துருவங்கள் பதினாறு விமர்சனம்

துருவங்கள் பதினாறு விமர்சனம்

நடிகர்கள் : ரகுமான், அஸ்வின், பிரகாஷ் , சந்தோஷ் கிருஷ்ணா, கார்த்திகேயன், ப்ரவீன், யாஷிகா, பாலாஹாசன், வினோத்வர்மா, ஷரத்குமார் மற்றும் பலர்.
இயக்கம் : கார்த்திக் நரேன்
இசை: பிஜ்ஜாய்
ஒளிப்பதிவு: சுஜித்
பி.ஆர்.ஓ.: நிகில்
தயாரிப்பாளர் : ட்ரீம் பேக்டரி, வீனஸ் இன்போடைன்மெண்ட் கணேஷ்

d 16 stills
கதைக்களம்…

கோவையில் அடுத்தடுத்து குற்றங்கள் நடக்கின்றன. இரண்டு ஆண்களும் இறக்க, ஒரு பெண் தொலைகிறார்.

இந்த சம்பவங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதா? கொலையாளி யார்? என்று காவல்துறை அதிகாரி தீபக் (ரகுமான்) மற்றும் கவுதம் (அஸ்வின்) ஆகியோர் விசாரணையில் இறங்குகின்றனர்.

அதன்பின்னர் என்ன நடக்கிறது என்பதை யாருமே யூகிக்க முடியாதப்படி படமாக்கி இருக்கிறார் கார்த்திக் நரேன்.

d16 ragumaan

படமும் கதாபாத்திரங்களும்…

படத்தில் நிறைய புதுமுகங்கள் இருப்பதால் ரகுமான் மட்டுமே தெரிகிறார்.

மேலும் படமும் அவரது பார்வையில்தான் தொடங்குகிறது.

ஜீவா நடித்த ராம் படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக யதார்த்தமாக இருப்பார். இதில் பல மடங்கு உயர்ந்திருக்கிறார்.

என்னதான் த்ரில்லர் படங்களாக இருந்தாலும் நம் திறமையான ரசிகர்கள் கதையை யூகித்துவிடுவார்கள்.

ஆனால் இதில் ரசிகர்களை விட இயக்குனரே ஜெயிக்கிறார்.

மேலும் போலீஸ் டிபார்ட்மெண்ட் வசனங்கள் உணர்வுபூர்வமாகவும் யதார்த்தமாகவும் அமைந்திருப்பது படத்தின் சிறப்பு.

பிஜாய்யின் பின்னணி இசை, சுஜித்தின்ஒளிப்பதிவு, ஆர்ட் டைரக்டர் என அனைத்தும் இயக்குனருக்கு பக்கபலமாய் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு.

நம்மை அறியாமல் சீட்டின் நுனியில் உட்கார வைக்கிறது க்ளைமாக்ஸ்.

துருவங்கள் பதினாறு… தமிழ் சினிமாவின் தேனாறு

Comments are closed.

Related News

'துருவங்கள் பதினாறு ' இயக்குநர் கார்த்திக்…
...Read More
துருவங்கள் பதினாறு படத்தின் முலம் பேசப்பட்ட…
...Read More