தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்..
கல்கி எழுதிய வரலாற்று புதினமான பொன்னியின் செல்வனை 2 பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்னம்.
முதல் பாகம் வரும் 2022 செப்டம்பர் 30-ம்தேதி வெளியானது. இரண்டாம் பாகம் 2023 இன்று ஏப்ரல் 28ல் வெளியானது.
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவு: ரவிவர்மன்.
எடிட்டிங்: ஸ்ரீகர் பிரசாத்.
————————————
கேரக்டர்கள் அறிமுகம்…
ஆதித்ய கரிகாலன் – விக்ரம்
வந்தியத் தேவன் – கார்த்தி
அருள்மொழி வர்மண் / ராஜ ராஜ சோழன் – ஜெயம் ரவி
நந்தினி – ஐஸ்வர்யா ராய்
குந்தவை – த்ரிஷா
பெரிய பழுவேட்டரையர் – சரத்குமார்
சின்ன பழுவேட்டரையர் – பார்த்திபன்
ஆழ்வார்க்கடியான் நம்பி – ஜெயராம்
ரவிதாசன் – கிஷோர்
பூங்குழலி – ஐஷ்வர்ய லெட்சுமி
பார்த்திபேந்திரன் பல்லவன் – விக்ரம் பிரபு
பெரிய வேளார் – பிரபு
மலையமான் – லால்
சுந்தர சோழர் – பிரகாஷ் ராஜ்
மதுராந்தகன் – ரகுமான்
செம்பியன் மாதேவி – ஜெயசித்ரா
வானதி – சோபியா துலிபலா
கதைக்களம்…
கமல்ஹாசன் குரலில் படம் தொடங்குகிறது.
முதல் பாகத்தில் கடலில் அருள்மொழி வர்மனும் வந்தியத்தேவனும் விழுந்து மறித்துப் போனதாக வரும்.
இந்த தகவல் தஞ்சைக்கு கிடைக்கிறது.
சுந்தரச் சோழர், குந்தவை என அனைவரும் மனம் உடைந்து போகின்றனர்.
இதன் பின்னர் ஆதித்த கரிகாலனுக்கும் (விக்ரம்) செய்தி தெரிந்ததும் தன் தம்பியின் மரணத்திற்கு நந்தினி தான் காரணம் என அவளை கொல்ல படையோடு கிளம்புகிறார்.
ஆனால் கடலில் விழுந்த இருவரையுமே மந்தாகினி எனும் ஊமை ராணி காப்பாற்றுகிறாள். இவர் வயதான பெண்மணி யார்.?
இதனிடையில் சித்தப்பா மதுராந்தகன் (நடிகர் ரகுமான்) மணிமகுடம் தனக்கு வர வேண்டும் என முனைப்பில் சூழ்ச்சிகளை செய்கிறார்.
இதுஒரு புறமிருக்க.. சோழ சாம்ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற குந்தவை முயற்சிகள் எடுக்கிறார்.. சிற்றரசர்கள் செய்யும் சதியை முறியடிக்க அவர்களின் கடம்பூருக்கே செல்கிறார் ஆதித்த கரிகாலன்.
இறுதியில் என்ன ஆனது.? வந்தியத்தேவன் குந்தவையின் காதல் கை கூடியதா.? அருள் மொழிவர்மனை திருமணம் செய்து கொண்டாரா இளவரசி வானதி?
ஆதித்த கரிகாலனை கொன்றாரா நந்தினி? அவர்களின் பழைய காதல் கைகூடியதா.?
கடைசியில் மணிமகுடம் யாருக்கு சென்றது? என்பதை என்ன சின்ன ட்விஸ்ட்டுகளுடன் கொடுத்திருக்கிறார் டைரக்டர் மணிரத்னம்.
கேரக்டர்கள்…
இந்தப் பாகத்தில் ஐஸ்வர்யாராயும் விக்ரமும் தங்களது பங்களிப்பை கூடுதலாகவே கொடுத்துள்ளனர்.. போட்டி போட்டுக் கொண்டு உணர்ச்சிகளை வெளிப்படுத்தி உள்ளனர்.
முக்கியமாக நந்தினி – கரிகாலன் சந்திக்கும் அந்த கடம்பூர் மாளிகைக் காட்சி ஒரு விதமான ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. அதுபோல விக்ரமின் முடிவு நாவலை போலவே படத்திலும் புதிராகவே முடிக்கப்படுகிறது.
ஐஸ்வர்யா ராய் எந்த ஆணிடம் பேசினாலும் அவர்களை வசியம் செய்து விடுவார் என்ற ஒரு வசனம் படத்தில் இருக்கும். அது 100% பொருந்துகிறது. அதற்கு சாட்சியாக இந்த படத்தில் ஓரிரு காட்சிகள் உள்ளன. நந்தினி என்ற இந்த கேரக்டருக்கு உலக அழகி ஐஸ்வர்யாராய் மட்டும்தான் பொருந்துவார் என்பதை பிரதிபலித்துள்ளார்.
14 வருடங்கள் கழித்தே அருண்மொழி வர்மன் சோழ சாம்ராஜ்ஜியத்தின் அரசனாக முடிசூடிக் கொண்டார் என்பதை காட்சிப்படுத்தாமல் வார்த்தைகளாக சொல்லி இருக்கின்றனர்.. தனது சித்தப்பாவிற்கு அரசர் பதவியை கொடுத்து காத்திருக்கும் ஜெயம் ரவியின் குணம் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
கார்த்தியின் காட்சிகள் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கிறது. மேலும் சரத்குமார் பிரபு ஜெயராம் பார்த்திபன் கிஷோர் ஆகியோரின் கதாபாத்திரங்களும் படத்தின் கதை ஓட்டத்திற்கு பேரு உதவி புரிந்துள்ளன.
த்ரிஷா & பூங்குழலி இருவரும் அழகில் அசத்தல்.. இந்த பாகத்தில் பெரிதாக காட்சிகள் இல்லை என்றாலும் இருவரும் ரசிக்க வைக்கின்றனர்.
விக்ரம் அவரின் தங்கை திரிஷா.. த்ரிஷாவின் தம்பி ஜெயம் ரவி ஆகிய மூவரும் சந்திக்கும் காட்சிகள் ரசிகர்களின் கூடுதல் கவனத்தை பெறுகிறது.
கார்த்தியின் கண்ணை கட்டிக்கொண்டு த்ரிஷா வாள் வைத்துக் கொண்டு பேசும்போது மெல்ல அருகே வந்து த்ரிஷாவின் கையை பற்றி கொண்டு கார்த்தி பேசும் ஒவ்வொரு வசனங்களும் த்ரிஷாவின் முகபாவனைகளும் சிறந்த நடிப்புக்கு ஒரு சான்று.
இவர்கள் இருவரும் முத்தமிட்டு கொள்ள மாட்டார்களா என்று எண்ணம் ரசிகர்கள் மனதில் கண்டிப்பாக எழும்..
விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் சந்திக்கும் காட்சியில்.. விக்ரம் கண்களில் காதல்.. ஐஸ்வர்யாவின் கண்களில் வஞ்சம் கலந்த பரிதவிப்பு என இரண்டையும் கலந்து ரசிகர்களுக்கு கொடுத்திருக்கின்றனர்.
ஊமை ராணியாக வரும் ஐஸ்வர்யா ராய் படத்திற்கு பெரிய ட்விஸ்ட் ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கும் நிலையில் “வாம்மா மின்னல்..” என்பது போல மறைந்து விடுகிறார்.
ஜெயராம் வந்து செல்லும் காட்சிகள் கலகலப்புக்கு கொஞ்சம் உதவி புரிந்துள்ளன.. விக்ரம் பிரபு நண்பன் கேரக்டரில் தன்னை பிரதானமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஐஸ்வர்யாவின் தெளிவும் நிதானமும் ஒரு அரசிக்கு உரிய கம்பீரத்தை காட்டுகிறது.
டெக்னீஷியன்கள்…
பொன்னியின் செல்வன் முதல் பாகம் வந்த போது அதில் போர்க்களம் வீரம் வஞ்சம் ரொமான்ஸ் என அனைத்தும் கலந்து இருந்தன.
ஆனால் இரண்டாம் பாகத்தை பொருத்தவரை முழுவதும் வசனங்களே படத்தை ஆக்கிரமித்துள்ளன.
ஒவ்வொரு வசனங்களையும் மிகவும் ஜெயமோகன் எழுதி இருக்கிறார் என்பது சிறப்பு அம்சம்.
இரண்டாம் பாதியில் ஆதித்த கரிகாலன் எதிர்பாராத முடிவிற்கு பிறகு படத்தில் பெரிய தொய்வு ஏற்படுகிறது. படம் எப்பொழுது முடியும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பது போல காட்சிகள் அமைந்துள்ளன.
இறுதியாக காட்டப்படும் கிளைமாக்ஸ் காட்சியும் பெரிதாக எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
அகநக மற்றும் சின்னஞ்சிறு பூவே ஆகிய பாடல்கள் மனதை வருடும் தென்றலாய் பயணிக்கிறது.
ரவிவர்மனின் ஒளிப்பதிவு.. ரஹ்மானின் பாடல்கள்..பின்னணி இசை.. தோட்டா தரணியின் பிரமாண்ட செட் என அனைத்தும் படத்திற்கு யானை பலத்தை கொடுத்துள்ளது.
அதுபோல ஐஸ்வர்யா -த்ரிஷாவின் சிகை & உடை அலங்காரமும்.. நடிகர் ரகுமானுடன் வரும் சிவாஓம் கூட்டமும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
ஆனால் எவ்ளோ பெரிய அரசராக இருந்தாலுமே மகாராணி & இளவரசி குரல்தான் எங்குமே ஒலிக்கிறது என்பதை அப்பட்டமாகவே காட்டி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம்.
அது அரண்மணையாகவே இருந்தாலும் பெண்கள் விதிவிலக்கல்ல என்று என்பதை காட்சியின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.
பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட அனைத்து கலைஞர்களும் சிறப்பு.
தன்னுடைய நேர்த்தியான இயக்கத்தால் ‘பொன்னியின் செல்வன்: படத்தை தமிழர்கள் பெருமை படும் வகையில் கொடுத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம்.
சரித்திரக்கதை என்பதால் தொய்வான காட்சிகளை பொறுத்துக் கொள்ள வேண்டும். ஆனாலும் இன்றைய தலைமுறையும் குழந்தைகளும் ரசிக்கும்படி சொல்லியிருப்பது மணிரத்னம் டச்.
Ponniyin Selvan 2 movie review and rating in tamil