First on Net மீண்டும் ரஜினிசம்… பேட்ட விமர்சனம்

First on Net மீண்டும் ரஜினிசம்… பேட்ட விமர்சனம்

நடிகர்கள்: ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், மகேந்திரன், குரு சோமசுந்தரம், மாளவிகா மோகனன், மேகா ஆகாஷ், முனீஷ்காந்த், ஆடுகளம் நரேன், சபீர், விவேக் பிரசன்னா மற்றும் பலர்
இயக்குனர் – கார்த்திக் சுப்பராஜ்
இசை – அனிருத்
ஒளிப்பதிவு – திரு
எடிட்டர் – விவேக் ஹர்ஷன்
பாடல்கள் – விவேக், தனுஷ், கார்த்திக் சுப்பராஜ்
தயாரிப்பு – சன் பிக்சர்ஸ்
பிஆர்ஓ – ரியாஸ் கே அஹ்மது

கதைக்களம்…

ரஜினிகாந்த் (காளி) ஒரு காலேஜ் ஹாஸ்டலுக்கு வார்ட்ணாக வருகிறார்.

வரும்போதே மினிஸ்டர் சிபாரிசுடன் வருவதால் அதே ஹாஸ்டல் சூப்பர் வைசர் முனிஸ்காந்துக்கு டவுட் வருகிறது.

கல்லூரியில் சீனியர் மாணவர் பாபி சிம்ஹா ஜுனியரை ராக்கிங் செய்கிறார்.

இதனை ரஜினி கண்டிக்கிறார். எனவே பாபி சிம்ஹா ரவுடிகளை அனுப்பி ரஜினியை அடிக்க திட்டமிடுகிறார்.

அதற்கு முன்பே வேறு ஒரு கும்பலும் அங்கு ரஜினியை கொல்ல வருகிறது.

அப்படி என்றால் ரஜினி யார்.? அவரின் பின்னணி என்ன? என்பதே பேட்ட ஸ்டோரி..

கேரக்டர்கள்…

ரஜினி ரஜினி ரஜினி… எங்கும் ரஜினி எதிலும் ரஜினி என மாஸ் காட்டியிருக்கிறார். படம் முழுக்க தன் பேட்ட ராஜ்யத்தை அரங்கேற்றியுள்ளார்.

குழந்தைகளா… என ஹாஸ்டல் மாணவர்களை ரஜினி கூப்பிடுவதே கொள்ளை அழகு.

வார்டனாக அன்பு, கண்டிப்பு, வில்லன் இடம் அதிரடி, சிம்ரன் உடன் ரொமான்ஸ் என பிரிந்து மேய்ந்திருக்கிறார் மாஸான ரஜினி. அதே துள்ளல் காமெடி, கூலிங் கிளாஸ் ஸ்டைல் என சிக்ஸர் அடித்துக் கொண்டே இருக்கிறார்.

நவாஸுதீன் & விஜய்சேதுபதி கேங் அட்டாக் பண்ண ஆரம்பிச்சதும் ரஜினி அடுத்த அதிரடி ஆரம்பம்.

சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, என அனைவரும் கச்சிதம்.

படத்தின் வசனங்களும் அனல் பறக்கிறது. ரஜினி பன்ச், ரஜினி ரொமான்ஸ் அனைத்தும் பக்கா.

இத்தனை வருஷம் பொறுத்தாச்சு இனிமே நாம பாய வேண்டிய நேரம் என ரசிகர்களுக்கு அரசியல் பன்ச்சும் இருக்கு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

திரு அவர்களின் ஒளிப்பதிவில் காட்சிகளுக்கு கண்களுக்கு விருந்து. மலை பகுதிகளும் அதனை சார்ந்த அந்த விடுதி காட்சிகளும் அருமை.

அதுபோல் ரஜினி த்ரிஷா சசிகுமார் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் கிராமத்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கும்.
அனிருத்தின் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு பெரிதும் கைகொடுத்துள்ளன.

இளமை திரும்புதே பாடலில் ரொமான்டிக் ரஜினியை பார்க்க முடிகிறது. விவேக் வரிகளில் எஸ்பிபி அனிருத் இணைந்து பாடியுள்ள மரண மாஸ் பாடல் ரசிகர்களின் எவர்கீரின் பாடலாக அமையும்.

கார்த்திக் எழுதி, ஆன்டனி தாசன் பாடியுள்ள ஆஹா கல்யாணம் பாடல் இனி திருவிழாக்களிலும் கேட்கலாம்.

பேட்ட பராக் பாடல்… மாஸ் உச்சம். எனர்ஜியை உண்டாக்கும் பாடல்.

உல்லாலா பாடல் இனிமை. என ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு ரகமாக கொடுத்துள்ளார் அனிருத்.

ஒரு ரஜினி வெறியராக இருந்து பேட்ட படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ். எப்படி எல்லாம் ரஜினியை ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பதை அறிந்து அதை அறுசுவையாக பறிமாறியிருக்கிறார் டைரக்டர்.

கபாலி, காலா வில் வேறு ஒரு ரஜினியை ரசிகர்கள் பார்த்தனர். தற்போது 90களில் பார்த்த மாஸ் ரஜினியை இதில் பார்க்க வைத்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.

பேட்ட.. மீண்டும் ரஜினிசம்… தலைவர் படம் இது

Petta review rating

Comments are closed.

Related News

விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் பாடல்கள்…
...Read More