தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
தன் வீட்டில் உள்ள கடன் பிரச்சனையால் சென்னைக்கு வருகிறார் நாயகன் ஆதி. அங்கு தன்னுடைய நண்பர் ஹைடெக் திருடன் யோகிபாபு உடன் இணைகிறார்.
இவர்கள் பணி புரியும் கம்பெனியில் ஜான்விஜய் ஒரு ப்ராஜெக்ட் கொடுக்கிறார். அதற்கு அட்வான்ஸாக 50 லட்சம் ரூபாய் கொடுக்கிறார். இந்த பணத்தை யோகி பாபு ஒரு கட்டத்தில் அரசியல்வாதி ரவி மரியாவிடம் கொடுத்து.. “நான் வந்து திருப்பி கேட்டால் மட்டும் தான் இந்த பணத்தை கொடுக்க வேண்டும் என கூறி செல்கிறார்.
அதன்படி சயின்டிஸ்ட் பாண்டியராஜனிடம் இருக்கும் ஒரு சிப்பை திருட செல்கின்றனர் ஆதி & யோகிபாபு.. அங்கே தவறுதலாக யோகிபாபுவின் கழுத்தில் ஒரு ஊசி ஏற்றப்படுகிறது. மறுநாள் காலை கண்விழித்ததும் யோகி பாபு ஒரு பெண்ணாக ஹன்ஷிகாவாக மாறிவிடுகிறார்.
அதன் பிறகு என்ன ஆனது.? ஹன்சிகா மீண்டும் யோகிபாபு போல ஆனாரா.? அந்த சிப் திருட வந்தவர்கள் என்ன ஆனார்கள்.? ஆதி கடனை அடைத்தாரா? ரவி மரியா பணத்தை என்ன செய்தார்? ஜான்விஜய் யோகி பாபுவை கண்டுபிடித்தார் ?என்பதுதான் படத்தின் மீதிக்தை
கேரக்டர்கள்…
பல படங்களில் கம்பீரமாக நடித்த ஆதி இதில் ஜாலி கேரக்டருக்கு முயற்சி செய்துள்ளார்.. பெரிதாக ஒர்க்கவுட் ஆகவில்லை என்றாலும் ஓரளவுக்கு சமாளித்து இருக்கிறார்.
இடைவேளைக்குப் பிறகுதான் ஹன்சிகா வருகிறார்.. அவர் வந்தவுடன் படத்தின் விறுவிறுப்பு கொஞ்சம் கூடினாலும் திரைக்கதை வேகம் இல்லாத காரணத்தினால் ஹன்சிகாவின் நடிப்பும் வீணடிக்கப்பட்டுள்ளது.
யோகிபாபு வழக்கம் போல டேய் என மரியாதை இல்லாமல் பேசி காமெடி செய்ய முயற்சித்துள்ளார்.. சில காமெடி மட்டுமே ஒர்க் அவுட் ஆகி உள்ளது.
வில்லனாக ஜான் விஜய், விஞ்ஞானியாக ஆர்.பாண்டியராஜன், ஆதியின் காதலியாக பல்லக் லல்வானி ஆகியோரும் உண்டு.
ரோபோ சங்கர், ‘பழைய ஜோக்’ தங்கதுரை, ‘டெம்பிள் மங்கீஸ்’ அகஸ்டின், யோகி பாபுவின் காதலியாக ‘மைனா’ நந்தினி, ஹெச்.ஆராக வரும் முனிஷ்காந்த், அமைச்சர் அக்னி குஞ்சாக வரும் ரவி மரியா ஆகியோருக்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லை.
டெக்னீசியன்கள்…
இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் ஹிட் ஆல்பமான ‘ராட்டி’ பாடலை இந்தப் படத்தில் வைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
பொண்ணுங்க தம் அடிப்பாங்க; தண்ணி அடிப்பாங்க. கோவம் வந்தா புருஷனைப் போட்டு அடிப்பாங்க. கேட்டா ஃபெமினிசம்னு சொல்லுவாங்க’ என்று யோகிபாபு பேசும் டயலாக்கில் பெண்ணுரிமை வாதிகளுக்கு என்ன சொல்ல வருகிறார்.?
ஷபீர் அகமதுவின் ஒளிப்பதிவு நேர்த்தியாக உள்ளது.
இயக்குனர் மனோஜ் தாமோதரன்… இயக்கியுள்ளார்.. லாஜிக் பார்க்காமல் படத்தை காமெடியாக கொடுக்க முயற்சி செய்துள்ளார்.. ஆனால் காமெடியாவது அதிகம் இருந்தால் லாஜிக்கை மறந்து இருக்கலாம்.. படத்தின் நீளம் மட்டுமே குறைவு என்பதால் ஓரளவுக்கு பொறுத்துக் கொள்ள முடிகிறது..
யோகி பாபுவாக மாறுகிறார் ஹன்சிகா. அதற்கு ஆண் குரல் கொடுத்து இருக்க வேண்டும்… ஆனால் டப்பிங் கலைஞர் சவிதாவின் குரலை கொடுத்து இருக்கிறார்கள்.. அவர் தன்னுடைய பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.. ஹன்சிகா தன்னுடைய பாடி லாங்குவேஜ் ஆண்களுக்கு ஏற்ப மாற்றி இருப்பது பாராட்டுக்குரியது.
ஆனால் யோகிபாபுவின் பாடி லாங்குவேஜ் கொண்டு வந்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
ஆக பார்ட்னர்.. ரசிகர்கள் பாவம்மய்யா
partner movie review and rating in tamil