சிரிப்பா சிரிக்குது… நான் சிரித்தால் விமர்சனம் 3/5

சிரிப்பா சிரிக்குது… நான் சிரித்தால் விமர்சனம் 3/5

கதைக்களம்…

இந்த உலகத்தில் எத்தனையோ வினோத மனிதர்கள் இருக்கிறார்கள்.

ஒரு சிலருக்கு நாக்கில் கூட கரண்ட் வரவைக்கும் சக்தி உள்ளது. அதுபோன்ற வினோத மனிதர்கள் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறார் ஹிப் ஹாப் ஆதி.

அப்படி இவரிடம் என்ன வினோதம் என்றால்… வலியோ, துன்பமோ எது வந்தாலும் சிரித்து விடுவார்.

இழவு வீட்டிற்கு போனாலும் கஷ்டத்தால் சிரித்துவிடுவார்.

இதனால் வாழ்க்கையில் இன்பத்தையும் இழக்கிறார். காதலி முதல் ஐடி வேலை வரை இழக்கிறார்.

ஒரு கட்டத்தில் தன் உயிர் நண்பன் காணாமல் போன டில்லி பாபுவை தேடி செல்கிறார்.

First On Net கடவுள் தந்த காதல்… Oh My கடவுளே விமர்சனம் 3.5/5

அப்போது அதே ஏரியா டான் டெல்லி பாபுவை (கே.எஸ்.ரவிகுமார்) கொலை ஒரு கும்பல் திட்டமிடுகிறது.

இவரும் டில்லி பாபு என்ற நபரை தேடி செல்வதால் இவர் தான் அவர் என தப்பு கணக்கு போட்டு விடுகின்றனர்.

அப்போது ஹிப் ஹாப் சிரிக்க என்ன என்ன பிரச்சினைகளை சந்தித்தார் என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

தனக்கு ஏற்ற 90 கிட்ஸ் கதையை தேர்ந்தெடுத்திருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி. ஏற்கெனவே அவருக்கு சிரித்த முகம் என்பதால் கேரக்டர் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

ஆக்சன் தவிர பாட்டு, டான்ஸ், காமெடி என விளையாடியிருக்கிறார். ஆனால் சில இடங்களில் ஓவர் ஆக்டிங் உள்ளது. அதை குறைத்திருக்கலாம்.

மீசையை முறுக்கு, நட்பே துணை படங்களை ஒப்பிடுகையில் இதில் கொஞ்சம் காமெடி குறைவுதான்.

கேஎஸ். ரவிக்குமார், ரவிமரியா என இரண்டு டான்கள். இருவரும் காமெடி பீஸ்தான். ரவிமரியா காமெடியில் கலக்கியிருந்தால் கேஎஸ். ரவிக்குமார் தன் லுக்கிலேயே கவர்ந்துவிடுகிறார்.

நாயகியாக ஐஸ்வர்யா மேனன். கொஞ்சம் அழகு. கொஞ்சம் கவர்ச்சி என கவர்கிறார்.

சுந்தர் சி படம் போல படத்தில் எப்போதும் கூட்டமாகவே உள்ளது. (தியேட்டரில் எப்படின்னு தெரியல) முனீஷ்காந்த், ஷாரா, படவா கோபி, பாண்யடிராஜன், சுஜாதா, எரும சாணி விஜய், ராஜ்மோகன், ஜீலி உள்ளிட்டவர்களும் உண்டு.

முனீஷ்காந்த் காமெடி ஆங்காங்கே ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

கௌரவ தோற்றத்தில் யோகிபாபுவும் உண்டு. அவர் இதுபோல சில காட்சிகளில் வந்து செல்வதை தவிர்த்துவிடுவது நல்லது.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஹிப் ஹாப் ஆதி இசையமைத்த ப்ரேக் அப் பாட்டு, பர்த்டே பார்ட்டி பாட்டு, நான் சிரிச்சா வேற லெவல் ஆகிய பாடல்கள் இளைஞர்களுக்கு கொண்டாட்டம்தான். இனி நிறைய பேரின் வாட்ஸ் அப் ஸ்டேடஸ்சில் இதை பார்க்கலாம்.

பின்னணி இசை நன்றாக பாராட்டும்படி உள்ளது.

வாஞ்சிநாதன் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். இளைஞர்களின் கண்களுகு இதமான ஒளிப்பதிவு.

எடிட்டர் இன்னும் கொஞ்சம் நீளத்தை குறைத்திருக்கலாம். முதலில் வரும் டான் கதைகள் இன்ட்ரோ தேவையில்லாத ஆணி. அதுபோல் வினோத மனிதர்கள் அர்ச்சனா காட்சிகளும் தேவையில்லை.

க்ளைமாக்ஸில் சொல்லப்படும் வசனங்கள் மனதிற்கு நிறைவை தருகின்றன.

முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு 2ஆம் பாதியில் கொஞ்சம் குறைவு. ஆனால் க்ளைமாக்சில் அதை சரிசெய்துவிட்டார் டைரக்டர் ராணா.

நாட்டில் எப்படியான அக்கிரமங்கள் நடந்தாலும் இணையத்தில் கடுப்பாக ஒரு பதிவை போட்டு தன் வேலையை பார்க்கும் நம்மை போல மனிதர்களை பார்த்தால் நிச்சயம் சிரிப்புதான் வரும். என்பது போன்ற வசனங்கள் கைத்தட்டல்களை அள்ளும்.

காதலர் தினத்தில் யூத்களை தியேட்டருக்கு வரவைக்க ஹிப் ஹாப் ஆதி அண்ட் தயாரிப்பாளர் சுந்தர் சி, இயக்குனர் ராணா ஆகியோர் போட்ட திட்டம்தான் இந்த நான் சிரித்தால் படம். அது நிச்சயம் நடக்கும்.

ஆக நான் சிரித்தால்.. சிரிப்பா சிரிக்குது… 3/5

Comments are closed.