அப்பாவி அப்பா… காட்ஃபாதர் விமர்சனம் 3/5

அப்பாவி அப்பா… காட்ஃபாதர் விமர்சனம் 3/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

சென்னையில் உள்ள ஒரு மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் தன் மனைவி அனன்யா, மகன் அஷ்வத்துடன் வசிக்கிறார் நட்டி நட்ராஜ்,

எந்த ஒரு பிரச்சினைக்கு செல்லாமல், தான் உண்டு தன் குடும்பம் உண்டு என அப்பாவியாக இருக்கிறார் நட்ராஜ்.

இவரின் பகுதியில் உள்ள மிகப்பெரிய டான் லால். இவருக்கு ஒரே மகன். தவமிருந்து பெற்ற குழந்தை என்பதால் மிகவும் பாசமாக இருக்கிறார்.

தன் மகனுக்கு இதய நோய் இருப்பதால் அதே குரூப் ரத்தம் மற்றும் அதே வயதில் உள்ள சிறுவன் வேண்டும் என டாக்டர் கூறுகிறார்.

அப்போதுதான் அஷ்வத்தின் விவரம் தெரிய வருகிறது. எனவே அவனை கொன்று தன் மகனை காப்பாற்ற திட்டம் போடுகிறார்.

இதனையறிந்த அப்பாவி அப்பா நட்ராஜ் என்ன செய்தார்? காப்பாற்றினாரா? எப்படி காப்பாற்றினார்? என்பதே மீதிக்கதை.

STYLISH MAKING… மாஃபியா விமர்சனம் 2.5/5

கேரக்டர்கள்…

பல படங்களில் அதிரடி நாயகனாக வந்த நட்ராஜ் இதில் மிகவும் அப்பாவியாக நடித்துள்ளார். இதே போல விதவிதமான கேரக்டர்களை எடுத்தால்தான் சினிமாவில் நிலைக்க முடியும் என்பதை உணர்ந்திருக்கிறார்.

பொறுப்பான கணவர், அப்பாவி அப்பா, பாசமான தந்தை என வெரைட்டி காட்டியிருக்கிறார்.

இவரது உடலும் இவரது உயரமும் அப்பாவி கேரக்டருக்கு எதிராக இருந்தாலும் அதையும் சரியாக கையாண்டுள்ளார். சபாஷ் நட்டி ப்ரோ.

அன்பான அதே சமயம் அன்பான அம்மாவாக அனன்யா. நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் தோன்றியுள்ளார்.

சிறுவனான அஸ்வத். பயந்து ஓடும் காட்சிகளில் தவிக்கவிட்டுள்ளார். வில்லன்களிடம் இருந்து தப்பிக்க அவர் மறைக்கப்படும் காட்சிகள் திகிலூட்டுகின்றன.

அப்பார்ட்மெண்ட் வாசிகளும் தங்கள் கேரக்டர்களில் கச்சிதம்.

FIRST ON NET காதலர் மாடம்… கன்னி மாடம் விமர்சனம் 4/5

வில்லனாக லால். தன் மகனுக்காக எதையும் செய்யும் வில்லன். ஆனால் மிரட்டல் பத்தவில்லை. தலையில் விக் வைத்துள்ளாரோ என்னவோ? பழைய தோற்றம் அவரிடம் இல்லை.

போலீஸாக மாரிமுத்து. கேரக்டரில் வலுவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

கதவு லென்ஸ் வழியே நட்ராஜ் பார்க்கும் காட்சிகள் நிஜமாகவே சூப்பர். அவ்வளவு உயரமான அப்பார்ட்மெண்ட் பார்த்தாலே அப்படியொரு பயம். நிறைய ஆங்கிள்கள் வைத்து விளையாடியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரம்.

இவரும் நவின் ரவீந்தரனின் பின்னணி இசையும் படத்துக்கு பெரிய பலத்தை கொடுத்துள்ளது. பின்னணி இசை நிறைய இடங்களில் மிரட்டியுள்ளது..

ஒளிப்பதிவும் பின்னனி இசையும் இல்லை என்றால் காட்ஃபாதரை யாராலும் காப்பாற்ற முடியாது எனலாம். (ஒளிப்பதிவாளர் நட்டி பயிற்சி கொடுத்திருப்பாரோ?)

ஜெகன் ராஜசேகர் என்பவர் இயக்கியிருக்கிறார். வில்லன் தன் மகன் மீது அதிக பாசம் வைத்துள்ளார் அதை காட்சிகளாக கொடுத்திருக்கலாம். நம்மால் கேரக்டரில் திடீரென ஒன்ற முடியவில்லை.

குறும்படமாக படத்தை எடுத்திருக்கலாம். நிறைய காட்சிகள் வீணடிக்கப்பட்டுள்ளன. வில்லன் அடியாட்கள் மிரட்டலாக வருவதை அடிக்கடி காட்டியிருக்கிறார். அதை எடிட்டர் கவனித்திருக்கலாம்.

கடைசியாக வரும் வசனம் நிச்சயம் கைதட்டலை அள்ளும். உனக்கு நிறைய ஆட்கள் இருக்கலாம். ஆனால் இது என் வீடு என நட்ராஜ் பேசும்போது தான் அவர் செய்துள்ள பக்கா ப்ளான் தெரிகிறது. அப்போது காட்டப்படும் காட்சிகள் சிறப்பு.

மற்றபடி சொல்லவந்த விஷயத்தில் மட்டுமே கவனத்தை செலுத்தியுள்ள ஜெகன் ராஜசேகரை நிச்சயம் பாராட்டலாம்.

ஆக.. இந்த காட்ஃபாதர்.. அப்பாவி அப்பா

FIRST ON NET காதலர் மாடம்… கன்னி மாடம் விமர்சனம் 4/5

FIRST ON NET காதலர் மாடம்… கன்னி மாடம் விமர்சனம் 4/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

ஹீரோ ஸ்ரீராம், ஆடுகளம் முருகதாஸ், வெலினா உள்ளிட்டவர்கள் தந்தை பெரியார் ஆட்டோ ஸ்டாண்டின் ஆட்டோ ஓட்டுனர்கள்.

ஸ்ரீராம் ஒரு பிரச்சினையால் ஊரை விட்டு வந்து சென்னையில் ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கிறார். இவரின் தந்தை ஜெயிலில் இருக்கிறார். எனவே சொல்ல முடியாத சோகத்தில் வாழ்கிறார்.

ஒரு நாள் ஸ்ரீராம் ஆட்டோவில் ஊரை விட்டு ஓடி வந்த காதலர்கள் விஷ்னு மற்றும் சாயா தேவி (காயத்ரி மலர்) சவாரிக்கு வருகின்றனர்.

அவர்களுக்கு யாரும் ஆதரவில்லை என்பதால் அவர்களுக்கு உதவியும் செய்கிறார்.

ஒரு கட்டத்தில் நாயகி தனிமைப்படுத்தப்படுகிறார். ஏன் அவரின் கணவர் என்ன ஆனார்? அதன்பின்னர் ஹீரோ என்ன செய்தார்? ஹீரோவின் அப்பா ஏன் ஜெயிலில் இருக்கிறார்? என்ன பிரச்சினை? என்பதே மீதிக்கதை.

STYLISH MAKING… மாஃபியா விமர்சனம் 2.5/5

கேரக்டர்கள்..

ஆடுகளம் முருகதாஸ், சூப்பர் குட் சுப்ரமணி உள்ளிட்ட ஒரு சிலரே நமக்கு தெரிந்த முகங்கள். மற்றவர்கள் புதுமுகங்களே.. ஆனால் நடிப்பில் அசத்தல் அறிமுகங்கள்..

ஸ்ரீராம் மற்றும் சாயாதேவி (காயத்ரி) இருவரும் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர். கேரக்டரை உள்வாங்கி உணர்வுபூர்வமான நடிப்பை கொடுத்துள்ளனர்.

ஹீரோயின் கண்களும் சரி உதடுகளும் சரி பேசும் பாஷை புதிது.

இருவருக்கும் இனி நிறைய வாய்ப்புகள் வரும். கண்களாலேயே இருவரும் பல மொழி பாஷைகளை பேசியுள்ளனர்.

அதுபோல் 2வது ஹீரோவாக வரும் விஷ்னுவும் ஷாப்ட்டான நடிப்பை கொடுத்திருக்கிறார். இவரின் முடிவு எதிர்பாராத ஒன்று.

ஜாதியை மீறி கரம்பிடித்த காதலியை இவர் பார்த்துக் கொள்ளும் விதம் அருமையும் கூட.

இனி ஆடுகளம் முருகதாஸ் தனியாக காமெடி செய்யலாம். படத்தில் இவரது காமெடி நிச்சயம் பேசப்படும்.

அப்பாவி அப்பா… காட்ஃபாதர் விமர்சனம் 3/5

ரோபோ சங்கரின் மனைவி ப்ரியா. கவுன்சிலர் & வீட்டின் முதலாளி வேடத்தில் கலக்கி எடுத்துள்ளார்.

இவருக்கு ஆடுகளம் முருகதாசுக்கும் செமயாய் காமெடி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. அக்கா.. 20 வருசமா நீங்க வாயும் வயிறுமா இருந்தீங்களா? உங்க தியாகி புருசன் எங்க அக்கா? என அவரை கிண்டல் செய்யும் போதெல்லாம் தியேட்டரில் அப்ளாஸ்.

அதுபோல் சூப்பர் குட் சுப்ரமணி நடிக்க சான்ஸ் கேட்டு அலையும் நபராக அசத்தல். ரஜினி அரசியலுக்கு போறாரு. ரோபோட் 3 படத்தை என்னைய வச்சுதான் ஷங்கர் எடுக்க போறாரு என காமெடி செய்வதிலும் வயசாச்சு ஊருக்கு போறேன் என கலங்கும் இடத்திலும் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார்.

ஹீரோ ஸ்ரீராமின் அப்பவாக கஜராஜ். சில காட்சிகள் என்றாலும் ஜாதி வெறி பிடித்த அப்பாவாக நெஞ்சில் நிறைகிறார். க்ளைமாக்ஸில் இவரும் ஹீரோவும் சந்திக்கும் காட்சிகள் செம ட்விஸ்ட். அதை சொன்னால் கன்னி மாடம் கவனம் சிதறிவிடும்.

ஆட்டோ ஓட்டும் பெண்ணாக வரும் ஸ்டெல்லா (வெலினா) கண்களாலேயே காதல் பேசியிருக்கிறார். இவரின் திருமண காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஹரிஷ் சாய் இசையமைத்துள்ளார். 3 காலு வாகனம் பாடல் ரசிக்க வைக்கிறது. மெலோடி பாடலும் இவருக்கு கைகொடுக்கிறது. பின்னணி இசையும் சிறப்பு.

ஒளிப்பதிவாளர் இனியனை எவ்வளவு பாராட்டினாலும் இனிக்கும். முக்கியமாக 2வது ஹீரோ (விஷ்னு) மற்றும் நாயகி இருவரும் படுக்கையில் தனிமையில் இருக்கும் அவர் வைத்துள்ள கேமரா ஆங்கிள் செம. நாயகி முகம் பாதி.. நாயகனின் முகம் பாதி என லைட்டிங்கில் மிரட்டியுள்ளார்.

அதுபோல் க்ளைமாக்ஸின் போது ரத்தம் தரையில் ஓடும்போது அதில் நாயகியின் முகம் காட்டப்படும் காட்சிகள் ரத்த வெறி ஒளிப்பதிவு.

ரிஷல் ஜெய்னி எடிட்டிங் செய்துள்ளார். முதல் பாதியில் அடுத்தடுத்து வரும் பாடல்கள் தேவையில்லை. ஒரு பாட்டை கட் செய்திருக்கலாம். மேலும் முதல்பாதியில் கொஞ்சம் கத்திரி போட்டு இருந்தால் விறுவிறுப்பு இருந்திருக்கும்.

நடிகராக ஜொலித்த போஸ் வெங்கட் இந்த படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். முதல் படத்திலேயே (பந்திலேயே) சிக்ஸர் அடித்துள்ளார். இனி இவர் இரட்டை குதிரை சவாரி தாராளமாக செய்யலாம்.

சினிமாவில் வருவதற்கு முன் ஆட்டோ டிரைவராக இருந்தவர் போஸ் வெங்கட். அப்போது அவர் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை அப்படியே திரையில் கொண்டு வந்துள்ளார். காட்சிகளை கவிதையாக்கியுள்ளார்.

இடைவேளை மற்றும் க்ளைமாக்ஸ் இரண்டும் எதிர்பாராத ட்விஸ்ட். காதலையும் ஜாதியை சொல்லி அதற்கு பாடமும் எடுத்துள்ளார் போஸ் வெங்கட்.

ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

ஆக இந்த கன்னி மாடம்.. சாதியற்ற காதலர் மாடம்

சிரிப்பா சிரிக்குது… நான் சிரித்தால் விமர்சனம் 3/5

சிரிப்பா சிரிக்குது… நான் சிரித்தால் விமர்சனம் 3/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

இந்த உலகத்தில் எத்தனையோ வினோத மனிதர்கள் இருக்கிறார்கள்.

ஒரு சிலருக்கு நாக்கில் கூட கரண்ட் வரவைக்கும் சக்தி உள்ளது. அதுபோன்ற வினோத மனிதர்கள் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறார் ஹிப் ஹாப் ஆதி.

அப்படி இவரிடம் என்ன வினோதம் என்றால்… வலியோ, துன்பமோ எது வந்தாலும் சிரித்து விடுவார்.

இழவு வீட்டிற்கு போனாலும் கஷ்டத்தால் சிரித்துவிடுவார்.

இதனால் வாழ்க்கையில் இன்பத்தையும் இழக்கிறார். காதலி முதல் ஐடி வேலை வரை இழக்கிறார்.

ஒரு கட்டத்தில் தன் உயிர் நண்பன் காணாமல் போன டில்லி பாபுவை தேடி செல்கிறார்.

First On Net கடவுள் தந்த காதல்… Oh My கடவுளே விமர்சனம் 3.5/5

அப்போது அதே ஏரியா டான் டெல்லி பாபுவை (கே.எஸ்.ரவிகுமார்) கொலை ஒரு கும்பல் திட்டமிடுகிறது.

இவரும் டில்லி பாபு என்ற நபரை தேடி செல்வதால் இவர் தான் அவர் என தப்பு கணக்கு போட்டு விடுகின்றனர்.

அப்போது ஹிப் ஹாப் சிரிக்க என்ன என்ன பிரச்சினைகளை சந்தித்தார் என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

தனக்கு ஏற்ற 90 கிட்ஸ் கதையை தேர்ந்தெடுத்திருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி. ஏற்கெனவே அவருக்கு சிரித்த முகம் என்பதால் கேரக்டர் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

ஆக்சன் தவிர பாட்டு, டான்ஸ், காமெடி என விளையாடியிருக்கிறார். ஆனால் சில இடங்களில் ஓவர் ஆக்டிங் உள்ளது. அதை குறைத்திருக்கலாம்.

மீசையை முறுக்கு, நட்பே துணை படங்களை ஒப்பிடுகையில் இதில் கொஞ்சம் காமெடி குறைவுதான்.

கேஎஸ். ரவிக்குமார், ரவிமரியா என இரண்டு டான்கள். இருவரும் காமெடி பீஸ்தான். ரவிமரியா காமெடியில் கலக்கியிருந்தால் கேஎஸ். ரவிக்குமார் தன் லுக்கிலேயே கவர்ந்துவிடுகிறார்.

நாயகியாக ஐஸ்வர்யா மேனன். கொஞ்சம் அழகு. கொஞ்சம் கவர்ச்சி என கவர்கிறார்.

சுந்தர் சி படம் போல படத்தில் எப்போதும் கூட்டமாகவே உள்ளது. (தியேட்டரில் எப்படின்னு தெரியல) முனீஷ்காந்த், ஷாரா, படவா கோபி, பாண்யடிராஜன், சுஜாதா, எரும சாணி விஜய், ராஜ்மோகன், ஜீலி உள்ளிட்டவர்களும் உண்டு.

முனீஷ்காந்த் காமெடி ஆங்காங்கே ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

கௌரவ தோற்றத்தில் யோகிபாபுவும் உண்டு. அவர் இதுபோல சில காட்சிகளில் வந்து செல்வதை தவிர்த்துவிடுவது நல்லது.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஹிப் ஹாப் ஆதி இசையமைத்த ப்ரேக் அப் பாட்டு, பர்த்டே பார்ட்டி பாட்டு, நான் சிரிச்சா வேற லெவல் ஆகிய பாடல்கள் இளைஞர்களுக்கு கொண்டாட்டம்தான். இனி நிறைய பேரின் வாட்ஸ் அப் ஸ்டேடஸ்சில் இதை பார்க்கலாம்.

பின்னணி இசை நன்றாக பாராட்டும்படி உள்ளது.

வாஞ்சிநாதன் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். இளைஞர்களின் கண்களுகு இதமான ஒளிப்பதிவு.

எடிட்டர் இன்னும் கொஞ்சம் நீளத்தை குறைத்திருக்கலாம். முதலில் வரும் டான் கதைகள் இன்ட்ரோ தேவையில்லாத ஆணி. அதுபோல் வினோத மனிதர்கள் அர்ச்சனா காட்சிகளும் தேவையில்லை.

க்ளைமாக்ஸில் சொல்லப்படும் வசனங்கள் மனதிற்கு நிறைவை தருகின்றன.

முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு 2ஆம் பாதியில் கொஞ்சம் குறைவு. ஆனால் க்ளைமாக்சில் அதை சரிசெய்துவிட்டார் டைரக்டர் ராணா.

நாட்டில் எப்படியான அக்கிரமங்கள் நடந்தாலும் இணையத்தில் கடுப்பாக ஒரு பதிவை போட்டு தன் வேலையை பார்க்கும் நம்மை போல மனிதர்களை பார்த்தால் நிச்சயம் சிரிப்புதான் வரும். என்பது போன்ற வசனங்கள் கைத்தட்டல்களை அள்ளும்.

காதலர் தினத்தில் யூத்களை தியேட்டருக்கு வரவைக்க ஹிப் ஹாப் ஆதி அண்ட் தயாரிப்பாளர் சுந்தர் சி, இயக்குனர் ராணா ஆகியோர் போட்ட திட்டம்தான் இந்த நான் சிரித்தால் படம். அது நிச்சயம் நடக்கும்.

ஆக நான் சிரித்தால்.. சிரிப்பா சிரிக்குது… 3/5

First on Net கடவுள் தந்த காதல்… Oh My கடவுளே விமர்சனம் 3.5/5

First on Net கடவுள் தந்த காதல்… Oh My கடவுளே விமர்சனம் 3.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் இருவரும் பள்ளி பருவம் முதலே நண்பர்கள். இவர்களின் இன்னொரு நண்பர் ஷாரா. இவர்களின் 2 வயது சீனியர் வாணி போஜன்.

ஒரு கட்டத்தில் அசோக் செல்வனை திருமணம் செய்துக் கொள்ள ஆசைப்படுகிறார் ரித்திகா சிங்.. அவர் மீது காதல் இல்லை என்றாலும் சரி ப்ரெண்டுதானே என ஓகே சொல்கிறார் அசோக்.

ஒரு கட்டத்தில் வாணி போஜனால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட விவாகரத்து வரை செல்கிறது.

சிரிப்பா சிரிக்குது… நான் சிரித்தால் விமர்சனம் 3/5

அப்போது கடவுள் ரூபத்தில் வரும் விஜய்சேதுபதி உன்னுடைய வாழ்க்கையை மாற்றியமைக்க ஒரு வழி சொல்கிறேன். முடிந்தால் நீ மறுபடியும் உன் வாழ்க்கையை மாற்றி கொள் என அசோக்கிடம் சொல்கிறார்.

அதன்பின்னர் என்னானது? அசோக் என்ன செய்தார்? அவரின் காதல் குடும்பம்? கடவுள் அப்படி என்ன வரம் கொடுத்தார்? என்பதே மீதிக்கதை.

வாழை கொட்டுடிச்சி… வானம் கொட்டட்டும் விமர்சனம்

கேரக்டர்கள்…

அசோக் செல்வனுக்கு இது அல்வா சாப்பிடும் கேரக்டர் போல. அப்படி அசத்தியிருக்கிறார். அப்பாவித்தனம் முதல் ரொமான்ஸ வரை சிறப்பாக செய்துள்ளார்.

நூடுல்ஸ் மண்டை பெண்ணாக ரித்திகா சிங் (அசோக் இவரை அப்படிதான் செல்லமாக அழைப்பார்.) கிக் பாக்சிங் வீராங்கனை இதில் குடும்ப பெண்ணாக அதே சமயத்தில் சந்தேகப்படும் பெண்ணாக கிக் அடித்திருக்கிறார். ரித்திகா ரியலி சூப்பர்.

டிவியில் கலக்கிய வாணி போஜன் இதில் அறிமுகம். அவருக்கு குறையில்லாமல் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார்.
ஷாரா படத்திற்கு தேவையான காமெடியை கொடுத்துள்ளார். சொன்னா புரியாது.. சொன்னா புரியாது என இவரிடம் அசோக் சொல்லும்போது எல்லாம் செம காமெடி.

விஜய்சேதுபதியும் ரமேஷ் திலக்கும் தங்கள் பங்களிப்பில் சிறப்பு.

டாய்லெட் செராமிக்ஸ் விற்பனையாளராக எம்எஸ். பாஸ்கர். கக்கூஸில் அமர்ந்து இவர் சொல்லும் காமெடி கதைக்களம் புதிய ஒன்றுதான்.

சீறும் சிறுமிகள்… சீறு விமர்சனம்


தொழில்நுட்ப கலைஞர்கள்..

லியோன் ஜேம்ஸின் பின்னணி இசையும் பாடல்களும் ரசிக்க வைக்கிறது. கதைப்போமா…. பாடல் ரசிகர்களை கவரும்.

விது அய்யன்னாவின் ஒளிப்பதிவு படத்தின் உயிர்நாடி. காதலையும் கலர்புல்லாக காட்டியிருக்கிறார்.

பூபதி செல்வராஜின் எடிட்டிங் கொஞ்சம் வேறுபட்டாலும் இது எல்லாம் ரசிகர்களை கவருமா? தெரியவில்லை.

எளிதில் புரியும்படியாக வெட்டி ஒட்டியிருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.

ஜாதியற்ற ஜனங்களாவோம்… நாடோடிகள் 2 விமர்சனம் 4/5

க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் மற்றும் இடைவேளை ட்விஸ்ட் ரசிக்க வைக்கிறது.

என்னதான் காதல் படம் என்றாலும் கொஞ்சம் கூட காமம் இல்லாமல் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அஸ்வத்.

காதலர் தினத்தில் காதலர்கள் மட்டுமல்ல குடும்பமே கொண்டாடக்கூடிய படமாக தான் கொடுத்துள்ள டைரக்டர் அஸ்வத்தை நிச்சயம் பாராட்டலாம்.

ஆக.. ஓ மை கடவுளே… கடவுள் தந்த காதல்

Oh My Kadavule review rating

First on Net வாழை கொட்டுடிச்சி… வானம் கொட்டட்டும் விமர்சனம்

First on Net வாழை கொட்டுடிச்சி… வானம் கொட்டட்டும் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் தயாரிப்பில் சரத்குமார், ராதிகா, விக்ரம்‌ பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு, மடோனா, நந்தா, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வானம் கொட்டட்டும்’.

தனா என்பவர் இயக்க, சித்ஸ்ரீராம் இசையமைத்துள்ளார்.

கதைக்களம்…

பாலாஜி சக்திவேல் மற்றும் சரத்குமார் இருவரும் அண்ணன் தம்பி.

சரத்குமாரின் மனைவி ராதிகா. இவர்களுக்கு விக்ரம் பிரபு மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் என இரு பிள்ளைகள்.

தன் அண்ணன் பாலாஜி சக்திவேலுக்காக ஒரு கொலை செய்து ஜெயிலுக்கு செல்கிறார் சரத்குமார்.

இதனால் 16 வருடங்களாக வேலை செய்து தன் பிள்ளை வளர்க்க பாடுபடுகிறார் ராதிகா.

பிள்ளைகள் பெரியவர்கள் ஆனதும் வாழைக்காய் மண்டி வைத்து கோயம்பேட்டில் வியாபாரம் செய்கின்றனர்.

First On Net சீறும் சிறுமிகள்… சீறு விமர்சனம்

சிறையிலிருந்து சரத்குமார் வெளியே வந்த பின்னர் பிள்ளைகள் அவரிடம் சரியாக பேசுவதில்லை. இதனால் வெறுத்து மீண்டும் குடும்பதை விட்டு போகிறார் சரத்.

இதனிடையில் சரத்குமாரை கொல்ல திட்டமிட்டு நந்தா வருகிறார்.

அதன்பின்னர் என்ன ஆனது? சரத்குமார் உயிர் பிழைத்தாரா? குடும்பம் ஒன்று சேர்ந்த்தா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

படத்தில் இளைய நடிகர்கள் நிறைய இருந்தாலும் சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ரொமான்ஸ் மற்றும் காதல் இருக்கிறது. ஒருவேளை நிஜ தம்பதிகள் என்பதால்தானோ என்னவோ அது நிறையவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

இருவரும் தங்கள் நடிப்பில் கச்சிதம். அவர் ஜெயிலுக்கு போய்ட்டு வந்தாலும் அவர் தான் என் புருசன் அவரை விட்டு கொடுக்க முடியாது என்பதில் ராதிகா காட்டும் அன்பும் அக்கறை மெய் சிலிர்க்க வைக்கும்.

சீரியஸ் கேரக்டர் என்றால் அது விக்ரம் பிரபுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி போல. நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். நிறைய பைட் சீன்களை கொடுத்திருக்கலாம். ஆனால் குடும்பம், வாழைக்காய் மண்டி, வரவு செலவு என இப்படியே ஓட்டி விட்டார்கள்.

தங்கை வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலக்கல். சில நேரங்களில் ஓவர் ஆக்டிங் தெரிகிறது.

First On Net காடும்… நாட்டுமிராண்டிகளும்… அடவி விமர்சனம்

சாந்தனு பாவம். சர்போர்ட்டிங் கேரக்டர் போல வந்துள்ளார். இவருக்கும் ஐஸ்வர்யாவுக்கும் உள்ள காதல் உணர்வில்லை. திடீரென பூத்த பூ போல உள்ளது.

அதுபோல் விக்ரம் பிரபு மற்றும் மடோனா காதல் வேஸ்ட். படத்திற்கு தேவையில்லாத காட்சிகள்.

பாலாஜி சக்திவேல் கேரக்டர் பக்கா. யதார்த்த மனிதராக வாழ்ந்திருக்கிறார்.

மதுசூதனன் கேரக்டரை இன்னும் டெவலப் செய்திருக்கலாம். இவரின் மகன் கேரக்டரும் அப்படித்தான்.

வில்லனாக இரட்டை வேடத்தில் நந்தா. இரண்டும் ஓவர் பில்டப் தான். பொருந்தவில்லை. லுக் நல்லா இருக்கு. ஆனா வில்லத்தனம் போதவில்லை.

இடைவேளை கூட இவரை வைத்துதான் நகர்கிறது. ஆனால் சுவாரஸ்யம் இல்லை. இப்படிதான் காட்சி இருக்கும் என தெரிவதால் நம்மால் திரையை பார்க்க முடியவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு சூப்பர். படத்துடன் ஒன்ற வைக்க இது உதவுகிறது.

பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ளார். பாடல்கள் ஆங்காங்கே வந்தாலும் மனதில் ஒட்டவில்லை. கண்ணுத் தங்கம்… பாடல் பரவாயில்லை. அவரின் குரல் ஈர்த்த அளவுக்கு இசை ஈர்க்கவில்லை.

குறைவான நிமிடத்தில் சொல்ல வேண்டிய கதையை ரொம்ப நீட்டிவிட்டார் தனா. எந்த ட்விஸ்ட்டும் இல்லை. நிறைய இளைய நடிகர்கள் இருந்தும் காதல் துளி கூட இல்லை.

தன் குருநாதர் மணிரத்னம் பாணியில் படத்தை கொடுக்க நினைத்துள்ளார். ஆனால் பெரிதாக ஸ்கோப் இல்லை. மனதில் பதிகின்ற போல நச் வசனமும் படத்தில் இல்லை.

அப்பா பிள்ளைகள் உறவு, பழிவாங்கும் கதை என வழக்கமான கதையை கொடுத்துள்ளார். சென்டிமெண்ட் காட்சிகள் குடும்ப பெண்களுக்கு பிடிக்கும்.

ஆக.. இந்த வானம் கொட்டட்டும்.. வாழை கொட்டுடிச்சி

First on Net சீறும் சிறுமிகள்… சீறு விமர்சனம்

First on Net சீறும் சிறுமிகள்… சீறு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

மயிலாடுதுறையில் (மாயவரம்) கேபிள் டிவி நடத்தி வருகிறார் மணிமாறன் (ஜீவா). எனவே அந்த ஊர் முழுக்க பிரபலமாகிறார்.

இந்த டிவி மூலம் நிறைய சமூக பணிகளை செய்வதால் இவருக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். நண்பன் என்று இவரை சொன்னாலோ எதையும் செய்ய தயங்காதவர் ஜீவா.

இவரின் நேர்மையால் அந்த ஊரின் பிரபலம் பாதிக்கப்படுகிறார்.

எனவே ஜீவாவை தீர்த்து கட்ட சென்னையில் உள்ள மல்லி (வருண்) என்ற தாதாவை மாயவரம் வரவைக்கிறார்.

ஜீவாவை கொல்ல வரும் வருண் அப்போது ஜீவாவின் தங்கை பிரசவத்துக்கு ரத்தம் கொடுத்து உதவுகிறார்.

இதனால் வருணை பார்க்க வேண்டும் என தங்கையும் கோரிக்கை வைக்கிறார்.

First On Net வாழை கொட்டுடிச்சி… வானம் கொட்டட்டும் விமர்சனம்

தன் தங்கை உயிரை காப்பாற்றிய வருணிடம் தன்னை கொல்ல தானாகவே செல்கிறார் ஜீவா.

அதன்பின்னர் என்ன ஆனது? என்பதே மீதி கதை.

கேரக்டர்கள்…

தெனாவெட்டு, ரௌத்திரம் உள்ளிட்ட பல படங்கள் பாணியில் ஜீவா தெரிகிறார். ஆனால் இதிலும் இன்னும் கூடுதல் ஸ்மார்ட்டாக இருக்கிறார்.

அதிரடியிலும் நட்பிலும் பாசத்திலும் நம்மை அசத்திவிடுகிறார் ஜீவா.

ஹீரோயின் படத்தில் இருந்தாரா? என்ற கேள்வி நம்மில் எழும். அந்தளவிற்கே நாயகி பாத்திரம் உள்ளது. இவருக்கு டூயட்டும் உள்ளது.

ஜீவாவின் தங்கையாக வரும் அபிராமி மற்றும் கிராமத்து சாதனை மாணவி சாந்தினி இருவரும் நடிப்பில் கச்சிதம்.

கோலி சோடா படத்தில் பார்த்த சாந்தினி இதில் கொஞ்சம் ஒல்லியாக இருக்கிறார். ஆனால் நடிப்பில் கில்லியாக வெளுத்துவிட்டார்.

+2 படிப்பில் சாதித்துவிட்டு இவர் மீடியா முன் பேசும் பேச்சு சிறுமிகளை உற்சாகப்படுத்தும். இவரின் முடிவுக்கு பின்னர் இவரது தோழிகள் எடுக்கும் முடிவு சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.

ஒரு பையனுக்கு பிரச்சினை என்றால் மாமா மச்சி என்று ப்ரெண்ட்ஸ் வர்றாங்க. எங்களுக்கு யாருமில்லை. இனிமே நாங்கதான். என இவர்கள் புறப்படும் காட்சி ரசிக்க வைக்கிறது.

First On Net காடும்… நாட்டுமிராண்டிகளும்… அடவி விமர்சனம்

ரயில்வே ஸ்டேஷனில் ஒரு பெண்ணை வெட்டும்போது யாரும் அவளை காப்பாற்ற வரவில்லை. இங்கே பெண்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என அவர்கள் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் நெத்தியடி.

மல்லி கேரக்டரில் மாஸ் காட்டியுள்ளார் வருண். ஹீரோ மட்டும்தான் நடிப்பேன் என்றில்லாமல் இதுபோல் வித்தியாசமான வேடங்களையும் இவர் ஏற்கலாம்.

வில்லனாக நவதீப். கொஞ்சமாக மிரட்டியிருக்கிறார்.

சதீஷின் காமெடிகளுக்கு படத்தில் ஜீவாவே சிரிப்பு வரல என்கிறார். அப்புறம் நாம் எப்படி சிரிப்பது.

96 படத்தை பார்த்துவிட்டு இந்த படத்தைவிட என்றென்றும் புன்னகை படத்தில் த்ரிஷா செமயாய் இருப்பாங்க. ஆனால் அதில் ஹீரோ சுமார்தான் என்பார் ஜீவா. அதற்கு நீ சந்தானம் ப்ரெண்ட் போல காமெடி பண்ணாத என்பார். இதுபோல் மொக்கை ஜோக்குகளே உள்ளன.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

இமானின் பின்னணி இசை நன்றாக உள்ளது.

பார்வையற்ற குருமூர்த்தி பாடியுள்ள செவ்வந்தியே… மதுவந்தியே.. என்ற பாடல் என்றும் மனதில் ஓடிக் கொண்டே இருக்கும். நம்மை உருக வைக்கும் குரல் அது.

இடைவேளைக்கு முன்பு வரும் பாடல்கள் பெரிதாக கவரவில்லை.

ஜாதியற்ற ஜனங்களாவோம்… நாடோடிகள் 2 விமர்சனம் 4/5

மாயவரம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளின் காட்சிகள் கலர்புல்லாக உள்ளது. ஒளிப்பதிவை பாராட்டலாம்.

படத்தின் நீளமே சிறியது தான் என்றாலும் இன்னும் வெட்டியிருக்கலாமே எனத் தோன்றுகிறது.

வா டீல் மற்றும் றெக்க ஆகிய படங்களை இயக்கிய ரத்ன சிவா இந்த படத்தை இயக்கியுள்ளார். வா டீல் படம் ரிலீசாகவில்லை.

றெக்க படத்தை போல அதே பாணியில் இதிலும் முயற்சித்துள்ளார். ஆக்சன், சென்டிமெண்ட், பாட்டு என்பதுதான் இவரது பார்முலா போல. அதில் பாஸ் செய்துள்ளார். ஆனால் பார்முலாவை மாற்றிக் கொண்டால் அவருக்கும் ரசிகர்களுக்கும் நல்லது.

சீறு… சீறும் சிறுமிகளின் கதையே படத்தின் பலம்.

Seeru review rating

More Articles
Follows