டிராஃபிக் ராமசாமி விமர்சனம்

டிராஃபிக் ராமசாமி விமர்சனம்

நடிகர்கள்: எஸ்ஏ சந்திரசேகர், ரோகினி, ஆர்கே சுரேஷ், எஸ்வி சேகர், அம்பிகா, மனோ பாலா, விஜய்சேதுபதி, விஜய் ஆண்டனி, குஷ்பூ, சீமான் மற்றும் பலர்
இயக்குனர்: விக்கி
இசையமைப்பாளர்: பாலமுரளி பாலு
தயாரிப்பாளர்: எஸ்ஏ சந்திரசேகர் க்ரீன் சிக்னல்
பிஆர்ஓ. : சக்தி சரவணன்

கதைக்களம்…

இன்றைய நாட்டு நடப்பில் இப்படி ஒரு மனிதர் வாழ முடியுமா? இந்த வயதிலும் போராட முடியுமா? என்பதற்கு விடைதான் இந்த டிராஃபிக் ராமசாமி.

அநீயாயம் செய்பவர்களுக்கு பிடிக்காத ஒரு தனி ஒருவரின் வாழ்க்கை பதிவு.

பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் இருந்தால் அதை நம்மில் பலர் எதிர்த்து பேசுவார்கள். ஆனால் அதை கிழித்தெறியும் முதல் மனிதர் இவர்.

அத்தோடு இல்லாமல் எங்கு அநீதி நடந்தாலும் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் முதல் வழக்கு தொடுத்து அதில் வெற்றி கண்டு வருபவர்.

பெரும்பாலும் இவரை பற்றி நாம் பேசும்போது விதிமுறைகளை மீறி வைக்கப்படும் பேனர்களை இவர் அகற்றுவார் என்பதுதான் நமக்கு தெரியும்.

ஆனால் அதையும் மீறி தமிழக அரசையே எதிர்த்து இவர் செய்த சாகசங்கள் அனைத்தும் கலந்த கலவைதான் இந்த டிராஃபிக்.

கதைக்களம்…

சென்னையில் மீன்பாடி (மூன்று சக்கர) வண்டிகளால் பல விபத்துக்கள் ஏற்படுகிறது.

பொதுவாக இந்த வண்டிக்கு 25சிசி ஸ்பீடு மட்டுமே இருக்கும். அதற்கு மட்டும்தான் அனுமதியுள்ளது.

ஆனால் டூவிலரில் உள்ள இன்ஜினை திருடி, அதை மீன்பாடி வண்டியில் பொருத்தி ஓவர் ஸபீடாக சென்று பலரை கொல்கின்றனர்.

இந்த விபத்துக்கு எதிராக டிராபிக் ராமசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். இந்த வழக்கில் எம் எல் ஏ, மேயர், மந்திரி என அனைவரும் சிக்கிக் கொள்கின்றனர்.

இவர்கள் டிராபிக் ராமசாமியை கொலை செய்ய முயற்சிக்கின்றனர். இவர்கள் அனைவரையும் தாண்டி இந்த வழக்கில் டிராபிக் ராமசாமி வெற்றி கண்டாரா? என்பதே இப்பட கதை.

கேரக்டர்கள்…

டிராபிக் ராமசாமியாக எஸ் ஏ சந்திரசேகரன். நிஜ டிராஃபிக் ராமசாமிக்கு இவரை விட பொருத்தமான ஒரு ஆள் கிடைப்பாரா தெரியல.

கதைக்கும் கேரக்டருக்கும் மிக கச்சிதம்.

போலீசை எதிர்த்து அவர் பேசும் வசனங்கள் முதல் அரசியல்வாதிகள் தில்லாக பேசும் காட்சிகள் அனைத்தும் அசத்தல்.

அதிலும் கோர்ட் காட்சிகளில் இவரே வாதாடி வழக்கறிஞர்களையே வென்று விடுகிறார்.

போலீஸ் ஸ்டேசனில் இவர் அடி வாங்குவதை பார்த்தால் நமக்கே பாவமாக தோன்றும்.

பேத்தியுடன் பாசம், மனைவியுடன் நேசம், குடும்பத்தில் அன்பு என சகலத்திலும் ஜொலிக்கிறார்.

வில்லனாக இருப்பார் என்று பார்த்தால் தன் கேரக்டரில் ஹீரோவாக உயர்ந்து விடுகிறார் ஆர்கே சுரேஷ்,
எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் கணவனை விட்டுக் கொடுக்காத ரோகினி மனதில் நிறைகிறார்.

இவர்களுடன் நிறைய நட்சத்திரங்கள்…

லிவிஸ்டன், எஸ்வி சேகர், அம்பிகா, மனோ பாலா, விஜய்சேதுபதி, விஜய் ஆண்டனி, குஷ்பூ, சீமான், இமான் அண்ணாச்சி, பிரகாஷ்ராஜ் என பலரும் வந்து செல்கிறார்கள்.

இதில் இமான் அண்ணாச்சி செய்யும் இம்சைகள் சில கவுன்சிலர்களை நினைவுப்படுத்தும்.

இதில் விஜய் ஆண்டனி வரும் காட்சி படு செயற்கையாக இருக்கிறது.

எஸ்வி சேகரை நீதிபதியாக பார்க்கும்போது ஆடியன்ஸ் கிளாப்ஸ் அள்ளும். அதற்கு காரணம்தான் உங்களுக்கு தெரியுமே.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாலமுரளி பாலுவின் பின்னணி இசை பேசப்படும். குடும்ப பாடல் மற்றும் போராட்ட பாடல் ரசிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டர் அவர்கள் பணியில் கச்சிதம்.

ஒரு தனி மனிதரின் வாழ்க்கை பதிவை அப்படியே கொடுக்காமல் கமர்சியல் கலந்து கொடுத்துள்ளார் விக்கி.

அறிமுக இயக்குனர் என்று அவர்தான் சொல்கிறாரே தவிர படத்தில் அப்படி தெரியவில்லை.

சீனியர் நடிகர்களை நன்றாகவே வேலை வாங்கியிருக்கிறார்.

கமர்சியலாக கொடுக்க நினைத்து சில நேரங்களில் காட்சி அமைப்புகளில் அதுவே மைனசாக மாறிவிட்டது.

கொஞ்சம் விறுவிறுப்பாக காட்சிகள் செல்லும் போது அம்பிகாவின் அரட்டை கொஞ்சம் ஓவராக தெரிகிறது.

பல கோர்ட் காட்சிகள் நாடகத்தன்மை உள்ளது. யதார்த்தம் கலந்து கொடுத்திருக்கலாம்.

டிராஃபிக் ராமசாமி… ஒன் மேன் ஆர்மி

Comments are closed.

Related News

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியின் வாழக்கை…
...Read More
விக்கி இயக்கியுள்ள 'டிராஃபிக் ராமசாமி’ படத்தை…
...Read More