தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல யூடியுப் மற்றும் பேச்சாளர் ராஜ்மோகன் இயக்கி உள்ள முதல் படம் ‘பாபா பிளாக் ஷீப்’. இன்றைய கல்வி முறையை மாணவர் சேட்டைகளுடன் சொல்ல முயற்சித்துள்ளார்.. படம் எப்படி இருக்கிறது.?
இதில், ஆர்.ஜே.விக்னேஷ், நரேந்திர பிரசாத், அப்துல் அயாஸ், சேட்டை ஷெரீஃப், விருமாண்டி அபிராமி, அம்மு அபிராமி, வினோதினி, போஸ் வெங்கட், சுப்பு பஞ்சு, ஜி.பி.முத்து உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
கதைக்களம்…
சுரேஷ் சக்ரவர்த்தி ஒரு கல்வியாளர். இவருக்கு பாய்ஸ் ஸ்கூல் மற்றும் கோ-எட் ஸ்கூல் என்று இரு பள்ளிகள் சொந்தமாக உள்ளன.
ஒரு பெரிய காம்பவுண்டில் இருக்கும் இந்த இரு பள்ளிகளில் சில சேட்டை பிடித்த மாணவர்கள் உள்ளனர்.
ஒரு கட்டத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி இறந்து விடவே இவரது மகன்கள் இரண்டு பள்ளிகளையும் ஒன்றாக இணைத்து விடுகின்றனர். இதனால் சேட்டை பிடித்த மாணவர்களின் சேட்டை ரொம்பவே அதிகமாகிறது.
இரண்டு கேங்க்கும் (சிலர்) கடைசி பெஞ்சுக்காக போட்டி போட்டு மோதிக் கொள்கின்றனர்.
இரண்டு கோஷ்டிக்கும் பொது தோழியான அம்மு அபிராமி, அந்தப் பள்ளி மாணவர்களில் ஒருவர் எழுதிய தற்கொலை கடிதம் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார்.
இந்த சூழ்நிலையில் அந்த கடிதத்தை எழுதியவர் யார்? அவருக்கு என்ன பிரச்சனை.? யாரை கண்டுபிடித்தார்கள் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
பிரபலமான பல யூடியுபர்களை இந்த படத்தில் கூட்டணி சேர்த்துள்ளார் ராஜ்மோகன்.
ஆர்ஜே விக்னேஷ்காந்த், அப்துல் அயாஸ், நரேந்திர பிரசாத், அதிர்ச்சி அருண், விவேக் போன்ற யூடியூப்ர்களே இதில் மாணவர்கள்.
ஒரு சிலர் சில காட்சிகளில் ஸ்கோர் செய்தாலும் பல காட்சிகளில் ஃபெயில் மார்க்கை பெறுகின்றனர்.
ஆசிரியர்களாக விருமாண்டி அபிராமி, சுப்பு பஞ்சு, வினோதினி, போஸ் வெங்கட், இளவரசு உள்ளிட்டோரின் நடிப்பு கவனிக்க வைக்கிறது. ஆனால் பெரிய வேலையில்லை.
கண்களால் நம்மை அம்மு அபிராமி கவர்ந்தாலும் நடிப்பில் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் தான். ஆர் ஜே விக்னேஷ் நடிப்பு செயற்கைத்தனமாக உள்ளது.
மதுரை முத்து – ஜிபி முத்து என இரண்டு முத்துக்கள் இருந்தும் வேதனை தான்.
டெக்னீசியன்கள்…
ஒளிப்பதிவு : சுதர்சன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு : வேலு குட்டி
இசை : சந்தோஷ் தயாநிதி.
ஸ்கூல் பற்றிய படம் தானே அதில் மாணவர்களின் ஆட்டம் பாட்டம் ரகளை என நிறைய கொடுக்க வேண்டும் என இயக்குனர் நினைத்தாரே என்னவோ.? ஓவர் டோஸ் ஆக கொடுத்து கதையில் கோட்டை விட்டுள்ளார்.
இடைவேளை முடிந்து சில நிமிடங்களுக்கு பிறகு தான் கதையின் வேகமும் ஓட்டமும் புரிகிறது.
பாடல்களும் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. கண்களுக்கு குளிர்ச்சி. படத்தொகுப்பாளர் தான் தன் பணியை இன்னும் மெனக்கெட்டு செய்திருக்கலாம்.
முக்கியமாக யூடியூபில் பிரபலமான மொக்க ஜோக்குகள்.. 80ஸ் கிட்ஸ்.. 90ஸ் கிட்ஸ் மீஸ்கள் 2k கிட்ஸ் அலப்பறைகள்.. ஸ்டாண்ட் அப் காமெடி ஆகியவற்றை தொகுத்து ஒரு யூடியூப் வீடியோ போல படமாக கொடுக்க முயற்சித்துள்ளார் ராஜ்மோகன்.
பெற்றோர்கள் பிள்ளைகளை எப்படி கையாள வேண்டும்.? ஆசிரியர்கள் எப்படி கையாள வேண்டும்? பெற்றோர்களிடத்தில் குழந்தைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.? என்பதை சொல்ல முயற்சித்த இயக்குனர் ராஜமோகனுக்கு பாராட்டுக்கள்.
ஆக… பாபா ப்ளாக் ஷீப் விமர்சனம் 1.5/5.; பார்வேட் மெசேஜ்.. ஆவ்ரேஜ் ஸ்டூடண்ஸ்
Baba Black Sheep movie review and rating in tamil