ஆண்கள் விடுதியில் ஓர் அழகி… ஹாஸ்டல் விமர்சனம்

ஆண்கள் விடுதியில் ஓர் அழகி… ஹாஸ்டல் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

இன்ட்ரஸ்ட் இந்திரன் (ரவி மரியா)விடம் நண்பனுக்காக வட்டிக்கு பணம் வாங்கி மாட்டிக் கொள்கிறார் அசோக் செல்வன். எனவே அவரை மிரட்டி அனுப்பி வைக்கிறார் ரவிமரியா.

அப்போது ரவிமரியாவின் மகள் பிரியா.. அசோக் செல்வனுக்கு பணம் கொடுத்து உதவ வருகிறார். ஆனால் ஒரு நிபந்தனை விதிக்கிறார். அதாவது தன்னை உன்னுடைய ஆண்கள் விடுதிக்குள் (ஹாஸ்டலுக்கு) அழைத்துச் செல் என்கிறார். (அதற்கான காரணம் ஒரு ப்ளாஷ்பேக்..)

எனவே பிரியாவை ஹாஸ்டலுக்கு அழைத்துச் செல்கிறார் அசோக். அதன்பின்னர் என்ன ஆனது? ஆண்கள் விடுதியில் சிக்கிய அழகியின் கதி என்ன? எப்படி உள்ளே போனார்? எப்படி வெளியே வந்தார்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

ஜாலியான கேரக்டர் அசோக் செல்வனுக்கு.. சில இடங்களில் நன்றாகவே நடித்துள்ளார். மாணவர்கள் படிப்பதை காண்பிப்பதை விட குடிப்பதை மட்டுமே காட்டியிருக்கிறார்கள்.

இவரின் நண்பராக சதீஷ் நடித்துள்ளார். ஒரு காட்சியில் ஜீவா வெளியே வாடா என்கிறார். ஓ.. அது என்னோட பெயராச்சே.. என காமெடி செய்கிறார். (இதுபோன்ற மொக்க காமெடி தேவையா ஜீ)

இனிக்குதா? கசக்குதா.? காத்துவாக்குல ரெண்டு காதல் விமர்சனம்

பிரியா பவானி சங்கர் திறமையான நடிகை.. இதில் பெரிதாக ஸ்கோப் இல்லை. எத வேணாலும் காட்டுறேன் என காம நெடி டயலாக்குகளை பிரியாவுக்கே வைத்துவிட்டனர்.

ரவிமரியா மற்றும் அறந்தாங்கி நிஷா காட்சிகளில் சிலவற்றில் ரசிக்கலாம். ஆனால் ரவிமரியாவின் அடியாளின் அந்த குசு மேட்டர் போர். நிறைய படத்தில் இப்படியே காட்டிக் கொண்டிருந்தால் எப்படி பாஸ்.?

நாசரின் பேச்சு மற்றும் காமெடி காட்சிகள் செயற்கையாக உள்ளது. எவ்வளவு பெரிய நடிகர் அவரை வீணடிக்கலாமா? முனீஷ்காந்த் காமெடி ஓகே ரகம். ஆனால் அவருக்கு 1960களில் போலீஸ் போட்டுக் கொண்ட ட்ரவுசரை மாட்டிவிட்டது ஏனோ..? தெரியல..

டெக்னீஷியன்கள்…

சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். ஜாலியாக கொடுக்க வேண்டும் என நினைத்து சொதப்பிவிட்டார். போபோ சசி என்பவர் இசையமைத்துள்ளார்.

காமெடி காட்சிகளுக்கு டிராமாக்களில் மியூசிக் போடுவார்களே அதே போல போட்டு இருக்கிறார். பின்னணி இசையில் நம்மை சோதிக்கிறார்.

பாடல்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை. போதை பாடல்களாக உள்ளது.

ஆக இந்த ஹாஸ்டல்.. ரசிகர்களுக்கு அவஸ்தை..

Hostel movie review and rating in Tamil

இனிக்குதா? கசக்குதா.? காத்துவாக்குல ரெண்டு காதல் விமர்சனம்

இனிக்குதா? கசக்குதா.? காத்துவாக்குல ரெண்டு காதல் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

ஒரு ஆண் ஒரே சமயத்தில் இரண்டு பெண்களிடம் காதல் கொண்டு இருவரையும் திருமணம் செய்ய முயற்சிக்கிறார். அந்த 2 காதலிகள் ஒத்துக் கொண்டார்களா?

கதைக்களம்..

தன் பிறப்பு முதலே துரதிஷ்டசாலியாக இருக்கிறார் நாயகன் ராம்போ (விஜய்சேதுபதி). தன் தந்தையை சின்ன வயதிலேயே இழக்கிறார். இவரின் வாழ்க்கையில் எல்லாமே நேருக்கு மாறாக நடக்கிறது.

விஜய் சேதுபதி பிறந்தவுடனே அப்பா இறந்து விடுகிறார், அம்மா படுத்த படுக்கையாகி விடுகிறார். மழை பெய்யும் போது இவர் வெளியே போனால் அந்த மழை கூட நின்றுவிடும். அப்படியொரு துரதிர்ஷ்டசாலியாம் இவர்.

பகலில் கார் டிரைவராகவும் இரவில் பவுன்சராகவும் வேலை பார்த்து வருகிறார்.

டிரைவராக வேலை செய்யும்போது நயன்தாராவையும் (கண்மணி), பவுன்சர் வேலை செய்யும்போது சமந்தாவையும் (கதீஜா) காதலிக்கிறார்.

ஸ்ரீசாந்துடன் காதல் பிரேக் அப் ஆக அதன் பின்னர் விஜய் சேதுபதியுடன் சமந்தாவுக்கு காதல் மலர்கிறது.

மீண்டும் ஓடிடி தளத்தை குறி வைக்கும் விஜய்சேதுபதி & நயன்தாரா

ஒரு கட்டத்தில் இரு பெண்களின் காதல் பிரச்சனையாக மாறுகிறது.

இறுதியில் காதல் பிரச்சனையை எப்படி சமாளித்தார்? நயன்தாரா, சமந்தா இருவரில் யாரை திருமணம் செய்தார்? காதல் கை கூடியதா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

சின்ன சின்ன முக பாவனைகளிலும் இரண்டு பெண்களிடம் சிக்கும் காட்சிகளில் அதிக ஸ்கோர் செய்துள்ளார் விஜய்சேதுபதி.

சில காட்சிகள் வீரா பட ரஜினி மீனா ரோஜாவை நினைவுப்படுத்துகிறது.

நயன்தாரா இந்த படத்தில் எலும்பும் தோலுமாக இருப்பதுதான் கஷ்டமாக உள்ளது. விக்னேஷ் சிவன் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.

நடுத்தர குடும்ப பெண்ணாக கஷ்டப்படும் கண்மணியாக நயன்தாரா. ஆனால் சமந்தாவிடம் உள்ள ஈர்ப்பு இதில் நயன்தாராவிடம் இல்லை. என்னாச்சுன்னு தெரியலையே…

மாடர்ன் டிரஸ்ஸில் நம்மை கட்டிப் போட்டு விடுகிறார் கதீஜா.

விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா காம்பினேஷன் சீன்களில் ரொமான்டிக் காமெடி களைக் கட்டும்.

மாறன், கிங்ஸ்லி ஆகியோரும் உண்டு. சில இடங்களில் இவர்களின் காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

டெக்னீஷியன்கள்..

ஒளிப்பதிவு படத்திற்கு உயிரூட்டியுள்ளது. படத்தை கலர்புல்லாக கொடுத்துள்ளார் கதிர்.

அனிருத் இசையமைத்துள்ளார். பாடல்கள் பட்டைய கிளப்பியுள்ளன. இளைஞரகளுக்கும் காதலர்களுக்கும் ஏற்ற வகையில் துள்ளல்லான இசையை கொடுத்துள்ளார். பின்னணி இசையும் ரசிக்க தக்க வகையில் உள்ளது.

ஆண்கள் விடுதியில் ஓர் அழகி… ஹாஸ்டல் விமர்சனம்

இரண்டு காதலை மையமாக வைத்து ஒரு படத்தை எடுப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும். அதை காமெடியாக சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். ஆனால் லாஜிக் பார்த்தால் இதை முழுமையாக ரசிக்க முடியாது. எனவே ஜஸ்ட் ரொமான்டிக் என்று நினைத்து பார்த்தால் ரசிக்கலாம்.

குஷி, சத்யா படங்களில் வரும் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். கொஞ்சம் புதுமையாக யோசித்திருக்கலாம்.

ஒரு ஆண் மகனுக்காக 2 அழகிகள் அடித்துக் கொள்வது ஆடியன்சை வெறுப்பேற்றுகிறது. ஆனால் அதுபோல சில நிகழ்வுகளை நாம் நம் தாத்தா காலத்திலும் சமீபத்தில் வட இந்தியாவிலும் பார்த்து இருக்கிறோம் என்பதால் அட்ஜ்ஸ்ட் செய்துக் கொள்ளத்தான் வேண்டும்.

இப்படத்தினை தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்து உள்ளார்.

ஆக.. ரொமான்டிக் லவ்வர்ஸ்… காத்துவாக்குல ரெண்டு காதல்…

Kaathuvaakula Rendu Kaadhal movie review and rating in Tamil

நம்பிக்கை நாய்(யகன்).; ஓ மை டாக் விமர்சனம் 3/5

நம்பிக்கை நாய்(யகன்).; ஓ மை டாக் விமர்சனம் 3/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அருண் விஜய், அவரது தந்தை விஜயகுமார், அருண் விஜய்யின் மகன் அர்னவ் என மூன்று தலைமுறை இணைந்த படம் தான் “ஓ மை டாக்”. இப்படம் நேரடியாக அமேசான் ப்ரைமில் இன்று வெளியானது.

சரோவ் சண்முகம் என்பவர் இயக்க நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.

2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்துள்ளனர்.

ஒன்லைன்…

உடல் குறைபாடுள்ள ஓர் உயிரினத்தை ஒதுக்கி வைத்தல் / கொல்லுதல் பெரும்பாவம்.

ஒரு சிறுவனுக்கும் நாய்க்கும் இடையே உள்ள நட்பை தாத்தா அப்பா சென்டிமெண்டுடன் சொல்லும் படம்.

கதைக்களம்…

ஊட்டியில் தனது மனைவி மகிமா, மகன் அர்னவ், தன் தந்தை விஜயகுமாருடன் வாழ்ந்து வருகிறார் அருண்விஜய்.

குறும்புத்தனம் மிகுந்த சிறுவனாக வளர்கிறார் அர்னவ்.

தனது மகன் படிப்புக்காக தனது வீட்டினை அடமானத்தில் வைத்து வட்டி செலுத்தி வருகிறார் அருண் விஜய். வசதியை மீறி மகனை உலகத்தரப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைப்பதால் கடன் சிக்கல்.

இது ஒரு புறம்…. மற்றொரு புறம்…

இன்டர்நேஷனல் லெவல் போட்டிகளில் நாய்களை வைத்து பந்தயம் கட்டும் வில்லன் வினய்.

இவரது நாய் ஒன்று ஈன்ற குட்டி ஒன்று கண் பார்வை குறைபாடுடன் உள்ளது.

இது பந்தயத்திற்கு உதவாது என்பதால் அதனை தனது ஆட்களிடம் கொடுத்து கொல்ல சொல்கிறார் வினய்.

ஆனால் எதிர்பாராத விதமாக அந்த குட்டி அர்னவிடம் செல்கிறது.

பிறகென்ன அர்னவும், அந்த நாய் குட்டியும் செய்யும் அட்டகாசங்களும் கதையாகிறது.

அதற்கு சிம்பா என பெயரும் சூட்டுகிறார் அர்னவ். தனது தீவிர முயற்சியால் சிம்பாவின் கண்பார்வையை சரி செய்கிறார் சிறுவன்.

ஒரு கட்டத்தில் நாய்கள் போட்டியில் வினய் வளர்த்த நாயோடு அர்னவ் வளர்த்த சிம்பாவும் போட்டி போடுகிறது.

போட்டியில் ஜெயித்தது யார்.? அருண் விஜய்யின் கடன் பிரச்சனை என்னவானது.? என்பதே மீதிக் கதை.

கேரக்டர்கள்…

அருண்விஜய் மிடில் க்ளாஸ் வறுமையை கடக்கும் காட்சிகளில் அசத்தல். நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார்.

நாயகியாக மகிமா நம்பியார். அம்மா பாசத்தில் கவர்கிறார்.

அர்னவ் தனது முதல் படம் போல் இல்லாமல் அழகான பாவனைகளை அள்ளி தெளித்து இருக்கிறார். சில இடங்களில் செயற்கை.

நாய் சிம்பாவோடு இவர் செய்யும் சேட்டைகளை ரசிக்கலாம். எமோஷ்னல் காட்சிகள் அனைவரையும் கவரும். இவனுடன் நடித்த குட்டீஸ் அனைவரும் ரசிக்க வைத்துள்ளனர்.

வில்லனாக வினய். பெரிதாக மிரட்டல் இல்லை.. வினய்யோடு வரும் இரு கோமாளிகள் வேஸ்ட். எந்த இடத்திலும் சிரிக்க முடியல.

சிம்பா எனும் நாய்க்குட்டியை  நாமும் தூக்கிக் கொஞ்சலாம் எனத் தோன்றும்.

மைனஸ்…

நாயை திருட வரும் வில்லன் ஆட்கள் நாய் போல அமைப்புள்ள வண்டியில் வருவது ஏன்.? இன்டர்நேஷனல் போட்டியில் பங்கேற்க சிறுவர்கள் தனியாக வருவது எப்படி.?

டெக்னீசியன்ஸ்…

நிவாஸ் கே பிரசன்னாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிக்க வைக்கும். கோபிநாத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. லொகேஷன் தேர்வை கச்சிதமாக கையாண்டுள்ளனர்.

நாய்களை விரும்பும் குழந்தைகளை கவர நிறைய காட்சிகளை வைத்துள்ளார் இயக்குனர் சரோவ்.

நாய்க்குட்டி உள்ளிட்ட உயிரினங்கள் மீது நாம் காட்ட வேண்டிய அன்பையும் அக்கறையையும் சுட்டி காட்டியிருக்கிறார்.

ஆக OH MY DOG… நம்பிக்கை நாய்(யகன்)

Oh My Dog Movie Review and Rating in Tamil

ஒன் மேன் ஷோ ராக்கி..; KGF2 விமர்சனம் 4.25/5

ஒன் மேன் ஷோ ராக்கி..; KGF2 விமர்சனம் 4.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் – யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய்தத், ரவீணா, சரண், ஈஸ்வரி & அச்யுத்குமார்

இயக்கம் – பிரசாந்த் நீல்

இசை – ரவி பர்ஷுர்

ரிலீஸ் தேதி – இன்று 14 ஏப்ரல் 2022

தயாரிப்பு – ஹம்பலே பிலிம்ஸ்

நேரம் – 2 மணி நேரம் 48 நிமிடம்

ரேட்டிங் – 4.25/5

ஒன்லைன்…

KGF 1 முதல் பாகத்தில் கருடன் இறந்துவிடுவார். அந்த இடத்திலிருந்து பார்ட் 2 கதை தொடங்குகிறது.

ஆனந்த் நாக் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அவருக்கு பதிலாக அவரது மகன் பிரகாஷ் ராஜ் மாளவிகாவிடம் கதை சொல்கிறார்.

கதைக்களம்..

முதல் பாகத்தில் கருடனை வெட்டி வீசி ’KGF’ ஐ ஆள்வதற்காக தடம் பதிப்பார் ராக்கி (யஷ்). அந்த சாம்ராஜ்யத்தை எப்படி உருவாக்குகிறார்.?

வில்லன் ஒரு பக்கம், கொல்லப்பட்டதாக சொல்ல அதிரா (சஞ்சய் தத்) மீண்டும் கொலை வெறியோடு வருகிறார்.

இதனிடையில் இந்திய அரசும் யஷ்ஷை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்துகிறது.

இந்திய அரசே தேடும் யஷ்? என்ன செய்தார்.? இறுதியில் என்ன ஆனது.? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

யப்ப்ப்பப்பா…. யஷ்… ஒன் மேன் ஷோ நடத்தியிருக்கிறார். கன்னட சினிமாவில் இந்திய சினிமாவையே மிரட்டும் ஹீரோயிசம் உள்ள படமாக இது அமைந்துள்ளது.

பிரதமர் ரவீணா அலுவலகத்தில் தன் மீதே புகார் கொடுக்கும் காட்சி.. துபாய் தலைவனை சந்திக்கும் காட்சி.. எதிரிகளை வீழ்த்தும் காட்சி என மாஸ் காட்சிகளை வைத்து வெறி ஏத்தியிருக்கிறார் டைரக்டர்.

நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி. தன்னை காதலிக்காத பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கி வருகிறார் யஷ். சில நாட்களில் ‘ஐ லவ் யூ’ சொல்லிவிடுகிறார் நாயகி. இது எப்படி.? கொஞ்ச நேரமே வந்தாலும் காட்சிகளில் ஸ்ரீநிதிக்கு முக்கியத்துவம் உண்டு.

நாயகனுக்கு இணையாக மிரட்டிய இருவர் சஞ்சய் தத் & ரவீனா டாண்டன். அகிரா என மிரட்டல் வில்லனாக சஞ்சய் தத். உடல்மொழியும் மிரட்டல் மொழியும் கூடுதல் ப்ளஸ்.

பிரதம மந்திரியாக ரவீனா டாண்டன். இவரின் நடிப்பும் பாராட்டும் வகையில் உள்ளது.

இவர்களுடன் அச்யுத் குமார், ஈஸ்வரி ராவ், ‘வடசென்னை’ சரண் ஆகியோரும் கச்சிதம். கதை சொல்லும் பிரகாஷ் ராஜ் & மாளவிகாவும் உள்ளனர்.

டெக்னீஷியன்கள்…

அன்பறிவின் சண்டை வேற லெவல். பிரம்மாண்டத்திற்கு ஏற்ற மிரட்டலான ஃபைட் மேக்கிங்.

அனைத்து துறைகளிலும் ஒளிப்பதிவு, இசை, பின்னணி இசை, படத்தொகுப்பு, கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு என உலகத் தரத்தில் ஒரு கன்னட சினிமா என கண்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

ஆனால் சிறுவர்களுக்கு சொல்லும் உதாரணங்களாக தத்துவம் பேசிக் கொண்டே இருப்பதும் சலிப்பை தருகிறது. ஒருவேளை சிறுவர் சிறுமிகளை கவர காட்சி வைத்திருப்பாரோ.?

அரசியல் அதிகாரத்தால் கிரிமினல்களை ஒடுக்கமுடியாமல் போவது ஏன் என்ற அரசியலையும் அப்பட்டமாக அம்பலப்படுத்தியிருக்கிறார்.

முதல் பாதியில் மெதுவாக நகரும் கதை இடைவேளையில் தொடங்கி க்ளைமாக்ஸ் வரை அரங்கை நிஜமாகவே தீப்பிடிக்க வைத்துள்ளது. கத்திக்குத்து, துப்பாக்கிச்சூடு என ரத்தமும் தெறிக்கிறது.

படம் முடியும் போது என்ட் கார்ட்டில் ‘கேஜிஎப் 3’க்கு ஒரு ட்விஸ்ட் வைத்து அடுத்த ட்ரீட்டுக்கும் அழைக்கிறார் பிரசாந்த் நீல்.

கேஜிஃஎப் 2 – ராக்கியின் ஒன் மே ஷோ

Yash is back as Rocky KGF2 Review rating

விஜய் படம் எப்படி இருக்கு.?… ‘பீஸ்ட்’ விமர்சனம்

விஜய் படம் எப்படி இருக்கு.?… ‘பீஸ்ட்’ விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

கோலமாவு கோகிலா, டாக்டர் என இரு டார்க் காமெடி படங்களை கொடுத்த நெல்சன் ‘பீஸ்ட்’ படத்திலும் டார்க் காமெடியை கொடுத்திருக்கிறார்.

கதைக்களம்…

இந்திய ராணுவத்தின் உளவாளியாக இருக்கிறார் விஜய். ஒரு கட்டத்தில் தீவிரவாதியை பிடிக்கும் பொழுது தவறுதலாக ஒரு குழந்தை இறந்துவிடுகிறது.

இதனால் விரக்தியில் தனது வேலையை விட்டுவிட்டு தமிழ்நாட்டில் இருக்கிறார்.

ஒரு சூழ்நிலையில்… நாம் ஏற்கனவே சொன்னது போல ‘கூர்கா’ படம் போல சிட்டியில் உள்ள ஒரு Complex Mallஐ தீவிரவாதிகள் ஹைஜாக் செய்கின்றனர். அங்கு மக்கள் & முதல்வரின் மனைவி குழந்தைகள் என பெரும்பாலானோர் சிக்கிக் கொள்கின்றனர்.

ஏப்ரல் 13 ‘பீஸ்ட்’ ரிலீசில் சிக்கல்.; அரசு தடையால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

மேலும் ரா ஏஜெண்ட்டாக பணிபுரிந்த வீரராகவன் (விஜய்)யும் இதற்குள் இருக்கிறார்.

அவர் எப்படி மக்களை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றுகிறார் என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

விஜய் தன் பணியை சிறப்பாக செய்துள்ளார். டான்ஸ் கலகலப்பு ரொமான்டிக் என ரசிக்க வைத்துள்ளார். ஆக்சனிலும் அசத்தியுள்ளார்.

டாமினிக் செக்யூரிட்டி சர்வீஸில் பூஜா ஹெக்டே ப்ரீத்தியாக அறிமுகமாகிறார். அழகாக இருக்கிறார் பூஜா.

விவேகம் பட வில்லன் போல விஜய்க்கு பில்டப் கொடுத்துள்ளார் செல்வராகவன். (ஹி..ஹி..) அல்தாஃப் உசைன் என்பவராக இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ளார்.

டாம் ஷைன் சாக்கோ வில்லனாக மிரட்டுவார் என எதிர்பார்த்தால் அதில ஒரு ட்விஸ்ட் வச்சிருக்காரு.

ஆகஸ்ட் டார்கெட்.. தீபாவளி ரிலீஸ்..; விஜய் 66 படக்குழுவின் பக்கா ப்ளான்

விஜய் உடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் ஷைன் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விடிவி கணேஷ் & பூஜா ஹெக்டே காம்போவில் காமெடி நல்லாவே வொர்க்கவுட் ஆகியுள்ளது.

டெக்னீஷியன்கள்…

டாக்டர் பட கடைசி சாங் போல… ஜாலியோ ஜிம்கானா பாடல் படம் முடிந்த பின்பு வருகிறது.

அனிருத்தின் இசை படத்திற்கு பெரும் பலம். ‘அரபிக்குத்து…’ மற்றும் ‘ஜாலியோ ஜிம்க்கானா…’ ஆகிய பாடலுக்கு ஆட்டம் போடாதே ரசிகர்களே இருக்க மாட்டார்கள். அப்படி ஒரு குத்தாட்டத்தை காணலாம்.

மனோஜ் பரமஹம்சரின் ஒளிப்பதிவு சூப்பர். காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளார். படத்துடன் ஒன்ற வைக்க உதவியுள்ளது.

எடிட்டிங் கச்சிதமாக அமைந்துள்ளது.

ட்ரைலர் ஒரு மாரி. படம் வேற மாரி.; ‘மணி ஹெய்ஸ்ட்’ & ‘கூர்கா’ மாதிரியா..? – நெல்சன் விளக்கம்

நெல்சன் வழக்கமான டார்க் காமெடியை இதிலும் வழங்கியுள்ளார். விஜய்க்காக எக்ஸ்ட்ரா சீன்களை வைத்துள்ளார். ஆக்ஷன் காட்சிகள் அனல் தெறிக்கின்றன.

ஆனால் டார்க் காமெடி & லாஜிக் ஒர்க் அவுட் ஆகவில்லை. யோகிபாபு கிங்ஸ்லி ஆகியோரின் காமெடி சில இடங்களில் மட்டுமே செட்டாகிறது. விடிவி கணேஷ் காமெடி ரசிக்க வைக்கிறது.

கமர்ஷியல் படங்களில் லாஜிக் தேவையில்லை. அதை மனது வைத்தால் இந்த படத்தை விஜய் ரசிகர்கள் ரசிக்கலாம்.

நெல்சன் படம் என்றால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் இதில் மிஸ்ஸிங். மேலும் விஜய்யே நன்றாக காமெடி செய்ய தெரிந்த மாஸ் ஹீரோ தான். அவரையும் பயன்படுத்தி இருக்கலாம்.

அதிகார வெறி காவலர்கள்…; ‘டாணாக்காரன்’ விமர்சனம் 4/5

அதிகார வெறி காவலர்கள்…; ‘டாணாக்காரன்’ விமர்சனம் 4/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

காவலர் பயிற்சி மையத்தில் நடக்கும் கொடுமைகளை அப்பட்டமாக தோலுத்துரிள்ள படம் ‘டாணாக்காரன்’. சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தில் கொடூர காவலராக நடித்த தமிழ் என்பவர் இந்த டாணாக்காரன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.

கதைக்களம்..

1998 காலக்கட்டத்தில் போலீஸ் பயிற்சி மையத்தில் நடக்கும் கதை இது. அந்த இளைஞர்கள் பட்டாளத்தில் விக்ரம் பிரபு, பாவல் நவநீதன் ஆகியோரும் உண்டு.

இந்த பயிற்சி குழுவுடன் 1982ல் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் இணைத்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

1982 குழுவுக்கு 15 வருடங்களுக்கு பிறகு பயிற்சி அளிக்கப்படுவதால் அவர்களின் தற்போதைய வயது 40 முதல் 50 வயது வரை உள்ளது.

பயிற்சி குழுவின் ஆசிரியர்களாக லால், எம் எஸ் பாஸ்கர் உள்ளனர். இவர்களின் மேல் அதிகாரிகளாக மதுசூதனன் மற்றும் போஸ் வெங்கட் ஆகியோரும் உள்ளனர்.

லால் கொடுக்கும் டார்ச்சரான பயிற்சியினால் பலர் ஓடி விடுகின்றனர். பலர் தற்கொலை செய்துக் கொள்கின்றனர்.

கள்ளக்-காதல் மன்னன்..; மன்மத லீலை விமர்சனம் 3.5/5

லால் மற்றும் மதுசூதனன் தரும் டார்ச்சர்களை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்கிறார் விக்ரம் பிரபு. (உதாரணத்திற்கு 350 பேர் உள்ள விடுதியில் 5 டாய்லெட் மட்டுமே உள்ளது.)

இதனால் பயிற்சியில் இன்னும் பல டார்ச்சர் கொடுக்கிறார் லால்.

இறுதியில் என்ன ஆனது? பயிற்சியை முடித்தாரா? விக்ரம் பிரபு, தற்கொலைக்கு தீர்வு உருவானதா? என்பதே படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்..

கம்பீரம் கலந்த கண்ணியம் மிக்க நடிப்பை கொடுத்துள்ளார் விக்ரம் பிரபு. கும்கி படத்திற்கு பிறகு அவரது சினிமா வாழ்க்கையில் மைல்கல் படமாக டாணாக்காரன் அமையும் எனலாம்.

எங்குமே மிகைப்படுத்தாத நடிப்பை கொடுத்துள்ளார். காட்சிகளில் அளவோடு பேசி தன் நடிப்பை பேச வைத்துவிடுகிறார். தண்டனைக்காக எக்ஸ்ட்ரா டிரில் போடும் காட்சிகளில் கண்களை குளமாக்கிவிடுவார்.

அழகான நாயகியாக அஞ்சலி நாயர். இவர் டேய்.. வாடா போடா என விக்ரம் பிரபுவை அழைக்கும் போது ரசிக்க வைக்கிறார். கட்டிக்கோடா.. கட்டிக்கோடா என்ற பாடலில் உணர்வுப்பூர்வமான காதலை கண்களால் காட்டியுள்ளார்.

தரங்கெட்ட தரகர்களின் குரூப் போட்டோ..; செல்ஃபி விமர்சனம் 3.75/5

சித்தப்பா என்ற கேரக்டரில் நடித்துள்ள நபரின் நடிப்பு அனைவரையும் கவரும். 4 பெண் குழந்தைகளை பெற்ற பின் போலீஸ் பயிற்சி மையத்தில் இணைந்த இவரின் நடிப்பு போற்றும்படி உள்ளது.

இவர்களுடன் பாவல் நவகீதன் மற்றும் லிங்கேஷ் ஆகியோரின் நடிப்பும் கவனிக்கத்தக்க வகையில் உள்ளது. இவர்கள் உயர் அதிகாரிகளை எதிர்க்கும்போது நம்மை அறியாமலே சூப்பர்யா என்ற சொல்லத் தோன்றும்.

கொடூர வில்லனாக லால். யப்ப்ப்பா… என்ன நடிப்புய்யா.. லால் வேற லெவல்.

15 வருடங்களாக புரோமோசன் இல்லாமல் ஏட்டய்யா பதவி வகிக்கும் எம்எஸ் பாஸ்கர் நடிப்பு கச்சிதம். க்ளைமாக்ஸில் அசத்தல்.

அதுபோல் முருகன் கேரக்டரில் வரும் அந்த குண்டர் சூப்பர் நடிப்பு.

டெக்னீஷியன்கள்..

ஜிப்ரானின் பின்னணி இசை மிரட்டல். சென்டிமெண்ட் காட்சிகளில் கதையோடு பயணித்து நம்மையும் இழுத்து செல்கிறது.

மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். எல்லா காட்சியிலும் 300 பேர்களை வைத்து படமாக்கியுள்ளது சிறப்பு.

போலீஸ் பயிற்சி மையத்தில் கொடுக்கப்படும் பயிற்சிகளை அவலங்களுடனும், ரணகளத்துடனும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் தமிழ்.

காவலர் ஆவதற்கு இத்தனை கஷ்டங்களா என கண்கலங்க வைத்துள்ளார். காரணம் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு இவரும் போலீஸாக இருந்துள்ளார். அந்த அனுபவத்தை சரியாக கொடுத்துள்ளார் எனலாம்.

டாணாக்காரன் படத்தை காவலர்கள் சல்யூட் அடித்து பார்க்கலாம். அதே சமயம் காவலர்கள் இடையே உள்ள ஈகோ பொறாமைகள் தவிர்த்தல் நலம்.

அப்பாவிகளிடையே காவலர்களின் அதிகாரத்தை காட்டாமல் குற்றவாளிகள் மீது அதிகார வெறியை காட்டினால் இந்த நாடு நாடாக இருக்கும் என்பதை தைரியமாக சொன்ன இயக்குனர் தமிழுக்கு தமிழ் சினிமா தலை வணங்கும்.

இதுவரை எத்தனையோ போலீஸ் படங்களை கமர்ஷியலோடு கண்டு இருக்கிறோம். ஆனால் முழுக்க முழுக்க பயிற்சி மையத்திலேயே நடக்கும் கொடுமைகளை காட்டியிருப்பது சிறப்பு.

ஆனால் கடைசியில் போலீஸ் அதிகாரமே ஜெயிக்கிறது என்பதை காட்டியிருக்கிறார். அப்படி என்றால் நேர்மைக்கும் கண்ணியத்திற்கு காலமே இல்லையா-? என்ற கேள்வியும் எழுகிறது.

ஒருவேளை டாணாக்காரன் 2ஆம் பாகத்தில் சொல்வாரோ? இயக்குனர் தமிழ்.?

Taanakkaran movie review and rating in tamil

More Articles
Follows