STYLISH MAKING… மாஃபியா விமர்சனம் 2.5/5

STYLISH MAKING… மாஃபியா விமர்சனம் 2.5/5

கதைக்களம்…

நாடெங்கும் போதை பொருள் சப்ளை செய்யும் மிகப்பெரிய டான் திவாகர் குமரன் (பிரசன்னா) அரசு அதிகாரிகள் முதல் போலீஸ் வரை இவரது கைப்பாவையாக செயல்படுகிறது.

இதனால் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் Narcotics Control Bureau (போதை பொருள் கட்டுபாடு துறை)யில் பணிபுரியும் அருண் விஜய் மற்றும் பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் போதை சப்ளை செய்யும் பிரசன்னா கும்பலை தேடி அலைகின்றனர்.

அதற்குள் பிரசன்னா பலரை கொலை செய்துவிட விவேகம் எடுக்கும் அருண்விஜய் பல கோடி மதிப்புள்ள போதை பொருள் வைத்திருக்கும் லாரியை கொண்டு செல்கிறார்.

ஒரு கட்டத்தில் பிரசன்னாவை நெருங்கும் நேரத்தில் அருண்விஜய்யின் குடும்பத்தையே கடத்தி விடுகிறார்.

அப்பாவி அப்பா… காட்ஃபாதர் விமர்சனம் 3/5

அந்த போதை பொருள்களை கொடுத்தால் குடும்பத்தை ஒப்படைப்பதாக மிரட்டுகிறார்.

இதனால் அருண்விஜய் அண்ட் பிரியா என்ன செய்தனர்? பிரசன்னாவின் பின்புலம் என்ன? போதை பொருள் என்னானது? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

அருண்விஜய் அண்ட் பிரசன்னா இருவருக்கும் இடையில் நல்ல போட்டி. யார் ஸ்மார்ட்? யார் ஸ்டைலிஷ்? என ஒவ்வொரு பிரேமிலும் ஸ்கோர் செய்கின்றனர்.

அலட்டிக் கொள்ளாத நடிப்பு. இருவரும் சந்திக்கும் காட்சிகளில் பின்னணி இசை தெறிக்கவிட்டுள்ளது. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பாராத ஒன்று.

மாஃபியா சாப்டர் 2 படத்திற்காகவே அந்த க்ளைமாக்ஸ் வைத்துள்ளதாக தெரிகிறது.

பிரசன்னா பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் இவ்வளவு பில்டப் சாங் இருக்காது. இதில் மாஸ் இன்ட்ரோ கொடுக்கப்பட்டுள்ளது.

அருண்விஜய்யின் அறிமுகமும் அசத்தல். ஆனால் திரும்ப திரும்ப பில்டப் மியூசிக் வரும்போது நம்மால் தாங்கமுடியல.

FIRST ON NET காதலர் மாடம்… கன்னி மாடம் விமர்சனம் 4/5

பல படங்களில் பாவாடை தாவணி, சேலை என பார்த்த பிரியா பவானி சங்கரை இதில் பேன்ட், சர்ட்டில் பார்க்கலாம். வெறுமனே வந்து செல்லும் ஹீரோயினாக இல்லாமல் ஆக்சனில் இறங்கியிருப்பது சூப்பர்.

இவர்களை தவிர படத்தில் பல போலீஸ், கேங்ஸ்டர் டீம், குடும்பம் என இருந்தாலும் இவர்களை சுற்றியே கதை பின்னப்பட்டுள்ளது.

முகிலன் கேரக்டரில் தலை வாசல் விஜய் நடித்துள்ளார். பக்குவப்பட்ட நடிப்பு.

படத்தின் ப்ளஸ்..

ஸ்டைலிஷ் அண்ட் ஷார்ப் மேக்கிங்

ஒவ்வொரு ப்ரேமும் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

ஷூ மண் தட்டிவிடுவது முதல் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்து செல்லும் காட்சிகள் வரை துல்லியமாக படமாக்கப்பட்டுள்ளது.

பொதுவாக சம்பவம் நடைபெறும் இடம்? என்பதை சின்னதாக போட்டு காட்டுவார்கள். ஆனால் இதில் ஸ்கிரின் முழுவதும் காண்பிப்பது புதுசு.

படத்தின் மைனஸ்..

ஒவ்வொரு டயலாக்கிற்கும் கிட்டதட்ட 10/15 நொடிகள் வரை இடைவெளி உள்ளது. அந்த கேப்பில் நாம் மொபைல் எடுத்து ஒரு மெசேஜ் அனுப்பிடலாம் போல…

யாரும் வெறுமனே காரணம் இல்லாமல் கொலை செய்யமாட்டார்கள். நிச்சயம் உள்நோக்கம் இருக்கும். ஆனால் இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் சொல்லும் அந்த டயலாக் நிச்சயம் சிரிப்பை வரவழைக்கும்.

இந்த கொலையை பார்த்தா சாதா கொலை மாதிரி தெரியல. ஏதோ மோடிவ் இருப்பது தெரிகிறது என்பார்.. (ஹி…ஹி…). ஒரு போதைபொருள் தடுப்பு அதிகாரி இப்படி பேசுவாரா..?

இடைவேளை வரை வெறும் பின்னணி இசையும் ஓவர் பில்டப் மட்டுமே உள்ளது. இடைவேளைக்கு பிறகு படத்தை பார்த்தால் கூட புரிந்துவிடும்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இசை ஜேக்ஸ் பிஜாய், ஒளிப்பதிவு கோகுல் பினாய். படத்தை பார்க்க இவர்கள் இருவரும் முக்கிய காரணம்.

அருண்விஜய்யும் சரி பிரசன்னாவும் சரி நல்ல நடிகர்கள். அவர்களை நிறையவே வேலை வாங்கியிருக்கலாம். ஆனால் நிறைய நேரங்களில் பாடியை ஃபிட்டாக வைத்துக் கொண்டு நடப்பது சிரிப்பது மிரட்டுவது கோபமாக பேசுவது என ஓவர் பில்டப்.

துருவங்கள் 16 படத்தில் ரசிகர்களை கவனிக்க வைத்த கார்த்திக் நரேன் இதில் தன் கவனத்தை சிதறவிட்டுள்ளார்.

ஏ கிளாஸ் ஆடியன்ஸை நம்பியே படம் எடுத்துள்ளார். அதிலும் முழுமையாக செயல்படவில்லை.

க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் மாஃபியா அடுத்த சாப்டருக்கு ஒர்க் அவுட் ஆகும்.

ஆக மாஃபியா.. ஸ்டைலிஷ் மேக்கிங்குக்காக பார்க்கலாம்.

Comments are closed.

Related News

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய்,…
...Read More
இந்த வருடத்தின் எதிர்பார்ப்பு மிக்க படங்களுள்…
...Read More