First on Net கடவுள் தந்த காதல்… Oh My கடவுளே விமர்சனம் 3.5/5

First on Net கடவுள் தந்த காதல்… Oh My கடவுளே விமர்சனம் 3.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் இருவரும் பள்ளி பருவம் முதலே நண்பர்கள். இவர்களின் இன்னொரு நண்பர் ஷாரா. இவர்களின் 2 வயது சீனியர் வாணி போஜன்.

ஒரு கட்டத்தில் அசோக் செல்வனை திருமணம் செய்துக் கொள்ள ஆசைப்படுகிறார் ரித்திகா சிங்.. அவர் மீது காதல் இல்லை என்றாலும் சரி ப்ரெண்டுதானே என ஓகே சொல்கிறார் அசோக்.

ஒரு கட்டத்தில் வாணி போஜனால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட விவாகரத்து வரை செல்கிறது.

சிரிப்பா சிரிக்குது… நான் சிரித்தால் விமர்சனம் 3/5

அப்போது கடவுள் ரூபத்தில் வரும் விஜய்சேதுபதி உன்னுடைய வாழ்க்கையை மாற்றியமைக்க ஒரு வழி சொல்கிறேன். முடிந்தால் நீ மறுபடியும் உன் வாழ்க்கையை மாற்றி கொள் என அசோக்கிடம் சொல்கிறார்.

அதன்பின்னர் என்னானது? அசோக் என்ன செய்தார்? அவரின் காதல் குடும்பம்? கடவுள் அப்படி என்ன வரம் கொடுத்தார்? என்பதே மீதிக்கதை.

வாழை கொட்டுடிச்சி… வானம் கொட்டட்டும் விமர்சனம்

கேரக்டர்கள்…

அசோக் செல்வனுக்கு இது அல்வா சாப்பிடும் கேரக்டர் போல. அப்படி அசத்தியிருக்கிறார். அப்பாவித்தனம் முதல் ரொமான்ஸ வரை சிறப்பாக செய்துள்ளார்.

நூடுல்ஸ் மண்டை பெண்ணாக ரித்திகா சிங் (அசோக் இவரை அப்படிதான் செல்லமாக அழைப்பார்.) கிக் பாக்சிங் வீராங்கனை இதில் குடும்ப பெண்ணாக அதே சமயத்தில் சந்தேகப்படும் பெண்ணாக கிக் அடித்திருக்கிறார். ரித்திகா ரியலி சூப்பர்.

டிவியில் கலக்கிய வாணி போஜன் இதில் அறிமுகம். அவருக்கு குறையில்லாமல் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார்.
ஷாரா படத்திற்கு தேவையான காமெடியை கொடுத்துள்ளார். சொன்னா புரியாது.. சொன்னா புரியாது என இவரிடம் அசோக் சொல்லும்போது எல்லாம் செம காமெடி.

விஜய்சேதுபதியும் ரமேஷ் திலக்கும் தங்கள் பங்களிப்பில் சிறப்பு.

டாய்லெட் செராமிக்ஸ் விற்பனையாளராக எம்எஸ். பாஸ்கர். கக்கூஸில் அமர்ந்து இவர் சொல்லும் காமெடி கதைக்களம் புதிய ஒன்றுதான்.

சீறும் சிறுமிகள்… சீறு விமர்சனம்


தொழில்நுட்ப கலைஞர்கள்..

லியோன் ஜேம்ஸின் பின்னணி இசையும் பாடல்களும் ரசிக்க வைக்கிறது. கதைப்போமா…. பாடல் ரசிகர்களை கவரும்.

விது அய்யன்னாவின் ஒளிப்பதிவு படத்தின் உயிர்நாடி. காதலையும் கலர்புல்லாக காட்டியிருக்கிறார்.

பூபதி செல்வராஜின் எடிட்டிங் கொஞ்சம் வேறுபட்டாலும் இது எல்லாம் ரசிகர்களை கவருமா? தெரியவில்லை.

எளிதில் புரியும்படியாக வெட்டி ஒட்டியிருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.

ஜாதியற்ற ஜனங்களாவோம்… நாடோடிகள் 2 விமர்சனம் 4/5

க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் மற்றும் இடைவேளை ட்விஸ்ட் ரசிக்க வைக்கிறது.

என்னதான் காதல் படம் என்றாலும் கொஞ்சம் கூட காமம் இல்லாமல் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அஸ்வத்.

காதலர் தினத்தில் காதலர்கள் மட்டுமல்ல குடும்பமே கொண்டாடக்கூடிய படமாக தான் கொடுத்துள்ள டைரக்டர் அஸ்வத்தை நிச்சயம் பாராட்டலாம்.

ஆக.. ஓ மை கடவுளே… கடவுள் தந்த காதல்

Oh My Kadavule review rating

First on Net வாழை கொட்டுடிச்சி… வானம் கொட்டட்டும் விமர்சனம்

First on Net வாழை கொட்டுடிச்சி… வானம் கொட்டட்டும் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் தயாரிப்பில் சரத்குமார், ராதிகா, விக்ரம்‌ பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு, மடோனா, நந்தா, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வானம் கொட்டட்டும்’.

தனா என்பவர் இயக்க, சித்ஸ்ரீராம் இசையமைத்துள்ளார்.

கதைக்களம்…

பாலாஜி சக்திவேல் மற்றும் சரத்குமார் இருவரும் அண்ணன் தம்பி.

சரத்குமாரின் மனைவி ராதிகா. இவர்களுக்கு விக்ரம் பிரபு மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் என இரு பிள்ளைகள்.

தன் அண்ணன் பாலாஜி சக்திவேலுக்காக ஒரு கொலை செய்து ஜெயிலுக்கு செல்கிறார் சரத்குமார்.

இதனால் 16 வருடங்களாக வேலை செய்து தன் பிள்ளை வளர்க்க பாடுபடுகிறார் ராதிகா.

பிள்ளைகள் பெரியவர்கள் ஆனதும் வாழைக்காய் மண்டி வைத்து கோயம்பேட்டில் வியாபாரம் செய்கின்றனர்.

First On Net சீறும் சிறுமிகள்… சீறு விமர்சனம்

சிறையிலிருந்து சரத்குமார் வெளியே வந்த பின்னர் பிள்ளைகள் அவரிடம் சரியாக பேசுவதில்லை. இதனால் வெறுத்து மீண்டும் குடும்பதை விட்டு போகிறார் சரத்.

இதனிடையில் சரத்குமாரை கொல்ல திட்டமிட்டு நந்தா வருகிறார்.

அதன்பின்னர் என்ன ஆனது? சரத்குமார் உயிர் பிழைத்தாரா? குடும்பம் ஒன்று சேர்ந்த்தா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

படத்தில் இளைய நடிகர்கள் நிறைய இருந்தாலும் சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ரொமான்ஸ் மற்றும் காதல் இருக்கிறது. ஒருவேளை நிஜ தம்பதிகள் என்பதால்தானோ என்னவோ அது நிறையவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

இருவரும் தங்கள் நடிப்பில் கச்சிதம். அவர் ஜெயிலுக்கு போய்ட்டு வந்தாலும் அவர் தான் என் புருசன் அவரை விட்டு கொடுக்க முடியாது என்பதில் ராதிகா காட்டும் அன்பும் அக்கறை மெய் சிலிர்க்க வைக்கும்.

சீரியஸ் கேரக்டர் என்றால் அது விக்ரம் பிரபுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி போல. நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். நிறைய பைட் சீன்களை கொடுத்திருக்கலாம். ஆனால் குடும்பம், வாழைக்காய் மண்டி, வரவு செலவு என இப்படியே ஓட்டி விட்டார்கள்.

தங்கை வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலக்கல். சில நேரங்களில் ஓவர் ஆக்டிங் தெரிகிறது.

First On Net காடும்… நாட்டுமிராண்டிகளும்… அடவி விமர்சனம்

சாந்தனு பாவம். சர்போர்ட்டிங் கேரக்டர் போல வந்துள்ளார். இவருக்கும் ஐஸ்வர்யாவுக்கும் உள்ள காதல் உணர்வில்லை. திடீரென பூத்த பூ போல உள்ளது.

அதுபோல் விக்ரம் பிரபு மற்றும் மடோனா காதல் வேஸ்ட். படத்திற்கு தேவையில்லாத காட்சிகள்.

பாலாஜி சக்திவேல் கேரக்டர் பக்கா. யதார்த்த மனிதராக வாழ்ந்திருக்கிறார்.

மதுசூதனன் கேரக்டரை இன்னும் டெவலப் செய்திருக்கலாம். இவரின் மகன் கேரக்டரும் அப்படித்தான்.

வில்லனாக இரட்டை வேடத்தில் நந்தா. இரண்டும் ஓவர் பில்டப் தான். பொருந்தவில்லை. லுக் நல்லா இருக்கு. ஆனா வில்லத்தனம் போதவில்லை.

இடைவேளை கூட இவரை வைத்துதான் நகர்கிறது. ஆனால் சுவாரஸ்யம் இல்லை. இப்படிதான் காட்சி இருக்கும் என தெரிவதால் நம்மால் திரையை பார்க்க முடியவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு சூப்பர். படத்துடன் ஒன்ற வைக்க இது உதவுகிறது.

பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ளார். பாடல்கள் ஆங்காங்கே வந்தாலும் மனதில் ஒட்டவில்லை. கண்ணுத் தங்கம்… பாடல் பரவாயில்லை. அவரின் குரல் ஈர்த்த அளவுக்கு இசை ஈர்க்கவில்லை.

குறைவான நிமிடத்தில் சொல்ல வேண்டிய கதையை ரொம்ப நீட்டிவிட்டார் தனா. எந்த ட்விஸ்ட்டும் இல்லை. நிறைய இளைய நடிகர்கள் இருந்தும் காதல் துளி கூட இல்லை.

தன் குருநாதர் மணிரத்னம் பாணியில் படத்தை கொடுக்க நினைத்துள்ளார். ஆனால் பெரிதாக ஸ்கோப் இல்லை. மனதில் பதிகின்ற போல நச் வசனமும் படத்தில் இல்லை.

அப்பா பிள்ளைகள் உறவு, பழிவாங்கும் கதை என வழக்கமான கதையை கொடுத்துள்ளார். சென்டிமெண்ட் காட்சிகள் குடும்ப பெண்களுக்கு பிடிக்கும்.

ஆக.. இந்த வானம் கொட்டட்டும்.. வாழை கொட்டுடிச்சி

First on Net சீறும் சிறுமிகள்… சீறு விமர்சனம்

First on Net சீறும் சிறுமிகள்… சீறு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

மயிலாடுதுறையில் (மாயவரம்) கேபிள் டிவி நடத்தி வருகிறார் மணிமாறன் (ஜீவா). எனவே அந்த ஊர் முழுக்க பிரபலமாகிறார்.

இந்த டிவி மூலம் நிறைய சமூக பணிகளை செய்வதால் இவருக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். நண்பன் என்று இவரை சொன்னாலோ எதையும் செய்ய தயங்காதவர் ஜீவா.

இவரின் நேர்மையால் அந்த ஊரின் பிரபலம் பாதிக்கப்படுகிறார்.

எனவே ஜீவாவை தீர்த்து கட்ட சென்னையில் உள்ள மல்லி (வருண்) என்ற தாதாவை மாயவரம் வரவைக்கிறார்.

ஜீவாவை கொல்ல வரும் வருண் அப்போது ஜீவாவின் தங்கை பிரசவத்துக்கு ரத்தம் கொடுத்து உதவுகிறார்.

இதனால் வருணை பார்க்க வேண்டும் என தங்கையும் கோரிக்கை வைக்கிறார்.

First On Net வாழை கொட்டுடிச்சி… வானம் கொட்டட்டும் விமர்சனம்

தன் தங்கை உயிரை காப்பாற்றிய வருணிடம் தன்னை கொல்ல தானாகவே செல்கிறார் ஜீவா.

அதன்பின்னர் என்ன ஆனது? என்பதே மீதி கதை.

கேரக்டர்கள்…

தெனாவெட்டு, ரௌத்திரம் உள்ளிட்ட பல படங்கள் பாணியில் ஜீவா தெரிகிறார். ஆனால் இதிலும் இன்னும் கூடுதல் ஸ்மார்ட்டாக இருக்கிறார்.

அதிரடியிலும் நட்பிலும் பாசத்திலும் நம்மை அசத்திவிடுகிறார் ஜீவா.

ஹீரோயின் படத்தில் இருந்தாரா? என்ற கேள்வி நம்மில் எழும். அந்தளவிற்கே நாயகி பாத்திரம் உள்ளது. இவருக்கு டூயட்டும் உள்ளது.

ஜீவாவின் தங்கையாக வரும் அபிராமி மற்றும் கிராமத்து சாதனை மாணவி சாந்தினி இருவரும் நடிப்பில் கச்சிதம்.

கோலி சோடா படத்தில் பார்த்த சாந்தினி இதில் கொஞ்சம் ஒல்லியாக இருக்கிறார். ஆனால் நடிப்பில் கில்லியாக வெளுத்துவிட்டார்.

+2 படிப்பில் சாதித்துவிட்டு இவர் மீடியா முன் பேசும் பேச்சு சிறுமிகளை உற்சாகப்படுத்தும். இவரின் முடிவுக்கு பின்னர் இவரது தோழிகள் எடுக்கும் முடிவு சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.

ஒரு பையனுக்கு பிரச்சினை என்றால் மாமா மச்சி என்று ப்ரெண்ட்ஸ் வர்றாங்க. எங்களுக்கு யாருமில்லை. இனிமே நாங்கதான். என இவர்கள் புறப்படும் காட்சி ரசிக்க வைக்கிறது.

First On Net காடும்… நாட்டுமிராண்டிகளும்… அடவி விமர்சனம்

ரயில்வே ஸ்டேஷனில் ஒரு பெண்ணை வெட்டும்போது யாரும் அவளை காப்பாற்ற வரவில்லை. இங்கே பெண்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என அவர்கள் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் நெத்தியடி.

மல்லி கேரக்டரில் மாஸ் காட்டியுள்ளார் வருண். ஹீரோ மட்டும்தான் நடிப்பேன் என்றில்லாமல் இதுபோல் வித்தியாசமான வேடங்களையும் இவர் ஏற்கலாம்.

வில்லனாக நவதீப். கொஞ்சமாக மிரட்டியிருக்கிறார்.

சதீஷின் காமெடிகளுக்கு படத்தில் ஜீவாவே சிரிப்பு வரல என்கிறார். அப்புறம் நாம் எப்படி சிரிப்பது.

96 படத்தை பார்த்துவிட்டு இந்த படத்தைவிட என்றென்றும் புன்னகை படத்தில் த்ரிஷா செமயாய் இருப்பாங்க. ஆனால் அதில் ஹீரோ சுமார்தான் என்பார் ஜீவா. அதற்கு நீ சந்தானம் ப்ரெண்ட் போல காமெடி பண்ணாத என்பார். இதுபோல் மொக்கை ஜோக்குகளே உள்ளன.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

இமானின் பின்னணி இசை நன்றாக உள்ளது.

பார்வையற்ற குருமூர்த்தி பாடியுள்ள செவ்வந்தியே… மதுவந்தியே.. என்ற பாடல் என்றும் மனதில் ஓடிக் கொண்டே இருக்கும். நம்மை உருக வைக்கும் குரல் அது.

இடைவேளைக்கு முன்பு வரும் பாடல்கள் பெரிதாக கவரவில்லை.

ஜாதியற்ற ஜனங்களாவோம்… நாடோடிகள் 2 விமர்சனம் 4/5

மாயவரம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளின் காட்சிகள் கலர்புல்லாக உள்ளது. ஒளிப்பதிவை பாராட்டலாம்.

படத்தின் நீளமே சிறியது தான் என்றாலும் இன்னும் வெட்டியிருக்கலாமே எனத் தோன்றுகிறது.

வா டீல் மற்றும் றெக்க ஆகிய படங்களை இயக்கிய ரத்ன சிவா இந்த படத்தை இயக்கியுள்ளார். வா டீல் படம் ரிலீசாகவில்லை.

றெக்க படத்தை போல அதே பாணியில் இதிலும் முயற்சித்துள்ளார். ஆக்சன், சென்டிமெண்ட், பாட்டு என்பதுதான் இவரது பார்முலா போல. அதில் பாஸ் செய்துள்ளார். ஆனால் பார்முலாவை மாற்றிக் கொண்டால் அவருக்கும் ரசிகர்களுக்கும் நல்லது.

சீறு… சீறும் சிறுமிகளின் கதையே படத்தின் பலம்.

Seeru review rating

First on Net காடும்… நாட்டுமிராண்டிகளும்… அடவி விமர்சனம்

First on Net காடும்… நாட்டுமிராண்டிகளும்… அடவி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : வினோத் கிஷன், அம்மு அபிராமி, விஷ்னுப்ரியா, முத்துராமன், ஜெயச்சந்திரன் மற்றும் பலர்
இசை : சரத் ஜடா
ஒளிப்பதிவு : ரமேஷ்.ஜி
இயக்கம் : ரமேஷ்.ஜி
தயாரிப்பு : சாம்பசிவம்

நிறைய பேருக்கு அடவி என்றால் பொருள் தெரியாது.. அடவி என்றால் காடு எனப் பொருள்.

கதைக்களம்…

வழக்கமாக காடு பற்றிய கதை என்றாலே அங்குள்ள மக்களை விரட்டி அங்கு ரிஷார்ட்டு கட்ட ஒரு பணக்கார முதலை கூட்டம் திட்டமிடும். இதிலும் அதே கதைதான்.

கோத்தகிரி காட்டு மலைப்பகுதியில் ஒரு ரிசார்ட் கட்ட முயற்சிக்கிறார் மனோகரன். இதற்காக தாசில்தார், எம்எல்ஏ, போலீஸ் உள்ளிட்டோர்களுடன் தீட்டம் தீட்டி அந்த காட்டில் வசிக்கும் மக்களை விரட்ட திட்டமிடுகின்றனர்.

மேலும் ரேஞ்சர் ரகுவீரனும் (ஜெயச்சந்திரன்) அங்குள்ள பெண்களை மானப்பங்கப்படுத்துகிறார். (இவரின் மீசையே டெரர் லுக் கொடுக்கிறது.)

இவர்களின் திட்டம் அறிந்து முருகன் (வினோத்), வள்ளி (அம்மு அபிராமி) யும் மக்களை ஒன்று சேர்த்து அந்தக் கும்பலை எதிர்த்துப் போராடுகிறார்கள்.

First On Net வாழை கொட்டுடிச்சி… வானம் கொட்டட்டும் விமர்சனம்

இறுதியில் வென்றது யார்? என்பதே மீதிக் கதை.

கேரக்டர்கள்…

நந்தா, நான் மகான் அல்ல, ஆகிய படங்களில் கொடூர வில்லனாக நடித்த வினோத் கிஷன் இதில் நாயகன்.

கிராமத்து நாயகனாக சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். ஆக்சனிலும் கோபத்திலும் சிறப்பு. வள்ளியாக வரும் அம்மு அபிராமி

காட்டுத்தனமான அழகு. பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

First On Net சீறும் சிறுமிகள்… சீறு விமர்சனம்

வள்ளியின் தோழியாக நடித்துள்ள விஷ்ணுப்பிரியா வின் கேரக்டர் நிச்சயம் அனைவரையும் கவர்ந்து விடும்.

இவர்கள் தவிர படத்தின் துணை கேரக்டர்களாக வரும் பாத்திரங்களுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வாய்ப்புள்ளது.

காட்டை அழித்தால் அது நம்மையே அழிப்பதற்கு சமம் என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரமேஷ்.

யானை முதல் குருவிகள் வரை இணைந்து ஒரு காட்டையே உருவாக்கிறது. அதில் இருந்து கிடைக்கும் ஆக்சிஸன் தான் நம் வாழ்வின் ஆதாரம் ஆகாரம் எல்லாம். ஆனால் அந்த காட்டை அழித்து வாழ நினைக்கும் மனிதர்கள்தான் நிஜ காட்டுமிராண்டிகள்.

ஆனால் இவர்கள் காட்டில் வாழ்வதில்லை. நாட்டில் வாழ்வதால் இவர்களை நாட்டுமிராண்டிகள் என்றே சொல்ல வேண்டும்.

இந்த நாட்டு மிராண்டிகள் என்பது புது வார்த்தையாக இருந்தாலும் மிருகங்களை விட கொடியவர்களை இப்படித்தான் சொல்ல வேண்டும்.

ஜாதியற்ற ஜனங்களாவோம்… நாடோடிகள் 2 விமர்சனம் 4/5

அருமையான கதையை இன்னும் அழகாக சொல்லியிருக்கலாம். ஆனால் ஆவணப்பட போல காட்சிகளை நகர்த்தியுள்ளார்.

முக்கியமாக பாடல்கள் ஏனோ தானோ இருக்கின்றன. பாடல் வரிகள் கூட தானே.. தானே.. என வரிகளுக்கு பஞ்சம் போல உள்ளது.

மலைவாழ் மக்களாக வந்த போதிலும் நாயகன் மற்றும் நாயகி மட்டும் ஜொலிக்கின்றனர். கொஞ்சமாவது கிராமத்து சாயலில் காட்டியிருக்கலாம்.

ஒளிப்பதிவில் குறையில்லை. நன்றாகவே உள்ளது.

மலைவாழ் மக்கள் சப்பை என்ற தெய்வத்தை வணங்குவது வழக்கம். சப்பை காட்டுல இறங்கிட்டாள். என ஆரம்பிக்கும் படம் முதலில் எதிர்பார்ப்பை எகிற செய்கிறது. அப்போது 3 போலீஸ்காரர்கள் கூட கொல்லப்படுகிறார்கள்.

அதே வேகம், அதே பயம் ஆகியவற்றுடன் படத்தை கொண்டு சென்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

ஆக இந்த அடவி.. காடும் நாட்டு மிராண்டிகளும்..

Adavi review rating

ஜாதியற்ற ஜனங்களாவோம்… நாடோடிகள் 2 விமர்சனம் 4/5

ஜாதியற்ற ஜனங்களாவோம்… நாடோடிகள் 2 விமர்சனம் 4/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தை உலுக்கிய சங்கர் கௌசல்யாவின் ஜாதி ஆணவக்கொலையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் இது.

இதில் தமிழ் சினிமாவுக்கே தேவையான காதல், சமூக பிரச்சினை, அதிரடி சண்டை காட்சிகள், நண்பர்கள், கிராம பஞ்சாயத்து, தோழர் கதை, மக்கள் போராட்டம், காப்பர் கேன்சர் என அனைத்தையும் கலந்து அசத்தியிருக்கிறது சமுத்திரக்கனி மற்றும் சசிகுமாரின் கூட்டணி

கதைக்களம்…

ஊர் பிரச்சினைகளுக்கு தன் ஊதியத்தை செலவழிக்கும் நல்லவர் சசிகுமார். இவரின் தோழர்கள் அஞ்சலி (டாக்டர்) பரணி மற்றும் சிலர்.

ஊர் பிரச்சினைகளை சசிகுமார் கவனிப்பதால் உறவினர்களே (ஞான சம்பந்தம்) பெண் தர மறுக்கிறார்கள். இதனால் வயது ஓடிக் கொண்டே இருக்கிறது.

இதனால் ஒரு கட்டத்தில் பெண் ஓகே சொல்லிவிட்டால் போதும் என் சம்மதம் கூட தேவையில்லை என சொல்கிறார் சசி,
அப்போது அவர்களது ஜாதியை சேர்ந்த அதுல்யாவின் பெற்றோர் சம்மதிக்க திருமணம் நடக்கிறது.

ஆனால் சாந்தி முகூர்த்த சமயத்தில் ஒரு அதிர்ச்சி குண்டை போடுகிறார் அதுல்யா.

இதனால் சசியின் வாழ்க்கையே மாறுகிறது. அப்படி என்ன சொன்னார் அதுல்யா?, அவருக்கு என்ன பிரச்சினை?, அஞ்சலி என்ன செய்தார்? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதில் தான் க்ளைமாக்ஸ்.
Naadodigal 2 stills (1)

கேரக்டர்கள்….

நாடோடிகள் 2 படத்தை பொருத்தவரை பெரும்பாலான கேரக்டர்கள் படத்தின் வேர்களாக அமைந்துள்ளன.

சசிகுமார், அஞ்சலி, அதுல்யா, பரணி, நமோ நாராயணன், துளசி, ஞான சம்பந்தம் உள்ளிட்டோர் ஆணி வேர் என்றால் பவன், அவரின் மனைவி (வில்லி) திருநங்கை நமீதா, தோழர்கள், ஜாதி வெறியர்கள் உள்ளிட்டோர் படத்தை கிளை வேர்கள் போல வளர்த்துள்ளனர்.

இத்தனை பெருங்கூட்டத்தை அருமையாக வேலை வாங்கியுள்ளார் சமுத்திரக்கனி.

இந்த படத்தில் அட்வைஸை கூட அளவாக கொடுத்து, அதிரடியை அள்ளி கொடுத்துள்ளார் சமுத்திரக்கனி.

நாமாவோம் என்ற ஊர்வலம், கலவரம் காட்சி மற்றும் அந்த பாடல் படமாக்கப்பட்ட விதம் அருமை.

தோழர்கள் போராடும் போது எல்லாரும் ஒரே உடையில் வர வேண்டும் என கூறி விட்டு எல்லா பெண்களும் சிவப்பு சால் அணிந்திருக்க அஞ்சலி மட்டும் மெர்ருன் கலர் போட்டது ஏன்..? (ஒரு வேளை ஹீரோயின்)

Naadodigal 2 stills (2)

தொழில்நுட்ப கலைஞர்கள்..

ஜஸ்டின் பிரபாகரன்… சூப்பர்யா… மெலோடி பாடல்களை இதுநாள் வரை கொடுத்த இவர் பின்னணி இசையில் பின்னி பெடலடுத்துள்ளார்.

சம்போ சிவ சம்போ (நாடோடிகள் பார்ட் 1) பாடல் முதல் அனைத்தும் ரசிக்கும் வகையில் உள்ளது.

என். கே ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு ஏணிப்படியாக அமைந்துள்ளது.

மனதை அள்ளிய வசனங்கள்…

சந்தான+பாபு கூட்டணி மணக்கிறதா.? டகால்டி விமர்சனம்

விருப்பம் இல்லாமல் கணவன் மனைவி உடலுறவு கொண்டால் அது பிணத்துடன் படுப்பது சமம். எத்தனை காலம்தான் இப்படி?

உன் ஜாதி கட்சி தலைவன் அவனின் தொண்டர் குடும்பத்தில் மாப்பிள்ளை எடுப்பானா? ஜாதி என்றாலும் அதில் பணக்கார பேதம் உள்ளது.

திருமணம் செய்துக் கொள்ளும் முன் பெண்ணிடம் உனக்கு விருப்பம் இருக்கா? என எத்தனை ஆண்கள் கேட்டிருக்கிறார்கள்..?

இப்படி பல வசனங்கள் கைத்தட்டல்களை அள்ளும்.

Naadodigal 2 stills (3)

படத்தின் ப்ளஸ்…

பின்னணி இசையை பின்னி எடுத்துள்ளார் ஜஸ்டின் பிரபாகரன்.

சசிகுமார், அதுல்யா, அஞ்சலி, பரணி ஆகியோரின் மிகையில்லாத நடிப்பு

என். கே ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவில் கலவரம் காட்சிகள் மற்றும் அதிரடி சண்டை காட்சிகள் ரசிகர்களுக்கு மாஸ் விருந்து
முக்கியமாக சமுத்திரக்கனியின் விறுவிறுப்பான திரைக்கதை.

படத்தின் இயக்குனர் சமுத்திரக்கனியும் ஒரு காட்சியில் வந்து விறுவிறுப்பான திரைக்கதைக்கு பாஸ்ட் கியர் போட்டு எகிற வைத்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது உள்ள அரசியலையும் கலந்து சொல்லியுள்ளார்.

இனிவரும் தலைமுறையாவது சாதியற்ற சமுதாயமாக வளர வலியுறுத்தியுள்ளார்.

ஆக… நாடோடிகள் 2… ஜாதியற்ற ஜனங்களோவோம்..

Naadodigal 2 review rating

கல்லூரி தேர்தலும் காதலும்… உற்றான் விமர்சனம்

கல்லூரி தேர்தலும் காதலும்… உற்றான் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Casting : Roshan, Heroshini, Priyanka, Vela Ramamoorthy, Ravishankar
Directed By : O.Rajagajini
Music By : NR Raghunandan
Produced By : O.Rajagajini

கதைக்களம்…

காலேஜ் லவ்.. காலேஜ் பைட், இதனிடையில் அரசியல்வாதி மோதல் என அனைத்தையும் கலந்து ரிலீசாகியுள்ள படம் தான் இந்த உற்றான்.

அரசியல் மோதலை தாண்டி தன் காதலில் ஜெயித்தாரா? நாயகன் என்பது தான் கதை.

கேரக்டர்கள்…

அறிமுக ஹீரோ ரோஷன் நல்ல உயரம். ஸ்மார்ட்டாக் இருக்கிறார். காதலை விட ஆக்சனுக்கு நன்றாக பொருந்துகிறார்.

ஹீரோ கேரக்டர் போல் மற்ற கேரக்டர்களையும் தேர்ந்தெடுத்து நடித்தால் சினிமாவில் உயரலாம். இவரின் நண்பர்களாக வருபவரும் எதிரணியில் மோதும் மற்றொரு மாணவரும் நிச்சயம் கவனம் ஈர்ப்பார்.

ஹீரோயின் ஹீரோஷினி கச்சிதம். நல்ல நடிப்பை கொடுக்க முயற்சித்துள்ளார்.

உருகுதே.. உருகுதே பாடல் பிரியங்காவை யாரும் மறக்க முடியாது. இதில் டீச்சராக நடித்துள்ளார். முதலில் நாயகன் மற்றும் இவரின் உறவு தவறாக பட்டாலும் பின்னர் இயக்குனர் அதற்கு ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.

வில்லனாக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, மதுசூதன ராவ், ரவிஷங்கர் என அனைவரும் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் கானாவில் மெலோடி. ஆனால் இடைவேளைக்குள் 4-5 பாடல்கள் வருவது நம்தை சோதிக்கிறது,

எல்லாத்துக்கும் பாட்டா? இல்ல ரசிகனுக்கு வேட்டு.? எனத் தெரியவில்லை,

ஹோலிக் பிரபுவின் ஒளிப்பதிவில் குறையில்லை. எடிட்டர் தன் பணியை இன்னும் சரியாக செய்திருக்கலாம்.

க்ளைமாக்ஸ எதிர்பாராத ஒன்று. இதுநாள் வரை பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஆண்களுக்கு கொடுத்திருப்பது சற்று வித்தியாசம். ஆனால் அதை காவல்துறை அதிகாரி செய்வது அபத்தம்.

திரைக்கதையில் டைரக்டர் ராஜா கஜினி இன்னும் சுவாரஸ்யம் கொடுத்திருந்தால் இந்த உற்றானை ரசிகன் இன்னும் ரசித்திருப்பான்.

Uttraan review rating

More Articles
Follows