தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதை என்ன?.
மாமா சரவணன்… மாப்பிள்ளை விதார்த்.. வெட்டித்தனமான வாழ்க்கை வாழ்கிறார் சரவணன். இவரது சகோதரி மகன் விதார்த்.
ஒரு கட்டத்தில் தங்கள் வீட்டின் பின்புறத்தில் கழிவறை கட்ட டாய்லெட் கட்டிக் கொள்ள அரசு மானியம் கிடைக்கிறது. இதனால் வீட்டின் பின்புறம் குழி தோண்ட அங்கே ஒரு புதையல் கிடைக்கிறது. குழி தோண்ட வருபவர் ஜார்ஜ் மரியான்.
அப்போது சோழர் கால ஆயிரம் பொற்காசுகள் கிடைகின்றன. இதை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதால் அதை மறைக்க பல திட்டங்கள் போடுகின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில் இது பலருக்கும் தெரிய வரவே அனைவரும் பங்கு கேட்கின்றனர்.
அதை அனுபவிக்க முடிந்ததா…? என்பதுதான் படத்தின் கதை.
கேரக்டர்ஸ்…
விதார்த், பருத்தி வீரன் சரவணன், அருந்ததி நாயர், ஜார்ஜ் மரியான், வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, பாரதி கண்ணன், செம்மலர் அன்னம் மற்றும் பலர் நடித்துள்ளனர் கதைக்குத் தேவையான நடிப்பை சரவணனும் விதார்தம் பங்கு போட்டு செய்திருக்கின்றனர்.
ஆனால் இவர்களையெல்லாம் மிஞ்சி ஸ்கோர் செய்து இருக்கின்றனர் ஜார்ஜ் மரியான் மற்றும் ஹலோ கந்தசாமி. இரட்டை நாயகர்களாக இவர்கள் இருவரும் ஜொலிக்கின்றனர். காட்சிகளில் காமெடிக்கு பஞ்சம் இல்லை.
நாயகனை பார்த்ததும் காதலிக்கும் நாயகியாக அருந்ததி நாயர். இவரின் கண்கள் இவருக்கு பெரிய பிளஸ் பாயிண்ட்.
நார்த் இந்தியா பிச்சைக்காரன் கேரக்டர் படத்தில் ரசிக்கும்படியாக இருக்கிறது ஆனால் கதை ஓட்டத்திற்கு பெரிதாக உதவவில்லை என்பதை உண்மை.
டெக்னிசியன்ஸ்..
அறிமுக இயக்குநர் ரவி முருகையா இயக்கி இருக்கிறார்.
பானுமுருகன் ஒளிப்பதிவு செய்ய, ஜோஹன் இசையமைத்து இருக்கிறார்.
விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் இருந்ததோடு ஈரமான ரோஜாவே போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய கேயாரின் கே.ஆர்.இன்போடெயின்மெண்ட் சார்பில் இப்படம் வெளியாக உள்ளது.
ஜனங்கள் ரசிக்க ஜன ரஞ்சகமான படத்தை கொடுக்க வேண்டும் என படக் குழுவினர் முடிவு செய்து அதற்கு ஏற்ப திரைக்கதை அமைத்து செய்திருப்பது பாராட்டுக்குரியது.
படத்தின் ஒளிப்பதிவு பின்னணி இசையும் கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. சில காட்சிகளில் நாடகத் தன்மை தென்பட்டாலும் லாஜிக் மறந்து காமெடியை ரசிக்கலாம்.
ஆயிரம் பொற்காசுகள்.. பொன் நகைச்சுவை
aayiram porkasugal movie review and rating in tamil