தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
1923 ஆண்டில் துப்பு துலங்காத ஒரு கொலையை அடிப்படையாகக் கொண்ட கதை என டைட்டில் கார்டில் வாசகம்.
கதைக்களம்…
ஒரு மாடல் அழகி மீனாட்சி சவுத்ரி தன்னுடைய அப்பார்ட்மெண்டில் கொல்லப்படுகிறார். இந்த கொலை வழக்கை விசாரிக்க வருகிறார் போலீஸ் ரித்திகா சிங்.
தன்னுடைய பயிற்சியாளரு முன்னாள் போலீஸ் அதிகாரியுமான விஜய் ஆண்டனியை உதவிக்கு அழைத்துக் கொள்கிறார் ரித்திகா சிங்.
விஜய் ஆண்டனி & ரித்திகா இருவரும் இணைந்து கொலையாளியை கண்டுபிடித்தார்களா என்பது தான் படத்தின் கதை.
மாடல் அழகி கொல்லப்பட்டது ஏன்.? அவரை கொன்றவர் யார்? அவரது நோக்கம் என்ன.? என்பதை ஹாலிவுட் பாணியில் கோலிவுட் படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி குமார்.
கேரக்டர்கள்…
கொஞ்சம் வயதான தோற்றத்தில் தலைக்கு வெள்ளை கலர் அடித்து இறங்கி இருக்கிறார் விஜய் ஆண்டனி. அவரது பேச்சில் அதே நிதானம்.
இது போன்ற திரில்லர் இன்வெஸ்டிகேஷன் படங்களுக்கு கொஞ்சம் வேகம் கூட்டி இருந்தால் சுவாரசியமாக இருந்திருக்கும்.
அலட்டிக் கொள்ளாத நிதான நடிப்பில் ரித்திகா சிங். மாடல் அழகியாக மீனாட்சி சவுத்ரி. கொஞ்ச நேரம் என்றாலும் நம் மனதில் தங்கி விடுகிறார். இவரது தேர்வு இயக்குநர் பாலாஜியின் பலே ஐடியா.
இதில் ஜான்விஜய் & ராதிகா சரத்குமார் ஏன் நடித்தார்கள்.? என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த கதை.
மாடல் போட்டோகிராபர் அர்ஜுன் சிதம்பரம், மாடல் ஏஜன்ட் முரளி சர்மா, மீனாட்சியின் நண்பர் சித்தார்த்தா சங்கர், மேனேஜர் என சொல்லும் கிஷோர் குமார் ஆகியோர் கவனிக்க வைக்கின்றனர்.
விஜய் ஆண்டனி மனைவி.. கல்லூரிக்கு செல்லும் மகள்.. அவளுக்கு நேர்ந்த விபத்து ஆகியவை தேவையில்லாத ஒன்று.
டெக்னீஷியன்கள்…
ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன், இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன், எடிட்டர் ஆர்கே செல்வா ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ‘கொலை’ படத்தின் மேக்கிங்.. கலை வடிவமைப்பு, பின்னணி இசை அனைத்தும் நேர்த்தி.
கொலையாளி யார்.? அவரா.? இவரா.? இவரா.? அவரா.? என பல கோணங்களில் விசாரிக்கும் அணுகுமுறைகள் ஒவ்வொன்றும் ரசிக்க வைக்கிறது.
கொலையாளியை கண்டு பிடிக்கும் வரை நிச்சயமாக இடைவேளை வரை நம்மால் செல்போனை தொட முடியாது. ஆனால் இடைவேளைக்குப் பிறகு சிலவற்றை யூகிக்க முடிவதால் சுவாரஸ்யம் இல்லை. போலீஸ் பேசிக் கொண்டே.. கதை நீண்டு கொண்டே இருப்பதால் போரடிக்கிறது.
ஒரு அப்பார்ட்மெண்டுக்குள் கதைக்களம் சொல்லப்பட்டாலும் கேமரா கோணங்கள் அனைத்தும் பாராட்டுக்குரியது.
டெக்னிக்கலாக ஒரு திரில்லர் கதையை இப்படி கூட சொல்லலாம் என உணர்த்தி இருக்கிறார் பாலாஜி குமார். இவர் ஹாலிவுட் படங்களில் பணிபுரிந்தவர் என்பதால் அந்த சாயலில் சொல்லி இருப்பது சிறப்பு.
இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
ஆக கொலை… டெக்னிக்கல் த்ரில்லர்
Kolai movie review and rating in tamil