கவண் விமர்சனம்

கவண் விமர்சனம்

நடிகர்கள் : டி ராஜேந்தர், விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன், பாண்டியராஜன், விக்ராந்த், சாந்தினி, ஜெகன், ஆகாஷ்தீப் சாய்கல், போஸ் வெங்கட், ஸ்ரீனிவாசன் மற்றும் பலர்.
இயக்கம் : கே வி ஆனந்த்
இசை : ஹிப் ஹாப் ஆதி
ஒளிப்பதிவாளர் : அபிநந்தன்
எடிட்டர்: ஆண்டனி
பி.ஆர்.ஓ.: நிகில்
தயாரிப்பு : ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட்

kavan-poster-5

கதைக்களம்…

சென்1 என்ற டிவி நிறுவனர் ஆகாஷ்தீப் சாய்கல். இந்த சேனலில் விஜய்சேதுபதி, மடோனா, ஜெகன் உள்ளிட்டோர் வேலை செய்கின்றனர்.

டிஆர்பி ரேட்டிங்குக்காக இவர்களின் ஓனர் பல தில்லுமுல்லுகளை செய்கிறார். இவராகவே சில விஷயங்களை செய்து ப்ரேக்கிங் நியூஸ் ஆக்கி பரபரப்பு உண்டாக்குறிர்.

மேலும் போஸ் வெங்கட் போன்ற தீயவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு உண்மையை சொல்லவிடாமல் மறைக்கிறார்.

ஒரு கட்டத்தில் இவரின் செயல்களை பிடிக்காத விஜய்சேதுபதி குழுவினர் பிரச்சினை செய்துவிட்டு, டி ராஜேந்தர் முத்தமிழ் டிவி சேனலில் சேர்கின்றனர்.

அதன்பின்னர் ஒரு இந்த இரு சேனல்களுக்கும் நடக்கும் வாய்மை யுத்தமே இந்த கவண்.

kavan tr

கதாபாத்திரங்கள்….

விஜய்சேதுபதிக்கு இந்த கேரக்டர் புதியது. ஹேர் ஸ்டைலை மாற்றி வித்தியாசப்படுத்தி காட்டியுள்ளார்.

டிவி பேட்டியின் போது அலட்டிக் கொள்ளாமல் அசால்ட்டாக பேசி கவர்கிறார்.

ஆனால் விஜய்சேதுபதி ஆங்கிலம் பேசும் காட்சிகளில் உச்சரிப்பை இன்னும் பெட்டராக கொடுத்திருக்கலாம். (பாண்டியராஜின் உச்சரிப்பும் அப்படிதான்)

மடோனா மாடர்னாக வந்து மனதில் நிற்கிறார். ஆனால் சாந்தினி கேரக்டர் சப்பென்று முடிகிறது.

இதுவரை இப்படியான கேரக்டர்களில் நாம் டி ராஜேந்தரை பார்த்திருக்க முடியாது. அமைதியாக காணப்பட்டாலும் அடுக்கு மொழி வசனத்தில் அதிர வைக்கிறார்.

அயன் படத்தில் ஸ்லிம்மாக பார்த்த வில்லன், இதில் படா வெயிட்டாக வருகிறார். ஆனால் கேரக்டரில் வெயிட் இல்லை.

விக்ராந்த், போஸ் வெங்கட், விக்ராந்த் ஜோடி ஆகியோர் தங்கள் பணியை நிறைவாக செய்துள்ளனர்.

நாசர் கேரக்டரை வீணடித்துவிட்டார்கள்.

பவர் ஸ்டார் ஒரு சீன் வந்தாலும் அவர் சொல்லும் பன்ச் நிச்சயம் ரசிக்க வைக்கும்.

‘என்னை ஜீனியஸ்னு சொல்லிடாதீங்க.  நீங்க என்னைய காமெடி பீஸா நினைக்கிற வரைக்கும் தான் எனக்கு மார்க்கெட்டு.

ஆனால் ஒரு விஷயம் எல்லாரையும் முட்டாள நினைக்காதீங்க. எல்லாருக்கிட்டேயும் ஒரு திறமை இருக்கு…’ என சொல்லும்போது கைதட்ட வைக்கிறார். அதுபோல் இண்டர்வெல் சீனும் க்ளாப்ஸை அள்ளும்.

kavan madonna

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தின் இசை பெரிதாக கைகொடுக்காது. ஹிப் ஹாப் ஆதியின் குரல் நடிகர்களுக்கு பொருந்தவில்லை.

அபிநந்தனனில் ஒளிப்பதிவில் இரண்டு சேனல் நிறுவனங்களையும் வித்தியாசப்படுத்தி காட்டியிருப்பது சிறப்பு.

ஆர்ட் டைரக்டர் DRK கிரணை பாராட்டியே ஆக வேண்டும். டி. ஆர் ஆபிஸை மாற்றும் காட்சிகளில் டாய்லெட் முதல் சூ வரை பயன்படுத்தியிருப்பது  கலை இயக்குனரின் கைவண்ணம்.

kavan tr and vijay sethupathi

ஒரு சேனலில் நடக்கும் விஷயங்களை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் கொடுத்துள்ளார்.

டிஆர் ரேட்டிங்குக்காக சர்ச்சைகளை உருவாக்குவதும், ரியாலிட்டி ஷோக்களில் அவர்கள் நடந்து கொள்ளும் விதமும், அழகு சாதனங்களை விற்பதற்காக நடத்தப்படும் நடன நிகழ்ச்சிகளையும் தோலுருத்திக் காட்டியிருக்கிறார்.

படத்தின் வசனங்கள் ஆங்காங்கே கைத்தட்டல் பெறுகிறது. சில அறுவறுக்கதக்க வார்த்தைகளை எடிட் செய்திருக்கலாம்.

க்ளைமாக்ஸில் நிறைய லாஜிக் மீறல்கள். ஏதோ அவசர அவசரமாக காட்சிகளை முடிக்க திட்டமிட்டு இருப்பது போன்ற உணர்வு.

போஸ் வெங்கட் பேட்டி காட்சிகள் ஏதோ சுவாரஸ்யம் இல்லை. முதல்வன் படத்தின் ரகுவரனின் காட்சியை எவரும் மிஞ்ச முடியாது போல.

டிவிஸ்ட் என்ற பெயரில் க்ளைமாக்ஸில் நீளத்தை நீட்டி போராட்டிக்க வைக்கிறார் டைரக்டர்.

கவண் கவனிக்கப்பட வேண்டியவன்

Comments are closed.

Related News

டி.ராஜேந்தர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம்…
...Read More
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டிஆர், மடோனா…
...Read More