சைக்கோ-வை முடித்துவிட்டு துப்பறிவாளன்-2வை இயக்கும் மிஷ்கின்

சைக்கோ-வை முடித்துவிட்டு துப்பறிவாளன்-2வை இயக்கும் மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்தில் நடித்தார் விஷால். இப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

இதன் பின்னர் சண்டக்கோழி2, இரும்புத்திரை உள்ளிட்ட படங்களில் விஷால் நடித்து முடித்துவிட்டார். அந்த படங்களும் வெளியாகிவிட்டது.

இதன்பின்னர் அயோக்யா படத்தில் நடித்து முடித்துள்ளார். அது ரிலீசாகவுள்ளது.

இதற்கு அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் விஷால்.

அந்தப்படம் முடிந்த பிறகு துப்பறிவாளன் 2 படத்தில் விஷால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மிஷ்கின், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் சைக்கோ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்துவிட்டு துப்பறிவாளன் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கலாம்.

துப்பறிவாளன் படத்திற்கு தன்னிடம் 4 பாகத்திற்கான கதை உள்ளது என்று மிஷ்கின் தெரிவித்திருந்தார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

தாழ்த்தப்பட்டோருக்கான சட்டப் பாதுகாப்பு பற்றி சொல்லும் ‘பற’

தாழ்த்தப்பட்டோருக்கான சட்டப் பாதுகாப்பு பற்றி சொல்லும் ‘பற’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)வ.கீரா எழுதி இயக்கியிருக்கும் படம் பற. சமுத்திரக்கனி, நித்திஷ் வீரா, சாந்தினி, வெண்பா, சாஜு மோன் நடித்துள்ளனர். வர்ணாலயா சினி கிரியேசன்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர்கள் ராமச்சந்திரன், பெவின்ஸ் பால் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு சிபின் சிவன், இசை ஜார்ஜ் வி.ஜாய், பாடல்கள் உமாதேவி, சினேகன், படத்தொகுப்பு சாபு ஜோசப், கலை இயக்கம் மகேஷ். இந்தப் ‘பற’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் தயாரிப்பாளர் ராமச்சந்திரன் பேசும்போது, “இந்தப் படத்தைப் பற்றி ஒரு விஷயத்தை மட்டும் சொல்கிறேன். ஒரு அருமையான பயணமாக இந்தப் படம் அமைந்துள்ளது.

படமும் அருமையாக வந்திருக்கிறது. இயக்குநர் கீராவிற்கு நன்றி. சமுத்திரக்கனி அவர்கள் எங்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பைக் கொடுத்தார். இந்தப் படத்திற்கான ஆதரவை மக்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்” என்றார்.

படத்தின் நாயகர்களில் ஒருவரான நித்திஷ் வீரா பேசும்போது, “இந்தப் படத்தைத் தொடங்கி வைத்தது இயக்குநர் பா.ரஞ்சித் அண்ணன்தான். அவர் இந்த விழாவிற்கு வந்ததற்கு நன்றி.

இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கிறது. படமும் சிறப்பாக உருவாகியுள்ளது. இயக்குநர் கீரா அவர்களோடு பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது இந்தப் படத்தின் மூலமாக நடந்துள்ளது” என்றார்.

இயக்குநர் பா.ரஞ்சித் பேசும்போது, “இங்கே வந்திருக்கும் கூட்டத்தைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. இயக்குநர் கீரா அண்ணனுக்கு இப்படியொரு வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கீரா அவர் கொண்டிருக்கும் கொள்கையை பல தளங்களிலும் ஓங்கிப் பேசி வருகிறார்.

தாழ்த்தப்பட்டோருக்கான சட்டப் பாதுகாப்பு பற்றி இந்தப் ‘பற’ படத்தின் டிரெய்லரில் சொல்லியிருக்கிறார்.

இது இன்றைய சமகாலப் பிரச்சனை. புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை சமுத்திரக்கனி அண்ணனுக்கு வைத்திருக்கிறார்கள். சாதிய ஒடுக்கு முறைகளைப் பற்றிய ஆழமான புரிதலை இந்தப் படம் பேசும் என்று நம்புகிறேன். இந்த மாதிரியான படங்கள் வெற்றி பெற வேண்டும். சமீபத்திய எல்லா கமர்சியல் சினிமாக்களிலும் சாதி பற்றிய டிஸ்கஷன் வைக்க வேண்டிய சூழல் உருவாகி இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

சினிமாவில் பாலியல் ரீதியாக பெண்கள் சுரண்டப்படுவது உண்மைதான். பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை வைப்பதால் அவர்களை குற்றம் சாட்டக்கூடாது” என்றார்.

அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் டி.சிவா பேசும்போது, “எப்போதும் பரபரவென்று இருப்பவர்கள்தான் பறக்க முடியும். அப்படியான பரபரப்பை கொண்டவர்கள்தான் உயரப் பறக்கிறார்கள். அவர்கள்தான் பறக்கவும் வேண்டும். அந்தப் பரபரப்பை எப்போதும் வைத்துக் கொண்டிருப்பவர் தம்பி சமுத்திரக்கனி. அவர் இந்தப் படத்தில் இருக்கிறார். இந்தப் படத்தின் இயக்குநர் கீரா மிகத் திறமையானவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப் ‘பற’ படம் வெற்றிக்கொடி கட்டிப் பறக்க வேண்டும்” என்று வாழ்த்தினார்.

படத்தின் இயக்குநர் வ.கீரா பேசும்போது, “இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் மறைந்து விட்டார். அவ்வளவு குறைவாகத்தான் வாழ்நாள் இருக்கிறது.

வாழும்போது துரோகமும், வன்மும் இல்லாமல் வாழ வேண்டும். இந்தப் ‘பற’ படத்தில் மனிதர்களிடையே இருக்கும் ஏற்றத் தாழ்வையும், சாதி ஒழிப்பையும், ஆணவக் கொலைக்கான தீர்வையும் அண்ணன் சமுத்திரக்கனி ஏற்று நடித்திருக்கும் அம்பேத்கர் கேரக்டர் மூலமாகச் சொல்லி இருக்கிறோம்.

இந்தப் படம் தரமான படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது உங்களுக்கும் இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது, “நான் இந்தப் படத்தில் நடிக்க வந்ததற்குக் காரணமே பா.ரஞ்சித்தான். அவர்தான் இயக்குநர் வ.கீராவை எனக்கு அறிமுகப்படுத்தினார்.

‘படத்தில் உங்களுக்கு காதலர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் கேரக்டர்’ என்றார் இயக்குநர். ‘நான் இப்போது அதைத்தானே செய்து கொண்டிருக்கிறேன்’ என்றேன்.

இயக்குநர் கீராவிடம் நான் பா.ரஞ்சித்தைப் பார்க்கிறேன். எந்த உணர்ச்சியையும் அதிகமாக வெளிக்காட்டாத உண்மையாளர் ரஞ்சித். அதே கேரக்டர்தான் இயக்குநர் கீராவும். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் நல்ல நட்புள்ளம் கொண்டவர். இந்தப் படம் அற்புதமான படம். அருமையான பதிவு” என்றார்

மோடி-ராகுல்தான் எதிரி…; லாரன்ஸ்-சீமான் மோதல் குறித்து சுரேஷ் காமாட்சி பதிலடி

மோடி-ராகுல்தான் எதிரி…; லாரன்ஸ்-சீமான் மோதல் குறித்து சுரேஷ் காமாட்சி பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectசீமானின் நாம் தமிழர் கட்சித் தொண்டர்களால் தான் வருத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக மறைமுகமாக சீமானுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பதை பார்த்தோம்.

இதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலளித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதில், நண்பர், நடன இயக்குநர், இயக்குநர், நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு…

முகவரியற்ற ஒரு கடிதத்தை நேற்று சூசகமாக எடுத்தாள விடுகிறேன் பேர்வழி எனக் கருதிக்கொண்டு பளிச்சென்றே பரப்பி விட்டிருந்தீர்கள். நல்லது. இதற்கு நீங்கள் பெயர் போட்டு, முகவரியிட்டு நேரடியாகவே செய்தியாக்கியிருக்கலாம்.

அதனால் அண்ணன் சீமானுக்கு எந்த பாதிப்பும் வந்து விடப்போவதில்லை. கருத்தியல் ரீதியான பல எதிர்மறைக் கேள்விகளை தன் பொதுவாழ்வில் சந்தித்தும்… பதிலளித்துமே வருகிறார். ஓடி ஒளிந்ததில்லை.

அண்ணனுக்கு பதிலாக அவரின் எண்ணற்ற தம்பிகளுள் ஒருவனான சுரேஷ் காமாட்சி என்கிற நானே இதற்கு பதில் சொன்னால் போதும் என்று நினைக்கிறேன்.

எச்சரிக்கையும் சவாலும் விடுமளவிற்கு என்னதான் நடந்தது? அப்படி எங்குதான் உங்களிடம் சீமானின் தம்பிகள் மோதினார்கள்? ஒன்றும் புரியவில்லை. நீங்கள் சொல்லியுள்ள எந்த சம்பவமும்..!! எங்கு நடந்தது? சீமானின் தம்பிகள் எங்கு சீண்டினார்கள்?

எங்கள் நோக்கம் போராட்டம் எல்லாம் வேறு இலக்கைத் தொட்டு நிற்பவை. இதில் உங்களைப் பற்றி நினைக்க எங்கே நேரம் இருக்கிறது? உங்களை எதிர்த்து அரசியல் செய்ய நீங்கள் ஏதேனும் அரசியல் அங்கம் வகிப்பவரா என்ன?

நீங்கள் நல்லது செய்வதைப் போல நாங்களும் செய்கிறோம். ஆனால் மீடியாவுக்கு அதை ஒவ்வொரு முறையும் அனுப்பிக் கொண்டிருப்பதில்லை. அப்படி செய்வதைப் பற்றி தம்பட்டம் அடிக்காமல் இருப்பதே மேல் என நகர்கிறோம்.

பேய்ப் படத்தில் கூட இடுப்பிலேறி உட்கார்ந்துகொண்டு காமெடி செய்கிற உங்களைப் போய் இறக்கியிருக்காங்க பாருங்க… சிரிக்கிறதா? அழுறதான்னு தெரியலை. நீங்க எதுல வீக்குன்னும் எல்லோருக்கும் தெரியும். அங்கே எல்லாம் மூக்கை நுழைச்சி ஆதாரத்தை எடுத்துட்டு வந்து அசிங்கப்படுத்திடுவாங்க… தேவையா??

ஸ்ரீரெட்டி சொன்ன குற்றச்சாட்டுக்கு முதல்ல பதில் சொல்லுங்க. அவங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க லாரன்ஸ். அதை விட்டுட்டு இங்கே வந்து ஏன் முட்டணும்? அவங்க சொன்ன குற்றச்சாட்டை வாய்ப்பு கொடுத்து வாயடைச்ச நீங்களெல்லாம் என்ன பேச முடியும்?

சீமான் தம்பிகள் என போலி முகங்களோடு சிண்டு முடிக்கும் பிற கட்சிக்காரர்களும் உண்டு என்பதை நினைவில் கொண்டு எங்கள் உயரிய பணியினை இடையூறு செய்யாமல் விலகி நிற்கும்படி கேட்டுக்கொள்கிறேன். எங்களைப் போன்ற களத்தில் நிற்கும் பிள்ளைகளை சீண்டுவது தேவையற்றது.

மற்றபடி உங்கள் படத்திற்கு பப்ளிசிட்டி தேவைப்பட்டால் சொல்லுங்கள்… அண்ணனிடம் சொல்லி ஒரு வீடியோ விளம்பரம் வாங்கித் தருகிறேன்.

காசு பாருங்கள்.. அல்லது உங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்காக பிரச்சாரம் செய்யுங்கள்… ஜல்லிக்கட்டு.. சமூகசேவை என நாடகம் போட்டு நல்லவன் என வெளிக்காட்டிக் கொள்ளுங்கள். வேண்டாமெனவில்லை..

அது எங்களுக்கு அவசியமே இல்லை. நீங்கள் எங்கள் இலக்கல்ல. நாங்கள் மோடி, ராகுல் காந்தி என மோதிக்கொண்டிருக்கிறோம். உங்களை எங்கள் எதிரிப்பட்டியலின் இறுதியில்கூட வைக்கவில்லை. ஆனால், அதற்காக தேன் கூட்டில் கைவைக்காதீர்கள்.

இவ்வாறு அறிக்கையில் கூறியிருக்கிறார்.

ஜெய்-யை காதலிக்க லட்சுமிராய்க்கும் கேத்தரின் தெரேசாவுக்கும் போட்டி

ஜெய்-யை காதலிக்க லட்சுமிராய்க்கும் கேத்தரின் தெரேசாவுக்கும் போட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)சர்வாவும் மலரும் உயிருக்குஉயிராய் காதலிக்கிறார்கள். ஆடல் பாடலுமாக சுற்றித்திரியும் மலருக்கு தலையில் இடிவிழுந்ததுபோல் செய்தி அறிகிறாள். தனது காதலனுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்கும் செய்தி கேட்டு அதிர்ச்சியாயிருக்கிறாள். பழைய காதலை மறக்க முடியாமல் காதலன் சர்வாவை தேடி அலைகிறாள், பழையநினைவுகளோடு. அவன் இருக்கும் இடம் தேடி கண்டுபிடித்து அவன் ரூமிற்க்கு செல்கிறாள். அவன் இல்லாத அந்த ரூமையையே ஏக்கமாய் பார்த்து கொண்டு இருக்க, சர்வாவும் , அவன் மனைவி திவ்யாவும் ரூமிற்குள் வர , மலர் ஒழிந்து கொள்கிறாள். இருவரும் படுக்கையில் கட்டி பிடித்து புரள… மலர் கோபமடைகிறாள்.

கோபமடைந்த மலர் அவர்களை என்ன செய்கிறாள் என்பதே அடுத்த காட்சியின் தொடர். இப்படி ஒரு காட்சியில் , சர்வாவாக ஜெய் , காதலி மலராக ராய்லட்சுமி , மனைவி திவ்யாவாக கேத்தரின் தெரேசா நடித்த காட்சி சாலக்குடியில் படமாக்கப்பட்டது. இவர்கள் மூவருடன் தொடர்புடைய நான்காவது ஆளாக வரலட்சுமி நடித்திருக்கிறார். அதுவே படத்தின் சஸ்பென்ஸ் கதையாக அமைந்து இருக்கிறார்கள். விதி வலியது என்பது போல் , காலகாலமாய் காத்திருந்த வரலட்சுமியின் காதல் ஜெய்த்ததா? அவனை எப்படியும் அடைந்தே தீருவேன் என்ற ராய்லட்சுமியின் காதல் ஜெய்த்ததா? இவர்களுடன் போராடும் கேத்தரின் தெரசா ஜெயித்தாரா? இதற்காக ஜெய் செய்த தியாகம் என்ன என்பதே நீயா2. ராஜநாகம் ஒன்று முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது. இப்படம் மே10 வெளியீடு.
இயக்கம் : L . சுரேஷ்
இசை : சமீர்
ஒளிப்பதிவு : ராஜவேல் மோகன்
தயாரிப்பு : A.ஸ்ரீதர்

வேலுபிரபாகரன் அறிவுமிக்க ஆசான், நான் மக்கு மாணவி – கஸ்தூரி

வேலுபிரபாகரன் அறிவுமிக்க ஆசான், நான் மக்கு மாணவி – கஸ்தூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project“முடிவில்லா புன்னகை” படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் பல பிரபலங்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இயக்குனர் வேலுபிரபாகரன் கூறுகையில்,

“இப்படத்தின் பாடல்களைக் கேட்கும்போது நான் எதிர்பார்த்ததைவிட நல்ல கருத்துக்கள் இருக்கிறது. ‘கவலை’ என்கிற பாடல் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. ஆனால், கருப்பர்கள் மண்ணில் கருப்பாகஒரு பெண்ணைப் பார்த்து பயப்படுவது என்பது போன்ற விஷயங்கள் வேடிக்கையாக இருக்கிறது. ரத்னகுமாரைப் பார்க்கும்போது, கிழக்குச் சீமையிலே படம் புத்திசாலித்தனமாக திரைக்கதைஅமைப்பாளர்கள் மலையாத்தில் தமிழில் பஞ்சு கமர்சியலாக படமெடுப்பார். ஆனால், எம்.டி.வாசுதேவநாயர் மாதிரி இலக்கிய நடையில் எழுதக் கூடியவர்கள் தமிழில் இல்லை. எழுத்தாளர்கள்இல்லாத சினிமா என்றிருக்கையில், ‘கிழக்குச் சீமையிலே’ பார்த்தேன். மண் மணம் மாறாமல் அவருடைய எழுத்து இருந்தது. அதன்பிறகு ‘கடவுள்’ படத்திற்கு வசனம் எழுத அழைத்தேன். நான்‘கடவுள்‘ படம் எடுப்பதற்கு முன் கடவுள் பற்றிய விவாதங்களே கிடையாது. பெரியாருக்கு பிறகு 20 வருடங்கள் மறைந்து விட்டது. ஆனால், நாங்கள் அதை கையில் எடுக்கும்போது எல்லோரும்சிரித்தார்கள். ஜெயதேவி பல வகையில் எங்களுக்கு ஆதரவாக இருந்தாலும், இப்படம் பற்றி பேசும்போது அவர்களும் சிரித்தார்கள். ஏனென்றால், இக்கதையைக் கூறி நீங்கள் தான் இயக்க வேண்டும். இப்படத்தால் பெரிய புரட்சி எழும் என்று. ஆனால், நான் நினைத்த மாதிரி அப்படம் அமையவில்லையென்றாலும், இப்படம் அதனுடைய வேலையைச் செய்யும் என்று தயாரிப்பாளரிடம் கூறினேன்.சுப.வீர.பாண்டியனும் அப்படத்தைப் பார்த்துவிட்டு இன்னும் கொஞ்சம் வேறுமாதிரி செய்திருந்தால் தமிழ்நாட்டில் அடுத்தகட்ட புரட்சி வெடித்திருக்கும் என்று கூறினார்.

ஒரு கட்டத்தில் என் பகுத்தறிவு போய்விட்டது என்று நினைத்தேன். மீண்டும் என்னால் பகுத்தறிவு வளர்ந்தால் அதற்கு சேலம் ஆர்.ஆர்.பிரியாணி தமிழ்செல்வன் தான் முழுமுதற்காரணமாகஇருக்கார்.

பெண் சுதந்திரம் இன்னும் நம் நாட்டிற்கு கிடைக்கவில்லை. அதிலும் சினிமாவில் பெண்களை போகப்பொருளாக மட்டுமே சித்தரிக்கிறார்கள். நம்நாட்டில் ‘யு’ சான்றிதழ் வாங்கிய ஒரு படம்அமெரிக்காவில் ‘ஏ’ சான்றிதழ் பெறுகிறது. காதலையும், காமத்தையும் மட்டும் கூறுகிறார்கள். இயக்குநர் ஷங்கர் கூட இம்மாதிரியான சினிமா இயக்குவது வேதனையாக இருக்கிறது.

‘முடிவில்லா புன்னகை’ திரைப்படம் பெண் சுதந்திரத்திற்கு ஆதரவாக நல்ல கருத்துக்களைக் கொண்டுள்ளது. இப்படம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்.”

இவ்வாறு வேலு பிரபாகரன் கூறினார்.

சேலம் ஆர்.ஆர்.தமிழ்செல்வன் கூறுகையில் ,

“அமெரிக்காவில் இருந்தாலும், பிறந்த மண்ணையும், மொழியையும் மறக்காமல் இத்திரைப்படத்தை இயற்றி, தாங்கள் வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுத்திருக்கிறார் க்ளமெண்ட். அவருக்கு எனது பாராட்டுக்கள். நான் நெற்றியில் விபூதி, குங்குமம் வைத்தாலும் பெரியாரை பின்பற்றுகிறவன் தான். வேலு பிரபாகரன் எனது நெருங்கிய நண்பர். நான் நெய் சாப்பிட்டு கடவுளைவணங்குபவன் அல்ல. தன் குழந்தையை சுமந்துகொண்டு துணிச்சலாக நெருப்பில் இறங்கும் பெண்ணை வணங்குபவன்.

மேலும், இயற்கை உணவு உண்ணுங்கள். இயற்கையாக வாழுங்கள். நம் மண்ணின் உணவுக்கு முக்கியத்துவம் தாருங்கள். தினமும் நெல்லிக்காயும், கறிவேப்பிலையும் சாப்பிட பழகுங்கள். உங்கள்குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுங்கள். குக்கரில் சமைக்காதீர்கள்” என்று தமிழ்செல்வன் கூறினார்.

திருமதி ஜெயதேவி கூறுகையில் ,

‘முடிவில்லா புன்னகை‘ படத்தைப் பார்த்தேன். பெண் சுதந்திரம் என்று பேசும் இந்நாட்டில், அனுசரித்து வாழ் என்ற கூற்று தவறு. ஏனென்றால், சிரிப்பு மகிழ்ச்சி என்பது மனிதகுலத்திற்கே உரித்தானஒன்று. அனுசரித்து வாழ்வதால் மகிழ்ச்சி வராது. என் வாழ்க்கையை நான் மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன் என்று கதாநாயகி முடிவெடுக்கிறாள். பெண் சுதந்திரத்திற்கு பல கருத்துக்களை இப்படம்கொண்டிருக்கிறது. தாய்மை உணர்வு அனைத்து பெண்களிடத்திலும் உள்ளது. உலகமே பெண்களுக்குள் இருக்கிறது. ஆண்கள் தான் பெண்களை மேன்மைபடுத்த முடியும். இருப்பினும், பெண்ணுக்குள்தான் ஆண் அடங்குவான். ஆகையால், பெண் விடுதலையின்றி இவ்வுலகம் சிறக்காது என்று கூறினார்.

நடிகர் லிவிங்ஸ்டன் கூறுகையில் ,

எனக்கு நடிக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்ததில்லை. ஆனால், அப்போதே வேலுபிரபாகரன் நீ நிச்சயம் நடிகனாவாய் என்று கூறினார். நான் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆனாலும், ஒருகட்டத்தில் ரூ.10க்கு சிரமப்பட்ட காலத்தில் கதை எழுதுவதற்காக ரூ.5000 கொடுத்தார் ஜெயதேவி.

இப்படத்தை நான் பார்க்கவில்லை. ஆனால், ஜெயதேவி கூறியதைப் பார்க்கும்போது நல்ல கருத்தைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்றார்.

கதாசிரியர் ரத்னகுமார் கூறுகையில் ,

சினிமா என்கிற கடலில் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி தமிழ்செல்வனும் குதித்துவிட்டார். அவர் அதற்கு தகுதியானவர் தான். சினிமாவில் பலர் இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் எதிர்நீச்சல்அடித்திருக்கிறார்கள். ஒரு உறுப்பினராக, தனிமனிதனாக அவரை வரவேற்கிறேன்.

இப்படத்தைப் பற்றி பேசுங்கள் என்று யாரிடமும் சொல்லாதீர்கள். படத்தை நன்றாக இருந்தால் அதுவே பேச வைக்கும். பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் இவர்களெல்லாம் பேசப்படாத, பேசவாய்ப்பற்ற மனிதர்கள். முன்பெல்லாம் பத்திரிகையாளர்கள் சந்திப்பு வேறு மாதிரி இருக்கும். ஆனால் இப்பொழுது செல்போன் இருக்கிறது. அப்பொழுதெல்லாம் போஸ்டர் ஒட்டுவதே பெரும்பாடாகஇருக்கும். ஆனால், இப்பொழுது டிஜிட்டல் வந்தபிறகு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என்று வெளியிடுகிறார்கள். கதாசிரியராக இப்படத்தின் டிஸரை பார்க்கும்போது ஏதோ ஒரு கருத்து இருக்கிறது என்பதுமட்டும் புரிகிறது.

அன்று ஒரு படத்திற்கு ஆகும் செலவை இன்று, ஒரு பாடலுக்கு செலவழிக்கிறார்கள். ‘கிழக்கு சீமையிலே’ படத்திற்காக நான் எழுதும்போது பஞ்சாயத்து காட்சியை பாரதிராஜா நீளமாக இருக்கிறது, நிறைய செலவாகும், ஆகையால் வேண்டாம் என்று கூறினார். ஆனால், விஜயகுமார் நான் செலவு செய்கிறேன் என்று கூறியதால் அந்த காட்சி எடுக்கப்பட்டது. அப்படத்தில் ஒரு ரீடேக் இல்லாமல்எடுத்தார். ஆனால், டிஜிட்டல் வந்தபிறகு ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

படமெடுங்கள், ஆனால் நல்ல படமாக எடுங்கள். பாரதிராஜா அவர்கள் அம்மா இறந்ததற்கு கூட அழுது நான் பார்க்கவில்லை. ‘பரியேறும் பெருமாள்’ படத்தைப் பார்த்து அழுதுவிட்டார். அப்படத்தில்நாய் இறந்ததற்கு அழுதார். நானும் மண் மணம் மாறாமல் படம் எடுக்கிறேன். ஆனால், இது வேறு கோணத்தில் அதே மண் மணம் மாறாமல் எடுத்திருக்கிறார் இயக்குநர் என்று கூறினார் பாரதிராஜா.சினிமா எடுத்து வெற்றிபெற விரும்பினால் கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் பொருந்துபவர்களை வைத்து தான் எடுக்க வேண்டும். ஈவு, இரக்கம் பார்த்து உறவினர்கள், நண்பர்கள் என்று நினைத்துஎடுத்தால் நிச்சயம் தோல்விதான் வந்தடையும். இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்று கூறினார்.

நடிகர் கஸ்தூரி கூறுகையில் ,

வேலுபிரபாகரன் எனக்கு அறிவுமிக்க ஆசிரியர், நான் அவருக்கு மக்கு மாணவி. பெரியார் கூறிய கருத்துக்கள், பெரியரை பற்றி நான் அறிந்தது வேலுபிரபாகரரை ஒப்பிட்டு பார்த்தால் நான் பூஜ்ஜியம்தான். அவர் அளவுக்கு கற்பைப் பற்றி பேச எனக்கு தெரியாது. அதனால் நான் கருப்பில் இருந்து ஆரம்பிக்கிறேன். சினிமாவின் தொடக்கக் காலத்தில் கூட கே.பி.சுந்தராம்பாள், டி.ஆர்.ராஜகுமாரி போன்றநம் நாட்டு நிறத்தில் இருப்பவர்கள் நடித்தார். ஆனால், எப்போது நாம் வெள்ளையர்களை பார்த்து காப்பி அடிக்க ஆரம்பிச்சோமோ அப்போதிருந்துதான் இந்த பிரச்சனையும் ஆரம்பித்தது. இயக்குநர்மகேந்திரன் ஷோபோ, அஸ்வினி, சுஹாசினி போன்ற நம் மண்ணின் நிறத்தையுடைய திறமையான கதாநாயகிகளை கொண்டு வந்தார். அதேபோல தான் சரிதா, சுஜாதா, சுகன்யா போன்றோர்களும். ஆனால், ரஜினிகாந்த் முதல் பிரகாஷ்ராஜ் வரை கருப்பான நாயகர்களை தமிழ்நாட்டிற்கு பரிசாக தந்த பாரதிராஜா, தானும் கருப்பு, தன் மகனும் கருப்பு ஆனால், கதாநாயகி மட்டும் ரியா சென் என்றுவெள்ளை நிறத்தில் வடநாட்டு பெண்ணை அறிமுகம் செய்து இந்த கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தார் என்ற குற்றச்சாட்டு அவர் மேல் எனக்கு உண்டு. அதேபோல், ஷங்கர் ஒருபடி மேல சென்றுஹாலிவுட் நடிகை எமி ஜாக்சனையும் நம்ம ஊர் பெண் என்று தாவணி போட்டு இவர் தமிழ்நாட்டு பெண் என்று மாற்றிவிட்டார்.

பெண் விடுதலை, பெண் சுதந்திரம் என்று பகுத்தறிவு பேச வேண்டிய ஒரு கருவியாக இருக்க வேண்டிய சினிமா இன்று, பாசாங்குகளை மட்டுமே பரப்பிக்கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு வருத்தம்இருக்கிறது. மற்றபடி சினிமாவை பார்த்துதான் நான் பெண்ணை கற்பழிக்கின்றேன் என்று கூறினால், அப்படிப்பட்ட வலிமையற்ற மனிதர்கள் சினிமாவை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அப்படியேஇருந்தாலும் அந்த வன்மத்தை ஒரு குழந்தையின் மீதா காட்டுவீர்கள்?

நிஜத்தில் நடப்பதைத்தான் சினிமாவாக எடுக்கிறோம் என்று கூற்றை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன். ஹாசினி விஷயத்தை படமாக எடுக்க முடியுமா? பொள்ளாச்சியில் நடந்ததை படமாகஎடுக்கமுடியுமா? அப்படி எடுத்தால் நம்மால் பார்க்க முடியுமா? இதுபோன்ற காட்சிகளில் எம்.ஜி.ஆர். நடித்திருப்பாரா? அல்லது பல லட்சகணக்கான ரசிகர்கள் அதை ஏற்றுக் கொண்டுதான்இருப்பார்களா?

பெண் விடுதலை என்று கூறி எங்களை கட்டிபோடாதீர்கள். கற்பழிக்காமல் இருந்தாலே போதும். சுயவிருப்பத்திற்கும் அத்துமீறலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. பெண்கள்ஊடகத்துறையிலோ, சினிமாத் துறையிலோ முன்னேறினால், இவர்கள் எப்படி இந்த இடத்திற்கு வந்தார்கள் தெரியுமா? என்று கொச்சையாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். பெண்களுக்குஇடஒதுக்கீடு, சமஉரிமை இதெல்லாம் வேண்டாம். குறைந்தபட்ச மரியாதை கொடுத்தாலே போதும்.

இச்சூழலில், உண்மையை மட்டுமே நம்பி அமெரிக்காவிலிருந்து வந்து, ‘முடிவில்லா புன்னகை’ என்ற நல்ல படத்தை கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவு கொடுத்து இப்படத்தைவெற்றியடைய செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

‘முடிவில்லா புன்னகை’ படத்தில் ஆரோக்கியசாமி க்ளமென்ட், டிட்டோ, ரக்ஷிதா, ‘கூல்’ சுரேஷ், டெலிபோன் ராஜ், நெல்லை சிவா, வேல்முருகன் மற்றும் சாந்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

‘முடிவில்லா புன்னகை’ படத்தில் ஆரோக்கியசாமி க்ளமென்ட் நடித்தது மட்டுமல்லாமல் தயாரிப்பு, கதை, இயக்கம், படத்தொகுப்பு ஆகியவற்றையும் செய்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல், ஜேக்கப்சாமுவல் உடன் இணைந்து இசை அமைத்திருக்கிறார் மற்றும் பாடலையும் எழுதியிருக்கிறார். இளையகம்பனும் இப்படத்திற்காக பாடல்கள் எழுதியிருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நேரில் வந்து வாழ்த்திய வேலு பிரபாகரன், ஜெயதேவி, லிவிங்ஸ்டன், கஸ்தூரி மற்றும் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார் ஆரோக்கியசாமிக்ளமென்ட்.

பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாட வந்த கே.ஜே.ஜேசுதாஸ்

பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாட வந்த கே.ஜே.ஜேசுதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectஎஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ” தமிழரசன் ”

இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.

மற்றும் சுரேஷ்கோபி ராதாரவி சோனு சூட்,யோகிபாபு,சங்கீதா கஸ்தூரி ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன்,கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ்,சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்..

ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர்

இசை – இளையராஜா

பாடல்கள் – பழனிபாரதி, ஜெய்ராம்

கலை – மிலன்

ஸ்டண்ட் – அனல் அரசு

எடிட்டிங் – புவன் சந்திரசேகர்

நடனம் – பிருந்தா சதீஷ்

தயாரிப்பு மேற்பார்வை – ராஜா ஸ்ரீதர்

கதை திரைக்கதை வசனம் இயக்கம் – பாபு யோகேஸ்வரன்

தயாரிப்பு – கெளசல்யா ராணி

படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடை பெற்றது…இரண்டு கட்டமாக நடை பெற்ற படப்பிடிப்பு முடிவடைந்தது…

அதிரடி ஆக்‌ஷன் படமாக தமிழரசன் உருவாகி வருகிறது… .

இந்த படத்திற்காக இளையராஜா இசையில்

ஜெயராம் எழுதிய

“பொறுத்தது போதும்

பொங்கிட வேணும்

புயலென வா ” என்ற புரட்சிகரமான பாடலை ஜேசுதாஸ் பாட இளையராஜா இசையில் பதிவானது…

2009ம் ஆண்டு மம்முட்டி நடித்த பழசிராஜா என்ற மலையாள படத்தில் பாடிய ஜேசுதாஸ் அதற்கு பிறகு எந்த சினிமாவிலும் பாடாமல் தவிர்த்து வந்தார். இந்த தமிழரசன் படத்தில் பாடியது எங்கள் படக்குழுவினருக்கு கிடைத்த மரியாதை என்கிறது படக்குழு.

ஜேசுதாஸுக்கு பூங்கொடுத்து இளையராஜாவும் இயக்குனர் பாபு யோகேஸ்வரன் மற்றும் g.சிவா ஆகியோர் வரவேற்றனர்..

படத்தில் விஜய் ஆண்டனி பாடும் புரட்சிகரமான பாடலாக ஒலிக்கப் போகிறது.

More Articles
Follows