ஜீவி 2 விமர்சனம் 3.5/5.; தொலையாத தொடர்பியல்

ஜீவி 2 விமர்சனம் 3.5/5.; தொலையாத தொடர்பியல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2019-ம் ஆண்டில் நடிகர் வெற்றி, கருணாகரன், மோனிகா, அஸ்வினி, மைம் கோபி, ரோகினி ஆகியோர் நடிப்பில் வெளியாகி பாராட்டுக்களை பெற்ற படம் ‘ஜீவி.’

தற்போது ‘மாநாடு’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்சன்’ நிறுவனம் ‘ஜீவி 2’ படத்தைத் தயாரித்துள்ளது.

முதல் பாகத்தை இயக்கிய கோபிநாத் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். ஆனால் முதல் பாகத்திற்கு கதை திரைக்கதையை பாபு தமிழ் என்பவர் அமைத்திருந்தார்.

ஜீவி முதல் பாகத்தைப் பார்க்காமல் தவற விட்டவர்களுக்காக இந்த இரண்டாம் பாகத்தின் ஆரம்பத்திலேயே முதல் பாகத்தின் முக்கிய பகுதிகளை திரையிடுகின்றனர் .

எனவே ஜீவி 2 படத்துக்குள் எளிதாக அனைவரும் நுழைந்து விடலாம்.

ஒன்லைன்…

ஜீவி முதல் படத்தின் பாகத்தில் கூறப்பட்ட முக்கோண விதி தொடர்பியல் ஆகியவற்றின் தொடர்ச்சி தான் ஜீவி 2.

தன்னுடைய வாழ்வில் இன்று நடக்கும் ஒவ்வொரு செயலும் ஏதோ ஒரு காலத்தில் யாரோ ஒருவருக்கு அதுபோலவே நடந்து இருக்கலாம்.

அதுவே தொடர்பியல். எனவே அப்போது நடந்தவைகளை இன்று தனக்கு ஏற்றபடி மாற்றி வடிவமைத்து கொள்ளலாம். இது ஒரு முக்கோண விதியாக உருவம் பெறுகிறது.

கதைக்களம்…

நாயகன் வெற்றி, ஹவுஸ் ஓனர் அக்கா ரோகினி. இவரது பார்வையற்ற மகள் அஸ்வினி. இவரின் தாய் மாமன் மைம் கோபி.

கர்மா திருப்பி அடிக்கும்..; சொல்வது ‘ஜீவி-2’ நாயகன் வெற்றி

மைம் கோபி திருமணமாகாதவர். தன் அக்காவின் குடும்பத்திற்காக வாழ்ந்து வருபவர்.

படத்தின் நாயகன் வெற்றியும் தன் அக்காவுக்காக வாழ்ந்து வருபவர். ஒருவேளை தான் திருமணம் செய்து கொண்டால் இந்த தொடர்பியல் முடிவுக்கு வரும் என நம்புகிறார்.

அதன்படி ரோகினி மகள் அஸ்வினியை திருமணம் செய்து கொள்கிறார். ஆனாலும் விதி இவரை விடாமல் துரத்துகிறது. அதில் இருந்து எப்படி மீண்டார் என்பதே மீதிக்கதை.

இதனிடையில் வெற்றியின் நண்பன் ஒருவர் கொல்லப்படுகிறார். மேலும் அஸ்வினியின் கண் பார்வை சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. இது போன்ற சிக்கலில் சிக்கிய வெற்றி என்ன செய்தார் என்பதே கதை.

கேரக்டர்கள்…

படத்தின் நாயகன் வெற்றி கதைக்கு ஏற்றார் போல் யோசித்து யோசித்து செயல்படுகிறார்.

ஆனால் படம் முழுவதும் ஒரேடியாக யோசித்துக் கொண்டே இருப்பதால் நமக்கு போர் அடிக்கிறது. முக பாவனைகளில் கொஞ்சம் மாற்றம் செய்து ரொமான்ஸ் செய்தால் ரசிகர்களை கவரலாம்.

முதல் பாகத்தில் அஸ்வினிக்கு பெரிதாக வேலை இல்லை. ஆனால் இரண்டாம் பாகத்தில் காதல் ஊடல் என கொஞ்சம் இறங்கி அசத்தியிருக்கிறார். அழகான கண்கள் உதடுகள் என ரசிகர்களை வசீகரிக்கிறார். முதல் இரவு செம.

கருணாகரன் அவ்வப்போது கதையோடு காமெடியை செய்து படத்தை நிறுத்தி இருக்கிறார்.

இவர்களுடன் ரோகிணி மைம் கோபி உள்ளிட்டோர் அனுபவ நடிப்பை கொடுத்துள்ளனர்.

வெற்றி நண்பனாக வரும் முனாஃப் சின்ன வேடம் என்றாலும் அசத்தியிருக்கிறார். இவரைச் சுற்றியே கதை நகர்வது குறிப்பிடத்தக்கது

டெக்னீஷியன்கள்..

டி.பிரவீண்குமாரின் ஒளிப்பதிவு வெகு நேர்த்தி. கே.எல்.பிரவீணின் படத்தொகுப்பும் விறுவிறுப்பாக உள்ளது.

கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையும் கதை ஓட்டத்திற்கு ஏற்ப பயணித்துள்ளது.

தமிழ் சினிமாவில் அரிதாகவே இது போன்ற வித்தியாசமான கதைகளை ஒரு சில இயக்குனர்களே கொண்டு வருகிறார்கள். அந்த வரிசையில் இணைந்துள்ள இயக்குனர் கோபிநாத்தை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்

மாறுப்பட்ட கதையை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொன்னதற்காகவே வி.ஜே.கோபிநாத்தை பாராட்டலாம்.

*பெண்களுக்கு மட்டும் ஏண்டா எல்லா பிரச்சினையும் வருகிறது.. ஏன்னா அவங்க பெண்கள்..

பெண்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் கடந்து தான் போக வேண்டும். ஆனால் ஆண்கள் அப்படி அல்ல.”* இது போன்ற வசனங்கள் பெண்களையும் கவரும்.

ஆனால் முதல் பாகத்தில் நமக்கு ஏற்பட்ட ஆர்வம் இந்த படத்தில் சற்று குறைந்துள்ளது. அதற்கு காரணம் முதல் பாகம் வெளிவரும்போது தொடர்பியல் முக்கோணவிதி என்பது நமக்கு புதிதாக சொல்லப்பட்டது..

ஆனால் இந்த பாகத்தில் பழகிவிட்டது. இன்னும் புதிய திருப்புமுனையோடு (ட்விஸ்ட்) ஜீவி 3 வந்தால் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும்.

ஆக.. ஜீவி 2.. தொலையாத தொடர்பியல்

Jiivi 2

Jiivi 2 movie review and rating in tamil

காரைக்காலில் கல்யாணம்..கட்டம் சொல்லுது விமர்சனம் 3.75/5

காரைக்காலில் கல்யாணம்..கட்டம் சொல்லுது விமர்சனம் 3.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்.. ஜாதகத்தை நம்புவதை விட உன்னை நம்பு

அறிமுக இயக்குனர் எஸ் ஜி எழிலன் இயக்கத்தில் தீபா (அக்கா) சங்கர், எழிலன், திடியன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். கட்டம் சொல்லுது”.

‘கதைக்களம்..

படத்தின் முதல் காட்சியிலேயே தன் மகளுக்கு திருமணம் வைத்திருக்கிறேன் என்று சொல்லி மண்டபம் புக்கிங், சமையல் புக்கிங், போட்டோ ஸ்டூடீயோ புக்கிங் என பரபரப்பாக செயல்படுகிறார் தீபா.

மாப்பிள்ளை யார்? என ஊர்காரர்கள் கேட்டால் சொல்ல மறுக்கிறார்.

ஒரு கட்டத்தில் உறவினர் ஒரு வற்புறுத்தி கேட்க….. இனி தான் மாப்பிள்ளை பார்க்கணும் என சொல்கிறார் தீபா.

மாப்பிள்ளை யார்? என்றே தெரியாமல் தீபா அனைத்து திருமண ஏற்பாடுகளையும் செய்வதான் நோக்கம் என்ன? எப்படி கல்யாணம் நடக்கும்? யார் மாப்பிள்ளை? என்ன அவசரம்? என்பதற்கான விடைகளே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்..

தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளை செய்பவர்கள் சிலர் உண்டு. இந்த முறை காரைக்கால்காரர் ஆன இயக்குனர் எஸ் ஜி எழிலன் அதை திறம்பட செய்துள்ளார்.

தீபாவை தவிர அனுபவம் வாய்ந்த நடிகர்கள் எவருமே படத்தில் இல்லை. ஆனால் தன் கதையை நம்பி நல்ல திறமையான கலைஞர்களை வைத்து நல்லதொரு படத்தை கொடுத்துள்ளார்.

படத்தின் கதைப்படி நான்கு நண்பர்களில் ஒருவராக எழிலனும் நடித்துள்ளார்.

சிறிய நடிகர்களை வைத்து ஆங்காங்கே கலகலப்பூட்டி இருக்கிறார் இயக்குனர்.

திரைக்கதை ஒரு வித்தியாசமான உணர்வை நமக்கு நிச்சயம் தரும்.

மிகவும் நாம் பார்த்த சம்பவங்கள்.. அதனிடையில் எதிர்பாராத திருப்பங்கள் என திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளார். முக்கியமாக ஒரு கனவு காட்சி. அதை சொன்னால் சுவாரஸ்யம் இருக்காது.

நிச்சயம் பார்த்தால் நீங்களே பாராட்டுவீர்கள்.

தீபா சங்கர் மிகையில்லாத நடிப்பை கொடுத்துள்ளார்.

விஜய் டிவியில் பிரபலமான காமெடி நடிகர் திடியன், இப்படத்தின் பலமாக உயர்ந்துள்ளார். இவரது டைமிங்க் காமெடி இனி இவருக்கு பல வாய்ப்புகளை உருவாக்கி தரும் என நம்பலாம்.

சின்னத்துரை & சகுந்தலா இருவரும் நல்ல தேர்வு. அப்பா & அம்மா கேரக்டர்களில் கலக்கியுள்ளனர்.

முழுக்க முழுக்க காரைக்காலில் இந்த படத்தை படமாக்கியள்ளனர். காரைக்காலின் அழகு கண்களை கவரும் விதத்தில் உள்ளது. ஒளிப்பதிவாளர் சபரீஸ்க்கு பாராட்டுக்களை அள்ளிக் கொட்டலாம்.

இசையை தன் ட்ராக்கில் ஓட்டாமல் கதையோடு ஒட்ட வைத்துள்ளார் இசையமைப்பாளர் தமீம் அன்சாரி.

விஜய் வேலுக்குட்டி என்பவரின் எடிட்டிங் பாராட்டும் வகையில் உள்ளது.

ஆக… வசனங்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். சில இடங்களில் மட்டுமே ரசிக்க வைக்கிறது. மேலும் படத்தின் மேக்கிங் இன்னும் சிறப்பாக இருந்தால் இந்த கட்டம் சொல்லும் இன்னும் ஒரு படி கட்டம் மேலே சென்றிருக்கும். ஆனாலும் புதிய முயற்சியை பாராட்டலாம்.

இரண்டாம் பாதி முழுவதும் சிரிக்கவும் அதே சமயம் நம்மை சிந்திக்கவும் வைத்துள்ளார்.

ஜாதகத்தை நம்புவதை விட உன்னை நம்பு. உன் வாழ்க்கை உன் கையில் மட்டுமே. என நிறைவு செய்துள்ளார் இயக்குனர் எழிலன்.

Kattam Solluthu movie review and rating in Tamil

விருமன் விமர்சனம் 3.5/5.; கிராமத்து கிடா விருந்து

விருமன் விமர்சனம் 3.5/5.; கிராமத்து கிடா விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

தன் தாயின் மரணத்திற்கு தன் தந்தையே காரணமானதால் அவரை பழிவாங்க மல்லுக்கட்டும் மகன் விருமன்.

கதைக்களம்…

ஊர் தாசில்தார் பிரகாஷ் ராஜ். இவருக்கு நான்கு மகன்கள். இதில் கடைசி மகன் கார்த்தி.. அப்பாவை வெறுக்கும் கார்த்தி தன் தாய் மாமன் ராஜ்கிரண் உடன் வசிக்கிறார்.

பணத்தாசை பிடித்த தாசில்தார் தன் குடும்பத்தையும் ஊரையும் அடிமையாக வைக்க நினைக்கிறார்.

இதனால் குடும்பச் சொத்து உறவில் பிரச்சினை ஏற்படுகிறது. இறுதியில் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

கிராமத்து நையாண்டி, அதிரடி ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார் விருமன் கார்த்தி.

முதல் படம் என்று தெரியாத அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி. குத்தாட்டம் போட்டும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கிறார். கிராமத்து ரொமான்ஸ் காட்சிகளிலும் சிறப்பு.

அதிகார திமிர் பிடித்த தாசில்தார் கேரக்டரில் பிரகாஷ் ராஜ். கம்பீரம்.

ராஜ்கிரண், சூரி, வடிவுக்கரசி, ஆர்கே சுரேஷ், சரண்யா, இளவரசு, சிங்கம் புலி, மனோஜ், விஎம். சுந்தர், பாண்டியம்மா, அருந்ததி, மைனா, கருணாஸ், வையாபுரி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இவர்கள் படத்தின் கதையோட்டத்திற்கு உதவியுள்ளனர்.

ஆணவ அப்பத்தா வடிவுக்கரசி திடீரென மாறி அட்வைஸ் செய்வது ஓவர்.

டெக்னிஷியன்கள்…

யுவன் இசையில் இளையராஜா MP பாடிய பாடல் மனதிற்கு இதம்.. அதுபோல ‘கஞ்சா பூ கண்ணாலே..’ பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும். அந்தப் பாடலில் கார்த்தி அதிதி கெமிஸ்ட்ரி சூப்பர். பின்னணி இசையிலும் அசத்தல்.

அதிதி பாடிய ‘மதுர வீரன் அழகுல..’ பாடல் சிறப்பு. ஒளிப்பதிவும் ஓகே. கிராமத்து அழகையும் உறவுகளையும் அங்காளி பங்காளிகளையும் அழகாக படம் எடுத்துக் காட்டி இருக்கிறார்.

முத்தையாவின் வழக்கமான கிராமத்து மசாலா.. மண் மணம் மாறாமல் விருமன் விருந்து கொடுத்துள்ளார்.

பெரும்பாலும் முத்தையா படங்களில் வில்லன் வேறொரு நபராக இருப்பார். ஆனால் இதில் மகனுக்கு தந்தையே வில்லனாக இருப்பது சுவாரசியம். அதற்கான காரணத்தையும் கொடுத்துள்ளார். கிளைமாக்சில் திடீரென மனம் மாறுவது.??!!

ஒரு காட்சியில் எம்எல்ஏ மகனான அரசு பதவியில் இருக்கும் ஒருவரை கொல்ல ஒரு கூட்டம் திட்டமிடுகிறது. பதவியில் இருப்பவர்களை கொல்ல பார்கிறாயா.? என கார்த்தி அவர்களை அடிக்கிறார். (எம்எல்ஏ கூட கார்த்தியிடம் லஞ்சம் வாங்குவதாக காட்சியும் உண்டு. அப்போ அவர் நல்லவரா?).

ஆனால் அதற்கு முந்தைய காட்சிகளில் தன் தந்தை தாசில்தாரை அடித்த ஆர்கே சுரேஷ் க்கு மோதிரம் அணிவிக்கிறார்.. அதுதான் புரியவில்லை. இதுபோல சில லாஜிக் குறைகள் இருந்தாலும் ஒரு தந்தை நேர்மையான மனிதராக இல்லாவிட்டால் அந்த குடும்பம் எப்படி சிதைக்கப்படும்.. அந்த குடும்ப உறவுகள் எப்படி பாதிக்கப்படும்.. அடுத்த தலைமுறை எப்படி பயணிக்கும் என்பதை அழகாக காட்டியிருக்கிறார்.

ஒரு குடும்பத் தலைவன் செய்யும் குற்றத்தால் அந்த குடும்பமே தலை குனிந்து நிற்பதையும் தன் பாணியில் காட்டியிருக்கும் முத்தையாவிற்கு முத்தான பாராட்டுக்கள்..

ஆக.. இந்த ‘விருமன்’.. கிராமத்து கிடா விருந்து

Viruman Stills

Viruman movie review and rating in tamil

கடாவர் விமர்சனம் 3.5/5.; கவனிக்கவும்

கடாவர் விமர்சனம் 3.5/5.; கவனிக்கவும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமலா பால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் ‘கடாவர்’. இதன் மூலம் முதன்முறையாக தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார் நடிகை அமலாபால்.

அறிமுக இயக்குநர் அனூப் எஸ்.பணிக்கர் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் அமலா பால், ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன் (ஆதித் அருண்), வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ் நடிகைகள் அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி இன்று முதல் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.

ஒன்லைன்…

மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் ஒரு சொல் ‘கடாவர்’. அதன் பொருள், மருத்துவர்கள் செயல்முறை படிப்பிற்காக பயன்படுத்தும் உயிரற்ற மனித உடல்.

கதைக்களம்…

ஒரு நாள் காருக்குள் எரிந்த நிலையில் உள்ள ஒரு சடலத்தை கண்டுபிடிக்கின்றனர் போலீசார்.

அந்த கொலை வழக்கு ஒன்றினை போலீஸ் ஹரீஷ் உத்தமன் விசாரிக்கிறார்.. இதில் தடயவியல் துறை நிபுணராக பத்ரா (அமலா) இணைகிறார். எப்படி கண்டுபிடித்தனர் என்பதே கதை.

அமலாபால் (Forensic pathology) தடயவியல் நோயியலில் சிறந்த மருத்துவராகவும், கிரிமினாலஜி படித்த போலீஸாகவும் காட்டப்படுகிறார்.

கேரக்டர்கள்…

வித்தியாசமான தோற்றம் வித்தியாசமான நடிப்பு என அசத்தியுள்ளார் அமலாபால்.. வழக்கமான நாயகி டூயட் என்று இல்லாமல் ஒரு வித்தியாசமான கதைக்களத்தை ஒரு தயாரிப்பாளராகவும் எடுக்க முன் வந்துள்ளதை பாராட்டியே ஆக வேண்டும்.

இதுவரை இல்லாத.. இதுவரை கொடுக்காத நடிப்பை கொடுத்துள்ளார் அதுல்யா ரவி. சின்ன வேடம் என்றாலும் அதற்காக மெனக்கெட்டுள்ளார்.

அதுபோலவே ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ரித்விகா, என எல்லோருமே தங்கள் நடிப்பில் கச்சிதம். அதுவும் ரித்விகாவுக்கு அப்பாவாக நடிக்க ஒப்புக்கொண்ட வினோத்தை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

டெக்னீஷியன்கள்…

அபிலாஷ் பிள்ளை எழுதிய கதைக்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரஞ்சின் ராஜ் இசையமைத்திருக்கிறார். ஷான் லோகேஷ் பட தொகுப்பாளராக பணியாற்றிருக்கிறார். ஒளிப்பதிவும், பின்னணி இசையும் படத்திற்கு பொருத்தம்.

மருத்தவ கல்லூரியில் மனித உடல்களை வைத்து நடத்தப்படும் பயிற்சி வகுப்பிற்கு சென்று வந்தது போல உணர்வு அடிக்கடி ஏற்படுகிறது.

ஆனால் மார்ச்சுவரியிலேயே நீண்ட நேரம் அமலா இருப்பதால் அவர் அங்கேயே சாப்பிடுவதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆரம்பம் முதல் இறுதிவரை பல ட்விஸ்ட்டுகளுடன் இந்த சஸ்பென்ஸ் கதை தொடர்கிறது. எனவே சஸ்பென்ஸ், த்ரில்லர் வகை பட விரும்பிகளை இந்த படம் கவரும்.

Cadaver movie review and rating in tamil

எமோஜி EMOJI விமர்சனம் 3.75/5.; Darling Devika.; Lovable Lust.!

எமோஜி EMOJI விமர்சனம் 3.75/5.; Darling Devika.; Lovable Lust.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மகத் ராகவேந்திரா, தேவிகா சதீஷ், மானசா செளத்ரி மற்றும் பலர் நடிக்க ஷென் எஸ்.ரெங்கசாமி இயக்கியுள்ளார் . ரமணா ஆர்ட்ஸ் சார்பில் ஏ .எம். சம்பத் குமார் தயாரித்துள்ளார். ஆஹா ஒரிஜினல் ஓடிடி வெளியிடுகிறது.

ஒன்லைன்…

காதல் இல்லையேல் சாதல்… அது ஒரு காலம்.. இப்போ 2K KIDS காலம்.. ஒரு காதல் இல்லையேல் அடுத்த காதல். இதுபோன்ற காதல்களை கூறும் காம உணர்ச்சிகரமான படைப்பே இந்த எமோஜி. படம் 18+

கதைக்களம்…

மானசா & மகத் இருவரும் காதலர்கள். லவ்வோ லவ்… அப்படியொரு லவ்.. ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக மகத்தை பிரிகிறார். இதற்கு நாமே ஒத்துக் கொள்ளும் வகையில் ஒரு காரணத்தை சொல்கிறார்.

இவர்களின் எதிர் ப்ளாட்டில் தேவிகா & காதலன். அவர்களை போல லிவ்விங் டுகெதரில் வாழும் இவர்களும் ஒரு நாள் ப்ரேக் அப்பில் விழுகின்றனர். இதற்கும் நியாயமான ஒரு காரணம் சொல்லப்படுகிறது.

பின்னர் அடுத்த காதல்.. அதாவது.. இரண்டு ஜோடிகளில் பிரிந்த ஒரு காதலனும் பிரிந்த ஒரு காதலியும் ஒன்று சேர்கிறார்கள். மகத் & தேவிகா காதலிக்க தொடங்குகின்றனர். இந்த காதல் என்ன ஆனது.? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

அலட்டிக் கொள்ளாத ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பில் மகத். யதார்த்த நாயகனாக வலம் வருகிறார். நிறைய காட்சிகளில் சிம்புவை நினைவுப் படுத்துகிறார். அவரின் குரலும் உடல் மொழியும் சிம்பு போலவே பல காட்சிகளில் உள்ளது.

ஒருவேளை இந்த படத்தை சிம்பு நடித்திருந்தால் இந்த கேரக்டருக்கு 100 சதவீதம் பொருத்தமாக இருந்திருப்பார். இந்த படம் வேற லெவலில் பேசப்பட்டு இருக்கும்.

தேவிகா & மானசா இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர். ரொமான்ஸிலும் சரி கிளாமரிலும் சரி அடடடா என்ன ஒரு அழகான நடிப்பை கொடுத்துள்ளனர் என்று கூறலாம்.

தேவிகா ஒரு படி அதிகமாகவே ஸ்கோர் செய்கிறார். அழகான இதழ்கள்.. கண்கள்… க்யூட்டான எக்ஸ்பிரசன்ஸ்… என வெளுத்து கட்டிவிட்டார். நிற்கும்போது காதலன் தோளின் மேல் தன் காலை தூக்கி வைப்பது.. திடீரென ஓடி வந்து இடுப்பில் ஏறி கொள்வது.. என ரொமான்டிக் வெரைட்டி காட்டி நம்மை மிரட்டி இருக்கிறார் தேவிகா..

இவர்களுடன் சின்ன சின்ன கேரக்டர்களில் வரும் பெற்றோர்கள் & நண்பர்கள் என அனைவரும் படத்தின் கதை ஓட்டத்திற்கு பொருத்தமான நடிப்பை கொடுத்துள்ளனர். இவர்களின் நடிப்பும் பேசப்படும் வகையில் சிறப்பாக உள்ளது.

டெக்னிஷியன்கள்…

இந்தக் காதல்.. அந்தக் காதல்.. இவர்களின் காமம்.. அவர்கள் காமம் என கலந்து காட்டப்பட்டிருந்தாலும் இன்றைய தொழில்நுட்ப காலத்தில் உள்ள காதலர்களின் முடிவையே காட்சிகளில் காட்டியிருக்கிறார் டைரக்டர்.

படிப்பு முடித்தவுடன் கை நிறைய வருமானம் வருவதால் இன்றைய இளைஞர்கள் எடுக்கும் திடீர் திடீர் முடிவுகளே இதற்கான காரணம். ஒரு வேலையை உதறிவிட்டு அடுத்த வேலைக்கு செல்வது போல ஒரு காதலை உதறிவிட்டு அடுத்த காதலை தேட ஆரம்பிக்கின்றனர்.

இது ஓ டி டிக்கு தயாரான படம் என்றாலும் ஒரு சினிமாவுக்கு நிகராக காட்சி அமைப்புகளும் பாடல் காட்சிகளும் படத்தின் ஒளிப்பதிவும் ஈர்க்கின்றன.

சென் ரங்கசாமி் இயக்கியுள்ளார்.

DIRECTOR
SEN.S. Rangasamy சசன் .S.ரங்கசாமி
PRODUCER
A.M Sampath Kumar A.M. சம்பத்குமார்
DOP
Jalandhar Vasan ஜலந்தர் வாசன்
MUSIC DIRECTOR
Sanath Bharadwaj

7வது எபிசோடில் காதலர்கள் எடுக்கும் முடிவு விபரீதம் என்றாலும் அதற்கான காரணம் தெளிவாக காட்டப்படவில்லை. பொருத்தமான காரணமாகவும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஏழு எபிசோடுகள் இருக்கின்றன. ஆனால் இரண்டு எபிசோடுகள் படத்தின் நீளத்தை அதிகரித்துள்ளன. எடிட்டர் கொஞ்சம் வெட்டி இருக்கலாம்.

ஆக இந்த எமோஜி… Darling Devika.; Lovable Lust.!

Emoji web series review and rating in Tamil

லால் சிங் சத்தா விமர்சனம்..3.75/5.; புயல் தேசத்தில் வெண் சிறகு

லால் சிங் சத்தா விமர்சனம்..3.75/5.; புயல் தேசத்தில் வெண் சிறகு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

ஹாலிவுட்டில் க்ளாசிக் திரைப்படம் என புகழப்படும் ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் அதிகாரபூர்வ தழுவல். ஆனாலும் சில காட்சிகளும், திரைக்கதையும் மாற்றப்பட்டுள்ளது.

கதைக்களம்..

ஒரு நீண்ட தாடியுடன் முதிர்ச்சியான ஒருவரைப் போல ஒரு ரயிலில் பயணிக்கிறார் அமீர்கான்.. அங்குள்ள சகப் பயணிகளிடம் தன் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்வையும் பகிர்ந்து கொள்கிறார்.

தன் குழந்தை பருவம் முதல் தான் தொழிலதிபரான காலம் வரை அவர் சொல்லும் ஒவ்வொரு காட்சிகளும் ஒவ்வொரு நினைவுகளும் நம்மை முகம் மலரச் செய்கின்றன.

கேரக்டர்கள்…

அமீர்கான்.. அவரின் பள்ளி வாழ்க்கை.. ராணுவ வாழ்க்கை.. சந்தித்த நண்பர்கள்.. உயிருக்கு உயிரான காதலி.. தன் பாசமான அம்மா.. தன் நண்பர்கள்… என தன் கதைக்கேற்ப அவரையும் நம்முடன் அழைத்துச் செல்கிறார்.

கிட்டத்தட்ட 15 வயது முதல் ஒரு 45 வயது வரை தன் நடிப்பையும் தன் உடலையும் அதற்கு ஏற்ப வடிவமைத்து ஒரு மிகச்சிறந்த நடிகராக தன்னை உருவகப்படுத்தி உள்ளார் அமீர்கான். ஆனால், ‘பிகே’ படத்தின் உடல்மொழி அவ்வப்போது எட்டிப்பார்க்கிறது. அதை தவிர்க்க முடியவில்லை.

ஒரு நடிகனுக்கு உடல் மொழி எவ்வளவு முக்கியம் என்பதை ஒவ்வொரு காட்சிகளிலும் உணர்ந்து நடித்துக் காட்டி இருக்கிறார்.

நாக சைதன்யா சிறிது நேரமே வந்தாலும், நடிப்புக்காக முழு உழைப்பைக் கொடுத்திருக்கிறார். இவரின் முடிவு எதிர்பாராத ஒன்று. ஆனால் இவரின் கிராமத்து வாழ்க்கை.. அதற்கான வீர மரண மரியாதை ஆகிய காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன.

லெஃப்டினென்ட் ஜெனரலாக நடித்திருக்கும் மானவ் விஜ் அசத்தல். அதுபோல நடிகர் ஷாருக்கானின் கெஸ்ட் ரோல் அப்ளாஸ்.

கரீனா கபூர், மோனா சிங் இருவரின் நடிப்பும் போற்றத்தக்கது. முக்கியமாக அமீர்கான் கரீனா இருவரின் குழந்தை பருவ நட்பு முதல் அவர்களின் முதிர்ச்சியான காலம் வரை காட்டப்படும் அவர்களின் அழகான அன்பும் காதலும் பயணிப்பது அழகு.

ஓடு லால் ஓடு… என்ற காட்சிகளும் ஆங்காங்கே சொல்லப்பட்டுள்ள சின்ன சின்ன நகைச்சுவைகளும் நம்மை ரசிக்க வைக்கின்றன.

டெக்னீசியன்கள்…

அதுல் குல்கர்னி திரைக்கதை எழுத, அத்வைத் சந்தன் படத்தை இயக்கியுள்ளார்.

நாம் குழந்தையாக இருக்கும் போது சில வன்முறைகளை நமக்கு பெற்றோர்கள் சொல்லும் போது அது வைரஸ் என்று சொல்லுவர். அது ஒரு குழந்தையின் மனதில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை காட்சிகளில் அழகாக சொல்லி உள்ளனர்.

மத மோதல்களையும், வன்முறைகளையும், உயிரைக் கொல்லும் வைரஸுடன் ஒப்பிட்டுள்ளனர்.

பிரித்தமின் பின்னனி இசையும் பாடல்களும் சிறப்பு. எமோஷனல் காட்சிகளில் மனதை வருடும் இசையை கொடுத்துள்ளார்.

ஒரு ஹீரோவை படம் முழுக்க லூசு பைத்தியம் என்கின்றனர்.. ஆனால் அதை சிரித்தவாறு அவர் கடந்து செல்வதை.. இங்கு உள்ள தமிழ் ஹீரோக்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.

படத்தில் இறுதியாக காட்டப்படும் வெண் சிறகு போல நம்மை அழகாக வருடி செல்கிறது இந்த லால் சிங் சத்தா.

Laal Singh Chaddha Stills

Laal Singh Chaddha movie review and rating in tamil

More Articles
Follows