நடிகர் அருண் விஜய், அவரது தந்தை விஜயகுமார், அருண் விஜய்யின் மகன் அர்னவ் என மூன்று தலைமுறை இணைந்த படம் தான் “ஓ மை டாக்”. இப்படம் நேரடியாக அமேசான் ப்ரைமில் இன்று வெளியானது.
சரோவ் சண்முகம் என்பவர் இயக்க நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.
2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்துள்ளனர்.
ஒன்லைன்…
உடல் குறைபாடுள்ள ஓர் உயிரினத்தை ஒதுக்கி வைத்தல் / கொல்லுதல் பெரும்பாவம்.
ஒரு சிறுவனுக்கும் நாய்க்கும் இடையே உள்ள நட்பை தாத்தா அப்பா சென்டிமெண்டுடன் சொல்லும் படம்.
கதைக்களம்…
ஊட்டியில் தனது மனைவி மகிமா, மகன் அர்னவ், தன் தந்தை விஜயகுமாருடன் வாழ்ந்து வருகிறார் அருண்விஜய்.
குறும்புத்தனம் மிகுந்த சிறுவனாக வளர்கிறார் அர்னவ்.
தனது மகன் படிப்புக்காக தனது வீட்டினை அடமானத்தில் வைத்து வட்டி செலுத்தி வருகிறார் அருண் விஜய். வசதியை மீறி மகனை உலகத்தரப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைப்பதால் கடன் சிக்கல்.
இது ஒரு புறம்…. மற்றொரு புறம்…
இன்டர்நேஷனல் லெவல் போட்டிகளில் நாய்களை வைத்து பந்தயம் கட்டும் வில்லன் வினய்.
இவரது நாய் ஒன்று ஈன்ற குட்டி ஒன்று கண் பார்வை குறைபாடுடன் உள்ளது.
இது பந்தயத்திற்கு உதவாது என்பதால் அதனை தனது ஆட்களிடம் கொடுத்து கொல்ல சொல்கிறார் வினய்.
ஆனால் எதிர்பாராத விதமாக அந்த குட்டி அர்னவிடம் செல்கிறது.
பிறகென்ன அர்னவும், அந்த நாய் குட்டியும் செய்யும் அட்டகாசங்களும் கதையாகிறது.
அதற்கு சிம்பா என பெயரும் சூட்டுகிறார் அர்னவ். தனது தீவிர முயற்சியால் சிம்பாவின் கண்பார்வையை சரி செய்கிறார் சிறுவன்.
ஒரு கட்டத்தில் நாய்கள் போட்டியில் வினய் வளர்த்த நாயோடு அர்னவ் வளர்த்த சிம்பாவும் போட்டி போடுகிறது.
போட்டியில் ஜெயித்தது யார்.? அருண் விஜய்யின் கடன் பிரச்சனை என்னவானது.? என்பதே மீதிக் கதை.
கேரக்டர்கள்…
அருண்விஜய் மிடில் க்ளாஸ் வறுமையை கடக்கும் காட்சிகளில் அசத்தல். நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார்.
நாயகியாக மகிமா நம்பியார். அம்மா பாசத்தில் கவர்கிறார்.
அர்னவ் தனது முதல் படம் போல் இல்லாமல் அழகான பாவனைகளை அள்ளி தெளித்து இருக்கிறார். சில இடங்களில் செயற்கை.
நாய் சிம்பாவோடு இவர் செய்யும் சேட்டைகளை ரசிக்கலாம். எமோஷ்னல் காட்சிகள் அனைவரையும் கவரும். இவனுடன் நடித்த குட்டீஸ் அனைவரும் ரசிக்க வைத்துள்ளனர்.
வில்லனாக வினய். பெரிதாக மிரட்டல் இல்லை.. வினய்யோடு வரும் இரு கோமாளிகள் வேஸ்ட். எந்த இடத்திலும் சிரிக்க முடியல.
சிம்பா எனும் நாய்க்குட்டியை நாமும் தூக்கிக் கொஞ்சலாம் எனத் தோன்றும்.
மைனஸ்…
நாயை திருட வரும் வில்லன் ஆட்கள் நாய் போல அமைப்புள்ள வண்டியில் வருவது ஏன்.? இன்டர்நேஷனல் போட்டியில் பங்கேற்க சிறுவர்கள் தனியாக வருவது எப்படி.?
டெக்னீசியன்ஸ்…
நிவாஸ் கே பிரசன்னாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிக்க வைக்கும். கோபிநாத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. லொகேஷன் தேர்வை கச்சிதமாக கையாண்டுள்ளனர்.
நாய்களை விரும்பும் குழந்தைகளை கவர நிறைய காட்சிகளை வைத்துள்ளார் இயக்குனர் சரோவ்.
நாய்க்குட்டி உள்ளிட்ட உயிரினங்கள் மீது நாம் காட்ட வேண்டிய அன்பையும் அக்கறையையும் சுட்டி காட்டியிருக்கிறார்.
ஆக OH MY DOG… நம்பிக்கை நாய்(யகன்)
Oh My Dog Movie Review and Rating in Tamil