First on Net சீறும் சிறுமிகள்… சீறு விமர்சனம்

First on Net சீறும் சிறுமிகள்… சீறு விமர்சனம்

கதைக்களம்…

மயிலாடுதுறையில் (மாயவரம்) கேபிள் டிவி நடத்தி வருகிறார் மணிமாறன் (ஜீவா). எனவே அந்த ஊர் முழுக்க பிரபலமாகிறார்.

இந்த டிவி மூலம் நிறைய சமூக பணிகளை செய்வதால் இவருக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். நண்பன் என்று இவரை சொன்னாலோ எதையும் செய்ய தயங்காதவர் ஜீவா.

இவரின் நேர்மையால் அந்த ஊரின் பிரபலம் பாதிக்கப்படுகிறார்.

எனவே ஜீவாவை தீர்த்து கட்ட சென்னையில் உள்ள மல்லி (வருண்) என்ற தாதாவை மாயவரம் வரவைக்கிறார்.

ஜீவாவை கொல்ல வரும் வருண் அப்போது ஜீவாவின் தங்கை பிரசவத்துக்கு ரத்தம் கொடுத்து உதவுகிறார்.

இதனால் வருணை பார்க்க வேண்டும் என தங்கையும் கோரிக்கை வைக்கிறார்.

First On Net வாழை கொட்டுடிச்சி… வானம் கொட்டட்டும் விமர்சனம்

தன் தங்கை உயிரை காப்பாற்றிய வருணிடம் தன்னை கொல்ல தானாகவே செல்கிறார் ஜீவா.

அதன்பின்னர் என்ன ஆனது? என்பதே மீதி கதை.

கேரக்டர்கள்…

தெனாவெட்டு, ரௌத்திரம் உள்ளிட்ட பல படங்கள் பாணியில் ஜீவா தெரிகிறார். ஆனால் இதிலும் இன்னும் கூடுதல் ஸ்மார்ட்டாக இருக்கிறார்.

அதிரடியிலும் நட்பிலும் பாசத்திலும் நம்மை அசத்திவிடுகிறார் ஜீவா.

ஹீரோயின் படத்தில் இருந்தாரா? என்ற கேள்வி நம்மில் எழும். அந்தளவிற்கே நாயகி பாத்திரம் உள்ளது. இவருக்கு டூயட்டும் உள்ளது.

ஜீவாவின் தங்கையாக வரும் அபிராமி மற்றும் கிராமத்து சாதனை மாணவி சாந்தினி இருவரும் நடிப்பில் கச்சிதம்.

கோலி சோடா படத்தில் பார்த்த சாந்தினி இதில் கொஞ்சம் ஒல்லியாக இருக்கிறார். ஆனால் நடிப்பில் கில்லியாக வெளுத்துவிட்டார்.

+2 படிப்பில் சாதித்துவிட்டு இவர் மீடியா முன் பேசும் பேச்சு சிறுமிகளை உற்சாகப்படுத்தும். இவரின் முடிவுக்கு பின்னர் இவரது தோழிகள் எடுக்கும் முடிவு சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.

ஒரு பையனுக்கு பிரச்சினை என்றால் மாமா மச்சி என்று ப்ரெண்ட்ஸ் வர்றாங்க. எங்களுக்கு யாருமில்லை. இனிமே நாங்கதான். என இவர்கள் புறப்படும் காட்சி ரசிக்க வைக்கிறது.

First On Net காடும்… நாட்டுமிராண்டிகளும்… அடவி விமர்சனம்

ரயில்வே ஸ்டேஷனில் ஒரு பெண்ணை வெட்டும்போது யாரும் அவளை காப்பாற்ற வரவில்லை. இங்கே பெண்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என அவர்கள் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் நெத்தியடி.

மல்லி கேரக்டரில் மாஸ் காட்டியுள்ளார் வருண். ஹீரோ மட்டும்தான் நடிப்பேன் என்றில்லாமல் இதுபோல் வித்தியாசமான வேடங்களையும் இவர் ஏற்கலாம்.

வில்லனாக நவதீப். கொஞ்சமாக மிரட்டியிருக்கிறார்.

சதீஷின் காமெடிகளுக்கு படத்தில் ஜீவாவே சிரிப்பு வரல என்கிறார். அப்புறம் நாம் எப்படி சிரிப்பது.

96 படத்தை பார்த்துவிட்டு இந்த படத்தைவிட என்றென்றும் புன்னகை படத்தில் த்ரிஷா செமயாய் இருப்பாங்க. ஆனால் அதில் ஹீரோ சுமார்தான் என்பார் ஜீவா. அதற்கு நீ சந்தானம் ப்ரெண்ட் போல காமெடி பண்ணாத என்பார். இதுபோல் மொக்கை ஜோக்குகளே உள்ளன.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

இமானின் பின்னணி இசை நன்றாக உள்ளது.

பார்வையற்ற குருமூர்த்தி பாடியுள்ள செவ்வந்தியே… மதுவந்தியே.. என்ற பாடல் என்றும் மனதில் ஓடிக் கொண்டே இருக்கும். நம்மை உருக வைக்கும் குரல் அது.

இடைவேளைக்கு முன்பு வரும் பாடல்கள் பெரிதாக கவரவில்லை.

ஜாதியற்ற ஜனங்களாவோம்… நாடோடிகள் 2 விமர்சனம் 4/5

மாயவரம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளின் காட்சிகள் கலர்புல்லாக உள்ளது. ஒளிப்பதிவை பாராட்டலாம்.

படத்தின் நீளமே சிறியது தான் என்றாலும் இன்னும் வெட்டியிருக்கலாமே எனத் தோன்றுகிறது.

வா டீல் மற்றும் றெக்க ஆகிய படங்களை இயக்கிய ரத்ன சிவா இந்த படத்தை இயக்கியுள்ளார். வா டீல் படம் ரிலீசாகவில்லை.

றெக்க படத்தை போல அதே பாணியில் இதிலும் முயற்சித்துள்ளார். ஆக்சன், சென்டிமெண்ட், பாட்டு என்பதுதான் இவரது பார்முலா போல. அதில் பாஸ் செய்துள்ளார். ஆனால் பார்முலாவை மாற்றிக் கொண்டால் அவருக்கும் ரசிகர்களுக்கும் நல்லது.

சீறு… சீறும் சிறுமிகளின் கதையே படத்தின் பலம்.

Seeru review rating

Comments are closed.

Related News

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான கருத்துக்கள்…
...Read More
இசையமைப்பாளர் டி.இமான் புதிய திறமைகளை கண்டுபிடித்து…
...Read More
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் கச்சிதமான முறையில்…
...Read More