ஜாதியற்ற ஜனங்களாவோம்… நாடோடிகள் 2 விமர்சனம் 4/5

ஜாதியற்ற ஜனங்களாவோம்… நாடோடிகள் 2 விமர்சனம் 4/5

தமிழகத்தை உலுக்கிய சங்கர் கௌசல்யாவின் ஜாதி ஆணவக்கொலையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் இது.

இதில் தமிழ் சினிமாவுக்கே தேவையான காதல், சமூக பிரச்சினை, அதிரடி சண்டை காட்சிகள், நண்பர்கள், கிராம பஞ்சாயத்து, தோழர் கதை, மக்கள் போராட்டம், காப்பர் கேன்சர் என அனைத்தையும் கலந்து அசத்தியிருக்கிறது சமுத்திரக்கனி மற்றும் சசிகுமாரின் கூட்டணி

கதைக்களம்…

ஊர் பிரச்சினைகளுக்கு தன் ஊதியத்தை செலவழிக்கும் நல்லவர் சசிகுமார். இவரின் தோழர்கள் அஞ்சலி (டாக்டர்) பரணி மற்றும் சிலர்.

ஊர் பிரச்சினைகளை சசிகுமார் கவனிப்பதால் உறவினர்களே (ஞான சம்பந்தம்) பெண் தர மறுக்கிறார்கள். இதனால் வயது ஓடிக் கொண்டே இருக்கிறது.

இதனால் ஒரு கட்டத்தில் பெண் ஓகே சொல்லிவிட்டால் போதும் என் சம்மதம் கூட தேவையில்லை என சொல்கிறார் சசி,
அப்போது அவர்களது ஜாதியை சேர்ந்த அதுல்யாவின் பெற்றோர் சம்மதிக்க திருமணம் நடக்கிறது.

ஆனால் சாந்தி முகூர்த்த சமயத்தில் ஒரு அதிர்ச்சி குண்டை போடுகிறார் அதுல்யா.

இதனால் சசியின் வாழ்க்கையே மாறுகிறது. அப்படி என்ன சொன்னார் அதுல்யா?, அவருக்கு என்ன பிரச்சினை?, அஞ்சலி என்ன செய்தார்? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதில் தான் க்ளைமாக்ஸ்.
Naadodigal 2 stills (1)

கேரக்டர்கள்….

நாடோடிகள் 2 படத்தை பொருத்தவரை பெரும்பாலான கேரக்டர்கள் படத்தின் வேர்களாக அமைந்துள்ளன.

சசிகுமார், அஞ்சலி, அதுல்யா, பரணி, நமோ நாராயணன், துளசி, ஞான சம்பந்தம் உள்ளிட்டோர் ஆணி வேர் என்றால் பவன், அவரின் மனைவி (வில்லி) திருநங்கை நமீதா, தோழர்கள், ஜாதி வெறியர்கள் உள்ளிட்டோர் படத்தை கிளை வேர்கள் போல வளர்த்துள்ளனர்.

இத்தனை பெருங்கூட்டத்தை அருமையாக வேலை வாங்கியுள்ளார் சமுத்திரக்கனி.

இந்த படத்தில் அட்வைஸை கூட அளவாக கொடுத்து, அதிரடியை அள்ளி கொடுத்துள்ளார் சமுத்திரக்கனி.

நாமாவோம் என்ற ஊர்வலம், கலவரம் காட்சி மற்றும் அந்த பாடல் படமாக்கப்பட்ட விதம் அருமை.

தோழர்கள் போராடும் போது எல்லாரும் ஒரே உடையில் வர வேண்டும் என கூறி விட்டு எல்லா பெண்களும் சிவப்பு சால் அணிந்திருக்க அஞ்சலி மட்டும் மெர்ருன் கலர் போட்டது ஏன்..? (ஒரு வேளை ஹீரோயின்)

Naadodigal 2 stills (2)

தொழில்நுட்ப கலைஞர்கள்..

ஜஸ்டின் பிரபாகரன்… சூப்பர்யா… மெலோடி பாடல்களை இதுநாள் வரை கொடுத்த இவர் பின்னணி இசையில் பின்னி பெடலடுத்துள்ளார்.

சம்போ சிவ சம்போ (நாடோடிகள் பார்ட் 1) பாடல் முதல் அனைத்தும் ரசிக்கும் வகையில் உள்ளது.

என். கே ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு ஏணிப்படியாக அமைந்துள்ளது.

மனதை அள்ளிய வசனங்கள்…

சந்தான+பாபு கூட்டணி மணக்கிறதா.? டகால்டி விமர்சனம்

விருப்பம் இல்லாமல் கணவன் மனைவி உடலுறவு கொண்டால் அது பிணத்துடன் படுப்பது சமம். எத்தனை காலம்தான் இப்படி?

உன் ஜாதி கட்சி தலைவன் அவனின் தொண்டர் குடும்பத்தில் மாப்பிள்ளை எடுப்பானா? ஜாதி என்றாலும் அதில் பணக்கார பேதம் உள்ளது.

திருமணம் செய்துக் கொள்ளும் முன் பெண்ணிடம் உனக்கு விருப்பம் இருக்கா? என எத்தனை ஆண்கள் கேட்டிருக்கிறார்கள்..?

இப்படி பல வசனங்கள் கைத்தட்டல்களை அள்ளும்.

Naadodigal 2 stills (3)

படத்தின் ப்ளஸ்…

பின்னணி இசையை பின்னி எடுத்துள்ளார் ஜஸ்டின் பிரபாகரன்.

சசிகுமார், அதுல்யா, அஞ்சலி, பரணி ஆகியோரின் மிகையில்லாத நடிப்பு

என். கே ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவில் கலவரம் காட்சிகள் மற்றும் அதிரடி சண்டை காட்சிகள் ரசிகர்களுக்கு மாஸ் விருந்து
முக்கியமாக சமுத்திரக்கனியின் விறுவிறுப்பான திரைக்கதை.

படத்தின் இயக்குனர் சமுத்திரக்கனியும் ஒரு காட்சியில் வந்து விறுவிறுப்பான திரைக்கதைக்கு பாஸ்ட் கியர் போட்டு எகிற வைத்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது உள்ள அரசியலையும் கலந்து சொல்லியுள்ளார்.

இனிவரும் தலைமுறையாவது சாதியற்ற சமுதாயமாக வளர வலியுறுத்தியுள்ளார்.

ஆக… நாடோடிகள் 2… ஜாதியற்ற ஜனங்களோவோம்..

Naadodigal 2 review rating

Comments are closed.

Related News

சசிகுமார் நடிப்பில் `நாடோடிகள் 2', கொம்புவச்ச…
...Read More
மில்லியன் டாலர் மூவிஸ் சார்பாக K.கார்த்திக்கேயன்…
...Read More
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் பெரும்…
...Read More