பக்கா ட்ரீட்மெண்ட்… டாக்டர் விமர்சனம் 4/5

பக்கா ட்ரீட்மெண்ட்… டாக்டர் விமர்சனம் 4/5

டாக்டர் படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. டாக்டர் எப்படி இருக்கிறார் என பார்ப்போமா..?

கதைக்களம்…

நாட்டின் எல்லையில் ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் நடைபெறும் துப்பாக்கிச்சூட்டில்தான் படம் தொடங்குகிறது.

ராணுவத்தில் மருத்துவராக பணிபுரியும் வருண் டாக்டராக சிவகார்த்திகேயன். இவர் ஒரு நேர்மையான மருத்துவர்.

நாயகி பத்மினியாக பிரியங்கா மோகன். இவர்களுக்கு நடக்கவிருந்த திருமணம் ஒரு பிரச்சினையால் நிற்கிறது.

ஒரு கட்டத்தில் பள்ளிக்குப் போன பத்மினியின் அண்ணன் மகள் ஒரு கும்பலால் கடத்தப்படுகிறார். பத்மினியின் அண்ணியாக வரும் அர்ச்சனாவின் குழந்தை காணாமால் போகிறது.

அந்த சிறுமியைக் கண்டுபிடிக்க களத்தில் இறங்கி தன்னை பிடிக்காது என்று சொன்ன நாயகிக்கு உதவுகிறார் டாக்டர் வருண்.

அந்த கும்பல் யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்..

கமர்சியல் ஹீரோ என்றாலும் ஒரே மாதிரியான படங்களை செய்யாமல் நெக்ஸ்ட் ரூட் போட்டிருக்கும் சிவகார்த்திகேயனை நிச்சயம் பாராட்டலாம். சபாஷ் டாக்டர்.. உங்க பேஷண்டும் (ரசிகர்களும்) ஹாப்பி தான் சிவா.

இந்த படத்தில் கவுண்டர் காமெடிகள் கொடுக்காமல் சிக்ஸர் அடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இளைஞர்களின் டார்லிங் மெழுகு சிலையாக வலம் வருவார் பிரியங்கா மோகன். இவரின் நடிப்பை விட அழகு பேசப்படும்.

கோலமாவு கோகிலா மற்றும் சந்தானத்தின்’,‘ஏ1’ படங்களில் ரெடின் கிங்ஸ்லீயின் காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது.

அதை இதிலும் இம்மியளவு கூட குறையாமல் செய்துள்ளார்.

யோகிபாபு ஹீரோவாக நடிப்பதை விட காமெடி கேரக்டரில் அதிகம் ஸ்கோர் செய்யலாம். இதில் யோகிபாபுவும் பின்னி பெடலடுத்துள்ளார். ரெடின் கிங்ஸ்லி-யோகி பாபுவின் காம்போ தமிழ் சினிமாவுக்கு புதுசு.

வித்தியாசமான வில்லன் வேடத்தில் வினய்.. தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மற்றொரு ஸ்டைலிஷ் வில்லன் இவர். சிவகார்த்திகேயன் & வினய் பேசி மோதிக் கொள்ளும் காட்சிகள் வித்தியாசமான சிந்தனை.

இவர்களுடன் இளவரசு, அருண் அலெக்ஸாண்டர், அர்ச்சனா ஆகியோரின் பங்களிப்பும் பாராட்டுக்குரியது.

ஓரிரு காட்சிகளில் வரும் மிலிந்த் சோமனும் நம் கவனம் ஈர்க்கிறார்.

தீபா அக்கா இதில் வேற லெவல். சாகறத்துன்னு முடிவு ஆச்சு.. எப்படி இறந்தா என்ன? இவர் கேட்கும் போது செம.

ஆல்வின், மெல்வினாக ரகுராமும், ராஜீவ் லட்சுமணனும் ட்விஸ்ட் கொடுக்க வந்துள்ளனர்.

சுனில் ரெட்டி, அவரது அடியாள் சிவா ஆகியோரும் சூப்பர். கவனிக்க வைத்துள்ளனர்.

டெக்னீஷியன்கள்..

அனிருத்தின் பின்னணி இசையும் சரி பாடல்களும் சரி தெறிக்கவிட்டுள்ளார். இவையிரண்டும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. சிவகார்த்திகேயன் படம் என்றால் அனிருத்துக்கு அல்வா சாப்பிடுவது போல வெளுத்து கட்டியிருக்கிறார்.

செல்லம்மா பாடலும் அதனை படமாக்கிய விதமும் நன்றாக ரசிக்க வைக்கிறது. அதில் ஆர்ட் டைரக்டரின் கைவண்ணம் சூப்பர்.

சென்னை மற்றும் கோவாவின் அழகை தன் கேமராவுக்குள் கடத்தி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன்.

நிர்மலின் படத்தொகுப்பு கச்சிதம். 2ஆம் பாதியில் கொஞ்சம் எடிட் போட்டிருக்கலாம். கதையை ரசிகர்களால் யூகிக்க முடிகிறது.

இயக்கம் பற்றிய அலசல்…

டாக்டர் இப்படியெல்லாம் செய்வாரா? என்ற கேள்வி இருக்கலாம். சமூக அக்கறையுள்ள டாக்டர் இப்படி செய்வார் என்று சொல்லலாம்.

காமெடி வசனங்கள் செம.. சிரிக்க வைப்பதையே டார்க்கெட்டாக பயன்படுத்தியுள்ளார் டாக்டர் கம் டைரக்டர் நெல்சன்.

‘டாக்டர்’ செம டக்கர்..; விஜய்யை இயக்கி விட்டு மீண்டும் சிவகார்த்திகேயனை இயக்கும் நெல்சன்.; புரொடியூசர் இவரா?

ஆனால் சில வசனங்கள் பெண்களை விமர்சிக்கும் வகையில் உள்ளது. அழகா இருக்கிற பெண்களுக்கு அறிவு இருக்காது.. உள்ளிட்ட வசனங்களை தவிர்த்திருக்கலாம்.

மெட்ரோ பைட் சீன் மற்றும் இடைவேளைக்கு முன்பு வரும் காட்சிகள் அசத்தல்.

நிறைய படங்களில் சிவகார்த்திகேயன் பேசிக் கொண்டே இருப்பார். ஆனால் இதில் சிவகார்த்திகேயனை கம்மியாக பேச வைத்து அவரின் நடிப்பை பேச வைத்துள்ளார் நெல்சன். கோலமாவு கோகிலா பார்முலாவை இதிலும் பயன்படுத்தி ரசிகர்களுக்கு பக்கா காமெடி ட்ரீட்மெண்ட் கொடுத்துள்ளார்.

ஆக.. இந்த டாக்டரின் ட்ரீட்மெண்ட் பக்கா…

Doctor movie review and rating in Tamil

Related Articles