தமிழரசன் விமர்சனம் 3/5.. த(ங்)கப்பன்

தமிழரசன் விமர்சனம் 3/5.. த(ங்)கப்பன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

விஜய் ஆண்டனி ஒரு நேர்மையான போலீஸ். இவரின் மனைவி ரம்யா நம்பீசன். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன்.

சந்தோஷமான குடும்பமாக இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் திடீரென அவரது மகனுக்கு இதயத்தில் பிரச்சனை ஏற்படுகிறது.

உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் என்கின்றனர் தனியார் மருத்துவமனையினர்.

ஆனால் அதற்கு ரூ 70 லட்சம் ஆகும் என்கின்றனர். தன்னால் அவ்வளவு பணம் இப்போது தர முடியாது ஆனால் நிச்சயம் தந்து விடுவேன் என்கிறார் விஜய் ஆண்டனி.

முதலில் 20 லட்சம் பணத்தை கட்ட சொல்கின்றனர். அப்போதுதான் மகன் பெயரை சிகிச்சை பிரிவு பட்டியலில் இணைக்க முடியும் என்கின்றனர் டாக்டர்கள்.

விஜய் ஆண்டனி 20 லட்சம் பணத்தை கட்டிய நிலையில் திடீரென மத்திய அமைச்சரின் பெயரை இவரது மகன் பெயருக்கு முன்னால் வரிசை பட்டியலில் இணைக்கின்றனர்.

இதனால் கடுப்பாகும் விஜய் ஆண்டனி துப்பாக்கி எடுத்துக்கொண்டு மருத்துவமனையை தன்னுடைய கண்ட்ரோலில் கொண்டு வருகிறார்.

மத்திய அமைச்சரின் பெயரை நீக்கிவிட்டு சிகிச்சை பட்டியில் தன் மகன் பெயரை இணைக்க வேண்டும் என பெரிய டாக்டர் சுரேஷ் கோபியை மிரட்டுகிறார்.

இதனால் பிரச்சனை உருவாகிறது.. அதன் பிறகு என்ன ஆனது.? விஜய் ஆண்டனி மகனுக்கு சிகிச்சை நடைபெற்றதா? மத்திய அமைச்சர் என்ன செய்தார்? மருத்துவர்கள் குழு & நோயாளிகள் & அங்கிருந்த பொது மக்கள் என்ன செய்தனர்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

விஜய் ஆண்டனி ( தமிழரசன் ),
ரம்யா நம்பீசன் ( லீனா ),
சுரேஷ்கோபி, ( முருகானந்தம் ), ராதாரவி ( சுகுமாரன் நம்பியார் ),
சோனு சூட் ( ராணா பிரதாப் சிங் ), ஒய்.ஜி.மகேந்திரன் ( அர்த்தனாரி ) ,
யோகிபாபு , ரோபோ சங்கர் (நம்பிராஜன் ), கஸ்தூரி ( நளினி ), சங்கீதா ( பத்மா சீனிவாசன் ), சாயாசிங், மதுமிதா கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன், கும்கி அஸ்வின்,மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்த், மாஸ்டர் பிரணவ் (கேப்டன் பிரபாகரன் ) இயக்குனர் மோகன் ராஜாவின் மகன்.

நிறைய நட்சத்திரங்கள் நடித்திருப்பதால் அவர்களின் பெயர்களை மேலே கொடுத்துள்ளோம்.

விஜய் ஆண்டனி பற்றி யோகிபாபு ஒரு காட்சியில் சொல்வார்.. அவர் எந்த கெட்ட போட்டு வந்தாலும் ஒரே ஒரு ரியாக்ஷன் தான் கொடுப்பார்.. அதற்கு ஏற்ற போல பெரிதாக எந்த முகபாவனையையும் விஜய் காட்டவில்லை.

விஜய் ஆண்டனி மகன் ஐசியூ வில் இருக்கும்போதும் விஜய் ஆண்டனிக்கும் ரம்யாவுக்கும் பெரிய சோகமே இல்லை போல. நார்மலாகவே இருக்கிறார்கள்..

யோகி பாபு – கதிர் – கும்கி அஸ்வின் காமெடி என்ற பெயரில் கொஞ்சம் சிரிக்க வைக்கின்றனர்.

சுரேஷ் கோபிக்கு முதல் பாதியில் பெரிதாக வேலை இல்லை என்றாலும் கிளைமாக்ஸ் காட்சியில் அசத்தியிருக்கிறார்.

ஒய் ஜி மகேந்திரன் சங்கீதா சாயாசிங் சென்ராயன், கஸ்தூரி, ரோபோ சங்கர், சோனுசூட், ராதாரவி, ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்டோர. தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.

டெக்னீஷியன்கள்…

ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர்
இசை – இளையராஜா
பாடல்கள் – பழனிபாரதி, A.R.P ஜெய்ராம்
கலை – மிலன்
ஸ்டண்ட் – அனல் அரசு
எடிட்டிங் – புவன் சந்திரசேகர்
நடனம் – பிருந்தா, சதீஷ்.
தயாரிப்பு – கெளசல்யா ராணி
கதை திரைக்கதை வசனம் இயக்கம் – பாபு யோகேஸ்வரன்

ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். அவரது கை வண்ணத்தில் காட்சிகள் அனைத்தும் நேர்த்தியாக உள்ளது.

பின்னனி இசையில் மிரட்டி இருக்கிறார் இளையராஜா. ஆனால் பாடல்கள் கவரவில்லை. இளையராஜா குரலில் ஒலிக்கும் ஒரு காதல் பாட்டு கொஞ்சம் ரசிக்க வைக்கிறது.

தந்தை மகன் பாச போராட்டத்தை அழகாக எடுத்து சொல்லி இருக்கிறார் இயக்குனர் பாபு யோகேஸ்வரன். பெற்ற பிள்ளைக்காக எதையும் செய்ய துணியும் ஒரு தந்தையை நம் கண் முன் நிறுத்தி இருக்கிறார்.

ஆக தமிழரசன்.. த(ங்)கப்பன்

Tamilarasan movie review and rating in Tamil

யானை முகத்தான் விமர்சனம்.; கடவுள் எங்கே.?

யானை முகத்தான் விமர்சனம்.; கடவுள் எங்கே.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் ‘லால் பகதூர் ஷாஸ்த்தி’, ‘வரி குழியிலே கொலபாதகம்’, ‘இன்னு முதல்’ என மூன்று ஹிட் படங்கள் டைரக்ட் செய்தவர் ரெஜிஷ் மிதிளா.

இவர் ‘யானை முகத்தான்’ படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.

இதில் விநாயகர் வேடத்தில் நடித்துள்ளார் யோகி பாபு. இவருடன் ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன், ஹரீஷ் பேரடி, குளப்புள்ளி லீலா ( ‘மருது’ பாட்டி ), நாகவிஷால் ஆகியோர் நடித்துள்ளனர்.

கதைக்களம்…

ஆரம்பக் காட்சியில்.. ஒரு புதையலை ஒரு மரத்தடியில் புதைத்து வைத்து அதன் மேல் ஒரு கல்லை நட்டு வைக்கிறார் ஒருவர்.

கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கு பிறகு அங்கே ஒரு கோயில் உருவாகிறது. அதன் அருகே இருக்கும் ஒரு டீக்கடையில் யோகி பாபு அமர்ந்து கொண்டு ஒரு சிறுவனுக்கு கதை சொல்கிறார்.. இப்படியாக ஆரம்பமாகிறது

ஆட்டோ டிரைவர் ரமேஷ் திலக்.. ஆட்டோ என்றாலே அவர் கண்டிப்பாக ரஜினி ரசிகன் தான்.. ஊருக்குள் பல பேரிடம் கடனை வாங்கி திருப்பித் தராமல் இழுத்தடிப்பவர் ரமேஷ் திலக்.. நிறைய பொய்களை சொல்லி ஏமாற்றுபவர்.

ஆனாலும் இவருக்கு விநாயகர் பக்தி அதிகம். கடன் தொல்லையால் அவதிப்படும் ரமேஷ் திலக்கிற்கு சில தினங்களில் திடீரென விநாயகர் தென்படுவதில்லை. ஆனால் ஊர்வசி & கருணாகரன் கண்களுக்கு தெரிகிறார்.

ஒரு கட்டத்தில் யோகிபாபு விநாயகராக வருகிறார்.. நீ நல்லவனாக மாறினால் மட்டும்தான் இனி நான் உன் கண்களுக்கு தென்படுவேன் என்கிறார்.

கடவுள் அவனின் குறைகளை தீர்த்தாரா.? இறுதியில் என்ன ஆனது? கடவுள் இருக்கிறாரா? என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்கள்….

கதையின் நாயகன் ரமேஷ் திலக் என்றாலும் முதல் பாதியில் அவரது கேரக்டர் எந்தவிதமான ஈர்ப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் இரண்டாம் பாதியில் அதை சரி செய்துள்ளார்.

கடவுளாக வந்து பல கேள்விகளுக்கு விடை சொல்லி இருக்கிறார் யோகி பாபு.. ஜாதியை கடவுள் உருவாக்கவில்லை. உலகத்தில் எத்தனை ஜாதி இருக்கிறதோ அத்தனை கடவுள்கள் இருக்கிறார்கள் என்கிறார்.

மக்களிடம் கடவுள் எதையும் எதிர்பார்க்கவில்லை.. அதே சமயம் எல்லாம் விதிப்படிதான் நடக்கும்.. அதை கடவுளால் கூட மாற்ற முடியாது என்கிறார் யோகி பாபு.

ஊர்வசி கேரக்டர் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.. ஏனென்றால் படத்தில் காட்டப்படும் ஒரே ஒரு பெண் அவர் மட்டும்தான். ஆனால் இது போன்ற ஒரு நல்ல ஹவுஸ் ஓனர் யாருக்கும் கிடைக்க மாட்டார்கள்.

நாயகனுக்கு கடன் கொடுத்த ஹரிஷ் பெர்ரடி மிகவும் சாந்தமாக தன் பணத்தை திருப்பி கேட்பது எல்லாம் நம்பும் படியாக.

நட்சத்திர அந்தஸ்து உள்ள கேரக்டர் தேவை என்பதால் கருணாகரனை படத்தில் வைத்துள்ளார்கள் போல அவருடைய கேரக்டர் பெரிதாக ஈர்க்கவில்லை.

ஆனால் வட இந்திய தாத்தாவாக வருபவரின் கேரக்டர் நம்மை கவர்கிறது.

குளப்புள்ளி லீலா கேரக்டர் கடுப்பு.. வீண்..

டெக்னீஷியன்கள்…

எழுத்து, இயக்கம் : ரெஜிஷ் மிதிலா
தயாரிப்பாளர்கள்: ரெஜிஷ் மிதிலா, லிஜோ ஜேம்ஸ்:
தயாரிப்பு நிறுவனம்: தி கிரேட் இந்தியன் சினிமாஸ்
ஒளிப்பதிவு : கார்த்திக்Sநாயர்
படத்தொகுப்பு : சைலோ
இசையமைப்பாளர்: பரத் சங்கர்

கஷ்டத்துல உதவாத கடவுள் என்ன கடவுள்?” போதையில் வண்டி ஓட்டுவது.. குற்றம் செய்வது உள்ளிட்டோரை கடவுள் தண்டிப்பார் என்பது போலவும் வசனங்கள் உள்ளது.. ஆனால் போதையில் வண்டி ஓட்டி பலரை கொன்றவர்களுக்கு தண்டனை கிடைத்திருக்கிறதா என்பதற்கு கடவுள் பதில் சொல்வாரா.??

நம்மிள் எல்லோருக்குள்ளயும் ஒரு விஷம் இருக்கு…அதுதான் சுயநலம்..” போன்ற வசனங்கள் ஆங்காங்கே ஈர்க்கின்றன.

இறைவன் வெளியே எங்கேயும் இல்லை.. அவர் உனக்குள் இருக்கிறார்.. நீ நேர்மையாக நடந்து கொண்டால் அவர் உனக்கு தென்படுவார்.. என்கிறார் இயக்குனர்

கடவுள் வரும் காட்சிகளுக்கு பரத் சங்கர் பில்டப் இசையை கொடுத்துள்ளார்.

படத்தின் டைட்டில் கார்டு ரசிகர்களை நிச்சயமாக கவரும்.. ஒளிப்பதிவு இசை எடிட்டர் தயாரிப்பாளர் என ஒவ்வொரு பெயரும் வரும்போது அதற்கு ஏற்ப டைட்டில் கார்டு காட்டப்படுவது சிறப்பு.. பொதுவாக இதுபோன்ற கிரியேட்டிவ் மலையாள இயக்குனர்களுக்கு கைவந்த கலை.

ஒளிப்பதிவு சிறப்பு.. ஆனால் ஐந்து கேரக்டர்களை மட்டுமே மீண்டும் மீண்டும் காண்பிப்பது ரொம்ப போர் அடிக்கிறது.

யோகி பாபு, ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன், வட இந்திய தாத்தா, சிறுவன், டீக்கடைகாரர் எனப் படத்தில் மொத்தம் 7-8 கேரக்டர்களை வைத்து யானை முகத்தானை இயக்கி இருக்கிறார்.

படத்திற்கு கொஞ்சம் கலகலப்பு ஊட்டி.. ஒரு ஹீரோயினை கொடுத்திருந்தால் இன்னும் சுவாரசியம் கூடியிருக்கும்.

இதே படத்தின் மலையாள பதிப்பில் விநாயகருக்கு பதிலாக கிருஷ்ணர் கடவுளை காட்டி இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.. ஆக மாநிலத்திற்கு மாநிலம் கடவுள் வேறுபடுகிறார் என்பதுதான் உண்மை..

ஆக யானை முகத்தான்.. உனக்குள் கடவுள்

Yaanai Mugathaan movie review and rating in Tamil

தெய்வமச்சான் விமர்சனம் 3.25/5..; மகிழ்ச்சி மச்சான்

தெய்வமச்சான் விமர்சனம் 3.25/5..; மகிழ்ச்சி மச்சான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மார்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் நடிகர்கள் விமல், நேகா, அனிதா சம்பத், பாலா சரவணன், ஆடுகளம் நரேன், பாண்டியராஜன், தீபா, வேல ராமமூர்த்தி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது ‘தெய்வ மச்சான்’.

கதைக்களம்..

சிறு வயது முதலே விமல் மற்றும் பால சரவணன் இருவரும் பங்காளி முறை. விமலின் தந்தை பாண்டியராஜன். விமல் தூங்கும் போது சில தினங்களில் எதிர்பாராத விதமாக ஒரு கனவு வரும்.

அந்த கனவில் வேல ராமமூர்த்தி வருவார். அவர் குறி சொல்லுவார். இவர் இறந்து விடுவார்.. அவர் இறந்து விடுவார்.. என்பார்.. அவர்களும் ஓரிரு நாட்களில் இறப்பர். விமலின் அம்மா இறந்துவிடுவார் என்பார். அம்மாவும் இறந்துவிடுவார்.

அது ஒரு புறமிருக்க.. தன் தங்கை அனிதாவிற்கு மாப்பிள்ளைகளை தேடிக் கொண்டிருப்பார் விமல்.. ஒவ்வொரு வரனும் ஒவ்வொரு காரணத்தால் தட்டிக் கொண்டே செல்லும்.. ஒரு கட்டத்தில் நல்ல வரன் கிடைக்க பேசி முடிப்பார் விமல்.

அன்று இரவு தூங்கும் போது உன் தங்கைக்கு கல்யாணம் நடைபெற்ற 2வது நாளில்.. உன் தங்கை புருஷன் மச்சான் இறந்து விடுவார் என்பார்.

இதனையடுத்து குழப்பமான விமல் வேறு வழியில்லாமல் தன் மச்சான் எந்த வித பிரச்சனைக்கும் ஆளாகாமல் பார்த்துக் கொள்வார். மச்சானை காப்பாற்ற போராடுவார்.

இறுதியில் என்ன ஆனது.? தன் தங்கை வாழ்க்கை என்ன ஆனது.? மச்சான் இறந்து விட்டாரா? என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

முதல் பாதி முழுவதும் தங்கைக்கு மாப்பிள்ளை தேடும் பாசமுள்ள அண்ணனாக வருகிறார் விமல். பின்னர் மச்சானுக்காக உருகி உருகி பத்திரமாக கவனிப்பது என தெய்வமச்சான் ஆக அசத்தியிருக்கிறார்.

ஆனால் இடைவேளை வரை பெரிதாக படத்தில் சுவாரஸ்யம் இல்லை.. பாடல் காட்சிகளும் பெரிதாக கவரவில்லை.

பாலசரவணின் காமெடி சில இடங்களில் மட்டும் கை கொடுக்கிறது. பாண்டியராஜனும் சில இடங்களில் சிரிக்க வைக்க முயற்சித்துள்ளார்.

தங்கையாக அனிதா சம்பத். படம் முழுவதுமே சோகமாகவே காணப்படுகிறார். கல்யாணத்திற்கு முன்பும் கல்யாணத்திற்கு பின்பும் ஒரே மாதிரியாகவே வருகிறார் எந்த ரியாக்ஷனிலும் பெரிதாக வேறுபாடு இல்லை.

ஆடுகளம் நரேன்.. அவரின் மனைவி, மாமியார்.. ஜமீன் தம்பி என அந்த குடும்பமே கலகலப்புக்கு சுவாரஸ்யம் கூட்டுகிறது.

சில நேரம் தீபா சங்கர் ஓவர் ஆக்டிங்.. அவர் குறைத்துக் கொள்வது நல்லது..

டெக்னீஷியன்கள்…

ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் அழகை கண்களுக்கு விருந்தாக்கி அளித்துள்ளார்.

முதல் பாதியில் எடிட்டர் நிறைய காட்சிகளை வெட்டி எடுக்கலாம். படம் மிகவும் போர் அடிக்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் அதனை சரி செய்துள்ளார்.

இயக்குநர் மார்டின் நிர்மல் குமார்.. ஜாலியாக ஒரு குடும்பக் கதையை சொல்ல வேண்டும் என நினைத்து அதனை திறம்பட கொடுத்துள்ளார் இயக்குனர்.

ஆனால் அவர் தேர்வு செய்த கேரக்டர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைத்து விட்டது.. முக்கியமாக படத்தின் நாயகி நேகா சுத்தமாக பொருந்தவில்லை.. அனிதாவும் சரியான தேர்வு இல்லை.

கிளைமாக்ஸ் காட்சியில் அந்த மச்சான் யார்.? என்ற கேரக்டர் சுவாரஸ்யம் கூட்டுகிறது.

ஆக தெய்வமச்சான்.. மகிழ்ச்சி மச்சான்

Deiva Machan movie review and rating in tamil

சாகுந்தலம் விமர்சனம்..; சமந்தா காதல்.!?

சாகுந்தலம் விமர்சனம்..; சமந்தா காதல்.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தின் ஒரிஜினல் படமான ஒக்கடு என்ற படத்தை இயக்கியவர் இந்த குணசேகர்.

மேலும் அனுஷ்கா நடித்த ருத்ரமாதேவி என்ற சரித்திர கால படத்தையும் இயக்கியிருந்தார். தற்போது இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் சாகுந்தலம்.

கதைக்களம்..

விஸ்வாமித்திர முனிவருக்கும், மேனகைக்கும் பிறக்கும் குழந்தை சகுந்தலை (சமந்தா).

ஒரு அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் முனிவர்கள் நிறைந்த பகுதியில் இந்த குழந்தையை விட்டுச் செல்கின்றனர். இந்த குழந்தையை பார்க்கும் அங்கு உள்ள மடத்து மாணவர்கள் தங்களது குருவிடம் சொல்கின்றனர்

அதன்பின்னர் கன்வ மகரிஷியின் மகளாக வளர்கிறார். தன்னுடன் இருப்பவர்கள் மட்டும்தான் அன்பையும் பாசத்தையும் காட்டுவார்கள் என சமந்தா நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அந்நிய தேசத்திலிருந்து வரும் ராஜா இவரை கண்டதும் காதல் கொள்கிறார் துஷ்யந்தனான தேவ் மோகன்.

ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து ரகசிய திருமணமும் செய்து கொண்டு தாம்பத்தியத்தில் ஈடுபடுகின்றனர்.

அப்போது சமந்தா கர்ப்பமாகி விடுகிறார். நான் என் நாட்டிற்கு சென்ற பின்னர் உன்னை ராஜ மரியாதையோடு அழைத்துச் செல்கிறேன் என வாக்குறுதி கொடுத்து செல்கிறார்.

இதன் இடையில் சமந்தா ஒரு மாபெரும் முனிவரின் சாபத்திற்கு ஆளாகிறார்.

என்னை கண்டு கொள்ளாத உன்னை அந்த ராஜாவும் கண்டு கொள்ள மாட்டார் என சாபம் விடுக்கிறார்.

அதன் பிறகு என்ன ஆனது.? என்பதுதான் படத்தின் கதை. மகாராணியாக மாறினாரா சமந்தா? ராஜா இவரை கண்டு கொண்டாரா என்பது தான் கதை.

கேரக்டர்கள்…

கதையின் நாயகியாக சமந்தா. மடத்தில் இருக்கும் போது ஆனந்தமாக இருப்பார் என்றால் அப்போதுமே சோக முகத்துடன் காணப்படுகிறார்.. காதலன் கைவிட்டு சென்றபோதும் மிகவும் சோகமாக காணப்படுகிறார்..

ஆக மொத்தம் படத்தில் சமந்தா சிரிக்கும் காட்சிகள் குறைவு. அவரின் வேகமும் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை.

துஷ்யந்தனாக தேவ் மோகன்.. நல்ல உயரம், விரிந்த தோள்கள், தீர்க்கமான கண்கள் என அரசருக்கே உரித்தான கம்பீரத்தோடு வலம் வருகிறார்.. அவரின் கண்களைப் பார்க்கும் எந்த ஒரு பெண்ணும் காதல் கொள்வாள் என்பதைப் போல காட்சிப்படுத்தி இருப்பது சிறப்பு.

சமந்தா தோழியாக வரும் அதிதி பாலன் ஓகே. துர்வாசராக வரும் மோகன்பாபு நிறைவு.

மேனகையாக மதுபாலா தன் பிள்ளைக்காக கலங்கி நடனம் ஆடி மனதில் நிறைகிறார்.

படகோட்டியாக பிரகாஷ்ராஜ். ஏன் ஒரு பாடலுக்கு மட்டும் வருகிறார்.??

டெக்னீஷியன்கள்…

மணிசர்மா வித்தியாசமான இசைக்கருவிகள் மூலம் இசையை அமைத்துள்ளார். மல்லிகா..மல்லிகா.. பாடல் மட்டும் மனதில் நிற்கிறது.

ஜோசப் வி. சேகர் ஒளிப்பதிவு நம்மை பல காட்சிகளில் வியக்க வைக்கிறது.

ஒரு புராண கால கதையை படமாக்குவது மிக எளிதான காரியம் அல்ல. அதற்கு கலை இயக்குனரின் கைவண்ணம் தான் பக்க பலம் கொடுக்கும். இதிலும் அப்படி கொடுத்திருக்கிறார்.

ஆனால் சில காட்சிகளில் கிராபிக்ஸ் காட்சிகள் அப்பட்டமாக தெரிகிறது. முக்கியமாக மிருகங்கள் காட்டப்படும் போது.. நிறைய காட்சிகளை கிரீன் மேட் வைத்து எடுத்துள்ளதும் தெரிகிறது. இவைகளை இன்னும் கலை நுணுக்கத்தோடு கவனித்திருக்கலாம்.

பிரம்மாண்ட அரண்மனையை காட்டும்போது பிரமிக்க வைக்கிறது. பாகுபலி படத்தில் கூட இப்படி ஒரு அரண்மனையை நாம் பார்க்கவில்லையே என்ற உணர்வு ஏற்படுகிறது.

இது போன்ற படங்களை 3டியில் படமாக்கி இருந்தால் குழந்தைகளும் நிறைய காட்சிகளை முக்கியமாக விலங்கு காட்சிகளை ரசித்திருப்பார்களே இயக்குனர் குணசேகர்.

Shaakuntalam movie review and rating in tamil

ருத்ரன் விமர்சனம் 2.75/5..; ஓவர் டோஸ்

ருத்ரன் விமர்சனம் 2.75/5..; ஓவர் டோஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

அப்பா நாசர்.. அம்மா பூர்ணிமா.. இவர்களின் மகன் ராகவா லாரன்ஸ்.. இவரின் காதலி பிரியா பவானி சங்கர். ஒரு கட்டத்தில் மனைவியாகிறார்.

இவர்களின் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில் மிகப்பெரிய கடல் பிரச்சினையால் அதிர்ச்சியில் மரணம் அடைகிறார் நாசர். அதன் பின்னர் வேறு வழியில்லாமல் கடனை அடைக்க மிகப்பெரிய வேலைக்கு லண்டன் செல்கிறார் லாரன்ஸ்.

அதன் பின்னர் சில நாட்களில் பிரியாவும் வெளிநாடு செல்கிறார். இந்த சூழ்நிலையில் வீட்டில் தனியாக இருக்கும் பூர்ணிமா மர்மமான முறையில் இறக்கிறார்.

அதற்கு என்ன காரணம்.? இந்த சூழ்நிலையில் வில்லன் சரத்குமாருக்கும் நாயகன் லாரன்ஸ்க்கும் மோதல் உருவாகிறது..

சரத்குமார் யார்.? அவரிடம் லாரன்ஸ் மோத என்ன காரணம்? இறுதியில் என்ன ஆனது? என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்கள்…

சமீபகாலமாக லாரன்ஸ் நடித்த படங்கள் பேய் படங்களாக அமைந்தது.. அவருக்கு வெற்றியை கொடுத்தது.. தற்போது மீண்டும் அவரது வழக்கமான மசாலா சண்டை காட்சிகள் அப்பாவித்தன ரொமான்ஸ் சமூக ஆர்வம் பொதுத்தொண்டு என மீண்டும் வலம் வந்திருக்கிறார்.

இது பார்த்து பார்த்து சலித்து போன விஷயம் என்பதால் நம்மால் படத்துடன் பெரிதாக ஒன்ற முடியவில்லை.

லாரன்ஸின் நடன அசைவுகளும் ஆக்ஷன் காட்சிகளும் வழக்கம்போல கைத்தட்டல்களை அள்ளினாலும் புதிதாக மேற்கொண்டு இருக்கலாமே என்ற எண்ணம் தோன்றுகிறது..

தற்போதைய ட்ரெண்டிங் நாயகி ப்ரியா பவானி சங்கர் இதில் நாயகி.. தனக்கு கொடுக்கப்பட்ட வேலையில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.. ரீமிக்ஸ் பாடலுக்கு ஆட்டம் போடுகிறார்.. ஆனால் கஷ்டமான அசைவுகளுக்கு லாரன்ஸ் ஆட்டம் போட பிரியா எளிதான அசைவுகளுக்கு மட்டும் நடனம் ஆடுவது என்ன லாஜிக்.? நடனம் ஆட கூட நடிகை முயற்சிக்க மாட்டாரா?

ருத்ரனின் அம்மா, அப்பாவாக பூர்ணிமா – நாசர், நண்பராக காளி வெங்கட், காவலராக இளவரசு என அனைவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.

சினிமாவில் ஆரம்ப காலங்களில் வில்லனாக நடித்து பின்னர் ஹீரோ ஆனவர் சரத்குமார்.. இந்த படத்தில் மீண்டும் மிரட்டல் வில்லனாக தெறிக்க விட்டுள்ளார் சரத். நாயகனுக்கு நிகராக வில்லத்தனத்தை காட்டியிருக்கிறார்.

டெக்னீஷியன்கள்…

ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடாத பாட்டெல்லாம் ரீமிக்ஸ் பாடல் ஆட்டமும் தாளமும் போட வைக்கிறது. சாம் சிஎஸ்-ன் பின்னணி இசை சூப்பர்.

சினிமா பாடல்களை மற்றவர்கள் பயன்படுத்தி பார்க்கலாம்.. ஆனால் ஒரு தனியார் ஆல்பத்தை இந்த படத்தில் பயன்படுத்தி இருப்பது இசை அமைப்பாளரின் இசைத்திறனை கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவில் படத்தின் மேக்கிங் ரசிக்க வைக்கிறது..

முதல் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்த தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசனுக்கு வாழ்த்துக்கள்.

நாலு காட்சி ஒரு பைட்டு.. நாலு காட்சி ஒரு பாட்டு.. நாலு காட்சி ஒரு பைட்டு.. என வருவது ஒரு வகை என்றாலும் தேவையில்லாத இடத்தில் பாடல்கள் வருவது வெறுப்பை ஏற்றுகிறது.. அதிலும் எடிட்டிங் நேர்த்தியாக கையாளப்படவில்லை.

பார்த்து சலித்துப் போன ஃபார்முலாவில் திரைக்கதை அமைத்திருக்கிறார் கதிரேசன்.

தமிழக ரசிகர்களை கவருமோ இல்லையோ.? ஆனால் இந்த படம் தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் மாஸாக உள்ளது. ஆக்ஷன் சென்டிமென்ட் என அனைத்தும் இருந்தாலும் எல்லாமே ஓவர் டோஸ் ஆக உள்ளது.

ஆக ருத்ரன்… ஓவர் டோஸ்..

Rudhran movie review and rating in Tamil

சொப்பன சுந்தரி விமர்சனம் 3.5/5.; காரை யாரு வச்சிருக்கா.?

சொப்பன சுந்தரி விமர்சனம் 3.5/5.; காரை யாரு வச்சிருக்கா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

ஒரு நடுத்தர குடும்பம்.. நோயாளி அப்பா, பேராசை அம்மா தீபா சங்கர்), ஊமையான அக்கா லட்சுமி பிரியா) ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் ஒரு நகைக்கடையில் வேலை பார்க்கிறார். அப்போது ஒரு பரிசு கூப்பனில் அவருக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்று பரிசாகக் கிடைக்கிறது.

இதை வைத்து தனது அக்கா திருமணத்தை நடத்தி விட நினைக்கிறார் ஐஸ்வர்யா.

அப்போது எதிர்பாராத விதமாக வீட்டை விட்டு ஓடி போன அண்ணன் கருணாகரன் வருகிறார்.. அந்த கார் தனக்கே சொந்தம் என்கிறார்.. குடும்பத்தில் பிரச்சனை வரவே போலீசில் புகார் கொடுக்கின்றனர்.

இதன் பிறகு என்ன ஆனது.? கருணாகரன் அப்படி சொல்ல என்ன காரணம்.? இறுதியில் என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்கள்…

தனக்கு ஜோடியே இல்லை என்றாலும் தன்னை நம்பி களத்தில் இறங்கி இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.. இவரது சமீபத்திய படங்கள் க/பெ ரணசிங்கம், டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் ஆகியவற்றில் இந்த சொப்பன சுந்தரியும் சேரும்.

தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை சிறப்பாக செய்து சிக்ஸர் அடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவரது அக்கா லட்சுமி பிரியா தனக்கு கொடுக்கப்பட்ட ஊமை கேரக்டரில் தன் நடிப்பால் பேச வைத்துள்ளார்.

தனது கணவரை தீபா சங்கர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் காட்சியில் செம அலப்பறை… அண்ணன் கருணாகரன், மச்சான் மைம் கோபி, போலீஸ் சுனில் ரெட்டி, டூப்ளிகேட் கார் ஓனர் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் சிரிப்புக்கு நாங்க கேரண்டி என்கின்றனர்.

டெக்னீஷியன்கள்…

பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலனின் ஒளிப்பதிவு சிறப்பு.. டார்க் காமெடி கதைக்கு ஏற்ப கச்சிதம்.

விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும்.. அஜ்மல் தஹ்சீன் இசையில் பாடல்களும் பலம் சேர்த்துள்ளன. அடுத்து என்ன நடக்கும்.? என கதைக்கு சுவாரஸ்யம் ஏற்றுகின்றன.

முக்கியமாக பரிச்சயமான நடிகர்களை தேர்ந்தெடுத்து கோடையில் காமெடி மழையில் மக்களை நனைய வைத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ்.

பம்பர் பரிசில் கார், காருக்கு ஆசைப்படும் கருணாகரன், லட்சுமியை வரதட்சணைக்காக திருமணம் செய்யும் சாரா, காருக்குள் ஒரு சடலம், காமம் கொண்ட காவலர் என கதாபாத்திரங்களை திறம்பட தேர்ந்தெடுத்து வேலை வாங்கி இருக்கிறார்.

பொதுவாக இதுபோன்று பம்பர் பரிசு கிடைக்கும் கூப்பனில் அந்த கடையில் வேலை செய்யும் நபர்களை தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.. அதை இயக்குனர் கவனிக்கவில்லையா.?

கரகாட்டக்காரன் படத்தில் காரை நாம வச்சிருக்கோம்.! இந்த காரை வச்சிருந்த சொப்பன சுந்தரியை யார் வச்சிருக்கா.? என்பார்கள்.

அதுபோல இந்த கதையில் இந்த காரை யார் வைத்திருக்கிறார்கள்? என்பதற்காகவே டைட்டில் சொப்பன சுந்தரி என்று வைத்துவிட்டார் இயக்குனர்.

ஆக.. சொப்பன சுந்தரி.. நகைச்சுவை சுந்தரி

Soppana Sundari movie review and rating in tamil

More Articles
Follows