தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரவுடிகளை ரெய்டு அடித்து வேட்டையாடும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் கதை தான் இந்த படம்.
கதைக்களம்…
போலீஸ் பிரபாகரன் (விக்ரம் பிரபு) ஒரு நேர்மையான அதிகாரி. ரவுடிகளை எந்தவித தயக்கமும் இன்றி என்கவுண்டர் மற்றும் அரிவாளால் போட்டுத் தாக்கும் பலே அதிகாரி இவர். போலீஸ் என்றாலும் காசு கொடுத்துதான் டீ குடிப்பார் இவர்.
இவரின் காதலி டெட்டின்ஸ்ட் ஸ்ரீதிவ்யா. இவரின் தங்கை அனந்திகா.
ஒரு கட்டத்தில் தன் காதலியை எதிரிகள் போட்டுத் தள்ள அவரது தங்கையை காப்பாற்ற இவர் நடத்தும் ரெய்டு தான் மீதிக்கதை.
வேலு பிரபாகரன் மெயின் ரவுடி. இவருக்கு அடுத்து ரிஷி அவரது சகோ டேனியல் மற்றும் சௌந்தரராஜா மூவரும் கேங்ஸ்டர் கும்பல். இவர்களுடன் மோதும் போலீஸ் விக்ரம்பிரபு.
ஸ்ரீதிவ்யாவை ரவுடி கும்பல் கொல்ல என்ன காரணம்? இருவருக்கும் என்னதான் பிரச்சனை? என்பதை படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
மீசையில்லாத முகம்.. கம்பீரமான தேகம்.. உயரமான உருவம் கனிவான கண்கள் என பிரபாகரன் கேரக்டரில் விக்ரம் பிரபு.
காதலியை கண்டால் கூட கடமையே தன் லட்சியம் என இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் வழக்கம் போல பட்டையை கிளப்பி இருக்கிறார். ஒரு சென்டிமீட்டர் கூட சிரிக்க கூடாது என பிடிவாதமாக பிரபாகரன்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் ஸ்ரீ திவ்யா. இவரின் காட்சிகளை எடிட்டர் வெட்டி விட்டாரோ? என நாம் தியேட்டரை விட்டு எழுந்திருக்கும் போது திடீரென ஸ்ரீதிவ்யா என்ட்ரி கொடுக்கிறார். அரை மணி நேரம் என்றாலும் அவருக்கும் இரண்டு டூயட் என ரசிக்க வைத்திருக்கிறார். அவரைக் கண்டதும் தியேட்டரில் ரசிகர்கள் கைதட்டலை கேட்க முடிந்தது. (ரசிகர்கள் பாவம்.. அடிக்கடி தமிழில் நடிங்க அம்மணி)
நாயகி தங்கையாக தமிழில் அறிமுகம் ஆகிறார் அனந்திகா. இனி இவருக்கு நிறைய படங்களில் ஹீரோயின் வேடம் கிடைக்கும். அந்த அளவிற்கு துறுதுறு பெண்ணாக அழகால் இளைஞர்களை சுண்டி இழுக்கிறார்.
விமல் நடித்த ‘துடிக்கும் கரங்கள்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த சௌந்தரராஜா இதில் முற்றிலும் மாறுபட்டு நீண்ட தாடி வளர்த்த ரவுடியாக மிரட்டி இருக்கிறார். அதிலும் கவிதை எழுதும் ரவுடியாக வித்தியாசமான வேடம் ஏற்றுள்ளார்.
அண்ணன் தம்பி ரவுடியாக ரிஷி மற்றும் டேனியல். இருவரும் இதுவரை ஏற்காத வேடம் என்பதால் மெனக்கெட்டு வில்லத்தனம் காட்டுயிருக்கின்றனர்.
வாய்ஸ் ஓவர் கொடுத்து பாசம் மிக்க மாமாவாக நடிகர் செல்வா நடித்திருக்கிறார். இவருகளுடன் வேலு பிரபாகரன் & ஜீவா ரவி உள்ளிட்டோரும் உண்டு.
டெக்னீசியன்கள்ஸ்…
இசை : சாம்.சி.எஸ்
ஒளிப்பதிவு : கதிரவன்
படத்தொகுப்பு : மணிமாறன்
காஸ்டியூம் டிசைன் : மாலினி பிரியா
கதிரவனின் ஒளிப்பதிவில் ஆக்சன் காட்சிகளில் அனல் தெறிக்கிறது..
சாம்.சி.எஸ். இசையில் பாடல்கள் சுமார் ரகமே. பின்னணி இசையில் ரசிக்க வைத்தாலும் நிறைய இடங்களில் காட்டுகத்து எரிச்சல் தான்..
எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் ரெய்டு படத்தை தயாரித்துள்ளது. ‘கொம்பன்’ பட முத்தையாவின் தங்கை மகன் கார்த்தி என்பவர் ரெய்டு படத்தை இயக்கியிருக்கிறார்.
முத்தையா படங்களில் இருக்கும் உணர்வு பூர்வமான எமோஷன் காட்சிகள் இதில் இல்லை என்பது வருத்தமே.. வெறும் ஆக்சனை மட்டும் நம்பி களமிறங்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் கார்த்தி.
வசனங்களும் கவரவில்லை.
இந்த படத்தை என்ன நினைத்து எடிட் செய்தாரோ தெரியவில்லை.. ஒவ்வொரு வில்லனுக்கும் ஹீரோ நாயகி ஆகியோருக்கும் தனித்தனியாக ஃப்ளாஷ் பேக்.. ஒன்றன்பின் ஒன்றாக வருவதால் திரைக்கதையில் குழப்பம் மிஞ்சுகிறது.
ஒரு காட்சியில் விக்ரம் பிரபு கையில் கன் இருக்கும்போது எதிரே நிற்கும் வில்லன் என் கையில் அருவா இருக்குது. இப்படி யாராவது சொல்வார்களா.? துப்பாக்கியால் எங்கிருந்தாலும் சுட்டு விட முடியும்.. ஆனால் அருவா அருகே வந்தால் மட்டுமே வெட்ட முடியும்.. இதை கூடவா வசனகர்த்த கவனிக்கவில்லை..
ஆக.. ரௌடியிச ரெய்டு
raid movie review and rating in tamil