தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அரக்கோணத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை மையப்படுத்தி இந்த ப்ளூ ஸ்டார் உருவாகியுள்ளது. பா ரஞ்சித் இந்த படத்தை தயாரிக்க அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஜெயக்குமார் என்பவர் இயக்கியிருக்கிறார்.
ஸ்டோரி…
அரக்கோணத்தில் உள்ள கிரிக்கெட் அணி.. ப்ளூ ஸ்டார் என்ற அணிக்கு தலைவர் அசோக் செல்வன் மற்றொரு அணியான ஆல்பா பாய்ஸ் என்று அணிக்கு தலைவர் சாந்தனு… அசோக் செல்வனின் தம்பி பிரத்வி இவரும் ஒரு கிரிக்கெட் வீரர்.. அசோக்கின் காதலி கீர்த்தி பாண்டியன் பிருத்திவியின் காதலி திவ்யா துரைசாமி.
சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் ப்ளூ ஸ்டார் மற்றும் ஆல்பா பாய்ஸ் அணிகள் மோதக்கூடாது என்ற உத்தரவு போடப்படுகிறது.. இதனால் எப்போதுமே எதிரும் புதிருமாக இருந்து வருகிறார்கள்.
ஆனால் ஒரு சூழ்நிலையில் இரு அணிகளும் மோத வாய்ப்பு கிடைக்கிறது.. இப்படியாக சென்று கொண்டிருக்கையில் ஒரு கட்டத்தில் இந்த இரு அணிகளும் ஒரே அணியாக மாற முடிவு எடுக்கின்றனர்.
அப்படி என்றால் இவர்களை எதிர்க்கும் மூன்றாக அணி யார்? இவர்கள் இணைய என்ன காரணம்? இணைந்து ஜெயித்தார்களா? என்பது தான் படத்தின் மீதி கதை.
கேரக்டர்ஸ்…
அசோக் செல்வன்
ஷாந்தனு பாக்யராஜ்
பிரித்வி
கீர்த்தி பாண்டியன்
பக்ஸ்
குமரவேல்
லிஸ்ஸி ஆண்டனி
T.N அருண்பாலாஜி
திவ்யா துரைசாமி..
புழுதி படிந்த மண் அரக்கோணம் இளைஞராகவே மாறியிருக்கிறார் அசோக் செல்வன்.. தனது சாக்லேட் பாய் தோற்றத்தை மாற்றி கொஞ்சம் கரடு முரடாகவே காட்சி அளிக்கிறார்.. அவரது தோற்றம் இந்த படத்திற்கு கூடுதல் பலம்..
பல படங்களில் சாந்தமாக வந்த சாந்தனு இதில் கொஞ்சம் முரட்டுத்தனம் காட்டி அவரது ராஜேஷ் கேரக்டரை ரணகளமாக செய்திருக்கிறார்.
ப்ரித்வி இந்த படத்திற்கு கூடுதல் பலம்.. அவரது கேரக்டர் ரசிக்கவும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது..
அரக்கோணத்து அடாவடி பெண்ணாக வாயாடி பெண்ணாக வெளுத்து கட்டி இருக்கிறார் கீர்த்தி பாண்டியன்.. பெண்களுக்கும் விளையாட்டு ஆர்வம் இருக்கும் என உணர்த்துவதாக உள்ளது அவரது கேரக்டர்.
கொஞ்ச நேரம் தான் வருகிறார் திவ்யா.. அவரும் தன் பங்கு நிறைவாக செய்து ரசிக்க வைக்கிறார்.. முக்கியமாக அவர் கவிதை பேசும் ஒரு காட்சி அழகு. “எத்தனை பேருக்கு தெரியும்.. உனக்காக நவம்பரில் பூத்தது டிசம்பர் பூ..” என்ற வசனம் ரசிக்க வைக்கிறது
முன்னாள் கிரிக்கெட் வீரராக பக்ஸ்.. கொடுத்த இம்மானுவேல் என்ற கேரக்டரை எமோஷனலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த விதத்திலும் கொடுத்து இருக்கிறார்.
அசோக்கின் பெற்றோர்களாக குமரவேல் மற்றும் லிஸி.. இரு ஒரு பாசத்துல ஆன நடிப்பு அதிலும் முக்கியமாக லிசியின் ஜெபக்கூட்டம் மற்றும் கிறிஸ்துவ மத போதனைகள் சிரிக்க வைக்கிறது..
டெக்னீசியன்ஸ்…
வெறும் கிரிக்கெட்டை மையப்படுத்தி இருந்தாலும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல வசனங்கள் இடம் பெற்றுள்ளது.
யாருக்கிட்ட தோத்தோம்னு பாக்கக் கூடாது; ஏன் தோத்தும்னு பாருங்க”…
வெறுப்பு அழிவுக்கு வழிவகுக்கும்.. நிதானம் தான் நிறைய சொல்லித் தரும்..ம்” போன்ற வசனங்கள் ஈர்க்கின்றன..
பாடலாசிரியர்கள்
உமாதேவி
அறிவு.
நடனம்
ஸ்ரீக்ரிஷ்,
சண்டைப்பயிற்சி
STUNNER’ சாம்,
ஆடை வடிவமைப்பு
ஏகன் ஏகாம்பரம்
SOUND MIXING
சுரேன் G
கலை இயக்குனர்
ஜெயரகு .L
படத்தொகுப்பு
செல்வா RK
இசை
கோவிந்த் வசந்தா
ஒளிப்பதிவு இயக்குனர்
தமிழ் அ அழகன்
*தயாரிப்பு*
R. கணேஷ் மூர்த்தி
G. சௌந்தர்யா
*திரைக்கதை & வசனம்*
தமிழ்ப்பிரபா
எழுத்து – இயக்கம்
S.ஜெயக்குமார்
96 படத்தில் மெலோடியான இசையை கொடுத்த கோவிந்த வசந்தா இதில் அரக்கோணம் அலப்பறையை கிளப்பி இருக்கிறார் என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு பின்னணி செயல் மிரட்டி எடுத்திருக்கிறார்.. ஒவ்வொரு பந்துக்கும் நாயகர்கள் அடிக்கும் சிக்ஸருக்கு இவரின் இசை ஈடு கொடுத்திருக்கிறது.
உந்தன் கை வீசிடும் என்ற பாடல்.. இனி அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கேட்டு ரசிக்கலாம்..
படம் பார்ப்பது போன்ற உணர்வை விட கிரிக்கெட் மேட்சை கண்டு வந்தது போல தான் படத்தை இயக்கியிருக்கிறார் ஜெயக்குமார்… ஆனால் அதற்காக பட்டினத்திற்காக அம்பேத்கர் சிலையை அடிக்கடி காட்டிக் கொண்டிருப்பது ஏனோ இதை ஒளிப்பதிவாளர் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.. அதுபோல ரஜினியின் தளபதி பட வால் போஸ்டர் அடிக்கடி காட்சிகளில் வருகிறது..
ரஞ்சித் படம் என்றால் ஒரு அக்மார்க் முத்திரை இருக்கும் அவரது உதவி இயக்குனரிடமும் அந்த முத்திரை இருப்பது இதிலும் காண முடிகிறது..
ஒளிப்பதிவாளர் தமிழ் அ. அழகன்.. 1990களில் நடப்பெற்ற கதைகளை அப்படியே நாம் ரசிக்கும் வகையில் கொடுத்து அழகு பெற செய்து இருக்கிறார்.
அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் காதல் காட்சிகள் அழகு.. நட்பும் பாராட்டும் படி வகையில் படமாக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக புல்லட் பாபு கேரக்டர் ரசிக்க வைக்கிறது.. சூப்பர் கிரிக்கெட் பிளேயர் நீங்கள்.. ஏன் இந்தியாவுக்கு ஆடல? ஏன்னா அது இந்தியா டீம்.. இந்தியா டீம் என்னை எடுத்துக்க..ல எனவே வேறு நாட்டிற்கு ஆட போகிறேன் என்ற வசனங்கள் அரசியல் சாட்டையடி..
ஆக இந்த ப்ளூ ஸ்டார்.. அரக்கோணம் அலப்பறை..
Blue Star movie review and rating in tamil