சங்கிலி புங்கிலி கதவ தொற விமர்சனம்

சங்கிலி புங்கிலி கதவ தொற விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி, ராதிகா, கோவை சரளா, தம்பி ராமையா, மதுமிளா, மொட்டை ராஜேந்திரன், இளவரசு, கௌசல்யா, மயில்சாமி, சரவண சுப்பையா மற்றும் பலர்.
இயக்கம் : ஐக்
இசை : விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவாளர் : சத்யன் சூரியன்
எடிட்டர்: டிஎஸ் சுரேஷ்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு : ஏ பார் ஆப்பிள் சார்பாக இயக்குனர் அட்லி

Sangili-Bungili-Kadhava-Thorae jiiva and -Sri-Divya

கதைக்களம்…

வழக்கமா ஒரு பேய் கதையில் என்ன இருக்கும்..?

பேய் பங்களா அங்கே ஒரு குடும்பம். பேய்க்கு ஒரு ப்ளாஷ்பேக், பேயின் ஆசையின் நிறைவேற்ற சில நபர், சமாதானம் ஆன பேய் மறையும். இதானே.

இந்த கதையும் அப்படித்தான். இதில் சற்று வித்தியாசமாக உறவினர்கள் அடித்துக் கொள்ள கூடாது. குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என பேய் ஆசைப்படுகிறது.

அத்துடன் வாடகையில் வீட்டிலேயே வசிக்கும் ராதிகாவுக்காக சொந்த வீடு வாங்க ஆசைப்படும் மகன் ஜீவாவின் கேரக்டர் புதுசு.
sbkt team movie stills

கேரக்டர்கள்…

அலட்டிக் கொள்ளாத நடிப்பில் ஜீவா. ஒரு நடுத்தர குடும்பத்து இளைஞனாக வருகிறார். இவருடன் சூரி.

சந்தானத்திற்கு அடுத்து ஜீவாவிற்கு சூரியுடன் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும் என நம்பலாம்.

ஸ்ரீதிவ்யா அழகில் ரசிக்க வைக்கிறார். நடிப்பில்…? அதற்கு வாய்ப்பே கொடுக்கவில்லை பாவம்.

பின்னணி இசையில் பயமுறுத்தும் படத்தில் சூரியின் காமெடி கொஞ்சம் ரசிக்கலாம்.

முக்கியமாக வாஷிங் மெஷின் காமெடி இனி பாப்புலராக பேசப்படும்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ராதாரவிக்கு நிறைய காட்சிகள். இடைவேளைக்கு பிறகு அவரே பேயாட்சி நடத்துகிறார்.

ஒரு பாசமான அம்மாவாக ராதிகா அசத்துகிறார். தாய்மாமனாக வரும் இளவரசு நாயகனுக்கு கைகொடுக்கிறார்.

sbkt kovai sarala radhika

தம்பி ராமையா, தேவதர்ஷினியின் ரொமான்ஸ் காட்சிகள் காம நெடி.

மதுமிளா, கௌசல்யா, மயில்சாமி, சரவண சுப்பையா ஆகியோரின் கேரக்டர்களில் அழுத்தமில்லை.

இவர்களைத் தவிர பேய் படத்தில் யாரு எல்லாம் இருப்பாங்க..?

கோவை சரளா,  தேவதர்ஷினி, மொட்டை ராஜேந்திரன் தானே.. அவங்க எல்லாம் இருக்காங்க.. நல்ல வேளை இந்த டெம்ப்ளேட்டில் மனோபாலா இல்லை.

sbkt sri divya

தொழில்நுட்ப கலைஞர்கள்…

விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு பலம். இந்த இசையை பேய் வரும் பயத்தை உண்டாக்குகிறது.

சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு ஓகே. ஒரு பங்களாவை சுற்றியே காட்சிகள் நகருவதால் சில காட்சிகள் போரடிக்கிறது.

முதல் பாதி ரசிக்க வைக்கும் அளவுக்கு இரண்டாம் பாதி கைகொடுக்கவில்லை.

புதிய கதையுடன் டைரக்டர் ஐக் களம் இறங்கியிருந்தால், இன்னும் ஆச்சரியப்பட்டு இருக்கலாம்.

சங்கிலி புங்கிலி கதவ தொற… திறந்தாலும் பயமில்லை

சரவணன் இருக்க பயமேன் விமர்சனம்…. உதயநிதியின் உத்தரவை ஏற்கிறோம்.

சரவணன் இருக்க பயமேன் விமர்சனம்…. உதயநிதியின் உத்தரவை ஏற்கிறோம்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : உதயநிதி, ரெஜினா காஸன்ட்ரா, ஸ்ருஷ்டி, சூரி, யோகிபாபு, மதுமிதா, லிவிஸ்டன், ரவிமரியா, ரோபோ சங்கர், மன்சூர் அலிகான், சாம்ஸ் மற்றும் பலர்.
இயக்கம் : எழில
இசை : இமான்
ஒளிப்பதிவாளர் : கே.ஜி.வெங்கடேஷ்
எடிட்டர்: ஆனந்த் லிங்ககுமார்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு : ரெட் ஜெயண்ட் மூவிஸ்


விமர்சனம்…

உதயநிதியின் உத்தரவை ஏற்கிறோம்.

(கீழே உள்ள லிங்கை பார்த்தால் இதற்கான அர்த்தம் புரியும்)

https://www.filmistreet.com/cinema-news/udhayanithi-request-regarding-movie-reviews-at-saravanan-irukka-bayamaen-press-meet/

என்ன கொடுமை சரவணா இது…?

விமர்சனம் எழுதி உங்கள் நேரத்தையும் எங்கள் நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லை.

எய்தவன் விமர்சனம்

எய்தவன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கலையரசன், சாட்னா டைட்டஸ், வேலராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், ராஜ்குமார் மற்றும் பலர்.
இயக்கம் : சக்தி ராஜசேகரன்
இசை : பார்த்தவ் பர்கோ
ஒளிப்பதிவாளர் : பிரேம்குமார்
எடிட்டர்: ஜேஜே அலென்
பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்
தயாரிப்பு : சுதாகரன்

???????????????????????????????????????????????????

கதைக்களம்…

நீட் தேர்வு (மெடிக்கல் தேர்வு) நடைபெற்ற சமயத்தில் வந்திருக்கும் சரியான படம் இது.

கலையரசனின் தங்கை +2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுகிறார். சிறுவயது முதலே மருத்துவம் படிக்க வேண்டும் என்பதே அவரது ஆசை.

கவர்மெண்ட் காலேஜில் சீட் கிடைக்காத காரணத்தினால் தனியார் காலேஜில் சேரும் சூழ்நிலை உருவாகிறது.

இதற்காக :ரூ. 56 லட்சம் பணத்தை லஞ்சமாக கொடுத்து ஒரு காலேஜில் சேர்கிறார்.

அச்சமயம் போதுமான வசதிகள் இல்லாத காரணத்தால் அதன் அங்கீகாரத்தை ரத்து செய்கிறது அரசு.

இதனால் வேறு காலேஜில் தன் தங்கையை சேர்க்க நினைக்கும் கலையரசன், பணத்தை திருப்பி கேட்கிறார்.

நீங்கள் புரோக்கரிடம் லஞ்சமாக கொடுத்த பணத்திற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று கைவிரிக்கிறது நிர்வாகம்.

மேலும் அதற்கான ஆதாரங்களையும் மறைக்க முயற்சிக்கிறது.

இந்நிலையில் ஒரு விபத்தில் தங்கையும் கொல்லப்படுகிறாள்.

இதனால் வெகுண்டெழும் கலையரசன் என்ன செய்தார்? எப்படி பணத்தை பெற்றார்? எப்படி ஆதாரங்களை நிரூபித்தார்? என்பதே இந்த எய்தவன்.

????????????????????????????

கேரக்டர்கள்…

ஒரு சமூகத்திற்கு தேவையான வலுவான கதையில் நடிக்க ஒப்புக் கொண்டதற்காகவே கலையரசனை பாராட்டலாம்.

ஒரு யதார்த்த இளைஞனாகவும், பாசமுள்ள அண்ணனாகவும், கல்வி வியாபாரிகளை ஒடுக்கும் பொறுப்புள்ள மனிதனாகவும் கலக்கியிருக்கிறார் கலையரசன்.

காவல் அதிகாரியாக நாயகி சாட்னா டைட்டஸ். அழகாக வந்து போகிறார் டூயட் பாடுகிறார்.

ஸ்மார்ட் ப்ளஸ் ஸ்டைலிஷ் வில்லன் அசத்தல். கல்வியை வியாபாரம் ஆக்குவதிலும் அதில் வரும் பிரச்சினைகளை சமாளிப்பதிலும் கெத்து காட்டியிருக்கிறார்.

கெட்டவனாக இருந்து நல்லவனாக முற்படும் கேரக்டரில் ஆடுகளம் நரேன் ரசிக்க வைக்கிறார்.

தர்மன் கேரக்டரில் வரும் நபர் நினைவில் நிற்கிறார்.

kalai yeidhavan

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பார்த்தவ் பர்கோ இசையில் ஒலிக்கும் பின்னணி இசை படத்தின் காட்சிகளை பேச வைக்கிறது.

கலையரசன் ஒவ்வொரு திட்டமாக தீட்டி செயல்படுத்தும்போது வரும் பின்னணி இசை படத்தை ரசிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவாளர் பிரேம்குமாரின் கேமரா கைவண்ணம் படத்திற்கு ப்ளஸ்.

உயிரை கெடுக்கும் டாஸ்மாக் தெருவுக்கு தெரு இருக்கிறது. உயிரை காக்கும் படிப்பை சொல்லிக் கொடுக்கும் மெடிக்கல் காலேஜ் மாவட்டத்திற்கு ஒன்றுதான் உள்ளது என்ற வசனம் நிச்சயம் அரசுக்கு சவுக்கடி.

ஒரு கமர்ஷியல் படத்தில் நல்ல மெசேஜ் சொல்லியிருக்கும் இயக்குனர் சக்தி ராஜசேகரனை நன்றாகவே பாராட்டலாம்.

எய்தவன்… சமூகத்திற்கு ஏற்றவன்

லென்ஸ் விமர்சனம்

லென்ஸ் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஆனந்த்சாமி, ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், அஷ்வதிலால், மிஷா கோஷல், ராஜாகிருஷணன் மற்றும் பலர்.
இயக்கம் : ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்
இசை : ஜிவி பிரகாஷ்
ஒளிப்பதிவாளர் : எஸ் ஆர் கதிர்
எடிட்டர்: ஜெய்னுல் அப்தீன், காஜின், வெங்கடேஷ்
பி.ஆர்.ஓ. : ரியாஸ் கே அஹ்மது
தயாரிப்பு : மினி ஸ்டூடியோஸ் சிந்து ஜெயபிரகாஷ்

கதைக்களம்…

ஆன்லைன் செக்ஸ் மற்றும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளும்தான் இப்படத்தின் கதை.

சமூக வலைத்தளத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துக் கொண்ட ஒரு பெண்ணின் உண்மைச் சம்பவன்மான் இந்த படம்.

ஜெயப்பிரகாஷ் தன் மனைவி மிஷா கோஷல் உடன் ஓர் அழகான ப்ளாட்டில் வசித்துவருகிறார்.

ஆன்லைன் ஜாப் என்று கூறிக் கொண்டு பூட்டிய அறையில் பெண்களிடம் சாட் செய்து, ஆன்லைனில் எல்லாம் லைவ்வாக செய்வதே இவர் வேலை.

ஒருமுறை நிக்கி என்ற பெண்னுடன் சாட் செய்யும்போது பின்னர்தான் அவர் ஆண் என்று தெரிய வருகிறது. (ஆனந்த்சாமி)

அதிலிருந்து விலக நினைக்கும்போது, ஜெயப்பிரகாஷ் மற்ற பெண்களுடன் சாட் செய்த வீடியோவை காட்டி ஒரு நிபந்தனையும் வைக்கிறார்.

தான் தற்கொலை செய்வதை நீ நேரில் பார்க்க வேண்டும் என்று உன் மனைவியை என்னுடன்தான் இருக்கிறாள் என்று வீடியோவை காட்டுகிறார்.

அவர் எதற்காக ,இவர் மனைவியை கடத்த வேண்டும், ஏன் தற்கொலை செய்கிறார்? என்ற பல கேள்விகளுக்கு இதன் க்ளைமாக்ஸ விடை சொல்லும்.

C_Wt1XpXkAIZvvF

கேரக்டர்கள்…

படத்தின் நாயகன் இயக்குனர் தயாரிப்பாளர் எல்லாம் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்தான்.

சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வந்த இவர், யாரிடமும் உதவியாளராக இல்லாமல் இயக்குனராகி இருக்கிறார்.

அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

ஆன்லைனில் இதுபோன்று செக்ஸ் செய்பவர்கள், நிறைய வீடியோக்களையும் மற்றவர்களுக்காக அப்லோட் செய்கின்றனர்.

அவர்கள் நம் உறவினராக இருக்கலாம். நண்பராக இருக்கலாம். வீட்டில் வேலை செய்பவர்களாக இருக்கலாம்.

வீட்டின் எந்த மூலையிலும் அவர்கள் கேமராவை ஒளித்துவைத்து ஆபாச வீடியோவை எடுத்து அதை பார்த்து மற்றவர்களிடம் பகிரலாம் ஆகியவற்றை அப்பட்டமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

C_SLT9mV0AAVFsB

சொல்லப்போனால் ஆன்லைன் பிரியர்களுக்கு ஓர் அலர்ட் மெசேஜ் கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

ஆனந்த்சாமி நிச்சயம் நம்மை கவருவார். தன் மனைவியுடன் உடலுறவு கொள்வதை எவனோ வீடியோ எடுத்தது மூலம் இவரின் வாழ்க்கை எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை அழுத்தமாக சொல்லியுள்ளார்.

ஏஞ்சல் கேரக்டரில் அஸ்வதிலால் நடித்துள்ளார். வாய் பேசமுடியாத இவரின் வீடியோ இண்டர்நெட்டில் வெளியானதால், படும் அவஸ்தையை தன் நடிப்பில் உணர்த்தியுள்ளார்.

தினம் தினம் கோடி கண்கள் தன்னை கற்பழிப்பது போல் உள்ளது என எழுதிக் காண்பிக்கும்போது ஒவ்வொரு மனதும் கரையும்.

கணவன் எப்போதும் ஆன்லைனில் இருக்கிறாரே? என ஏங்கும் பெண்ணாக மிஷா கோஷல்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

படத்தில் ஒரே பாடல்தான் நிச்சயம் ரசிக்க வைக்கும். பின்னணி இசையிலும் ஜிவி பிரகாஷ் மிரட்டியிருக்கிறார்.

கம்ப்யூட்டர் ஆன்லைன் என்ற ஒரே வட்டத்திற்குள் கதை சுழன்றாலும் அதையும் அழகாக படம்பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் எஸ்ஆர் கதிர்.

இதுபோன்ற விழிப்புணர்வு படத்தை ரிலீஸ் செய்திருக்கும் வெற்றிமாறனுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

லென்ஸ்… ஆன்லைன் வயலென்ஸ்

எங்க அம்மா ராணி விமர்சனம்

எங்க அம்மா ராணி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : தன்ஷிகா, வர்ணிகா, வர்ஷா, சங்கர் ஸ்ரீ ஹரி, நமோ நாராயணா, அணி முரணி, ரியாஸ் கே அஹ்மது மற்றும் பலர்.
இயக்கம் : பாணி
இசை : இளையராஜா
ஒளிப்பதிவாளர் : எ. குமரன், சந்தோஷ் குமார்
எடிட்டர்: ஏஎல் ரமேஷ்
பி.ஆர்.ஓ. : ரியாஸ் கே அஹ்மது
தயாரிப்பு : முத்துகிருஷ்ணன்

Enga Amma Rani still 1

கதைக்களம்…

தன்ஷிகாவுக்கு இரண்டு குழந்தைகள் (மீரா தாரா என இரட்டை குழந்தைகள்). கணவரை பிரிந்திருக்கும் இவர் ஒரு சூப்பர் மார்கெட்டில் பணிபுரிந்து கொண்டு மலேசியாவில் வசிக்கிறார்.

இந்நிலையில் தாரா ஒரு கொடிய நோயால் (எந்த ஒரு நோய் அறிகுறியும் இல்லாமல்) திடீரென இறக்கிறார்.
இதனால் இந்த நோய் அடுத்த குழந்தை மீராவுக்கும் பரவுகிறது.

இந்நிலையில் டாக்டரின் அறிவுரைப்படி ஒரு குளிர் பிரதேசத்தில் வசிக்க செல்கின்றனர் இவர்கள்.

அப்போது அந்த குடியிருப்பில் மரணித்த ஒரு சிறுமியின் ஆத்மா மீராவினுள் நுழைகிறது.
இதனால் மீராவுக்குள் இருக்கும் நோய் இல்லாமல் போகிறது.

enga amma rani 4

இந்த சூழ்நிலையில் தன் மரணத்திற்கு காரணமானவர்களை பழிவாங்குகிறது அந்த ஆன்மா.

தன் குழந்தையை கொலைக்காரி ஆக்கிவிடாதே. விட்டு போய்விடு என அந்த ஆன்மாவிடம் கேட்கிறார் தன்ஷிகா.

நான் மீராவை விட்டு சென்றால், அவளை அந்த நோய் மீண்டும் தாக்கிவிடும் என அந்த ஆன்மா சொல்கிறது.

எனவே அந்த தாய் என்ன செய்தாள்? ஆன்மா சென்றதா? குழந்தை என்ன ஆனது? என பல கேள்விகளுக்கு தன் பாணியில் விடையளித்திருக்கிறார் டைரக்டர் பாணி.

Enga Amma Rani still 2

கேரக்டர்கள்…

ஒரு இளம் நாயகி இரண்டு குழந்தைகளுக்கு அம்மா நடிக்க துணிந்ததற்கே தன்ஷிகாவை பாராட்டலாம்.

படத்தின் பலமே தன்ஷிகாதான். ஒரு அம்மாவாக படம் முழுவதும் ஆட்சி செய்கிறார்.

ஒரு தாயின் தவிப்பை உணர்ந்து நடித்திருக்கிறார்.

ஆனால் இக்கட்டான சூழ்நிலையில் கூட சில காட்சிகளில் மேக்அப்புடன் வருகிறார். வேலைக்கு செல்வதாக அப்போது காட்சிகள் காட்டப்படவில்லை. எனவே அவர் அழும் சில காட்சிகளில் கொஞ்சம் நெருடல்.

இரட்டை குழந்தைகளாக வர்ணிகா, வர்ஷா. இதில் வர்ணிகாவே பல காட்சிகளில் வருகிறார்.

ஆன்மா வந்தவுடன் அவர் செய்யும் ஆக்ஷன் ரசிக்க வைக்கிறது.

என்னை பேயாக பாக்காதீங்க. குழந்தையாய் பாருங்கள் என கெஞ்சும்போது கவர்கிறார் வர்ணிகா.

இவர்களுடன் டாக்டராக வரும் சங்கர் ஸ்ரீஹரி மற்றும் நமோ நாராயணன் ஆகிய இருவரும் சிறப்பான தேர்வு.

Enga Amma Rani still 3

தொழில்நுட்ப கலைஞர்கள்..

இளையராஜா இசைக்கு பழனிபாரதியின் வரிகள் பலம். வா வா மகளே பாடல் ரசிக்கலாம்.

பின்னணி இசையில் என்றுமே ராஜா இளையராஜாதான். ஆனால் இவரின் இசை வேகத்துக்கு இயக்கத்தில் வேகமில்லை.

எ. குமரன், சந்தோஷ் குமார் ஆகியோரின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.

பேயும் நோயும் என வித்தியாசமான களத்தில் ஒரு குடும்ப கதையை சொல்லியுள்ளார் பாணி.

படத்தின் க்ளைமாக்ஸ் நிச்சயம் தாயின் பெருமையை உணர்த்தும்.

எங்க அம்மா ராணி… தன்னையே இழப்பவள் தாய்

அய்யனார் வீதி விமர்சனம்

அய்யனார் வீதி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கே.பாக்யராஜ், பொன்வண்ணன் யுவன், சாராஷெட்டி, சிஞ்சு மோகன், சிங்கம்புலி, செந்தில்வேல், மீரா கிருஷ்ணன், முத்துக்காளை நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு–சக்திவேல், இசை– யுகே.முரளி, இயக்கம் -ஜிப்ஸி என்.ராஜ்குமார். தயாரிப்பு ஸ்ரீசாய் சண்முகம் பிக்சர்ஸ் சார்பில் பி.செந்தில்வேல், விஜயசங்கர்.

தலைமுறைகளின் பகை பற்றிய கதை. அந்த ஊரில் மரியாதையும் கௌரவமும் உள்ள குடும்பம் ஜமீன் அய்யனார் குடும்பம். ஒருகாலத்தில் அய்யனார் அப்பாவின் உறவினரான மச்சானே அந்த ஊரில் சாராயம் காய்ச்ச, அதைக் குடித்து அந்தக் கிராமத்தில் பலர் உயிரிழக்கின்றனர்.

அய்யனார் அப்பாவான பெரிய ஜமீன் இதைக் கேள்விப்பட்டதும் அவனைத் தண்டிக்கச் சொல்கிறார். ஊர்மக்கள் அடித்தே கொன்று விடுகிறார்கள். இதனால் குடும்பப் பகை வருகிறது .சாராயம் காய்ச்சிய குடும்பத்தை ஊரை விட்டு விலக்கி வைக்கிறார்கள்.

Ayyanar Veethi stills

அடுத்த தலைமுறையிலும் இது பகையாகத் தொடர்கிறது.அய்யனாருக்கு போன தலைமுறை பகையான மாடசாமியின் வாரிசு பாண்டியன் துணைக்குத் தன் தம்பி மருதுவை வைத்துக் கொண்டு அவ்வூரில் சாராயம் காய்ச்சிக் குடிக்க வைத்து அய்யனாரையும் மக்களையும் பழிவாங்கத் துடிக்கிறான்.

அது மட்டுமலல அய்யனார் மகள் துர்காவை களங்கப் படுத்த திட்டமிடுகிறார்கள்.

விளைவு ? கோவில் நகையைத் திருடி அய்யனார் மீது பழிபோடுகிறார்கள். ஊர்த்திருவிழாவின் போது அய்யனார் கோவில் மணியைத் திருடி கலகமூட்டுகிறார்கள்.

போலீசைக் கைக்குள் போட்டுக் கொண்டு எல்லா வேலைகளையும் செய்கிறார்கள். அய்யனார் வீதியில் எந்த அநியாயமும் தவறுகளும் நடக்கக் கூடாது என்று கட்டுப்பாடு உள்ளது.

Ayyanar Veethi stills 2

இந்நிலையில் அய்யனாருக்கு எதிராக அனைத்து அக்கிரமங்களும் தலைவிரித்தாட வைத்த பாண்டியன், மருது கோஷ்டிக்கு முடிவு என்ன ஆகிறது.? அய்யனார் என்ன செய்கிறார் என்பதே படத்தின் க்ளைமாக்ஸ்.

படம் கிராமமும் கிராமம் சார்ந்த பகுதிகளில் படமாகியுள்ளது. நகரநெருக்கம் வாகனங்கள், கட்டடங்கள் என்று நகர கலாச்சாரத்தையே பார்த்துப் போரடித்த ரசிகர்களுக்கு இப்படம் கிராமத்துக்கு அழைத்துச் சென்ற உணர்வைத் தருகிறது படமே அய்யனார் சித்த பிரமை போல் மௌனமாக இருக்கிறாரே அவருக்கு என்ன ஆகிவிட்டது என்கிற ப்ளாஷ்பேக்கில் தொடங்குகிறது. நடந்த முன் கதை விரிகிறது. அது மட்டுமல்ல படத்தில் வேறு சிறுசிறு ப்ளாஷ் பேக்குகளும் உள்ளன.

Ayyanar Veethi director Gypsy Rajkumar

அய்யனாராகப் பொன்வண்ணன் நடித்து இருக்கிறார். தோற்றத்தில் பொருத்தம். மரியாதையான மிடுக்கில் செயல்பாடுகளில் அதிகம் பேசாமலேயே கவர்கிறார். சுப்ரமணிய சாஸ்திரியாக வரும் பாக்யராஜ் தனக்கே உரித்தான் பாணியில் வருகிறார். சின்னச்சின்ன முடிச்சு போட்டும் அவிழ்க்கிறார்.

படத்தின் முடிவு அவர் தலையில். அய்யனாராக வேடமிட்டு அவர் செய்யும் கொலை அட.. எனத் திடுக்கிட வைக்கிறது.

படத்தில் கிளைக்கதைகள் சில உள்ளன அதில் ஒன்றுதான் யுவன்– சாராஷெட்டி கல்லூரிக் காதல். வாழ்க்கையில் முன்னேற லட்சியம் வேண்டும் என்று கூறி, காதலிக்கும் முன் ஏதாவது சாதித்து விட்டு வா என்கிறார் சாரா.

இளம் சாதனையாளர் விருது இருவருமே பெறுகின்றனர் பின்னே ஏன் காதலன் யுவனை நிராகரிக்கிறார் என்று புரியவில்லை.

துர்காவாக வரும் சிஞ்சு மோகன் நல்ல நடிப்பை வழங்கியுள்ளார் குணச் சித்திரமாகப் பளிச்சிட்டுள்ளார். தயாரிப்பாளர் செந்தில்வேல் மருது என்கிற வில்லனாக வருகிறார். துடிப்பான நடிப்பில் வெறுப்பேற்றி வசவுகள் வழியாகவே பாராட்டு பெறுகிறார்.

பாக்யராஜை இன்னமும் புத்திசாலித் தனமான காட்சிகளில் பயன் படுத்தியிருக்கலாம். சிலகாட்சிகள் பழைய படத்து உணர்வைத் தருகின்றன

Ayyanar Veethi stills 3

சிங்கம்புலியின் காமெடி பெரிதாக எடுபடவில்லை. யூகே முரளியின் இசையில் பாடல்களில் திறமை. காட்டியுள்ளார். ‘வராரு ஐயன் வராரு ‘கோயில்களில் இனி தூள்கிளப்பும்.

‘பொண்ணுங்களை பொறுத்தவரை’ கானாபாணி கலக்கல். ‘கண்ணுச் சாராயம் முன்னாலே’ குத்துப்பாட்டு .’அன்பு கொண்ட ஐயன் முகம்’ இனிமை ரகம். கிராமத்து இயல்பை அழகை யதார்த்தமாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் சக்திவேல் .பாடல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.

ஆங்காங்கே பிரியும் இளைக்கதைகளை இயக்குநர் தவிர்த்தால் ‘அய்யனார் வீதி’ தேரோட்டம் ஒரே நேர்க் கோட்டில் சென்றிருக்கும் .

 

More Articles
Follows