காலக்கூத்து விமர்சனம்

காலக்கூத்து விமர்சனம்

நடிகர்கள் : பிரசன்னா, கலையரசன், தன்ஷிகா, ஸ்ருஷ்ட்டி டாங்கே மற்றும் பலர்
இயக்கம் – எம் நாகராஜன்
ஒளிப்பதிவு – பி.வி. சங்கர்
இசை – ஜஸ்டின் பிரபாகரன்
எடிட்டிங் – செல்வா
பி.ஆர்.ஓ. : நிகில்
தயாரிப்பு : மதுரை ஸ்ரீ கள்ளழகர் கம்பெனி

கதைக்களம்…

பிரசன்னாவும் கலையரசனும் பால்ய நண்பர்கள். வேலைக்கு செல்லாத கலையரசன் கல்லூரியில் படிக்கும் தன்ஷிகாவை காதலிக்கிறார்.

தன்ஷிகாவும் வீட்டை விட்டு வந்து கல்யாணம் செய்துக் கொள்ளும் அளவுக்கு வெறித்தனமாக காதலிக்கிறார்.

பிரசன்னாவை துரத்தி துரத்தி லவ் செய்கிறார் சிருஷ்டி டாங்கே. முதலில் மறுக்கும் பிரசன்னா பின்னர் காதலை ஏற்கிறார்.

இதனிடையில் சிருஷ்டி டாங்கேவுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் நடக்கிறது.

அதன்பின்னர் காதல் தோல்வியும் இருக்கும் பிரசன்னா, தன் நண்பனின் காதலை சேர்த்து வைக்க முயல்கிறார்.
இறுதியில் என்ன ஆனது? என்பதே இதன் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

அமைதியான முகம் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பில் பிரசன்னா பிரகாசிக்கிறார்.

துறுதுறு கேரக்டரில் கலையரசன். வேலைக்கு செல்லாமல் தன்ஷிகா பின்னாடி சுற்றுவதும் காதலியை கரம் பிடிப்பதிலும் கலக்கல்.

மதுரை மாவட்ட மொழியில் தன்ஷிகா தேர்ச்சி பெறுகிறார். க்ளைமாக்ஸில் அப்ளாஸ் அள்ளுவார்.

அப்பாவுக்கு பயந்த பெண்ணாக ஸ்ருஷ்டி டாங்கே சூப்பர். காதலனை கழட்டிவிட்டு கல்யாணமும் செய்துக் கொள்கிறார்.

இவர்களுடன் நண்பனாக வருபவரும், கவுன்சிலர் தம்பிகளும் கச்சிதம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் ரசிக்கலாம். கண்ண கட்டி பாடல் முணுமுணுக்க வைக்கும்.

சங்கரின் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் அழகு. படத்தொகுப்பாளர் செல்வா நிறைய காட்சிகளை கத்திரி போட்டிருக்கலாம்.

காதலிச்சவனை கழட்டிவிட்டால் லைப்பில் நன்றாக இருக்கலாம் என்று இயக்குனர் சொல்ல வருகிறாரா?

காதலித்து கல்யாணம் செய்தால் குடும்பத்திற்கு அசிங்கம். காதலர்களுக்கு மரணம் என்கிறாரா? என்று புரியவில்லை.

காதலிக்கும் நண்பனுக்கு உதவினால் உனக்கு சங்குதான் என்று சொல்கிறாரா? இதுபோல் பல கேள்விகள் நிச்சயம் எழுகிறது.

ஆனால் இறுதியில் வறட்டு கௌரவத்தை தவிர்த்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்கிறார்.
மதுரையை மையமாக வைத்து கதைக்களத்தை நகர்த்தியுள்ளார் அறிமுக இயக்குனர் நாகராஜன்.

மிகவும் பழக்கப்பட்ட கதை வேறு. அதை இன்னும் பொறுமையாக கொண்டு சென்று சோதித்து விடுகிறார்.

படம் எடுக்கப்பட்ட விதம் அருமையாக இருந்தாலும் இதற்கு இவ்வளவு நேரம் தேவையா? என்பதுதான் கேள்வி

டிவிஸ்ட் வைத்து காட்சிகளை நகர்த்தியிருக்கலாம். அடுத்தடுத்த காட்சிகள் யூகிக்கும் படி இருப்பதுதான் திரைக்கதையின் பலவீனம்.

காலக்கூத்து… இந்த காலத்துக்கு இந்த கூத்து ஒர்க்அவுட் ஆகுமா.?

Comments are closed.

Related News

அதர்வா நடித்து, தயாரித்துள்ள செமபோத ஆகாதே…
...Read More
பேராண்மை படத்தில் அறிமுகமாகி, குறுகிய காலத்திலேயே…
...Read More
ரஜினியின் கபாலி படத்தில் கலையரசன், தன்ஷிகா…
...Read More
கபாலி படப்புகழ் கலையரசன் மற்றும் பிரசன்னா…
...Read More