தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
GOAT தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் விமர்சனம் 3.25/5
சென்சார் – (U/A)
Running Time:
1’st Half -1 Hr- 28 Mins
2’nd Half. -1 Hr 34 Mins
ஸ்டோரி…
விஜய்யின் மனைவி சினேகா.. பிரசாந்த் மனைவி லைலா..
விஜய் பிரசாந்த் பிரபுதேவா அஜய் இவர்களின் நால்வரும் ஜெயராம் தலைமையில் கீழ் ஆன்டி டெரரிசம் ஸ்குவாட் ஆக பணி புரிகின்றனர்.
ஒரு கட்டத்தில் தீவிரவாதி மோகனுடன் மோதும் போது அவர் குடும்பத்தை கொன்று விடுகிறார்கள் இவர்கள்.. இதனை எடுத்து வில்லன் மோகன் இவர்களை பழிவாங்க திட்டம் போடுகிறார்.
இதனை எடுத்து மற்றொரு கலவர சமயத்தின் போது தன் நான்கு வயது மகனை தொலைத்து விடுகிறார் விஜய்.. இதனால் விஜய்யுடன் பேசாமல் தனியாக தன் மகளுடன் வசித்து வருகிறார் சினேகா..
அதன் பிறகு என்ன நடந்தது? மகனை கடத்தியவர் யார்.? விஜய் சினேகா மீண்டும் இணைந்தார்களா.? காணாமல் போன மகன் கிடைத்தாரா? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
விஜய்,
பிரசாந்த்,
பிரபுதேவா,
சினேகா,
லைலா,
மோஹன்,
ஜெயராம்,
யோகிபாபு,
மீனாக்ஷி சௌத்ரி..
சமீப காலமாக வெளியான விஜய்யின் வாரிசு மற்றும் லியோ படங்களில் அப்பனை எதிர்த்து மல்லுக்கட்டி நிற்பார் மகன்.. அதில் அப்பாக்கள் வேறு.. ஆனால் கோட் படத்தில் அப்பாவும் மகனும் விஜய்..
அப்பா நல்லவர் மகன் கெட்டவர்.. கடைசியில் என்ன ஆகும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.. உங்களுக்கு இந்தியன் ஜெயிலர் படங்கள் நினைவுக்கு வந்தால் நாங்கள் பொறுப்பல்ல..
விஜய் ரசிகர்களை கவரும் வகையில் பாட்டு ஃபைட் ரொமான்ஸ் ப்ரெண்ட்ஷிப் என அனைத்தையும் வைத்து ரசிகர்களை கவர்ந்து விட்டார் இயக்குனர்
சினேகா லைலா மீனாக்ஷி மூன்று நாயகிகள் இருந்தாலும் இதில் சினேகா அதிகம் கவர்ந்து விடுகிறார்.. முக்கியமாக விஜய் பொய் சொன்ன பின்னர் பிரசாந்த் மற்றும் பிரபுதேவாவுக்கு போன் போட்டு சினேகா பேசும் காட்சி நண்பர்களின் நட்பை ரசிக்க வைக்கிறது..
அந்தகனில் அசத்திய பிரசாந்த் இதில் நண்பனாக ஜொலிக்கிறார். பாசமிக்க தந்தையாக நெகிழ வைத்து விட்டார்.. சூப்பர் ப்ரோ..
பிரபுதேவா கேரக்டர் எதிர்பாராத ட்விஸ்ட் வைத்திருக்கிறார்.. ஆனால் நம்பும் படியாக இல்லை.. நல்ல வேலை அவருக்கு ஜோடி இல்லை..
ஹரா படத்தில் ரீஎண்ட்ரி கொடுத்த மோகன் இதில் வில்லனாக மிரட்டி இருக்கிறார்.. மகன் விஜய் வில்லன் என்பதால் மோகனின் கேரக்டர் கொஞ்சம் டல் அடிக்கிறது.. ஆனால் அவரது கெட்டப் ரசிக்க வைக்கிறது.. மோகன் சீனியர் ஆக்டர் என்பதால் விஜய் அடிப்பதாக சீன்கள் இல்லை போல..
ஜெயராம் வழக்கப் போல அனுபவ நடிப்பில் ஜொலிக்கிறார்.. கலகலப்புக்காக யோகி பாபு கேரக்டர் இணைக்கப்பட்டாலும் கதையுடன் கூடிய காமெடி சூப்பர்.. முக்கியமாக காந்தி நேரு சுபாஷ் சந்திர போஸ் பெயர்கள் இடம் பெறும் போது…”நாம டைம் டிராவல் பண்ணி சுதந்திர காலத்திற்கு போயிட்டோமோ? என யோகி பாபு கேட்க்கும் காட்சி சிரிப்பலை..
இவர்களுடன்…
V.T. V. கணேஷ்,
பிரேம் ஜி,
அஜ்மல்,
வைபவ்,
அஜய் ராஜ்,
அர்விந்த் ஆகாஷ்
வெங்கட் பிரபு படங்கள் என்றால் பிரேம்ஜி அரவிந்த் வைபவ் இவர்கள் இல்லாமல் இருப்பார்களா.? இவர்களுக்கும் சின்ன சின்ன வேடங்கள் கொடுத்து கதையை நீட்டி படத்தை ஓட்டி இருக்கிறார்..
சிறப்பு தோற்றங்கள்…
கேப்டன் விஜயாந்த் (AI)
த்ரிஷா
சிவகார்த்திகேயன்
மகேந்திர சிங் தோனி
ஆகியோருக்கு கெஸ்ட் ரோல் கொடுத்து படத்தை இன்னும் கலகலப்பு ஆக்கியிருக்கிறார் இயக்குனர்..
இதன் மூலம் அரசியலில் விஜயகாந்த் விட்டு சென்ற இடத்தை விஜய் நிரப்புவார் என்றும் சினிமாவில் விஜய் விட்டு செல்லும் இடத்தை சிவகார்த்திகேயன் நிரப்புவார் எனவும் சொல்லாமல் சொல்லி இருக்கிறார் வெங்கட் பிரபு..
டெக்னீசியன்ஸ்…
AGS ENTERTAINMENT
வழங்கும்,
தயாரிப்பாளர்கள்…
கல்பாத்தி S. அகோரம்,
கல்பாத்தி S. கணேஷ்,
கல்பாத்தி S. சுரேஷ்
தயாரிப்பில்…
ஒளிப்பதிவாளர் : சித்தார்தா நோனி
படத்தொகுப்பாளர் : வெங்கட் ராஜன்
கலை இயக்குனர் : ராஜீவன்
படத்தின் ஒளிப்பதிவாளர் எடிட்டர் ஆர்ட் டைரக்டர் மூவரையும் பாராட்டலாம்.. போர் அடிக்காமல் படத்தை நகர்த்தி இருக்கின்றனர்..
இயக்குனர் : வெங்கட் பிரபு
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
பல படங்களில் நாம் பார்த்த கதை தான்.. மகனை வைத்து அப்பனையே எதிர்க்கும் வில்லன்.. தந்தையுடன் மோதும் மகன் இப்படி பார்த்த பழக்கப்பட்ட கதையை நவீன தொழில்நுட்பமான ஏ ஐ டெக்னாலஜியுடன் இந்தப் படத்தை ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.. அவருக்கு பக்கபலமாக தன் மிரட்டி பின்னணி இசையால் மிரட்டி தெறிக்க விட்டுள்ளார் யுவன் சங்கர் ராஜா.. ஆனால் பாடல்களில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்..
வெங்கட் பிரபு & யுவன் இணைந்தால் கிரிக்கெட்டில் இல்லாமல் இருக்குமா கிரிக்கெட்டையும் கொண்டு வந்து அந்த விளையாட்டு சமயத்தில் தோனி சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரையும் கொண்டு வந்து படத்திற்கு கமர்சியல் வேல்யூ ஏற்றி இருக்கிறார் வெங்கட் பிரபு.
முக்கியமாக சிவகார்த்திகேயன் வரும் காட்சியில்.. சிவா இனிமே இது நீங்க பார்த்துக்குங்க என விஜய் சொல்லும்போது.. “உங்களுக்கு வேற வேலை இருக்கு.. நீங்க அத பாருங்க நான் இதை பார்த்துக்கிறேன் என்று சிவா சொல்லும் போது அரசியலையும் சினிமாவையும் இணைப்பதாகவே ரசிகர்களால் யூகிக்கப்படுகிறது..
யுவன் இசையில் விஜய் பிரசாந்த் பிரபுதேவா அஜய் இணைந்து போடும் ஆட்டம் வேற லெவல் ரகம்… ஒரு காட்சியில் நீ சின்ன வயதிலேயே ஓவர் ஆக்டிங் என பிரசாந்தை கலாய்த்து விட்டார் விஜய்..
அரசியலுக்கு போகிறேன் இனிமேல் எனக்கு எல்லா ரசிகர்களும் ஆதரவு தேவை என விஜய் நினைத்தாரா அல்லது வெங்கட் பிரபு அந்த சீன்களை வைத்தாரா தெரியவில்லை??!! இளையராஜா ரஜினி விஜயகாந்த் கமல் சாங்ஸ்.. அஜித் தீம் மியூசிக் என அனைத்தையும் வைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்..
மெட்ரோ ட்ரெயின் காட்சியில் மெட்ரோ ட்ராக்கில் பைக் ஓட்டுவது.. மெட்ரோ ட்ரெயின் உடைத்துக் பைக் உள்ளே செல்வது.. ரயில் மீது ஹெலிகாப்டர் நிற்பது.. நம்ப முடியாத லாஜிக் மீறல்கள் இருந்தாலும் நம்பும்படியாக மேக்கிங் கொடுத்திருப்பது சிறப்பு..
ஆக விஜய்யுடன் இணைந்து லாஜிக் இல்லா மேஜிக் செய்திருக்கிறார் வெங்கட் பிரபு..
Vijays Goat movie review