங்களில் ஓவர் அட்வைஸ்.. கொஞ்சம் கட்டிங் போட்டு இருக்கலாம். இவர்களின் கெமிஸ்ட்ரி ரசிக்க வைக்கிறது.

3 ஜோடிகள் காண்பிக்கப்பட்டாலும் நமக்கு நெருக்கமானவர்களாக விதார்த் – அபர்னதி ஜோடியை சொல்லலாம்.

குண்டாக இருப்பதால் மனைவியை விவகாரத்தை செய்யும் ஒரு ஐடி ஊழியர் பிரதிபலிக்கிறார் விதார்த். மேலும் லோன் கட்ட முடியாமல் வாழ்நாள் முழுவதும் அவஸ்தைப்படும் ஆண்மகனை உரித்து வைத்திருக்கிறார.

நிஜத்தில் ஸ்லிம்மாக காணப்படும் அபர்னதி இந்த படத்திற்காக 15+ கிலோ எடையை கூட்டியது பாராட்டுக்குரியது. அதன்பின்னர் படம் முடிவதற்குள் உடலை ஸ்லிம்மாக்கி அசத்தியிருக்கிறார் அபர்னதி. இது வேற லெவல் அர்ப்பணிப்பு அபி.

சின்ன காரணத்துக்காக கணவன் விவகாரத்து கேட்கும் போது அபர்னதி உடைந்து நம்மையும் கண்கலங்க வைக்கிறார்.

இளம் வயது ஜோடி ஸ்ரீ – சானியா. என்னதான் பெண் புத்திசாலியாக இருந்தாலும் கணவனிடம் காட்டிக் கொள்ளாத சாந்தமான பெண்ணாக சானியா. ஒரு கட்டத்தில் இவர் விவாகரத்து கேட்கும் காட்சி நல்ல ட்விஸ்ட்.

மீடியா வேலையில் மனோபாலா தவறுகளை சுட்டிக் காட்டும் போது தன் தவறை உணர்கிறார் நாயகன் ஸ்ரீ. மனைவிக்கு கொடுத்த வலிகளை ஸ்ரீ உணரும் காட்சி ஓகே. ஆனால் இன்னும் மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்திருக்கலாம்.

ஸ்ரீ – மனோபாலா காட்சிகள் சிரிப்பு ரகம்.. ரியலி மிஸ் யூ மனோபாலா சார்.

மனைவியை அறிவு கெட்ட முண்டம் என திட்டியதற்கு சாரி கேட்டுவிட்டு பின்னர் போனை வைக்கும்போது முண்டம் என திட்டும் காட்சி சிரிப்பலை.

டெக்னீசியன்கள்…

ஜஸ்டின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. கார்த்திக் நேத்தா எழுதிய பாடல் வரிகள் கை கொடுத்துள்ளது.

படத்தின் ஒளிப்பதிவை கோகுல் பினாய் கவனிக்க மணிகண்டன் பாலாஜி படத்தொகுப்பை கையாண்டுள்ளார். இடைவேளைக்கு பிறகு நீளத்தை கொஞ்சம் குறைத்து இருக்கலாம் எடிட்டர்.

வடிவேலு நடிப்பில் 8 வருடங்களுக்கு முன்பு வெளியான தெனாலிராமன் & எலி ஆகிய படங்களை இயக்கியவர் தான் இந்த யுவராஜ் தயாளன். தற்போது வேறு ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்து தம்பதிகளுக்கு வாழ்வியல் இடைவெளியை குறைத்து இருக்கிறார்.

உண்மையான சந்தோஷம் என்பது விலை உயர்ந்த பொருட்களில் இல்லை.. என்ன சாப்பிட்டாய்? என்ன செய்கிறாய்? சுற்றுலா செல்வது… இரவில் பயணிப்பது.. வீட்டு வேலையில் கை கொடுப்பது.. என பாடம் எடுத்துள்ளார் இயக்குனர் யுவராஜ் தயாளன்.

படத்தில் வில்லனே இல்லை. ஆனால் தம்பதிகளுக்குள் புரிதல் இல்லை என்றால் அதுவே வில்லன் என் சொல்லியிருக்கிறார் இயக்குனர் யுவராஜ்.

ஆக இறுகப்பற்று.. உறவே உயிர்..

Irugapatru movie review and rating in tamil

சித்தா விமர்சனம் 4/5.; சித்தார்த்தின் சிறப்பான சம்பவம்

சித்தா விமர்சனம் 4/5.; சித்தார்த்தின் சிறப்பான சம்பவம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

பழனி மாவட்டத்தில் துப்புரவு தொழிலாளர்களுக்கு சூப்பர் வைசராக வேலை பார்க்கிறார் சித்தார்த். அண்ணன் தவறியதால் அண்ணி மற்றும் 8 வயது மகள் இருக்கிறார். அண்ணிக்கு உடன்பிறந்த தம்பியை போல ஆதரவாக இருக்கிறார்

தன் பள்ளி தோழி துப்புரவு தொழில் செய்யும் நிமிஷா சஜயனை காதலித்து வருகிறார் சித்தார்த்.

ஒவ்வொரு நிமிடமும் தன் அண்ணன் மகளையே (செல்ல பெயர் சேட்டை) நினைத்து பாசம் கொட்டுகிறார் சித்தார்த். பள்ளியில் கொண்டு விடுவதும் அழைத்து வருவதை கடமையாக செய்து வருகிறார். அவரும் சித்தப்பாவை சித்தா சித்தா என்று அழைப்பார்.

சித்தார்த்தின் நெருங்கிய நண்பர் வடிவேலு. அவர்கள் வீட்டில் உள்ள அக்கா மகளுடனும் (பெயர் பொன்னி) பாசமாக பழகி வருகிறார் சித்தார்த்.

ஒரு சூழ்நிலையில் தன் மகளுக்கும் அவளின் பள்ளி தோழிக்கும் சின்ன (பொன்னி & சேட்டை) சண்டை வருகிறது. இந்த சூழ்நிலையில் அவளின் தோழியே சமாதானம் செய்ய பைக்கில் கொண்டு சென்று அவர்கள் வீட்டில் விட செல்கிறார்.

சில மணி நேரங்களில் பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறார் பொன்னி. உன் மகளை விட்டுவிட்டு எங்கள் மகளை மட்டும் நீ தனியாக அழைத்து வர காரணம் என்ன என கேட்கிறார்கள். மருத்துவ பரிசோதனையில் பொன்னி பாலியல் சீண்டலுக்கு ஆளானது தெரிகிறது. எனவே சித்தார்த் மீது பாலியல் புகார் விழுகிறது.

இதன்படி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுகிறார் சித்தார்த். அதன் பின்னர் இரண்டு குடும்பங்களும் என்ன ஆனது? சித்தார்த் நிரபராதி என நிரூபித்தாரா? அப்படி என்றால் குற்றவாளி யார்? என்பதே படத்தின் மீதிக்கதை

கேரக்டர்கள்..

ஒரு துளி கூட சினிமாத்தனம் இல்லாமல் யதார்த்த இளைஞனாக வாழ்ந்திருக்கிறார் சித்தார்த்.. இவரை சித்தா சித்தா என்று தன் அண்ணன் மகள் அழைக்கும் போதெல்லாம் உருகுவதும் அவர் மீது பாசம் கொட்டுவதும் என ஒரு தந்தையாக தரம் உயர்ந்து நிற்கிறார்.

தன்மீது பாலில் குற்றம் சாட்டப்பட்ட பின் எதையும் செய்வது அறியாமல் சித்தார்த் தவிக்கும் காட்சிகள் சிறந்த நடிகனை காட்டியிருக்கிறது.

சித்தார்த் காதலியாக நிமிஷா சஜயன் மற்றும் அண்ணியாக அஞ்சலி நாயர். இரண்டு பெண் குழந்தைகளாக சஹஷ்ரா ஸ்ரீ மற்றும் ஆபியா தஸ்னீம் நடித்துள்ளனர். இவர்கள் அனைவருமே போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர்.

அதிலும் நிமிஷா நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார்.மலையாளத்தில் சிறந்த நடிகையாக பெயர் எடுத்த இவர் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். இனி இவரை தேடி வாய்ப்புகள் குவியும்.

சித்தார்த், நிமிஷா, அஞ்சலி ஆகிய மூவரும் மட்டுமே அனுபவிக்க கலைஞ்ர்கள். அவர்களுக்கு ஈடு கொடுத்த நடிப்பை குழந்தைகளும் கொடுத்துள்ளனர்.

சித்தார்த் நண்பர்கள் வடிவேலு & சதீஷ்.. போலீஸ்.. பாலியல் குற்றவாளி என ஒவ்வொருவரும் நாம் அன்றாட பார்க்கும் மனிதர்களாக உணர வைத்துள்ளனர்.

போலீஸ் படங்களில் காட்டப்படும் கமர்சியல் போலீசாக அல்லாமல் யதார்த்த போலீசாக ஒவ்வொருவரும் நடித்துள்ளனர் என்பது படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.

டெக்னீசியன்கள்…

திரைக்கதை அமைப்பதிலும் வசனங்களிலும் தான் ஒரு இயக்குனரின் பலம் புரியும். அதை இரண்டையும் சரியாக கொடுத்திருக்கிறார் அருண்குமார்.

வசனத்தில்…

ஆண்கள் எவனும் உத்தமன் இல்லை.. தன் வீட்டு பெண்களை பொக்கிஷமாகவும் அடுத்த வீட்டுப் பெண்களை வேறு மாதிரியாகவும் பார்க்கின்றனர்.. நான் இப்போ உன்னை ஓடி வந்து பார்க்கும்போது ஆண்களின் கண்கள் என் மார்பு மீது தான் இருந்திருக்கும் என நாயகி பேசும் போது… (சிலருக்கு அர்த்தம் புரிந்திருக்கும்.)

பெண் குழந்தைகள் அவர்கள் விவரம் அறியும் வரை பொத்தி பொத்தி வளர்ப்பது அவசியம் என இன்றைய சூழலை சொல்லி இருக்கிறார் இயக்குனர். அதேசமயம் செல்போன் வீடியோ விளையாட்டுக்களால் குழந்தைகளின் கவனம் சிதறுவதையும் காட்சிகளில் உணர்த்தி இருக்கிறார்.

பழனி என்றாலே கோயில்தான். ஆனால் கோயிலை மையப்படுத்தாமல் உடுமலைப்பேட்டை பழனி உள்ளிட்ட பகுதிகளின் இயற்கை காட்சிகளையும் அழகாக படம் பிடித்துள்ளார். பாராட்டுக்கள் ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணி.

குடும்ப உறவு… த்ரில்லர் பாணி என இரண்டு இசை முறைகளையும் சரிசமமாக கொடுத்து மெருகேற்றி இருக்கிறார் இசையமைப்பாளர் திபுநினன் தாமஸ். பின்னணி இசையில் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார் விஷால் சந்திரசேகர்.

சுரேஷ் A.பிரசாத்தின் எடிட்டிங் பணிகள் இதை ஒரு திரில்லர் பாணியில் கொண்டு செல்கிறது.. முக்கியமாக குற்றவாளியை போட்டு தள்ள சித்தார்த் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சீட்டு நுனியில் அமர வைக்கும் காட்சிகள்.

பண்ணையாரும் பத்மினியும் மற்றும் சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் தான் இந்த படத்தின் இயக்கி இருக்கிறார் அவரது முந்தைய படங்களைப் போலவே இதிலும் குடும்ப உறவுகளின் அவசியத்தை உணர்த்தி இருக்கிறார். கொஞ்சம் திரில்லர் கலந்து கொடுத்து சுவை கூட்டி இருக்கிறார்.

கதைக்குத் தேவையான நடிகர்களையும் அவர் சரியாக தேர்ந்தெடுத்துள்ளது அவரின் நம்பிக்கை வலுவை காட்டுகிறது.

நம் குழந்தைகளுடன் நெருங்கி பழகும் எந்த நபராக இருந்தாலும் அவரையும் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்பதையும் எச்சரிக்கையுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் அருண்.

ஆக சித்தா… சித்தார்த்தின் சிறப்பான சம்பவம்

Chithha movie review and rating in tamil

இறைவன் விமர்சனம் 1.5/5.. இரக்கமே இல்லையா ரவி.?

இறைவன் விமர்சனம் 1.5/5.. இரக்கமே இல்லையா ரவி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

அசிஸ்டன்ட் கமிஷனர் ஜெயம்ரவி. இவரது நெருங்கி நண்பர் நரேன். நரேனின் மனைவி விஜயலட்சுமி. நரேனின் தங்கை நயன்தாரா.

சிட்டியில் இளம்பெண்கள் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்படுகின்றனர். இதனால் காவல்துறை பரபரப்பாகிறது.

ஒரு கட்டத்தில் சைக்கோ கில்லரை ஜெயம் ரவியும் நரயினும் பிடித்து விடுகின்றனர். குற்றவாளி பிடிபட்டாலும் நரேன் மரணம் அடைகிறார்.

நண்பன் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாத ஜெயம் ரவி ஒரு கட்டத்தில் போலீஸ் வேலையை விட்டு விடுகிறார். சில தினங்களில் சைக்கோ கில்லர் சிறையில் இருந்து தப்பித்து விடுகிறார்.

அதன் பின்னர் ஜெயம் ரவிக்கு நெருக்கமானவர்களை கொலை செய்கிறான். காக்கி சட்டையை கழட்டி போட்ட ஜெயம்ரவி என்ன செய்தார்? கில்லரை கண்டுபிடித்தார்? அவனின் நோக்கம் என்ன? காவல்துறை என்ன செய்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

முகத்தில் ஒரு துளி கூட சிரிப்பு இல்லாமல் முறைக்கிறார் கோபம் கொள்கிறார் சண்டையிடுகிறார் இதுதான் ஜெயம் ரவியின் வேலை. தனி ஒருவனில் பார்த்த போலீஸ் கதாபாத்திரம் ஒரு துளி கூட இதில் இல்லை.

ஆனால் ரவி – நயன் ஜோடியை பார்க்கும் போது தனி ஒருவன் படம் கண் முன் வந்து செல்வதை தடுக்க முடியவில்லை.

படம் தொடங்கி 20 நிமிடத்திற்குள் மலையாள நடிகர் நரேன் காட்சி முடிந்து விடுகிறது. ஒரு நல்லதொரு நடிகருக்கு காட்சிகள் கொடுக்கப்படவில்லை.

அது போல ஆசிஷ் வித்யார்த்தி அழகம்பெருமாள், விஜயலட்சுமி, ஹீரோயின் நயன்தாரா என அனைவரது கதாபாத்திரங்களும் வீணடிக்கப்பட்டுள்ளது.

இதில் கொஞ்சம் தப்பி பிழைத்தவர் சார்லி. போஸ்ட்மாடம் செய்யும் பாத்திரத்தில் நன்றாகவே ஸ்கோர் செய்து இருக்கிறார்.

நயன்தாராவுக்கும் ஜெயம் ரவிக்கும் எப்போதும் கெமிஸ்ட்ரி செட்டாகாது போல. தனி ஒருவன் படத்திலும் ரவியை துரத்தி துரத்தி காதலிப்பார் நயன்தாரா. இதிலும் அதே நிலைதான். நயன்தாரா என்ற பிராண்டுக்காக கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்கள் நிலையை நினைத்து இருந்தால் இயக்குனர் இவரை கமிட் செய்திருக்க மாட்டார். அவருக்கு பதிலாக லோ பட்ஜெட் நாயகியை தேர்ந்தெடுத்து இருக்கலாம்.

ஸ்மைலி கில்லராக ராகுல் போஸ். அதற்குப் பின் அதே சைக்கோ கில்லராக வினோத் கிஷன். இவரைப் பார்த்ததுமே கொலைகாரன் என ஜெயம் ரவி கண்டுபிடிப்பதெல்லாம் ரொம்ப ஓவர்.

டெக்னீசியன்கள்…

ஒளிப்பதிவாளர் ஹரி கே வேதாந்த் தன் பணியை மிகவும் சிரமப்பட்டு செய்து இருக்கிறார். ஒவ்வொரு ஃபிரேமிலும் தன்னுடைய பணியை உணர்ந்து செய்து இருக்கிறார்.

எடிட்டர் இரண்டாம் பாதியில் நிறைய காட்சிகளை வெட்டி எறிந்து இருக்கலாம். வினோத் கிஷனின் ஓவர் ஆக்டிங்.. கொலையைப் போலவே ஓவர் டோஸ் ஆக இருக்கிறது..

யுவன் சங்கர் ராஜா தான் இந்த படத்திற்கு இசையமைத்தாரா என்ற கேள்வி எழாமல் இல்லை.. பாடல்கள் கவரவில்லை.. பின்னணி இசை பாராட்டும்படி உள்ளது.

‘என்றென்றும் புன்னகை’ என்ற அருமையான படத்தை கொடுத்த அகமது தான் இந்த படத்தையே இயக்கியிருகிறார். அவரிடம் இருந்து இப்படி ஒரு கொடூரமான படமா? என்று எண்ண வைக்கிறது.

‘இறைவன்’ என்ற தலைப்பை இதுவரை யாருமே வைத்ததில்லையா என ஜெயம் ரவி சமீபத்திய நிகழ்ச்சியில் கேட்டிருந்தார். இந்த படத்தை பார்த்த பிறகு இறைவா என்று அழைக்க கூட பக்தர்கள் அஞ்சுவார்கள்.

12 கொலைகள் அடுத்தடுத்து மீண்டும் கொலைகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அவையெல்லாம் கிராஃபிக் செய்யப்பட்ட நிர்வாணமாக இருந்தாலும் படம் பார்க்கும் நம்மீதே ரத்த வாடை அடிக்கிறது.

கடத்தல், நிர்வாணம், துண்டு துண்டாக வெட்டி கொலை வன்முறை என கிரைம் தில்லர் பாணியில் படங்களை எடுத்து ரசிகர்களை இம்சை செய்ய வேண்டாம் தமிழ் இயக்குனர்களே.

நல்ல கதைகளை கொண்டு வாருங்கள் ரசிகர்களுக்கு விருந்தளியுங்கள் என்று இந்த விமர்சனம் மூலம் கேட்டுக் கொள்கிறோம்.

(இதேபோன்று கதைகளத்துடன் தான் ராட்சசன் படம் வெளியானது. ஆனால் அது ஒரு நேர்த்தியான திரைக்கதையுடன் முதிர்ச்சியான ஸ்கிரிப்டுடன் படமாக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.)

கலை இயக்குனரின் பணியை பாராட்ட வேண்டும். கொலை வன்முறை என எதுவாக இருந்தாலும் ஆக்ஷன் காட்சிகள் என அனைத்திலும் தன்னுடைய கலைப் பணியை சிறப்பாக செய்துள்ளார்.

கதை திரைக்கதை மோசமாக இருக்கும் பட்சத்தில் அனைவரது உழைப்பு வீணடிக்கப்பட்டிருக்கிறது.

ஆக இறைவன்… இரக்கமே இல்லையா ரவி?

Iraivan movie review and rating in tamil

சந்திரமுகி 2 விமர்சனம்.. 3.5/5.; சந்தன அழகி

சந்திரமுகி 2 விமர்சனம்.. 3.5/5.; சந்தன அழகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்கதை…

18 ஆண்டுகளுக்கு முன் வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, நயன்தாரா, பிரபு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் சந்திரமுகி. அந்த படத்தின் தொடர்ச்சியாகவே இதன் கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் பி வாசு.

கதைக்களம்….

சுரேஷ் மேனன், ராதிகா, ரவி மரியா, விக்னேஷ் ஆகியோர் சகோதர சகோதரிகள். இவர்கள் குடும்பத்தில் தொடர்ச்சியாக பிரச்சனைகள் அசம்பாவிதங்கள் நடக்க சாமியாரை நாடுகின்றனர்.

நீங்கள் ஒரு மண்டலம் விரதம் இருந்து குலதெய்வ வழிபாட்டை செய்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்கிறார்.எனவே குலதெய்வம் உள்ள கிராமத்திற்கு குடும்பத்துடன் வருகின்றனர்.

ராதிகாவின் மகள் ஓடிப் போய் திருமணம் செய்ததால் பிரிந்திருக்கிறார். இறந்த மகளின் 2 குழந்தைகளை லாரன்ஸ் வளர்த்து வருகிறார். பூஜையில் அவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் லாரன்ஸ் அழைத்து வருகிறார்.

சந்திரமுகி 1 படத்தில் காட்டப்பட்ட அந்த பழைய பங்களாவில் ஒரு மண்டலமாக தங்குகின்றனர். அந்த பங்களாவில் தெற்கு திசையில் செல்லக்கூடாது என கண்டிசன் போடுகிறார் பங்களா ஓனர் வடிவேலு.

அதையும் மீறி சிலர் அங்கே செல்வதால் ஏற்படும் பிரச்சனைகள் தான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

சந்திரமுகி முதல் பாகத்தின் கதை களத்தையே இதிலும் அமைத்து கொஞ்சம் ஆல்டர் செய்திருக்கிறார் பி வாசு.

ரஜினி இடத்தில் ராகவா லாரன்ஸ்.. நயன்தாரா இடத்தில் மகிமா நம்பியார்.. ஜோதிகா இடத்தில் லட்சுமி மேனன் மற்றும் கங்கணா.. சாமியார் வேடத்தில் ரமேஷ் ராவ்.. என ஆல்டர் செய்திருக்கிறார்.

கங்கனா அழகு தேவதை. சந்திரமுகியை பார்த்தால் காதலில் விழுவது நிச்சயம். ஜோதிகாவிடம் இருந்த சந்திரமுகி லுக் இதில் லட்சுமி மேனனிடம் மிஸ்ஸிங்.

வடிவேலு காமெடி சில இடங்களில் சிரிக்க வைக்கிறது. நிறைய இடங்களில் ரஜினியை இமிட்டேட் செய்துள்ள லாரன்ஸ்.

பாண்டியன் & வேட்டையன் என வெரைட்டி காட்டி இருக்கிறார் லாரன்ஸ். அரசர் கால தமிழைப் பேசும்போது ரசிக்க வைத்துள்ளார்.

இவர்களுடன் மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சுபிக்ஷா, சிருஷ்டி டாங்கே, ரவி மரியா, விக்னேஷ், மானஸ்வி உள்ளிட்டோரும் உண்டு.

சாமியார் மனோபாலா வேடத்தில் மனோ பாலாவை இதிலும் நடித்திருக்கிறார். ஆனால் இது நித்தியானந்தா போல அச்சக் பச்சக் என்று 5 பெண்களை அழைத்து வந்திருக்கிறார்.

பெயிண்டர் கோபாலுவாக ஆர் எஸ் சிவாஜி நடித்திருக்கிறார்.

டெக்னீசியன்கள்…

படத்தின் ஒளிப்பதிவு கலை இயக்கம் ஆகியவற்றை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும்.. அரண்மனை அவ்வளவு அருமையாக உள்ளது.. அதைப்போல பாழடைந்த கோவிலும் ரசிக்க வைக்கிறது.

சண்டை இயக்குனர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர். ஆனால் பஸ் எரிந்து கொண்டிருக்கும்போது அதில் லாரன்ஸ் வண்டி ஓட்டி குழந்தைகளுக்கு காப்பாற்றுவது எல்லாம் நம்ப முடியாத ரகமே.

சந்திரமுகி முதல் பாகத்தில் வித்யாசாகர் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற ஆறு பாடல்களும் தேனாறு. இதில் ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி இசையமைத்திருக்கிறார்.

லாரன்ஸ் புகழை பாடுவது போல ஒரு பாட்டு தேவையற்றதாகவே உள்ளது.

இரண்டு பாடல்கள் ரசிக்க வைக்கிறது. கிளைமாக்ஸ் பாடல் ரா ரா என்ற பாடல் அதே வரிகளைக் கொண்டு ஆரம்பிக்கிறது. ஆனால் டியூனை கொஞ்சம் மாற்றி அமைத்துள்ளனர். இது சுத்தமாக எடுபடவில்லை. ரா ரா சரசுக்கு ரா ரா என்ற பாடலையே… படத்தை போல ரீமேக் செய்து இருக்கலாம்.

கங்கனாவை ஒரு காட்டுப் பகுதியில் காப்பாற்றுகிறார் ராகவா லாரன்ஸ். அப்போது கருஞ்சிறுத்தை ஒன்று வருகிறது. அதனுடன் புலி முருகன் ஸ்டைலில் சண்டை போடாமல் ஒரே அடியில் லாரன்ஸ் வீழ்த்துவது சிரிப்பை வரவழைக்கிறது. அதுபோல நான்கு நாய்களை கங்கனா அடிப்பதும் சிரிப்பு ரகமே.

சந்திரமுகி முதல் பாகம் வந்த போது 2K கிட்ஸ் பிறந்த தருணம். எனவே அவர்கள் நிச்சயம் இந்த படத்தை கொண்டாடுவார்கள்.

முதல் பாகத்தை பார்த்தவர்கள் இரண்டாம் பாகத்தை ஒப்பிட்டு பார்க்க கூடாது என்றாலும் அதன் தொடர்ச்சியாகவே பல காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக பேய் வருவதற்கான அறிகுறிகளை ரஜினிகாந்த் வடிவேலுவிடம் பேசுவார். ரஜினி – வடிவேலு வேற லெவல் காமெடி செய்திருப்பார்கள். இதில் எடுபடவில்லை.

இரவு நேரத்தில் திடீர் திடீர்னு சலங்கை ஒலி கேட்க அனைவரும் எழுந்து வந்து பார்க்கின்றனர். எப்போ பார்த்தாலும் ராதிகா அதே மேக்கப் உடன் அழகாகவே வருகிறார். அவரை போலவே எல்லாரும் இரவு நேரத்திற்காக காத்திருப்பது போலவே உள்ளது.

இரண்டாம் பாகத்தில் அரசர் கால கதையை சொல்லி வித்தியாசம் காட்டி இருக்கிறார் இயக்குனர் பி வாசு. பெண்களை கவரும் விதத்தில் நிறைய பெண் கதாபாத்திரங்களை கொடுத்து ரசிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர்.

அதுபோல கிளைமாக்ஸ் காட்சி எதிர்பாராத ஒன்று. முதல் பாகத்தில் ஜோதிகாவே சந்திரமுகியாகவும் நடித்திருப்பார். இதில் கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.

ஆக சந்திரமுகி 2.. சந்தன (மணக்கும்) அழகி

Chandramuki 2 movie review and rating in tamil

‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ விமர்சனம்..; லேசா லேசா லெஸ்பியன் லேசா.?

‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ விமர்சனம்..; லேசா லேசா லெஸ்பியன் லேசா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இரண்டு மதங்களை சேர்ந்த இரு பெண்களின் ஓரின சேர்க்கை (பாலின ஈர்ப்பு) காதல் கதை..

நிரஞ்சனா மற்றும் ஸ்ருதி பெரியசாமி இணைந்து ஜோடியாக நடித்துள்ளனர்.

பிரபல நடிகை நீலிமா இசையும் ஷார்ட் பிளிக்ஸ் என்ற ஓடிடி தளமும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’. இந்த படம் செப்டம்பர் 28ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

கதைக்களம்…

ஷகீரா இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பெண்.. வினோதா இந்து மதத்தைச் சேர்ந்த பெண்.

தன்னுடைய வேலை விஷயமாக தரங்கம்பாடி வரும் வினோதா (ஸ்ருதி) அறிமுகம் இல்லாத ஷகீரா (நிரஞ்சனா) வீட்டில் தங்கு நேரிடுகிறது. கொஞ்ச நாள்களில் இருவருக்கும் காதல் மலர காமமும் மலர்கிறது.

இந்த நிலையில் ஷகீராவிற்கு மாப்பிள்ளை பார்க்கிறார் அவரது வாப்பா உமர். எனவே தன் வருங்கால கணவரிடம் சொல்கிறார் நிரஞ்சனா. முதலில் வெறுக்கும் இவர் வேறு வழி இல்லாமல் சேர்த்து வைக்க நினைக்கிறார்.

இதனிடையில் ஷகீராவுக்கும் வினோதாவுக்கும் இருக்கும் லெஸ்பியன் காதல் இரு விட்டாருக்கும் தெரிய வருகிறது.

நம் மார்க்கத்திற்கு எதிரான செயல் என இரு வீட்டிலும் எதிர்ப்பு வலுக்கவே சமூகத்தை மீறி அந்த பெண்கள் என்ன செய்தனர்.? சமூகம் அவர்களை எப்படி பார்த்தது.? இறுதியில் என்ன ஆனது என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

அழகு நிறைந்தவராக நிரஞ்சனா நெய்தியார்.. அவரது கண்களும் உதடுகளும் நம்மை கண் சிமிட்டாமல் பார்க்க வைக்கிறது. இஸ்லாமிய பெண்ணுக்கு உரித்தான பொருத்தமான முகவெட்டு.

மார்க்கத்திற்கு கட்டுப்பட்டு தயங்கி நிற்பதாகட்டும் தன் காதலை சொல்லாமல் தவிப்பதாகட்டும் என நிறைவான நடிப்பை கொடுத்துள்ளார்.

சினிமா ஆர்வம் கொண்டவராக ஸ்ருதி பெரியசாமி. ஷமீராவுக்காக அவளின் தந்தையிடம் வாக்குவாதம் செய்யும் போது சிங்கப்பெண்ணாக ஜொலிக்கிறார்.

ஷகீராவின் மாப்பிள்ளை இர்ஃபான், உமர், நண்பர்கள் உள்ளிட்டோரும் கச்சிதம்.

ஷகீராவின் உறவுக்கார பெண்ணாக வருபவரும் கொஞ்ச நேரம் என்றாலும் கவனிக்க வைக்கிறார்.. “நான் என்ன பிடித்த வாழ்க்கையா வாழ்கிறேன்? என்று அவர் கேட்கும் போது இல்லத்தரசிகளின் மனக்குமுறலை உணரலாம்.. “நீயாவது உனக்குப் பிடித்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழு” என் அனுப்பி வைக்கும் போது பெண்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறார்

டெக்னீசியன்கள்…

தயாரிப்பாளர் நடிகை நீலிமா இசை.

இயக்கம் : ஜெயராஜ் பழனி.

தர்ஷன் குமார் இசையமைத்துள்ளார். பாடல்களை ஜி கே பி மற்றும் சிவா சங்கர் எழுதியுள்ளனர்.

இசை மனதுக்கு இதம் என்றால் படத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சி.

ஆண் பெண் காதல் என்றாலே சில கிளுகிளுப்பான காட்சிகள் இருக்கும். இதில் லெஸ்பியன் என்றாலும் ஒரே ஒரு லிப்லாக் சீன் மட்டுமே உள்ளது.

இந்த கதைக்களத்தில் இயக்குனர் நினைத்து இருந்தால் கமர்சியலுக்காக கவர்ச்சி சீன்களை வைத்திருக்கலாம் இயக்குனர் ஜெயராஜ் பழனி. ஆனால் அப்படி எதுவுமில்லை.

உங்கள் இஸ்லாமிய மார்க்கத்தில்.. “வட்டிக்கு விடக்கூடாது.. லஞ்சம் வாங்க கூடாது கொடுக்கக் கூடாது.. அடுத்தவர் மனைவியை / கணவனை பார்க்க கூடாது” என பல விஷயங்கள் இருக்கிறது. அதை எல்லாம் நீங்கள் கடைப்பிடிக்கிறீர்களா? ஆனால் எங்கள் காதலை மட்டும் ஏன் எதிர்க்கிறீர்கள்? என ஸ்ருதி பேசும்போது சில கைதட்டல்களை தியேட்டரில் கேட்க முடிகிறது.

சினிமா தொடங்கிய காலத்தில் இருந்து காதலுக்கு ஜாதியில்லை.. காதலுக்கு மதம் இல்லை.. காதலுக்கு கண்கள் இல்லை என பல சினிமாக்களை பார்த்து இருக்கிறோம்.

இதில் காதலுக்கு ஆண் – பெண் என்ற பாலின பேதமும் கிடையாது என் இந்த வாழ்வு தொடங்குமிடம் நீதானே படம் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜெயராஜ் பழனி.

இந்த சமூகம் எதிர்க்கும் என்பதற்காக உங்கள் வாழ்க்கையை விட்டுக் கொடுக்காமல் பிடித்த வாழ்க்கையை வாழுங்கள் என திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர்.

ஆக இந்த காதல் தொடங்குமிடம் நீதானே.. லேசா லேசா லெஸ்பியன் லேசா

வாழ்வு தொடங்குமிடம் நீதானே

vaazhvu thodangum idam neethane movie review and rating in tamil

மால் பட விமர்சனம்.; சிலை கடத்தல் சிக்கல்

மால் பட விமர்சனம்.; சிலை கடத்தல் சிக்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தினேஷ் குமரன் இயக்கத்தில், உருவாகி ஆஹா ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் ‘மால்’.

சமீபத்தில் திரைக்கு வந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ‘ஜெயிலர்’ படத்தில் சிலை கடத்தலை மையப்படுத்தி கதை இருக்கும். அதை கதை களத்துடன் வந்திருக்கும் மற்றொரு திரைப்படம் ‘மால்’.

கதைக்களம்…

ஒரு சிலையை விற்றுத் தர வேண்டும் அதற்கு கமிஷன் தருகிறேன் என ஒரு ஏஜென்ட் வருகிறார். ரூ 100 கோடி மதிப்புள்ள சிலையை 30 கோடிக்கு அவர் விற்க நினைக்கும் போது அதில் உள்ள வியாபாரம் தந்திரம் வெளிப்படுகிறது.

அதன் பிறகு ராஜராஜ சோழர் சிலை கடத்தல் கும்பல் அறிந்த நேர்மையான போலீஸ் அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் இறங்குகின்றனர்.

ஒரு பக்கம் போலீஸ் கஜராஜ் சிலையை தன் வீட்டுக்குள் மறைத்து வைத்து கோடிக்கணக்கில் விற்க முயல்கிறார்.

இன்னொரு கதையில்.. தன் காதலியுடன் தவிக்கிறார் ரிப்போர்ட்டர் விஜே பப்பு. அப்போது எதிர்பாராத விதமாக கார் விபத்து நடக்க கார் ஓட்டியவரை மருத்துவமனையில் அனுமதித்து காத்திருக்கின்றனர். ஆனால் அவனிடம் தான் சிலை இருப்பது என்பது இவர்களுக்கு தெரியாது.

அடுத்த கதையில் அஸ்ரப் மற்றும் தினேஷ் குமரன் இருவரும் ஒரு லட்ச ரூபாய் பைக் வாங்க செயின் திருட முயல்கின்றனர். அதுவும் போலீஸ் கஜராஜ் வீட்டில்..

இந்த நான்கு கதைகளையும் ஒரே இடத்தில் (மருத்துவமனையில்) சேர வைக்கிறார்.

அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

போலீஸ் கஜராஜ் நேர்மையான போலீசாக காண்பித்துக் கொண்டு வில்லத்தனம் காட்டி கதையின் நாயகன் ஆகியிருக்கிறார்

சாய் கார்த்திக்கின் மனைவியாக கெளரி நந்தா. இவரது கண்களும் ரசிக்க வைக்கிறது.

புதுமுக நடிகர் என்றாலும் சாய் கார்த்திக் நம்மை நடிப்பில் ஈர்க்கிறார்.

விஜே பப்பு மற்றும் ஜெ இருவரும் காதலர்கள். ஆனால் ரொமான்ஸ் கெமிஸ்ட்ரி சுத்தமாக இல்லை.

அஷ்ரப் & தினேஷ் குமரன் இருவரும் கொஞ்சம் கலகலப்பு கூட்டி இருக்கின்றனர். இதில் தினேஷ் படத்தின் டைரக்டர் என்பதால் ஓவர்டேக் செய்ய முயற்சித்துள்ளார்.

படத்தில் இரண்டே பெண்கள் தான் கௌரி நந்தா மற்றும் ஜே. ஆனால் ஜெ-க்கு பெரிதாக காதலும் இல்லை காட்சியும் இல்லை. கௌரி ஒரே காட்சியில் வந்தாலும் நம்மை சுண்டி இழுக்கிறார்.

டெக்னீசியன்கள்…

ஒளிப்பதிவு படத்தொகுப்பு என இரண்டையும் நேர்த்தியாக கொடுத்துள்ளார் ஆர். சிவராஜ். 12 மணி நேரத்திற்குள் நடக்கும் இரவு கதை என்றாலும் அதற்கான கேமரா கோணங்களை வைத்து ரசிக்க வைத்திருக்கிறார் சிவராஜ்.

ஒளிப்பதிவாளரே எடிட்டிங் செய்து இருக்கிறார் என்பது சிறப்பான செயல் என்றாலும் திருடர்கள் முகமூடி கூட அணியாமல் திருட செல்வார்களா? இதைக் கூடவா கவனிக்கவில்லை என்பது வருத்தம்.

பத்மயன் சிவானந்தத்தின் இசையில் பின்னணி இசை சில இடங்களில் மட்டுமே ரசிக்க வைக்கிறது.. நிறைய இடங்களில் புதிய இசையமைப்பாளர் போன்ற எண்ணத்தை உருவாக்குகிறது. திரில்லர் படங்களுக்கு உரிய இசையை கொடுத்திருந்தால் இன்னும் ஸ்கோர் செய்திருக்கலாம்.

கடத்தல் கும்பலுக்குள் ஏற்படும் ஈகோவை வைத்துக் காட்சியை ஆரம்பித்திருக்கிறார் இயக்குநர். ஆனால் அதற்குப் பிறகு வரும் காட்சிகளில் விறுவிறுப்பு இல்லை என்பதால் முதல் காட்சி வீணடிக்கப்பட்டுள்ளது.

சிலை கடத்தல்… காதலர்கள் பிரிதல்.. நேர்மையான போலீஸ்.. போலியான (நேர்மையற்ற) போலீஸ்.. கடத்தல் கும்பலுக்குள் ஈகோ பிரச்சனை உள்ளிட்டவைகளை சரியான விதத்தில் கையாண்டு உள்ளார் இயக்குனர் தினேஷ் குமரன்.

ஒரே இரவுக்குள் நடக்கும் 4 கதைகள் இருந்தாலும் இழுத்து முடிச்சு போட்டு கிளைமாக்ஸில் சுபமாக முடித்துள்ளார் இயக்குநர். ஆங்காங்கே லாஜிக் குறைகள் இருந்தாலும் இளம் வயதில் திறமையான கலைஞர்களை நம்பி மால் படத்தை கொடுத்ததற்காகவே இயக்குனரை பாராட்டலாம்.

ஆக மால்… சிலை கடத்தல் சிக்கல்

மால்

Maal movie review and rating in tamil

More Articles
Follows