ஒன்லைன்…
இதய சிகிச்சையில் கூட இரக்கமற்ற நபர்களின் வியாபாரமே கதை.
மணிபாரதி இயக்கத்தில் செங்குட்டுவன், அம்மு அபிராமி, மற்றும் தீபக் நடிப்பில் உருவான படம் ‘பேட்டரி’.
கதைக்களம்…
சப் இன்ஸ்பெக்டர் ஹீரோ செங்குட்டுவன். சென்னையில் ஒரு கொலை நடக்க அந்த விசாரணையில் இறங்குகிறார் ஹீரோ.
அந்த நபர் கொலை செய்யப்படும்போது அவரது வாயில் பல பேட்டரிகளை திணித்து கொல்லப்படுகிறார். இதுபோல அடுத்தடுத்து கொலைகள் நடக்கின்றன.
ஒரு போலீஸ் அதிகாரியும் கொல்லப்படுகிறார். தீவிர விசாரணையில் இறங்கியும் துப்பு கிடைக்காமல் போலீஸ் திணறுகிறது.
பேட்டரிகளை வாயில் திணித்து கொல்லப்படுவது ஏன்? இந்த கொலைகளை யார் செய்வது? எதற்காக செய்கிறார்கள்? என்பதே படத்தின் கதை.
கேரக்டர்கள்…
ஹீரோ செங்குட்டுவன் கம்பீரமான போலீசாக வருகிறார். கதைக்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளார். சில காட்சிகளில் மெச்சூரிட்டி தேவை. முகபாவனைகள் போதுமான அளவு இல்லை.
கதையின் நாயகியாக அம்மு அபிராமி. முதலில் படத்துடன் ஒட்டாமலே இவரின் கேரக்டர் நகர்வது போல தெரிந்தாலும் கிளைமாக்ஸ் இல் இயக்குனர் ஒரு ட்விஸ்ட் கொடுத்துள்ளது சிறப்பு. ஆனால் ஓவர் மேக்கப் உடம்புக்கு ஆகாது என்பது போல பல காட்சிகள் வருகிறார் அம்மு.
போலீஸ் அதிகாரியாக யோக் ஜேபி, தீபக் ஷெட்டி ஆகியோர் போலீசுக்கு உரித்தான கம்பீரத்தையும் தோற்றத்தையும் கொடுத்துள்ளனர்.
இவர்களுடன் அபிஷேக், நாகேந்திர பிரசாத், எம்.எஸ்.பாஸ்கர், சிறுமி மோனிகா என அனைத்து நடிகர்களும் கச்சிதம்.
இசையமைப்பாளர் சித்தார்த் விபினின் பாடல்களும் பின்னணி இசையும் கதையுடன் பயணித்துள்ளது சிறப்பு. கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம்.
மருத்துவத்துறையில் நடக்கும் மோசடியை பல படங்களை பார்த்து இருக்கிறோம். ஆனால் இதில் பேஸ்மேக்கரில் பொருத்தப்படும் பேட்டரிகளாலும் அதில் நடக்கும் திருட்டு மோசடிகள் என அனைத்தையும் அம்பலப்படுத்தியுள்ளார் இயக்குனர் மணி பாரதி.
இதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு தரும் விதமாக இந்த பேட்டரி படம் க்ரைம் மெடிக்கல் த்ரில்லராக அமைந்துள்ளது.
ஆக… இந்த பேட்டரி… சாமானியனின் சார்ஜ்
Battery movie review and rating in Tamil