தண்டட்டி விமர்சனம் 4/5.; தங்க மகனின் தங்க பொண்ணு

தண்டட்டி விமர்சனம் 4/5.; தங்க மகனின் தங்க பொண்ணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களில் வயதான பெண்மணிகள் அணியும் ஓர் வகையான காதணி தான் ‘தண்டட்டி’.

இந்த டிஜிட்டல் உலகத்தில் யாரும் தண்டட்டி-யை மறந்து விடக்கூடாது என இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ராம் சங்கையா.

பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக லக்ஷ்மன் தயாரித்துள்ளார்.

கதைக்களம்…

தங்க பொண்ணு ஆக ரோகிணி… இவர் தன் காதலர் கொடுத்த தண்டட்டி-யை தன்னுடைய இளம் வயதிலேயே அவரது நினைவாக அணிந்தவர். இவருக்கு நான்கு மகள்கள் ஒரு மகன்.

ஒரு கட்டத்தில் தன் 58 வயதில் வீட்டிலிருந்து மாயமாகி விடுகிறார். எனவே அவரது பேரன் போலீஸ் பசுபதி உதவியுடன் தன் பாட்டியை கண்டுபிடிக்கிறார்.

அப்போது இறுதி ஊர்வலத்திற்காக ரோகிணியை வைத்திருக்கும் நிலையில் இரவில் விலை உயர்ந்த தண்டட்டி காணாமல் போகிறது.

தண்டட்டியை திருடியவர் யார்? என தெரியாமல் பிணத்தை எடுக்கக் கூடாது என பிரச்சனை செய்கிறார் ரோகிணியின் குடிகார மகன் விவேக் பிரசன்னா.

இறுதியில் என்ன ஆனது? தண்டட்டியை எடுத்தது யார்? போலீஸ் எப்படி கண்டுபிடித்தார்? என்ன செய்தார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

கதையின் நாயகனாக பசுபதி. சினிமா போலீஸ் போல இல்லாமல் யதார்த்த போலீசாக தன் சுப்ரமணி என்ற கேரக்டரை சூப்பராக செய்திருக்கிறார் பசுபதி.

கிளைமாக்ஸ் காட்சியில் தன் பக்குவப்பட்ட நடிப்பால் நம்மை கண்கலங்க வைத்து விடுகிறார் பசுபதி.

வயதான பெண்மணி தங்கப் பெண்ணாக ரோகிணி கொடுத்த பாத்திரத்திற்கு தன் அனுபவ நடிப்பை வழங்கி இருக்கிறார். ஆனால் 58 வயதான தரோகிணிக்கு இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியான மேக்கப் போட்டிருக்கலாம்.

இளவயது ரோகினியாக அம்மு அபிராமி நடித்திருக்கிறார். தன்னுடைய அழகான கண்களாலும் உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார்.

குடிகார மகனாக விவேக் பிரசன்னா.. அசல் ஒரு குடிகாரனை கண் முன் நிறுத்தி இருக்கிறார். இவரது வசனங்கள் ரிப்பீட் மோடில் வந்தாலும் குடிகாரர்களின் பாஷை அப்படித்தானே இருக்கும் என்பதால் பொறுத்துக் கொள்ளலாம்.

அது போல பேரனாக நடித்திருக்கும் முகேஷ் சிரிக்கவும் கண்கலங்கவும் வைத்திருக்கிறார். இவர்தான் மண்டேலா படத்தில் யோகி பாபு உடன் நடித்தவர்.

தீபா சங்கர், செம்மலர் அன்னம் உள்ளிட்ட ரோகிணியின் மகள்கள் ஒவ்வொருவரும் தண்டட்டிக்காக அடித்துக் கொள்ளும் பாத்திரத்தை தடாலடியாக செய்துள்ளனர்.

அதுபோல கிடாரிப்பட்டி கிராமத்து மக்கள் ஒவ்வொருவரும் யதார்த்த மனிதர்களாக படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்

போலீஸ் பசுபதியைக் கலாய்த்துக் கொண்டே அவரது தொப்பியைத் தலையில் வைக்கும் கோளாறு பாட்டியின் நடிப்புக்கு திரையரங்குகள் அதிரும்.

டெக்னீசியன்கள்…

மதுரை உசிலம்பட்டி ஆண்டிப்பட்டி பகுதிகளின் இயற்கை அழகை நம் கண் முன்னே நிறுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி.

கிராமத்து மண்வாசனையுடன் தன் இசையை கலந்த கூடுதல் சுவை கூட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் கே எஸ் சுந்தரமூர்த்தி. பாடல்களும் பின்னணி இசையும் படத்துடன் ரசிகர்களை ஒன்ற வைக்கிறது.

சிம்பு தேவன் உள்ளிட்ட பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ராம்சங்கையா இந்த தண்டட்டி படத்தை இயக்கியிருக்கிறார்.. தன்னுடைய முதல் படத்தில் எந்த கமர்சியலையும் கலக்காமல் கிராமத்து வாழ்வியலோடு கலந்து சொல்லி இருக்கிறார்.

தண்டட்டி என்ற ஒரு கதையை மட்டும் சொல்லாமல் அதனுடன் ஒரு காதலையும்.. கிராமத்து மனிதர்களின் ஜாதி வெறியையும் சொல்லி இருக்கிறார் இயக்குநர் ராம் சங்கையா.

ஆக இந்த தண்டட்டி… தங்கமகனின் தங்க பொண்ணு

Thandatti movie review and rating in tamil

பாணி பூரி விமர்சனம்.; காதலும் கல்யாணமும்

பாணி பூரி விமர்சனம்.; காதலும் கல்யாணமும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாம் சுவைக்கும் ஒரு வகையான உணவை தான் பானி பூரி என்கிறோம். ஆனால் இந்த படத்தை பொருத்தவரை வேறு.

நாயகியின் பெயர் பூர்ணிமா. அவரை பூரி என அழைக்கிறார் நாயகன். லிங்காவின் பெயர் சித்தார்த் தண்டபாணி. அவரை பாணி என அழைக்கிறார். இந்த இருவரின் பெயர் கலவை தான் பாணி பூரி.

கதைக்களம்…

நாயகன் லிங்கா நாயகி சாம்பிக்கா இருவரும் காதலிக்கின்றனர். ஒருநாள் தன்னுடைய தோழி தனது நீண்ட நாள் காதலனை திருமணம் செய்து சில மாதங்கள் ஆன நிலையில் விவகாரத்து செய்கிறார்.

இதனால் சாம்பிகாவும் திருமணம் செய்ய பயப்படுகிறார். இந்த சூழ்நிலையில் சாம்பிகாவின் அப்பா இளங்கோ குமரவேலை சந்தித்து தன் காதலை சொல்கிறார் லிங்கா.

இதனால் லிங்காவுக்கும் சாம்பிக்காவுக்கும் மோதல் முற்றுகிறது. எனவே அவரது தந்தை ஒரு ஐடியா கொடுக்கிறார். நீங்கள் இருவரும் ஒரு வாரம் லிவிங் டு விதரில் ஒன்றாக இருங்கள். ஒரு வாரத்திற்கு பிறகு முடிவு செய்வோம் என்கிறார்.

இந்த ஒப்பந்தத்தின்படி உறவு கொள்ளாமல் கணவன் மனைவியாக வாழ தொடங்குகின்றனர்.

அதன் பிறகு என்ன ஆனது.? ஒரு வாரத்திற்கு பிறகு எந்த முடிவை காதலர்கள் எடுத்தார்கள்.? இணைந்தார்களா என்பது தான் இந்தப் பாணி பூரியின் கதை.

கேரக்டர்கள்…

இதுவரை பல படங்களில் லிங்காவை முரட்டு கிராமத்து நாயகனாகவும் வில்லனாகவும் பார்த்திருக்கிறோம். இந்த படத்தில் ஒரு சாக்லேட் பாய் போல வந்துள்ளார்.

பெரும்பாலும் வசனங்கள் ஆங்கிலத்திலேயே இடம் பெற்றுள்ளன. எனவே இது பாமர மக்களைச் சென்றடையுமா என்பது சந்தேகம் தான்.

கொழு கொழு பேபியாக வருகிறார் சாம்பிக்கா. மேனேரிசம் என்ற பெயரில் அடிக்கடி கூந்தலை சரி செய்கிறார். அது நிறைய காட்சிகள் ரிப்பீட் ஆகிறது.

இவரின் கண்களும் உதடுகளும் ஹேர் ஸ்டைலும் இவருக்கு கூடுதல் அழகை கொடுத்துள்ளன.

வினோத் சாகர் கேரக்டர் கொஞ்சம் கலகலப்புக்கு உதவியுள்ளது. லிங்காவின் அண்ணியாக கனிகா நடித்துள்ளார். அவர் கதை ஓட்டத்திற்கு பக்கபலமாக இருந்துள்ளார்.

பெரிய பலத்தை கொடுத்துள்ளார் இளங்கோ குமரவேல். பிராக்டிகல் டாடியாக தன்னுடைய கேரக்டரை வெளுத்து கட்டி இருக்கிறார். இவரும் விவகாரத்து ஆனவர் என்பதால் இவர் நடந்து கொள்ளும் விதம் யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் அப்பார்ட்மெண்டில் காட்டப்படும் கேரக்டர்கள் நல்ல தேர்வு. ஆனால் காமெடி என்ற பெயரில் சில இடங்களில் மொக்கை போட்டு உள்ளனர்.

உதாரணமாக.. அப்பார்ட்மெண்ட் செகரட்டரியிடம் ஒருவர் பைப்பில் தண்ணி வரவில்லை என கம்ப்ளைன்ட் செய்கிறார்.

எனக்கு கூட தான் சின்ன வயசுல கணிதம் வரவில்லை.. நான் என்ன உன்கிட்டயா கம்ப்ளைன்ட் சொன்னேன்.. என மொக்கை ஜோக் போடுகிறார்.

டெக்னீஷியன்கள்…

வெப் சீரிஸ் என்றால் மெதுவாக தான் நகரும்.. ஆனால் இதற்கு மொத்தமே 5 எபிசோடுகள் போதுமானது. தேவையில்லாமல் 8 எபிசோடுகள் எடுத்து கட்டிங் போட மறந்துவிட்டார் எடிட்டர்.

ஒரு படத்தை நாம் பார்க்க முக்கிய காரணமாக அமைவது ஒளிப்பதிவு தான். அதனை சிறப்பாகவே கொடுத்துள்ளார்.

அதுபோல பாடல்களும் பின்னணி இசையும் இந்த பானி பூரிக்கு சுவை கூட்டி உள்ளன.

எட்டு எபிசோடுகளை இந்த பாணி பூரி கொண்டுள்ளது. சீரியல் போல தான் இதை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால்.

ஆனால் 15 நாட்களில் எப்படி முழு வெப் சீரிஸ் முடித்தார்? என்பது வியப்பாகத்தான் இருக்கிறது. மொத்தமே 5 – 10 கேரக்டர்களை வைத்து இரண்டு வீடுகளை காண்பித்து ஒட்டுமொத்த படத்தை முடித்து விட்டார்.

இந்த சூட்டிங் நாட்களில் 20 – 30 உடைகளை மாறச் செய்து சூட் செய்து இருப்பார் போல. அனைத்தையும் முடித்துவிட்டார். அதற்காக அவரை பாராட்டலாம்.

ஆக இந்த பாணி பூரி.. காதலும் கல்யாணமும்…

Paani poori movie review and rating in tamil

பொம்மை விமர்சனம் 3.25/5.. கற்பனை காதல்

பொம்மை விமர்சனம் 3.25/5.. கற்பனை காதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

தன்னுடைய சிறு வயதில் தன் பள்ளித் தோழி நந்தினி (நாயகி ப்ரியாவை) தொலைத்து விடுகிறார் நாயகன் எஸ் ஜே சூர்யா. (ராஜகுமாரன்).

அவள் கடத்தப்பட்டு விடுகிறார் என்பதை அறியும் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகிறார். இதற்காக ஒரு மாத்திரையை அவர் தினமும் எடுத்துக் கொள்கிறார்.

வளர்ந்து பெரியவன் ஆன பிறகு ஜவுளிக்கடையில் மாடலுக்கு வைக்கப்படும் பொம்மைகள் செய்யும் ஃபேக்டரியில் ஓவியராக பணிபுரிகிறார் எஸ் ஜே சூர்யா.

சில தினங்களில் மாத்திரை சாப்பிடாத அவருக்கு திடீரென கண்முன்னே ஒரு பொம்மையாக வந்து செல்கிறார் தொலைந்து போன நந்தினியான பிரியா.

ஒரு நாள் மாத்திரை சாப்பிட்டால் அவள் தன் கனவில் பொம்மையாக வருவதை நிறுத்தி விடுகிறார். மாத்திரை சாப்பிடாத அன்று மட்டும் பொம்மை உருவில் நாயகி வந்து செல்கிறார்.

இந்த சூழ்நிலையில் பிரியா அனுமதியுடன் தன் சொந்த ஊருக்கு செல்கிறார் எஸ் ஜே சூர்யா. திரும்பி வரும் போது அவருடைய சூப்பர்வைசர் அந்த பொம்மையை ஒரு கடைக்கு விற்று விடுகிறார் ய.

எந்த கடைக்கு விற்றீர்கள் என சூரியா கேட்கும்போது பொம்மையை கேவலமாக பேசி விடுகிறார் சூப்பர்வைசர.

எனவே ஆத்திரத்தில் அவரை கொன்று விடுகிறார் சூர்யா. அதன் பின்னர் சென்னையில் தெரு தெருவாக கடை கடையாக அலைந்து பொம்மை என்ற ப்ரியாவை கண்டுபிடித்து வருகிறார்.

அந்த ஜவுளி கடையில் வேலைக்கும் சேர்ந்து விடுகிறார். என்னால் இங்கு இருக்க முடியாது என்னை உன் வீட்டிற்கு கொண்டு போ என்கிறார் பிரியா.

அந்த ஜவுளிக்கடை பொம்மையை விலைக்கு கேட்கிறார் எஸ் ஜே சூர்யா. அந்த கடைக்காரர் தர மறுக்கிறார்.

அதன் பிறகு என்ன ஆனது? போலீஸ் விசாரணையில் எஸ் ஜே சூர்யா கண்டுபிடிக்கப்பட்டாரா? பொம்மையை வீட்டுக்கு கொண்டு சென்றாரா? கனவில் வந்த தோழியின் காதல் கைகூடியதா? என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்கள்…

எஸ் ஜே சூர்யாவ தன் ராஜகுமாரனை நன்றாகவே பிரதிபலிக்கிறார்.

பொம்மைக்காக ஏங்குவதும் ஆத்திரத்தில் கொலை செய்வதும் மற்றொரு நாயகி சாந்திணியுடன் பேசுவதும் என கலகலப்பு செய்கிறார்.

பொம்மை எது? பிரியா பவானி சங்கர் எது? என்பது தெரியாது போல அச்சு அசலாக பொம்மையாகவே வருகிறார் பிரியா.

பொம்மைக்கு ப்ரியாவுக்கும் பொருந்துமாறு காஸ்டியூம் டிசைன் செய்த வரை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். அப்படி ஒரு பொருத்தம். பிரியாவும் அழகு பொம்மையாக அழகு சிலையாக நம் மனதில் நிறைகிறார்.

சூர்யாவின் நண்பராக வரும் டவுட் செந்தில் கொஞ்சம் கலகலப்புக்கும் உதவியுள்ளார்.

சூப்பர்வைசர் கேரக்டர் மற்றும் போலீஸ் ஆகியோரும் தங்கள் கேரக்டர்களில் பலிச்சிடுகின்றனர்.

டெக்னீஷியன்கள்…

மதன் கார்க்கியின் வரிகளில் முத்தம் முதல் முத்தம் என்ற பாடல் ரசிக்கு வைக்கிறது.. 43 வகையான முத்தத்தை அதில் குறிப்பிடுகிறார்.. ஆனால் பாடல் காட்சியில் ஒரு முத்தம் கூட இடம்பெறவில்லை என்பது பெரும் சோகம்.

யுவனின் பாடலும் பின்னணி செய்யும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன. என்னதான் விதவிதமான புதிய புதிய டியூன்கள் போட்டாலும் இளையராஜா இசையில் உருவான கமலின் ‘உல்லாச பறவைகள்’ படத்தில் இடம்பெற்ற ‘தெய்வீக ராகம்…’ என்ற பாடல் மட்டும் தான் நாம் தியேட்டரை விட்டு வெளியே வந்தாலும் முணுமுணுக்க வைக்கிறது.

மொழி பயணம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதா மோகன் இந்த படத்தை வித்தியாசமான கோணத்தில் இயக்கியிருக்கிறார். ஆனால் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் காட்டப்படும் பிரியா – சூர்யா உதட்டு முத்தக்காட்சி சரியாக பொருந்தவில்லையே.

இதில் முத்த காட்சி தான் மிகவும் முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது. அப்படி இருக்கையில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

படத்தின் ஒளிப்பதிவு படத்தொகுப்பம் நேர்த்தியாக உள்ளது.

வித்தியாசமான கற்பனை கதை தான் என்றாலும் மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும் ஒரு கற்பனை கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராதா மோகன்.

ஆக.. பொம்மை.. கற்பனை காதல்

bommai movie review and rating in tamil

சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ் விமர்சனம் 2.5/5 … கண்ணாமூச்சி விநாயகர்

சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ் விமர்சனம் 2.5/5 … கண்ணாமூச்சி விநாயகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

தெய்வ பக்தி நிறைந்தவர் ஊர்வசி. இவரது கணவர் குரு சோமசுந்தரம். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர். இவர்களின் மகன் நாயகன் பாலு வர்கீஸ். மாலை கண் நோய் உடையவர்.

தன் குடும்ப கோயிலில் கைவிடப்பட்ட புராதான விநாயகர் சிலையை வைத்து ஒரு கோயில் கட்ட நினைக்கிறார் ஊர்வசி.

ஒரு கட்டத்தில் அந்த புராதான சிலையை தன்னுடைய வீட்டில் இருந்து திருடி அதை வைத்து புதிய தொழில் தொடங்க நினைக்கிறார் பாலு.

எனவே அந்த சிலையை விற்க திருடன் கலையரசனின் உதவியை நாடுகிறார்.

அதன் பின்னர் என்ன நடந்தது.? விநாயகர் சிலையை எப்படி விற்றார்கள்.? புராதான விநாயகர் சிலை என்ன ஆனது? சார்லஸ் என்ற கலையரசன் விற்றுக் கொடுத்தாரா? ஊர்வசி என்ன செய்தார்? என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்கள்…

பக்குவப்பட்ட நடிப்பில் பளிச்சிடுகிறார் ஊர்வசி. மாலைக்கண் உடைய மகனுக்காக கண்கலங்குவதும் விநாயகர் சிலைக்காக ஏங்குவதும் என தன் அனுபவ நடிப்பை உணர்ந்து நடித்திருக்கிறார்.

குரு சோமசுந்தரம் ஏதோ ஓரிரு காட்சிகளில் வந்து செல்கிறார்.

கலையரசன் திருடனாக காட்டப்பட்டாலும் அவருடைய காட்சிகள் படத்திற்கு சுவாரஸ்யம் கூட்டுகின்றன. மெதுவாக நகரும் திரைக்கதையில் கலையரசனின் நடிப்பு களை கட்டி உள்ளது.

ஸ்பெஷல் கண்ணாடி அணிந்து தான் நினைத்ததை சாதிக்கிறார் நாயகன் பாலு வர்கீஸ்.. இவரது காட்சிகளில் கொஞ்சம் வேகம் கூட்டி இருந்தால் திரைக்கதையில் வேகம் எடுத்து இருக்கும்

சிலைக்கு விலைபேசும் அபிஜா சிவகலா, அவர் உதவியாளர் மணிகண்டன் ஆச்சாரி, கலையரசன் ஜோடியான மிருதுளா ஆகியோர் கவனம் ஈர்க்கின்றனர்.

டெக்னீஷியன்கள்…

ஸ்வரூப் பிலிப்பின் ஒளிப்பதிவு கேரள பகுதியை சென்னையாக காட்ட முயற்சித்திருக்கிறது. இதுதான் படத்தை ரசிகர்களிடம் ஒன்ற விமுயற்சித்துள்ளது.

முழுக்க முழுக்க இது கேரளாவை காட்டி இருக்கலாம் அல்லது கேரள எல்லை பகுதியான கன்னியாகுமரி உள்ளிட்டவைகளை காட்டி இருக்கலாம். சென்னை கேரளா என எங்கோ செல்வது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது நெருடலாக உள்ளது.

இசையமைப்பாளர் சுப்ரமணியன் கே.வி-இன் இசை படத்திற்கு பலம் சேர்க்க முயற்சித்துள்ளது

அச்சு விஜயணின் படத்தொகுப்பு தொகுப்புதான் இந்த திரைக்கதைக்கு மைனஸ் ஆக அமைந்துள்ளது. தேவையற்ற காட்சிகளை நீக்கி இருந்தால் படத்தை பார்ப்பதற்கு போதுமானதாக அமைந்திருக்கும்

விநாயகர் சிலையை மையமாக வைத்து சமூக நீதி கருத்தை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் சுபாஷ் லலிதா சுப்பிரமணியம்.

என் பெயரில் கடை வைக்கலாம், ஆனால் நான் தான் இங்கு கடை வைக்க முடியாது. காரணம் நான் திருடன்.. என கலையரசன் பேசும் வசனங்கள் கவனிக்க வைக்கிறது.

அடுத்தவர் வீட்டில் திருடுவது என்றால் கடினம். தன் வீட்டில் எளிதாக திருடி இருக்கலாம்.. காருக்குள் சிலையை வைப்பது.. சிசிடிவி இருப்பதால் பின்னர அதை எடுக்க முடியாமல் தவிப்பது என காட்சிகளை நீட்ட்ட்ட்ட்டி இருப்பதால் போர் அடிக்கிறது மேலும் அதில் பெரிதாக சுவாரசியமும் இல்லை என்பது தான் வருத்தம்.

ஆக இந்த சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்.. கண்ணாமூச்சி விநாயகர்

Charles Enterprises movie review and rating in tamil

எறும்பு விமர்சனம் 3.5/5.. எளியவர்களின் ஏணி

எறும்பு விமர்சனம் 3.5/5.. எளியவர்களின் ஏணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சார்லி, எம் எஸ் பாஸ்கர், ஜார்ஜ் மரியன், மோனிகா சிவா, சக்தி ரித்விக், சூசன் ராஜ் உள்ளிட்டோரின் நடிப்பில் சுரேஷ் ஜி இயக்கிய படம் தான் ‘எறும்பு’.

கதைக்களம்…

சார்லி – இவரது முதல் மனைவிக்கு மோனிகா மற்றும் சக்தி ரித்திக் என இரு குழந்தைகள். முதல் மனைவி இறந்து விடவே 2வதாக சூசன் என்பவரை திருமணம் செய்து கொள்கிறார். இவருக்கும் ஒரு குழந்தை பிறக்கிறது.

தன் அம்மா மனைவி தன் குழந்தைகள் என வாழ்ந்து வருகிறார் சார்லி.

பெரிதாக வருமான இல்லாத காரணத்தினால் கரும்பு வெட்டும் வேலைக்கும் செல்கிறார். இதனிடையில் எம் எஸ் பாஸ்கரிடம் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்கிறார்.

இதனால் எம்.எஸ். பாஸ்கர் கெடு விதிக்கிறார். குறிப்பிட்ட தேதிக்குள் பணத்தை கொடுக்காவிட்டால் வீட்டை விட்டு துரத்தி விடுவேன் என மிரட்டுகிறார்.

இந்த சூழ்நிலையில் தன் மனைவி சூசனை அழைத்துக் கொண்டு கரும்பு வெட்டும் வேலைக்கு மூன்று வாரங்கள் வெளியூர் செல்கிறார் சார்லி.

அந்த சமயத்தில் வீட்டில் இருக்கும் சக்தி எதிர்பாராத விதமாக வீட்டில் உள்ள தங்க மோதிரத்தை தொலைத்து விடுகின்றான்.

சித்திக்கு பயந்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். தங்களது சித்தி வருவதற்குள் ஒரு புதிய தங்க மோதிரத்தை வாங்க நினைக்கின்றனர்.

தம்பிக்கு உதவ அக்காவும் முற்படுகிறார். அவர்கள் என்ன செய்தனர்? சித்தி வருவதற்குள் மோதிரத்தை வாங்கி விட்டார்களா? எப்படி வாங்கினார்கள்? கடனை எப்படி அடைத்தார்கள்? பணம் கிடைத்ததா? என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்கள்…

சார்லி மற்றும் சூசன் ஆகிய இருவரும் தங்கள் கதாபாத்திரத்தை அனுபவ நடிப்பால் உணர்ந்து சிறப்பாகவே கொடுத்துள்ளனர்.

ஏழை வீட்டின் செல்வமே அவர்களின் குழந்தைகள் தான். அதை உணர்ந்து மோனிகா – சக்தி நல்லதொரு நடிப்பை கொடுத்துள்ளனர். மேலும் தன் தம்பிக்கு உதவ மோனிகா எடுக்கும் ஒவ்வொன்றும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இப்படி ஒரு அக்கா நமக்கு இருக்க மாட்டாரா என ஏங்க வைக்கிறார்.

ஒருவரிடம் பணம் பெறும்போதே சார்லியிடம் ஆங்காங்கே ஓவர் ஆக்டிங்க் வருகிறது.

எம் எஸ் பாஸ்கருக்கு பெரிதாக காட்சிகள் இல்லை என்றாலும் பணம் கொடுத்தவரின் வேதனையை புரிய வைக்கிறார்.. பணம் வாங்கும்போது மட்டும் கெஞ்சி கேட்கும் மக்கள் பணத்தை தர மறுப்பது எந்த வீட்டில் நியாயம் என்ற வசனங்கள் பளிச்சிடுகிறது.

இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் ஜார்ஜ் மரியான் நடித்துள்ளார். ஒரு டம்மி செல்போனை வைத்துக் கொண்டு இவர் பேசும் காட்சிகள் சிரிப்பலை. மோனிகா – சக்திக்கு ஜார்ஜ் உதவும் காட்சிகள் நம்மை கண்கலங்க வைக்கும்.

பாட்டி பறவை சுந்தரம்பாள், கங்கானியாக நடித்திருக்கும் ஜெகன் ஆகியோரும் நல்ல தேர்வு.

டெக்னீஷியன்கள்…

இசை அருண் ராஜ்.. பின்னணி செய்யும் பாடல்களும் ரசிக்க வைக்கின்றன ஒரு கிராமத்து மண்வாசனைடன் தன் இசையை பகிர்ந்து இருக்கிறார்.

ஒளிப்பதிவு இயக்குனர் : கே எஸ் காளிதாஸ்.. காட்டு மன்னார் கோயிலின் அழகை கவிதையாக படம் பிடித்துள்ளார். முக்கியமாக படத்தில் காட்டப்படும் முயல் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

ஒரு ஏழை குடும்பத்தில் ஒரு தங்கத்தின் விலை மதிப்பற்றது என்பதை காட்சிகளில் உணர்த்தி இருக்கிறார் சுரேஷ் ஜி.

அதேசமயம் இந்த படத்திற்கு எறும்பு என்று தலைப்பு வைத்ததை விட முயல் என வைத்து இருக்கலாம்.. முயல் தான் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரை செய்துள்ளது எனலாம்.

ஆனால் எறும்பு என்பது சிறுக சிறுக சேமிக்கும் ஒரு உயிரினமாகும். மேலும் தன் சக்திக்கு மீறி 40 மடங்கு எடையை தூக்கும் வலிமை கொண்டது எறும்பு.

இந்த குழந்தைகள் தங்கள் சக்திக்கு மீறி செயையும் செயலை உணர்த்தவே எறும்பு என தலைப்பு வைத்திருக்கிறார்.

ஆக.. எறும்பு.. எளியவர்களின் ஏணி

erumbu movie review and rating in tamil

விமானம் விமர்சனம் 3/5.. வாழ்க்கை பயணம்

விமானம் விமர்சனம் 3/5.. வாழ்க்கை பயணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

தன் மகனின் ஆசையை நிறைவேற்ற போராடும் ஒரு ஏழை தந்தையின் கதை இந்த விமானம்.

நடிப்பு – சமுத்திரக்கனி, மாஸ்டர் துருவன், மீரா ஜாஸ்மின், மொட்ட ராஜேந்திரன், தன்ராஜ், அன்சுயா பரத்வாஜ் மற்றும் ராகுல் ராமகிருஷ்ணா.

பாடல்கள் – சிநேகன்

இசை – சரண் அர்ஜுன்

தயாரிப்பு – கிரண் கொர்ராபட்டி கிரியேட்டிவ் ஒர்க்ஸ், ஜீ ஸ்டுடியோஸ்

இயக்கம் – சிவ பிரசாத் யனலா

கதைக்களம்…

விமான நிலையம் அருகே இருக்கும் ஒரு குடிசைப் பகுதியில் தன் மகனுடன் வசித்து வருகிறார் மாற்றித்திறனாளி சமுத்திரக்கனி. இவர் அந்த பகுதியில் உள்ள கட்டண கழிப்பிடத்தை நிர்வகித்து வருகிறார்.

இவரது நண்பர்கள் ஆட்டோ டிரைவர் மற்றும் செருப்பு தைக்கும் தொழிலாளி. இவர்களது வீட்டு அருகே விலைமாது பெண் வசிக்கிறார்.

சமுத்திரக்கனியின் மகன் விமானத்தில் பறக்க ஆசைப்படுகிறான். எப்போதும் விமான நினைவாகவே அவன் இருக்கிறான். பைலட் ஆகவும் ஆசைப்படுகிறான்.

தன் தந்தையின் வறுமையை உணர்ந்த மகன் துருவன் நன்றாக படித்து சைனிக் பள்ளியில் படிக்க தேர்வாகிறான்.

இந்த நிலையில் ‘லுகேமியா’ என்ற ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறான் துருவன். இன்னும் சில நாட்களே அவன் உயிரோடு இருப்பான் என டாக்டர்கள் சொன்ன நிலையில் தன் மகனின் ஆசையை நிறைவேற்ற பாடுபடுகிறார் சமுத்திரக்கனி.

விமானத்தில் சென்று வர ரூ 10000 பணம் தேவைப்படுகிறது.

இறுதியில் என்ன ஆனது.? தன் மகனின் கடைசி ஆசையை நிறைவேற்றினாரா சமுத்திரக்கனி.? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஒரு காலை இழந்த மாற்றுத்திறனாளி ஆக சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். இது போன்ற கேரக்டர்களை ஒரு முன்னணி நடிகர் ஏற்பதில்லை. அதற்காகவே சமுத்திரக்கனியை பாராட்டலாம்.

தன் கேரக்டரை உணர்ந்து அதற்கு வலு கொடுத்து நிமிர்த்தி நிற்கச் செய்திருக்கிறார் சமுத்திரக்கனி. தன் மகனுக்காக அவரும் உருகி நம்மையும் கண்கலங்க வைத்திருக்கிறார்.

மகனாக துருவன் நடித்திருக்கிறான். பள்ளியில் சிறந்த மாணவனாக பாசமிக்க மகனாகவும் வாழ்ந்திருக்கிறார்.

ஆட்டோ டிரைவராக தன்ராஜ்.. செருப்பு தைக்கும் தொழிலாளியாக ராகுல் ராமகிருஷ்ணன் நடித்துள்ளனர். இருவரது கதாபாத்திரமும் படத்திற்கு வலு சேர்த்துள்ளன.

விலைமாதுவாக அன்சுயா பரத்வாஜ் நடித்திருக்கிறார். இவரது கேரக்டர் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தாலும் குழந்தைகளுடன் பார்க்கும் பெற்றோர்களுக்கு இது ஒரு நெருடலை ஏற்படுத்தும்.

‘விமானம்’ படத்துடன் ஒட்டாத கேரக்டரில் மொட்ட ராஜேந்திரன் நடித்துள்ளார். சிறப்பு தோற்றத்தில் மீரா ஜாஸ்மின். அவரது கேரக்டர் படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறது.

டெக்னீஷியன்கள்…

இசையமைப்பாளர் – சரண் அர்ஜுன்
கலை இயக்குனர் – ஜே கே மூர்த்தி
படத்தொகுப்பு – மார்த்தாண்ட் கே வெங்கடேஷ்
இயக்கம் – சிவ பிரசாத் யனலா

சினேகன் வரிகளில் எழுதப்பட்ட பாடல்கள் படத்திற்கு பலம். பின்னணி இசை பெரிதாக கவரவில்லை. கலை இயக்குனரின் செட் இது சினிமா செட் என்பதை காட்டுகிறது.

இது ஒரு தெலுங்கு படம் என்பதை முதல் காட்சி முதலே தோன்ற வைத்து விடுகிறது.

சமுத்திரக்கனி உள்ளிட்ட எல்லாருடைய உதட்டு அசைவுகளில் வசனங்கள் ஒட்டவில்லை என்பதால் நம் மனதிலும் பெரிதாக ஒட்டவில்லை.

விமானத்தில் பறப்பது என்பது ஒரு ஏழை குடும்பத்திற்கு எத்தகைய சவால் என்பதை அவர்கள் வாழ்வின் இருப்பிடத்திற்கே அழைத்துச் அழைத்துச் சென்று நமக்கு உணர்த்தி இருக்கிறார் இயக்குனர் சிவ பிரசாத் யனலா.

ஆக இந்த விமானம்.. வாழ்க்கை பயணம்

Vimanam movie review and rating in tamil

More Articles
Follows