மாமனிதன் விமர்சனம் 3/5.; சுகமான (குடும்ப) சுமைகள்

மாமனிதன் விமர்சனம் 3/5.; சுகமான (குடும்ப) சுமைகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாமனிதன் விமர்சனம் : சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி நடிப்பில் வெளியான மாமனிதன் விமர்சனம் இதோ

கதைக்களம்..

பண்ணைபுரம் என்ற கிராமத்தில் ஆட்டோ ஓட்டுபவர் விஜய்சேதுபதி. இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

ஏழ்மை நிலையில் இருந்தாலும் நேர்மையாக வாழ்ந்து வருபவர் விஜய் சேதுபதி. எந்த கட்டத்திலும் பொய் சொல்ல கூடாது என்பதை கொள்கையாக வைத்திருப்பவர்.

மாமனிதன் விஜய்சேதுபதி-காயத்ரிக்கு தேசிய விருது கிடைக்காவிட்டால் அந்த விருதுக்கே மரியாதை இல்லை ; ஒளிப்பதிவாளர் சுகுமார்

தன் பிள்ளைகளை கான்வென்டில் படிக்க வைக்க நினைக்கிறார். அந்த சமயத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்படுகிறது. எனவே தன் ஊர் மக்களை அந்த பகுதியில் நிலம் வாங்க வைக்க முன்பணம் பெறுகிறார்.

ஆனால் அந்த தொழில் அதிபரும் ஒரு கட்டத்தில் தலைமறைவாகி விடுகிறார்.

இதனால் பணத்தை இழந்து அவமானப்பட்டு நிற்கிறார் விஜய்சேதுபதி.

அந்த தொழில் அதிபரை தேடி வேறு வழி இல்லாமல் கேரளாவுக்கு ஓடி ஒளிகிறார்.

அதன் பின்னர் என்ன நடந்தது என்பதை படத்தின் கதை.

கேரக்டர்கள்.

எதார்த்த நாயகனாக அலட்டிக்கொள்ளாத மனிதராகவே வாழ்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி. பாசம் நேர்மை கோபம் சென்டிமென்ட் என அனைத்து காட்சிகளில் பளிச்சிடுகிறார்.

நாம் அன்றாடம் பார்க்கும் ஒரு இல்லத்தரசியாக நடித்திருக்கிறார் காயத்ரி.

இவர்களின் குழந்தைகளும் நடிப்பில் கச்சிதம்.

இஸ்லாமிய நண்பனாக வரும் குருமூர்த்தி தன் அனுபவ நடிப்பால் கவர்கிறார்.

விஜய் சேதுபதி கேரளா சென்ற பின் அங்கு சந்திக்கும் மனிதர்கள் சிறப்பான நடிப்பை வழங்கி உள்ளனர். அழகான அனிகா மற்றும் ஜுவல் மேரி நடிப்பு பாராட்டுக்குரியது

டெக்னீஷியன்கள்..

முதன்முறையாக இளையராஜா மற்றும் அவரது மகன் யுவன் இணைந்து இசையமைத்துள்ள படம்.

அப்படியிருந்தும் பாடல்கள் பெரிதாக கைகொடுக்கவில்லை என்பது மிகப்பெரிய வருத்தம். ஆனால் பின்னணி இசை கேட்கும்படி உள்ளது.

வைரமுத்துவுடன் இணைந்த யுவனை நிராகரிக்கவில்லை.. என்னை நிராகரித்தார் – சீனுராமசாமி

படத்தின் ஒளிப்பதிவு பாராட்டுக்குரிய வகையில் உள்ளது. ஒளிப்பதிவாளர் சுகுமார் கேரளாவை மிக அழகாக காட்டியிருக்கிறார். ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு கச்சிதம்.

தர்மதுரை,  தென்மேற்கு பருவக்காற்று,  கண்ணே கலைமானே,  நீர்ப்பறவை உள்ளிட்ட பல தரமான படங்களை கொடுத்தவர் சீனுராமசாமி.

இந்த படத்தின் திரைக்கதையில் சில திருப்புமுனைகள் கொடுத்திருந்தால் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.

தன் குடும்பத்தை காப்பவனே மாமனிதன் என கூறியிருக்கிறார். ஆனால் ஊர்மக்கள் முன்னிலையில் தன்னை குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டாமா.? க்ளைமாக்ஸ் காட்சியை அப்படி வைத்திருக்கலாம். ஓடி ஒளிந்தால் சரியாகுமா.? என்பதற்கான அர்த்தம் புரியவில்லை.

வழக்கம்போல குடும்பத்துடன் பார்க்கும் வகையில் ஒரு அழகான படத்தை கொடுத்துள்ளார் சீனு ராமசாமி.

ஒரு கமர்சியல் வட்டத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது சீனு ராமசாமியின் அக்மார்க் முத்திரை.

ஆக மாமனிதன்… சுகமான சுமைகள்

Maamanithan movie review in Tamil

 

வீட்ல விசேஷம் விமர்சனம் 3.5/5..; ஐம்பதிலும் ஆசை வரும்

வீட்ல விசேஷம் விமர்சனம் 3.5/5..; ஐம்பதிலும் ஆசை வரும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வீட்ல விசேஷம் விமர்சனம் : ஆர்.ஜே. பாலாஜி, ஊர்வசி, சத்யராஜ், அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியான வீட்ல விசேஷம் விமர்சனம் இதோ

நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் என்ற படத்தை ஆர். ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் இணைந்து இயக்கியிருந்தனர்

இதே கூட்டணியில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘வீட்ல விசேஷம்’.

போனி கபூர் தயாரிப்பில் வெளிவந்துள்ளது.

இதில் ஆர்.ஜே. பாலாஜி, ஊர்வசி, சத்யராஜ், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஒன்லைன்…

50 வயதை கடந்த ஒரு தாய் தனக்கு மீண்டும் ஒரு குழந்தை வேண்டும் என குழந்தையை பெற்றெடுக்க நினைக்கையில் அவரை சமூகம் எப்படி பார்க்கிறது.? என்பதே கதை.

ஹிந்தியில் வெளிவந்த பதாய் ஹோ படத்தின் தமிழ் ரீமேக் தான் ‘வீட்ல விசேஷம்’.

கதைக்களம்…

அம்மா ஊர்வசி, அப்பா சத்யராஜ், தம்பி, பாட்டி என பாசமான குடும்பத்தில் ஒருவர் பாலாஜி. இவர் ஒரு பள்ளி ஆசிரியர்.

தனது காதலி அபர்ணாவின் மீதும் பாசம் கொண்டவர். ஒருநாள் தீடீரென தனது அம்மா கர்ப்பமாக இருக்கிறார் என்பதை அறிகிறார் பாலாஜி.

எனவே பல இடங்களில் கேலி கிண்டலுக்கு ஆளாகிறார். இதனால், அம்மா அப்பாவை வெறுக்க ஆரம்பிக்கிறார்.

இவர்கள் குடும்பத்தையும் ஊர்வசியையும் உறவினர்கள் தவறாக பேசுகிறார்கள்.

இறுதியில் ஊர்வசி தனது குழந்தையை பெற்றெடுத்தாரா? என்பதே மீதி கதை..

சத்யராஜ் – RJ பாலாஜியின் ‘வீட்ல விசேஷம்’ பற்றி சொல்லும் ஊர்வசி

கேரக்டர்கள்..

கிண்டல் நடிப்பில் பாலாஜியின் பாய்ச்சல் இதிலும் இருக்கு. குடும்ப பாசம் காட்டும் போதும் குடும்பத்தை வெறுக்கும் போதும் நடிப்பை பாராட்டலாம். தனக்கு எது வருமோ ? அதை தெரிந்து இதற்கேற்ப கொடுத்துள்ளார் ஆர்ஜே. பாலாஜி.

நகைச்சுவை, செண்டிமெண்ட், பாசம், கண்டிப்பு என ஸ்கோர் செய்கிறார் ஊர்வசி. இதில் நடிப்பதற்கே ஒரு தைரியம் வேண்டும். இதை சிறப்பாக செய்துள்ளார்.

இவருக்கு நிகராக நடித்துள்ளார் சத்யராஜ். மனைவி ஊர்வசி மற்றும் அம்மா லலிதா இருவரையும் அனுசரித்து செல்லும் குடும்ப தலைவனாக மிளிர்கிறார்.

பாலாஜி பாட்டியாக மறைந்த மலையாள நடிகை கே.பி.ஏ.சி. லலிதா.

நாயகியாக அபர்ணா பாலமுரளி யதார்த்தமான நடிப்பில் கவர்கிறார்.

பாலாஜியின் தம்பியாக நடித்தவரும் மற்ற கேரக்டர்களும் தேவையான நடிப்பை கொடுத்துள்ளனர்.

டெக்னீஷியன்கள்…

கிரிஷின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம். கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு மற்றும் செல்வாவின் எடிட்டிங் கச்சிதம்.

ஆர்.ஜே. பாலாஜி & என்.ஜே. சரவணனின் இயக்கம்,  திரைக்கதை படத்திற்கு பலம்.

ஒரு பெண் நினைத்தால், அவளுக்கு விருப்பம் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்பதை அழகாக காட்டியுள்ளனர்.

ஆக வீட்ல விசேஷம்.. ஐம்பதிலும் ஆசை வரும்

Veetla Vishesham movie review in tamil

777 சார்லி விமர்சனம் 3.5/5..; ஒரு நாய(ய்)கன் உதயமாகிறான்

777 சார்லி விமர்சனம் 3.5/5..; ஒரு நாய(ய்)கன் உதயமாகிறான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

அறிமுக இயக்குனர் கிரண்ராஜ் இயக்கத்தில் ரக்‌ஷித் ஷெட்டி, சங்கீதா ஸ்ரீங்கேரி, பாபி சிம்ஹா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் ‘777 சார்லி’.

நாய் ஒன்று சார்லி என்ற கேரக்டரில் நடித்துள்ளது.

கன்னட மொழியில் உருவான இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகியுள்ளது.

கதைக்களம்..

தனது குடும்பத்தை ஒரு விபத்தில் இழந்து விடுகிறார் நாயகன் தர்மா (ரக்‌ஷித் ஷெட்டி).

விரக்தியில் இருப்பதால் ஏதோ ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் தர்மா.

இப்படியான சூழ்நிலையில் அவரிடம் வந்து தஞ்சம் அடைகிறது சார்லி என்ற ஒரு பெண் நாய்.

BEST ANIMAL ACTOR விருது வேண்டும்.; ‘777 சார்லி’-யை பார்த்து ஷாக்கான கார்த்திக் சுப்புராஜ் & எஸ்ஜே சூர்யா & சக்தி

முதல் அதை வெறுக்கும் நாயகன் நாட்கள் செல்ல செல்ல வேறு வழியின்றி நாய் மீது பாசம் காட்டுகிறார். ஒரு கட்டத்தில் சாமி மீது அதீத அன்பை கொண்டிருக்கிறார் நாயகன் தர்மா

அப்போதுதான் சார்லிக்கு கேன்சர் இருப்பது தெரிய வருகிறது.. இதனால் உடைந்து போன தர்மா, சார்லிக்காக என்ன செய்தார்.?

மேலும் தர்மாவின் வாழ்க்கையை மாற்றும் சார்லிக்கு ஒரு ஆசை இருக்கிறது. அது என்ன ஆசை? என்பதே படத்தின் மீதிக் கதை..

கேரக்டர்ஸ் & டெக்னீஷியன்ஸ்…

இந்தப் படத்தில் நடிப்பவர் ஆக இருந்தாலும் அல்லது டெக்னீசியனாக பணி புரிபவராக இருந்தாலும் அவர்களுக்கு மிருகங்கள் மீது பாசம் வேண்டும் என இயக்குனர் நினைத்தாரோ என்னவோ.? அதற்கு ஏற்றவர்களை இந்த படத்தில் பணிபுரிய வைத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் நாயின் ஒவ்வொரு முக பாவனைகளையும் அழகாக படம்பிடித்துள்ளார்.. நாய் நடப்பது ஆகட்டும்.. நாய் கலங்குவது ஆகட்டும்… நான் துள்ளிக் குதிப்பது ஆகட்டும்… இதுபோல நாயின் ஒவ்வொரு அசைவுகளையும் கதையின் உணர்வுக்கு ஏற்றவாறு படம்பிடித்து நமக்கு விருந்து அளித்துள்ளார்.

அதுபோல சார்லீக்கு நாம் கண்டிப்பாக ஒரு பெரிய சபாஷ் சொல்லியே ஆகவேண்டும்.

நாம் எத்தனையோ படங்களை பார்த்து இருப்போம் அதில் வரும் நாய்கள் ஏதோ ஒரு காட்சிக்கு பயன்பட்டிருக்கும். ஆனால் இந்த படத்தில் நாய் தான் கதையின் நாயகனே.

நாம் நாய்களை விரும்பாவிட்டாலும் இந்த படத்தை பார்த்தால் நாயின் மீது நமக்கே கண்டிப்பாக ஒரு ஈர்ப்பு ஏற்படும் அப்படியான ஒரு படத்தை கொடுத்துள்ளார்

நாயகனாக ரக்‌ஷித் ஷெட்டி. எமோஷ்னல், தவிப்பு, விரக்தி, பாசம் என அனைத்திலும் ஸ்கோர் செய்துள்ளார். சில இடங்களில் நம்மையும் கண் கலங்க வைத்துவிட்டார் ரக்‌ஷித்.

சிறப்பு தோற்றத்தில் அசத்தியிருக்கிறார் நடிகர் பாபி சிம்ஹா. நடிகை சங்கீதாவும் தன் அழகிலும் நடிப்பிலும் பாராட்டைப் பெறுகிறார்.

ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. நாய்க்கான காட்சிகளில் கூடுதல் கவனத்தை படக்குழுவினர் செலுத்தி உள்ளனர்.

அரவிந்த் எஸ் காஷ்யப்பின் ஒளிப்பதிவு மற்றும் நோபின் பாலின் பின்னணி இசை ரசிக்கத்தக்க வகையில் உள்ளது.

வயதான தம்பதியரின் காதல், மழலை மொழி பேசும் குழந்தை, டாக்டர் மற்றும் உதவியாளரின் டைமிங்க் காமெடி, என பலவற்றை ரசித்து உணர்ந்து இயக்கியுள்ளார் இயக்குநர் கிரண்ராஜ்.

படத்தின் நீளம் பெரும் குறையாக உள்ளது. தேவிகா கேரக்டரில் நடித்திருக்கும் சங்கீதா, காட்சி தேவையில்லை. இரண்டாம் பாதியில் தடுமாறியிருக்கிறது படைப்பு.

அதில் சற்று கவனம் செலுத்தியிருந்தால் சார்லியை தூக்கி வைத்து கொஞ்சலாம்.

நாய்களுக்கான இனப்பெருக்க முறைகேடுகள் குறித்த விழிப்புணர்வை படம் பதிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பென்ச் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

777 charlie movie review in Tamil

விக்ரம் விமர்சனம் 4/5..; மாஸ் ட்ரீட்

விக்ரம் விமர்சனம் 4/5..; மாஸ் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் விமர்சனம் : கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், அர்ஜுன் தாஸ், காயத்ரி, காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் வெளியான விக்ரம் விமர்சனம் இதோ

ஒன்லைன்…

1980களில் வந்த கமலின் ‘விக்ரம்’ படம் மற்றும் கைதி படம் இரண்டையும் தொடர்பு படுத்தி விக்ரம் என விருந்தளித்துள்ளனர் கமல், லோகேஷ் கூட்டணி.

எனவே இதை விக்ரம் 2 அல்லது கைதி 2 என நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.

‘கைதி’ பார்த்துட்டு ‘விக்ரம்’ பார்க்க வாங்க..; லோகேஷ் கனகராஜ் திடீர் அறிக்கை

கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், அர்ஜுன் தாஸ், காயத்ரி, காளிதாஸ் ஜெயராம் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் ‘விக்ரம்’.

நடிகர் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு, ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவு ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

தமிழில் உருவாகி உள்ள இப்படத்தை தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்துள்ளனர்.

இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

கதைக்களம்.

முதல் காட்சியிலே ரத்தம் தெறிக்க கமல் கொல்லப்படுகிறார்.

காவல் துறையில் இருப்பவர்களை மாஸ்க் அணிந்த மர்ம கும்பல் கொலை செய்கிறது. இதில் காளிதாஸும் கொல்லப்படுகிறார்.

மாஸ்க் மனிதர்களை கண்டுபிடிக்க, சீக்ரெட் ஏஜென்சி ஏஜெண்ட் பகத் பாசிலிடம் ஒப்படைக்கப்படுகிறது.

அப்போது அவருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது.

கமல் யார்.? மாஸ்க் மனிதர்கள் யார்.? அவர்களை கண்டுபிடித்தாரா? மாஸ்க் மனிதர்கள் கொலை செய்ய காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்..

உலகநாயகன் கமல் நடிப்பை நாம் பாராட்டியே ஆக வேண்டும். முதல் பாதியில் கமல்ஹாசனுக்கு குறைவான காட்சிகளே உள்ளன. ஆனாலும் ஆண்டவரின் இண்டர்வல் சீன் வெறித்தனம். எவரும் எதிர்பாராத சீன். ஆக்சனிலும் அசத்தல்.

மகன் & பேரனை நினைத்து கவலைக் கொள்ளும் அப்பா தந்தை என நடிப்பில் கவர்கிறார் கமல்.

முதல்பாதியில் பகத் பாசில் ராஜ்யம். சின்ன சின்ன அசைவுகள் முகபாவனைகளில் நம்மை அசரவைக்கிறார். இரண்டாம் பாதியில் சூர்யா அசத்தல். சூர்யாவின் ரோல் ரசிக்கும்படியான ட்விஸ்ட் தான்.

விஜய் சேதுபதியும் தெறிக்கவிடும் வில்லனாக செம மாஸ் காட்டியுள்ளார்.

பகத்பாசிலுக்கு காயத்ரி.. விஜய்சேதுபதிக்கு 3 மனைவிகள்.. ஸ்வஸ்திகா, மைனா, ஷிவானி ஆகியோர் கொடுத்த வேலையில் கச்சிதம்.

டெக்னீஷியன்கள்…

அனிருத்தின் பின்னணி இசையும் படத்தின் மேக்கிங்கும் பாராட்டும் வகையில் உள்ளது.

கமல் பாடிய ‘பத்தல பத்தல….’ பாட்டுக்கு தியேட்டரே ஆட்டம் போடுகிறது.

கிரீஸ் கங்காதரனின் ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது. முதல்பாதியில் இருந்த வேகம் 2ஆம் பாதியில் இல்லை என்பது வருத்தமே. படத்தின் நீளம் கருதி சில காட்சிகளை வெட்டி இருந்தால் வேகம் கூடியிருக்கும்.

இந்த படத்திலும் லோகேஷின் வழக்கமான கதைக்களம்தான். போதை பொருள் கடத்தல் அதை பயன்படுத்துதல்… அத்துடன் ரிவென்ச், ஆக்ஷன், சென்டிமென்ட் என கலந்துக் கொடுத்துள்ளார்.

ஆனாலும் தன் கதைக்கு தேவையான கேரக்டர்களை சரியாக தேர்ந்தெடுத்து சிறந்த நடிகர்களிடம் திறமையாக வேலை வாங்கியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

‘கைதி’ பட கதைக்களத்தையும் இதில் கலந்துக் கொடுத்துள்ளார் லோகேஷ்.

ஆக விக்ரம்… மாஸ் ட்ரீட்..

Vikram movie review in tamil

விக்ரம் விமர்சனம் போல் சமீபத்தில் வெளியான படங்களின் விமர்சனங்களை நம் தளத்தில் கீழே பாருங்கள்

வாய்தா விமர்சனம் 3.25/5..; ஏழைகளுக்கு வாய்க்காத நீதி

வாய்தா விமர்சனம் 3.25/5..; ஏழைகளுக்கு வாய்க்காத நீதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாய்தா விமர்சனம் : மு ராமசாமி, புகழ் மகேந்திரன், பௌலின் ஜெஸ்ஸிகா, நாசர் நடிப்பில் வெளியான வாய்தா விமர்சனம் இதோ

நடிகர்கள்: மு ராமசாமி, புகழ் மகேந்திரன், பௌலின் ஜெஸ்ஸிகா, நாசர் மற்றும் பலர்
எழுத்து &; இயக்கம்: மதிவர்மன்
இசை: லோகேஸ்வரன்
ஒளிப்பதிவு: சேது முருகவேல்
படத்தொகுப்பு: நரேஷ் குணசீலன்
தயாரிப்பு: கே வினோத் குமார்

கதைக்களம்..

ஜாதி வேறுபாட்டில் மூழ்கி கிடக்கும் கிராமத்தில் ஒரு விபத்து நடக்கிறது. சாலை ஓரம் அயர்னிங் கடை போட்டு நடத்தி வருகிறார் பெரியவர் மு ராமசாமி.

ஒரு நாள் இவர் மீது ஒருவன் பைக்கால் மோதிவிடுகிறான். அந்த பயத்தில் வண்டியை அங்கேயே போட்டு ஓடி விடுகிறான். இவர் பெரிய இடத்து பையன்.

இதனால் பெரியவரின் பையன் வண்டியை தன் வீட்டுக்குள் எடுத்து வைத்து பூட்டி விடுகிறான்.

பைக்காரன் மீது போலீஸ் புகார் கொடுக்கலாம் என பெரியவரின் குடும்பத்தினர் சொல்கின்றனர்.

ஆனால் போலீஸை விட ஊர் பெரியவர்களும் சம்பந்தபட்டவர்களும் பேசி பணம் கொடுத்து வாங்கி சமாதானம் ஆகலாம் என்கின்றனர் சிலர்.

இந்த நிலையில் பைக் ஓனரே.. பெரியவர் மீது பொய் வழக்கு போடுகின்றனர். அதாவது வண்டியை திருடி விட்டதாக வழக்கை திசை திருப்ப செய்கின்றனர்.

இதனால் பிரச்சினை பெரிதாகிறது. அதன்பின்னர் கோர்ட்டில் வழக்காகிறது.

இந்த வழக்கு விசாரணையும், அதனை சுற்றி நிகழும் சம்பவங்களுமே படம்.

இறுதியில் என்ன ஆனது ? என்பதே மீதிக்கதை.

அம்பேத்கர் அரசியல் சட்டத்தில் பார்க்கக் கூடாதவர்கள் யார்.?; ‘வாய்தா’ இசை விழாவில் தோழர் மகேந்திரன் பேச்சு

ராமசாமி உடைய நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம். அந்த கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளார். இவரின் மகன்.. அவனின் காதலி ஆகியோர் நடிப்பு கச்சிதம்.

முக்கிய கதாபாத்திரத்தை ஏற்ற அனைவரும் கதைக்கு தேவையானதை கொடுத்துள்ளனர்.

நீதிமன்றத்தில் பல மாதங்களாக வழக்கு வாய்தா வாங்குவதிலேயே போய்விட, உதவி செய்யும் வக்கீலும் பணத்தை கேட்கிறார். இதனால் நீதிமன்றம் மீது நமக்கே எரிச்சல் வருகிறது.

படத்தின் ஆரம்பத்திலே இந்த விபத்து காட்சிகள் வருகின்றன. எனவே படத்தை ஓட்ட சில காதல் ஜோடிகள்… கைத்தறி வேலை என சிலவற்றை எடுத்துள்ளனர்.

இதனால் படத்தில் முழு திரை நேர்த்தி இல்லை எனலாம்.

சமூகத்தில் எளியவர்களிடமிருந்து நீதியும், நியாயமும் எப்படி பறிக்கபடுகிறது.? வலியவர்களின் அதிகார எல்லை மீறல் ஆகியவை அப்பட்டமாக காட்டப்பட்டுள்ளது.

சாதி ஆணவம், காதல், ஏழை மக்களின் வலி, இழைக்கப்படும் அநீதி என அனைத்தையும் அலசியிருக்கிறார் இயக்குனர்.

ஆக இந்த வாய்தா… ஏழைகளுக்கு வாய்க்காத நீதி

Vaaitha Movie Review

வாய்தா போல் சமீபத்தில் வெளியான படங்களின் விமர்சனங்களை நம் தளத்தில் கீழே பாருங்கள்

விஷமக்காரன் விமர்சனம்.; ரெண்டு லட்டு தின்ன ஆசையா.?

விஷமக்காரன் விமர்சனம்.; ரெண்டு லட்டு தின்ன ஆசையா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷமக்காரன் விமர்சனம் : வி, அனிகா விக்ரமன் , சைத்ரா ரெட்டி நடிப்பில் வெளியான விஷமக்காரன் விமர்சனம் இதோ

ஹனி பிரேம் ஒர்க்ஸ் தயாரிப்பில் விஷமக்காரன் படத்தை இயக்கி நடித்திருக்கிறார் அறிமுக நடிகர் வி (விஜய் குப்புசாமி).

அனிகா விக்ரமன் மற்றும் சைத்ரா ரெட்டி ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்துள்ளனர். இவர்கள் மூவர்தான் படம்.

ஒன்லைன்…

திருமணம் ஆன நாயகன் தன் காதல் மனைவியுடன் வாழும்போது தன் முன்னாள் காதலியை சந்திக்கிறார்.. அதன்பின் ஹீரோ என்ன செய்தார்.?

கதைக்களம்…

நாயகன் வி, Manipulation என்ற கவுன்சிலிங்க் கொடுப்பவராக பணிபுரிகிறார்.

படம் தயாரிக்க ‘ஹனிபிலிக்ஸ்’ சாப்ட்வேர்..; வி இயக்கத்தில் ரெடியான ‘விஷமக்காரன்’

கவுன்சிலிங்கிற்கு வரும் நாயகி அனிகா மீது காதல் கொள்ள இருவரும் ஒரு கட்டத்தில் காதலிக்கின்றனர்.

தனது தனைவி அனிகாவிடம் , தான் சைத்ரா என்ற பெண்ணை சில வருடத்திற்கு முன் காதலித்ததாகவும், அப்போதே பிரேக் அப் ஆகிவிட்டதாகவும் தெரிவிக்கிறார்.

ஆனால் அந்த காதல் தன்னை பெரிதாக பாதித்ததாகவும் தற்போது அவள் இடத்தில் நீ மாற்றாக வந்துவிட்டாய் என்கிறார் வி.

அனிகாவிற்கும் வி’க்கும் திருமணம் ஆகிறது. 2 வருடங்களுக்கு பிறகு மனைவி அருகில் இருக்கும் போதே தன் முன்னாள் காதலியை (இதுவரை திருமணம் ஆகாத) காதலியை சந்திக்கிறார் வி.

அதன்பின் இவர்கள் மூவருக்குள் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்களே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

தொடக்கம் முதல் இறுதி வரை வி, அனிகா மற்றும் சைத்ரா மூவரும் பயணிக்கும் காட்சிகள் மட்டுமே இடம் பெறுகிறது.

பேசுங்க… பேசுங்க… பேசிக்கிட்டே இருங்க… சாரி.. சாரி… டாக்கிங்… டாக்கி்ங்.. ஓவர் டாக்கிங் என்ற ரேஞ்சுக்கு இங்கீலீஷ் படம் பார்ப்பது போல உள்ளது..

மூவர் மட்டுமே பேசி … பேசி… பேசி… காட்சிகளை நகர்த்தி விட்டனர்.

கதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது..; ‘விஷமக்காரன்’ விஜய்யின் வில்லத்தன பேச்சு

அதில் காமெடி… காம நெடி… ஆகியவற்றை சேர்த்திருக்கலாம். ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்க்கு அவளோ பஞ்சமா தெரியல.

க்ளைமாக்ஸ் காட்சியில் வி வைத்த ட்விஸ்ட் வேற லெவல்… அட இப்படி கூட யோசிக்க முடியுமா வீ.? கடைசி 15 நிமிடங்களை கூடுதலாகவே ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் வி.

ஸ்மார்ட் ஹீரோ… 2 ப்யூட்டிபுல் ஹீரோயின்ஸ் என ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாகவே இருக்கு. இதில் அனிகா அழகு செம அள்ளு.

பாடல் & பின்னனி இசை ஓகே ரகம் தான்.

ரசிகனுக்கு ஏற்றவாறு இன்னமும் கொடுத்திருந்தால் விஷமக்காரன் வில்லங்கமானவானாக தெரிந்திருப்பான். வி என்பவர்தான் படத்தையும் இயக்கியிருக்கிறார்.

ஆக இந்த விஷமக்காரனுக்கு.. கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா.?

Vishamakaran Movie Review

விஷமக்காரன் போல் சமீபத்தில் வெளியான படங்களின் விமர்சனங்களை நம் தளத்தில் கீழே பாருங்கள்

More Articles
Follows