சமூக காவலன்… திமிரு புடிச்சவன் விமர்சனம்

சமூக காவலன்… திமிரு புடிச்சவன் விமர்சனம்

நடிகர்கள்: விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ், சாய் தீனா, சம்பத்ராம், லட்சுமி ராமகிருஷ்ணன், முத்துராமன் மற்றும் பலர்.
இயக்கம் – கணேசா
இசை – விஜய் ஆண்டனி
ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம் நாதன்
தயாரிப்பு – பாத்திமா விஜய் ஆண்டனி
பிஆர்ஓ – சுரேஷ் சந்திரா

கதைக்களம்…

போலீஸ் விஜய் ஆண்டனிக்கு ஒரு தம்பி இருக்கிறார். தன் தம்பி மீது அதிகம் பாசம் வைத்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் ஓடி போகும் தம்பி. இளைஞராகி பிரபல ரவுடி மீசை பத்மா உதவியால் நிறைய தவறுகளை செய்கிறார்.

இதனால் வேறு வழியின்றி தன் தம்பியை என்கௌண்டர் செய்து விடுகிறார் விஜய் ஆண்டனி.

நீ என்னை அழித்துவிடலாம். ஆனால் என்னைப் போன்ற நிறைய ரவுடிகளை மீசை பத்மா உருவாக்கி வைத்திருக்கிறார். அவர்களை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. முடிந்தால் ஒரு ரவுடியை நீ திருத்திவிடு என்று சவால்விடுகிறார்.

தன் தம்பி ஆத்மா இதை அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பதல் உறக்கம் இழந்து தவிக்கிறார் விஜய் ஆண்டனி.

18க்கு வயதுக்குட்பட்ட சிறுவர்களை கூறிவைத்தே மீசை பத்மா தன் காரியங்களை செய்து வருவதால், அவர்களை அழிக்கவும் முடியாமல் திருத்தவும் முடியாமல் குழம்பி வருகிறார் விஜய் ஆண்டனி.

இதனால் மீசை பத்மாவுக்கும் விஜய் ஆண்டனிக்கும் மோதல் முற்றுகிறது.

இளைஞர்களின் மத்தியில் மீசை பத்மாவிற்கு இருக்கும் ஹீரோ இமேஜ்ஜை கொஞ்ச கொஞ்சமாக காலி செய்ய திட்டமிடுகிறார்.

இதனிடையில் ஊழல் மற்றும் லஞ்சத்தால் வளர்ந்துள்ள தன் காவல் துறையே தன் நேர்மைக்கு எதிராக செயல்படுவதால் அதையும் எதிர்கொள்கிறார்.

காவல் துறை அதிகாரிகளை எப்படி திருத்தினார்? சிறார் குற்றவாளிகளை எப்படி நல்வழிக்கு கொண்டு வந்தார்? மீசை பத்மாவை எப்படி காலி செய்கிறார் இந்த திமிரு புடிச்சவன் என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

போலீஸ் ஸ்டோரியில் புதிய கதைக்களத்தை தேர்ந்தெடுத்துள்ள கணேசாவை முதலில் பாராட்ட வேண்டும். அதுபோல் முதன்முறையாக மிடுக்கான அதே சமயம் அமைதியான போலீஸ் அதிகாரி நடித்துள்ள விஜய் ஆண்டனியை பாராட்டலாம்.

தம்பி மீது பாசம், சமூகம் மீது நேசம், ரவுடி மீது ரோசம் என மாறுபட்ட நடிப்பை தந்துள்ளார் விஜய் ஆண்டனி.

ஆனால் ரொமான்ஸ்தான் இவருக்கு சுட்ட போட்டாலும் வருவதில்லை. நிவேதா போல ஒரு பிகர் இருந்தும் விஜய் ஆண்டனி முறுக்கிக் கொண்டே இருப்பது நெருடலை தருகிறது.

மருத்துவ முத்தம் காட்சி இருந்தும் டூயட் இல்லாமல் இருப்பது காதலர்களுளுக்கு சோதனை.

பெரும்பாலும் ஹீரோயின்களுக்கு படம் முழுக்க வரும் காட்சிகள் இருக்காது. ஆனால் இதில் நிவேதா பெத்துராஜீக்கு அப்படியொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

நிவேதாவும் கிடைத்த கேப்பில் எல்லாம் தன் கவர்ச்சியாலும் காமெடியாலும் ரசிக்க வைத்து விடுகிறார். நன்றாக முயற்சித்தால் காமெடியிலும் கலக்க வாய்ப்புள்ளது.

மீசை பத்மா கேரக்டரில் சாய் தீனா. சிறார்களை வைத்து குற்றம் செய்வதற்கு இவர் சொல்லும் காரணங்கள் மிரள வைக்கிறது. நடிப்பிலும் மிரட்டியிருக்கிறார்

போலீஸ் ஏட்டாக சம்பத்ராம். நடிப்பில் நம் கவனம் ஈர்க்கிறார். ஏட்டு என்றாலே ஏளனமாக பார்ப்பவர்களை இன்ஸ்பெக்டர் விஜய் ஆண்டனி கௌரவப்படுத்தும் சீன் செம.

லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் முத்துராமன் இருவரும் சில காட்சிகளில் வந்தாலும் நிறைவான நடிப்பை தந்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ரிச்சர்ட்எம் நாதன் ஒளிப்பதிவில் காட்சிகள் அருமை. பகல் இரவு என லைட்டிங்கிலும் கவனம் ஈர்த்துள்ளார். எடிட்டர் தான் நம்மை பொறுமையை சோதித்து விட்டார். கோழிச்சண்டை போன்ற காட்சிளை நீக்கியிருக்கலாம்.

அந்த காட்சியை வைத்து மீசை மாதவனை கைது செய்தாலும் அதற்கு கோழி திருட்டு காரணம் மட்டுமே போதுமே.

நாயகன் விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன.

அருண் பாரதி வரிகளில் பாடல் வரிகள் அனைத்தும் அருமை. நக…நக… பாடல்.. திமிருக்கே புடிச்சவன் பாடல்கள் தாளம் போட்டு ரசிக்க வைக்கிறது. நீ உன்னை மாற்றிக் கொண்டால் பாடல் நிச்சயம் வரவேற்பை பெறும்.

கம்பீரமான போலீஸ் அதிகாரி சில நேரங்களில் அட்வைஸ் செய்துக் கொண்டே இருப்பது போரடிக்கிறது.

படத்தின் நீளமும் திரைக்கதை அமைப்பும் பலவீனமாக உள்ளது.

விஜய் ஆண்டனிக்கு உறக்கமின்மை மற்றும் பிளட் பிரசர் உள்ளிட்ட நோயை கொடுத்து அதை சொன்ன விதத்தில் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார் டைரக்டர் கணேசா.

படத்தில் தெலுங்கு சாயல் அதிகமாகவே உள்ளது. தமிழ் மக்களை விட ஆந்திரா ரசிகர்களை நிச்சயம் அதிர வைப்பான் இந்த திமிரு புடிச்சவன்.

ரவுடி மற்றும் திருடன் திருந்தினால் மட்டுமே குற்றத்தை முழுமையாக ஒழிக்க முடியும் என்பதையும் அதை போலீஸே செய்ய துணிவதையும் ஆணித்தரமாக சொன்ன கணேசாவை கட்டி அணைத்து பாராட்டலாம்.

சமூக காவலன்… திமிரு புடிச்சவன்

Thimiru Pudichavan review rating

Comments are closed.

Related News

தீபாவளி தினத்தில் சர்கார் திரைப்படத்துடன் விஜய்…
...Read More
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வழிக்காட்டலின்…
...Read More
கணேஷா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள…
...Read More