தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
கொத்து பரோட்டா என்ற யூடியுப் நிறுவனத்தை நடத்தி வருகிறார் விமல். இவரது நண்பர் சதீஷ்.
மக்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை தன் வீடியோவில் பதிவிட்டு நியாயம் கேட்கும் மனிதராக இவர். இது ஒரு புறம் இருக்க காணாமல் போன தன் மகன் சமீரை தேடி சென்னைக்கு வருகிறார் சங்கிலி முருகன். இவருக்கு இரண்டு மகள்களும் உள்ளனர்.
ஒரு நாள் ஐஜி சுரேஷ் மேனனின் மகள் கடத்தப்பட்டு கொல்லப்படுகிறார். இதில் சமீருக்கும் தொடர்பு இருப்பதாக போலீஸ் சௌந்தரராஜா சந்தேகிக்கிறார்.
இந்த சூழ்நிலையில் சங்கிலி முருகன் வீடியோவை தன் யூடியுப்கில் பதிவிடுகிறார் விமல். இதனால் போலீஸ் கவனம் விமல் பக்கம் திரும்புகிறது.
ஐஜி மகள் கடத்தலுக்கு சங்கிலி முருகன் மகனுக்கும் என்ன தொடர்பு? விமல் கண்டுபிடித்தார் ? போலீஸ் வளையத்துக்குள் சிக்கிக் கொண்டாரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
Star Cast: Vimal, Misha Narang, Sathish, Suresh Menon, Sangili Murugan & Soundara Raja
Director: Veludoss
producer: K. Annadurai
Cinematography: Rammy
Music: Ragav Prasath
Editor: Chandrakumar G
Stunt: Siruthai Ganesh
Choreographer: Dinesh
Lyrics: Viveka
Art: S. Kannan
கேரக்டர்கள்…
கிராமத்து இளைஞனாகவே நாம் பார்த்து பழகிப் போன விமலுக்கு இதில் வித்தியாசமான வேடம். அவரும் ஆக்ஷனில் இறங்கி அடித்து தூள் கிளப்பியிருக்கிறார்.
ட்ராபிக் போலீஸ் ஆக வரும் ஜெயச்சந்திரன் இடைவேளை வரை தன் நடிப்பால் கவனம் இருக்கிறார். இவரது கண்களும் இவரது மீசையும் இவருக்கு கூடுதல் பலம்.
மட்டன் ரவியாக பில்லி முரளி நடித்துள்ளார். மிரட்டல் வில்லனாகவும் கவனிக்க வைக்கிறார். தனது முந்தைய படங்களில் தாடியுடன் வலம் வந்த சௌந்தரராஜா இதில் கிளீன் ஷேவ் செய்த நேர்மையான அதிகாரியாக அசர வைத்துள்ளார்.
சதீஷ் இந்த படத்தில் தேவையில்லாத கேரக்டர். அவரது காமெடிகளும் எடுபடவில்லை. நாயகி மிஷாவுக்கும் பெரிதாக வேலை இல்லை.
ரூபினா ரூபிஷா என்ற இரட்டை பெண்கள். சங்கிலி முருகனின் மகள்களாக நடித்துள்ளனர். இருவரும் கொஞ்ச நேரம் என்றாலும் தங்கள் நடிப்பில் பளிச்சிடுகின்றனர்.
டெக்னீசியன்கள்…
ராகவ் பிரசாத் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்கும்படி வகையில் உள்ளது. முக்கியமாக ஆக்ஷன் காட்சிகளில் பின்னணி இசை பிரமிக்க வைக்கிறது.
ஒளிப்பதிவில் குறையில்லை. துடிக்கும் கரங்கள் டைட்டிலுக்கு ஏற்ப காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குனர் வேலுதாஸ்.
மீடியாக்களை போல தனி நபர் நடத்தும் யூடியுப்களுக்கும் பொறுப்பு உள்ளது. எனவே அவர்களும் பொறுப்புடன் நடந்து கொண்டு சமூகத்திற்கு தேவையான சீர்திருத்தங்களை செய்யலாம் என துடிப்பான கதைகளும் அமைத்துள்ளார் இயக்குனர் வேலுதாஸ்.
ஆக.. துடிக்கும் கரங்கள்… யூடியுப் யுத்தம்
thudikkum karangal review and rating in tamil