தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஸ்டோரி…
ஷபீர் ஒரு ராணுவ வீரர். இவரது மனைவி மிர்ணா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
தனது மனைவிக்கு இயற்கை முறையில் பிரசவம் பார்க்க வேண்டும் என விரும்புகிறார். இதற்காக கேரளா அருகே உள்ள வனப்பகுதிக்கு மனைவியை அழைத்துக்கொண்டு செல்கிறார்.
அங்குள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் சென்று அங்கு பிரசவம் பார்க்க சொல்கிறார்.. அந்தப் பகுதியில் அடிப்படையான மருத்துவ வசதி ஆம்புலன்ஸ் வசதி என எதுவுமே இல்லாததை காணும் மிர்ணா பிரசவத்தை நினைத்து பயப்படுகிறார்.
ஒரு கட்டத்தில் இந்த குழந்தை என்னுடையது அல்ல இது உன்னுடைய குழந்தை என மனைவி மீது சந்தேகம் கொள்கிறார் ஷபீர்.
அவருடைய மன மாற்றத்திற்கு என்ன காரணம்? இதற்குப் பின்னணியில் ஏதேனும் காரணங்கள் உள்ளதா? மருத்துவர்கள் சொன்ன முறையை பின்பற்றினாரா மிர்ணா? பிரசவம் நல்ல முறையில் நடைபெற்றதா.? என்பதுதான் படத்தின் மீதிக்கதை
கேரக்டர்ஸ்…
படத்தின் ஆரம்பத்திலேயே நாயகன் & நாயகி கண்ணை கட்டிக்கொண்டு காட்டில் செல்கின்றனர்.. ஒருவரை ஒருவர் பார்க்காமல் முத்தமிட்டு திருமணமும் செய்து கொள்கின்றனர். அதன் பின்னர் தான் கதை ஓட்டம் ஆரம்பிக்கிறது.
சார்பட்டா பரம்பரையில் நம் கவனம் ஈர்த்த ஷபீர் நாயகனாகவும் ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்ணா நாயகியாகவும் நடித்துள்ளனர். ஷபீர் கல்லரக்கலும் மிர்னாவும் கணவன் மனைவியாக நடித்துள்ளனர்..
ஒரு நிறைமாத கர்ப்பிணியை நம் கண் முன் நிறுத்தி இருக்கிறார் மிருணா.. பிரசவ வலிகளையும் கணவன் தன் மீது சந்தேகம் கொள்ளும் எரிச்சலை தாங்கிக் கொள்ளும் பெண்ணாக நடித்திருக்கிறார்.
நீண்ட தாடி என முரட்டுத்தனமாக தோன்றும் ஷபீர் திடீரென கிளீன் ஷேவ் செய்து ஸ்மார்ட் ஆக மாறிவிடுகிறார்.
ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கும் ஷபீர் அந்த மருத்துவ மையத்தில் வேலை பார்க்கும் ஒருவனிடம் சண்டை போடுவது ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. காட்டுப்பகுதியில் சிகரெட் பிடிக்கக் கூடாது என வேலைக்காரன் சொல்கிறார். இது ஒரு ராணுவ வீரனுக்கு தெரியாதா? அவர் அதை மதிக்க வேண்டாமா? என்ற பல கேள்விகள் எழுகின்றன.
இவர்களுடன் வேலைக்காரனாக நடித்த இந்திரஜித் நடிப்பில் நம்மை ஈர்த்து விடுகிறார். வாய் பேச முடியாதவராக இருக்கும் இவர் காட்டும் முகபாவனைகள் சிறப்பு..
இவர்களுடன் பி.ஆர்.வரலட்சுமி, தீப்தி, இந்திரஜித், பொற்கொடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
மருத்துவ மையத்தில் வேலை பார்க்கும் இரண்டு பெண்களும் தேவையான பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர். மொத்தமே 8 கேரக்டர்களை மட்டுமே வைத்து படத்தை முடித்து விட்டார் இயக்குனர்.
டெக்னீசியன்ஸ்…
விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.. பின்னணி இசை ரசிக்கும்படியாக இருப்பது பாராட்டுக்குரியது.
உதய் தங்கவேலு அவர்களின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. மருத்துவ மையத்தில் பிரசவ அரங்கம் அமைக்கப்பட்டிருக்கும்.. அந்த அரங்கத்தின் ஓவியம் மற்றும் லைட் செட்டிங் ரசிக்க வைக்கிறது.
விக்ரம் ஸ்ரீதரன் என்பவர் படத்தை இயக்கியிருக்கிறார்.. சிசேரியன் செய்து கொள்ளாமல் பிரசவம் பார்க்க வேண்டும் இயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என வித்தியாசமான திரை கதையை கையாண்டு இருக்கிறார் இயக்குனர் ஆனால் இந்த ஒற்றைக் கருவை மட்டும் வைத்து இரண்டு மணி நேரம் கதை சொல்லி இருப்பது தான் படத்திற்கு சோர்வை தருகிறது.
மேலும் ஓர் இந்திய நாட்டையும் இந்திய மக்களையும் நேசிக்கும் ஒரு ராணுவ வீரர் மனைவி மீதும் வேலைக்காரர்கள் மீதும் வெறுப்பு காட்டுவது ஏனோ.? அதற்குப் பின்னணியில் தன் பெற்றோர் மனநிலையை காட்சிப்படுத்தி இருந்தாலும் பெரிதாக ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை.
சைக்கலாஜிக்கல் திரில்லர் பாணியில் இயக்கியிருக்கிறார்.. இது ஏ கிளாஸ் ஆடியன்ஸ்க்கு பொருந்தினாலும் B&C சென்டர் ஆடியன்ஸ்க்கு எடுபடுமா என்பது சந்தேகமே.!
தமிழில் படமாக்கப்பட்ட இந்த படத்திற்கு பர்த் மார்க் என்ற ஒரு ஆங்கில பெயரை வைத்து இந்த படம் அந்நியப்பட்டு நிற்கிறது.
BIRTH MARK movie review and rating in tamil