தற்காப்பு கலை தரும் தன்னம்பிக்கை… எழுமின் விமர்சனம்

தற்காப்பு கலை தரும் தன்னம்பிக்கை… எழுமின் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: விவேக், தேவயாணி, அழகம்பெருமாள், ரிஷி, செல் முருகன், பிரேம்குமார், போலீஸ் ஜெயச்சந்திரன் மற்றும் பலர்.
இசை – கணேஷ் சந்திரசேகரன்
ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன்
பின்னணி இசை – ஸ்ரீகாந்த் தேவா
எடிட்டர் – கார்த்திக் ராம்
இயக்கம் மற்றும் தயாரிப்பு – விஜி
பிஆர்ஓ. – குமரேசன்

கதைக்களம்….

விவேக் & தேவயானி இருவரும் கணவன் மனைவி. இவர்களுக்கு ஒரே மகன் அர்ஜீன். பள்ளியில் படிக்கும் மாணவன். வசதியான குடும்பம்

அர்ஜீனுக்கு 5 ஏழை நண்பர்கள். 3 பையன்கள் 2 பெண்கள். இவர்கள் அனைவரும் பாக்ஸிங், கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட ஒவ்வொரு தற்காப்பு கலைகளில் சிறந்தவர்களாக விளங்குகிறார்கள்.

அழகம் பெருமாளின் சுந்தரம் ஸ்போர்ட்ஸ் அக்டமியில் பயிற்சி பெறுகிறார்கள்.

இவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக் கொண்டு நேஷ்னலுக்கு செலக்ட் ஆக வேண்டும் என தீவிர பயிற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.

ஆனால் கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால் இவர்கள் 5 பேரையும் அழகம் பெருமாள் தன் பயிற்சி மையத்தில் இருந்து நீக்கி விடுகிறார்.

இதில் அர்ஜீன் மட்டும் பாக்ஸிங்கில் நேஷ்னல் லெவலுக்கு செல்க்ட் ஆகிறார்.

அந்த போட்டியில் ஜெயிக்கும் போது மிகுந்த உற்சாகத்தில் இவருக்கு ஹார்ட் அட்டாக் வருகிறது. அந்த நிமிடமே மரணமடைகிறார்.

இதனால் தன் மகனின் ஆசைப்படி ஒரு ஸ்போர்ட்ஸ் அகடாமி ஆரம்பித்து அர்ஜீனின் 5 நண்பர்களுக்கும் மற்றும் ஏழை மாணவர்களுக்கு இலவச பயிற்சி கொடுக்கிறார் விவேக்.

இதனால் விவேக்கிற்கும் அழகம் பெருமாளுக்கும் பலத்த போட்டி நிலவுகிறது. தன் பண பலத்தாலும் அதிகார வர்கத்தாலும் விவேக்கின் மாணவர்களை தடுக்க நினைக்கிறார்.

அதன்பின்னர் என்ன ஆனது? மாணவர்கள் ஜெயித்தார்களா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

பிரவீன், ஸ்ரீஜித், வினீத், சுகேஷ், கிருத்திகா, தீபிகா இவர்கள்தான் படத்தின் மெயின் கேரக்டர்கள். விவேக் போடும் உற்சாக பந்தால் 6 பேரும் சிக்ஸர் அடித்துள்ளனர்.

சிலம்பம், பாக்ஸிங், கராத்தே என ஒவ்வொருவரும் நம்மை மிரள வைத்துள்ளனர். இந்த பயிற்சியை நாம் கற்றுக் கொண்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நம்மையே ஏங்க வைத்துள்ளனர்.

தன் பிள்ளைக்கு உற்சாக டானிக் தரும் தம்பதிகளாக விவேக் மற்றும் தேவயானி நடித்துள்ளனர்.

விவேக் பேசும் வசனங்கள் மாணவர்களுக்கு வீரத்தை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு.

ஆனால் இந்த தம்பதியரின் ஒரே மகன் அர்ஜீன் இறந்த பிறகு இவர்களிடம் அவ்வளவு சோகமில்லை என்பது வருத்தம்தான்.

போலீஸ்காரர்களாக வரும் பிரேம் குமார் மற்றும் சிங்கம் ஸ்டைல் மீசைக்காரர் ஜெயச்சந்திரன் இருவரும் நல்ல தேர்வு. இடைவேளைக்கு பிறகு வரும் ஜெயச்சந்திரன் நம் கவனத்தை அதிகமாகவே ஈர்க்கிறார்.

ஹீரோ போல ரிச் தோற்றம் இருந்தாலும் வில்லனாக நடித்துள்ளார் ரிஷி. பாவம் மாணவர்களிடம் அதிகமாகவே அடி வாங்கிவிட்டார். பைட் செம ப்ளஸ்.

மற்றொரு வில்லனாக அழகம் பெருமாள். தன் நடிப்பில் கச்சிதம். செல் முருகன் காமெடி சுத்தமாக எடுப்படவில்லை. (செல் பழைய மாடலோ..?)

தொழில்நுட்ப கலைஞர்கள்…

கணேஷ் சந்திரசேகரின் இசையில் உருவான எங்கே நீ போனாய்… பாடலும் அந்த வரிகளும் நிச்சயம் நம்மை தாலாட்டும். ஆனால் அந்த பாடலை தனுஷை விட்டு பாட வைக்காமல் சிறந்த பாடகரை வைத்து பாட வைத்திருக்கலாமே சார்..?

அனிருத் குரலில் உருவான எழு… எழு பாடலும், யோகி பி குரலில் ஒலிக்கும் போராடுடா பாடல்களும் மாணவர்களுக்கு எக்ஸ்ட்ரா வைட்டமின். ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசையில் க்ளைமாக்ஸ் பைஃட் மிரட்டல்.

ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரனும் எடிட்டர் கார்த்திக் ராமும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்துள்ளனர்.

தமிழ் பாரம்பரிய விளையாட்டுக்களை விட்டுவிட்டு இன்று கராத்தே மற்றும் பாக்ஸிங் விளையாட்டுக்களுக்கே முக்கியத்துவம் தருகிறோம். அதையே முறையாக பயின்றால் நம்மை தற்காத்து கொள்ள முடியும் என வகுப்பு எடுத்துள்ளனர்.

ஆனால் படத்தின் முதல் பாதியில் நடக்கும் நிறைய போட்டிகள் ஏதோ 20 பேர் முன்னிலையில் நடக்கும் போட்டியாகவே உள்ளது. விஜி சார் இன்னும் கூட்டம் சேர்த்திருக்கலாமே.

டாப் ஹீரோக்களுக்கு இணையான அந்த க்ளைமாக்ஸ் பைட் நிச்சயம் ரசிகர்களை கவரும். ஃபைட் அதிக நேரமிருந்தாலும் மாணவர்களின் சாகசத்தால் நம்மை சீட் நுனியில் உட்கார வைக்கிறது.

இந்த படம் பார்த்தால் வீடியோ கேம் விளையாடும் மாணவர்கள் இனி வீட்டை விட்டு வெளியே வந்து விளையாட ஆசைப்படுவார்கள்.

குடும்பத்துடன் பார்க்க, நண்பர்களுடன் பார்க்க, காதலருடன் பார்க்க என பல படங்களை பார்த்திருப்போம். இது மாணவர்கள் ஆசிரியர்களுடன் பார்க்க கூடிய படம்.

எழுமின்… தற்காப்பு கலை தரும் தன்னம்பிக்கை

மலையாளிகளின் மைந்தன்..; காயம்குளம் கொச்சுன்னி விமர்சனம்

மலையாளிகளின் மைந்தன்..; காயம்குளம் கொச்சுன்னி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : மோகன்லால், நிவின்பாலி, பிரியா ஆனந்த், எம்.எஸ்.பாஸ்கர், சன்னி வெய்ன், பாபு ஆண்டனி, சுதீர் காரமணா, ஷைன் டாம் சாக்கோ, மணிகண்ட ஆச்சாரி மற்றும் பலர்
இசை : கோபிசுந்தர்
ஒளிப்பதிவு : பினோத் பிரதான்
கதை : பாபி-சஞ்சய்
டைரக்டர் : ரோஷன் ஆண்ட்ரூஸ்
தயாரிப்பு : ஸ்ரீகோகுலம் கோபாலன்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா

கதைக்களம்…

தமிழில் ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தை இயக்கியவர் ரோஷன் ஆண்ட்ரூஸ். இவர்தான் மலையாளத்தில் மோகன்லால்-நிவின்பாலி நடித்த இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த கதையானது 1800களில் நடைபெற்ற ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.

மிகப்பெரிய கொள்ளைக்காரனாக வாழ்ந்த கொச்சுன்னி, ஏழைகளுக்கு வாரி வழங்கும் ராபின்ஹூட்டாக கோலோச்சிய காலத்தை இந்த படம் சொல்கிறது.

இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த சிறுவன் கொச்சுன்னி. இவனின் தந்தை ஒரு திருடன் என்பதாலும் வறுமை குடும்பத்தை வாட்டுவதாலும் இவனது அம்மா ஊரை விட்டு போக சொல்கிறார்.

வேறு ஊருக்கு செல்லும் கொச்சுன்னி அங்கு ஒரு மளிகைகடையில் வேலைக்கு சேர்கிறார். திருடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்.

அந்த ஊருக்கு களரி வித்தையை சொல்லிக் கொடுக்க வரும் பாபு ஆண்டனியுடம் சில தடங்கலுக்கு பிறகு வித்தைகளை கற்கிறார். அங்கு பணிபுரியும் பிரியா ஆனந்துடன் காதல் கொள்கிறார்.

ஒரு சூழ்நிலையில் மேல் சாதியினர் ஆற்றில் இருக்கும் புதையலை எடுக்க சொல்லி கொச்சுன்னியிடம் கேட்கின்றனர். அப்போது அவருக்கு சில பவுன்களையும் தருவதாக சொல்கின்றனர்.

இதனை நம்பும் கொச்சுன்னி அந்த புதையலை எடுத்து வருகிறார். பரிசாக சில பவுன்களையும் அவர்களிடம் இருந்து வாங்குகிறார்.

ஆனால் கொச்சுன்னி திருடிவிட்டதாக அவர் மீது பழியை போட்டு பொதுமக்கள் முன்னிலையில் அவருக்கு பெரும் தண்டனை கொடுக்கின்றனர்.

நிவின் பாலியின் நல்ல உள்ளத்தை அறிந்த இத்திக்கார பக்கி (மோகன்லால்) அவரை அந்த தண்டனையில் இருந்து காப்பாற்றுகிறார்.

நீ நல்லவனாக வாழ்வதில் அர்த்தமில்லை. உன் சாதியினருக்கு உதவ நீ களத்தில் இறங்க வேண்டும். மேல் சாதியினரிடம் உள்ள பொன் நகைகளை கொள்ளையடித்தால் தப்பே இல்லை என சில பயிற்சி யுக்திகளை சொல்லிக் கொடுத்து செல்கிறார்.

அதனை கற்ற நிவின்பாலி என்ன செய்தார்? திருட சென்றாரா? தன் சமூக மக்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்தாரா? ஆங்கிலேயர்கள் என்ன செய்தார்கள்? மேல் சாதியினரை எதிர்த்த எப்படி போராடினார்? என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்கள்….

எப்போதும் ஒரே மாதிரியான கதைகளில் நடிக்காமல் வித்தியாசம் காட்டுபவர் நிவின்பாலி. இதில் முதல் பாதியில் அப்பாவியாகவும் இரண்டாம் பாதியில் அதிரடி கொச்சுன்னியாகவும் வாழ்ந்திருக்கிறார்.

படத்தில் ஏழைகளுக்காக அள்ளி கொடுப்பதை போல் நடிப்பையும் க்ளைமாக்ஸில் ரசிகர்களுக்காக அள்ளி கொடுத்திருக்கிறார் நிவின்பாலி.

இடைவேளையில்தான் வருகிறார் மோகன்லால். ஆனால் அவரின் மேனரிசம் படம் முழுவதும் பேசப்படும் வகையில் செய்திருக்கிறார்.

குதிரை சவாரி, சண்டைப் பயிற்சி வித்தைகளை சொல்லிக் கொடுக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கும்.

வெறுமனே நாயகியாக இல்லாமல் நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார் பிரியா ஆனந்த், ஆனால் இவரது தோற்றம்தான் அந்த 1800 காலகட்டத்திற்கு ஒத்துப் போகவில்லை. டல் மேக்அப் போட்டு இருக்கலாம்.
பெரும்பாலான காட்சிகளில் எம்.எஸ். பாஸ்கர் இருக்கிறார். ஆனால் ஓரிரு வார்த்தைகள் அவருக்கு வசனங்களாக கொடுக்கப்பட்டுள்ளது.
களரி வித்தைக்காரராக பாபு ஆண்டனி. சைலட்டாக வந்து க்ளைமாக்ஸில் வைலண்டாக மாறி அசத்தியிருக்கிறார்.

பாபு ஆண்டனியின் முன்னாள் மாணவராக இருந்து பின்னர் காவல் துறை அதிகாரியாக மாறும் சன்னி வெயின் செம வெயிட்டு. கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்.

மேல் சாதியினராக தன்னை காட்டிக் கொள்ளும் அந்த கும்பல் அனைவருமே நடிப்பில் கச்சிதம். ஆங்கில ஆட்சியாளர்களும் நல்ல தேர்வு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தின் பெரிய பலமே கலை இயக்குனரும் ஒளிப்பதிவாளரும்தான். 1800 ஆண்டுகளில் இப்படிதான் சந்தை, கோயில், களரி பயிற்சி, நடைமுறைகள், உடை வழக்கம், படகு, இயற்றை காட்சிகள் இருந்திருக்குமோ? என ஆச்சரியத்துடன் பார்க்க வைத்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் பினோத் பிரதான் அனைத்து காட்சிகளையும் கண்களை விட்டு அகலாத வண்ணம் கொடுத்துள்ளார்.

கோபி சுந்தரின் பின்னணி இசை மிரட்டல். மோகன்லால் இன்ட்ரோ சீன் முதல் க்ளைமாக்ஸ் சீன் வரை பின்னி எடுத்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பும் கச்சிதம்.

ஒரே மாதிரி கதையை எப்போதும் எடுக்காமல் வெரைட்டி காட்டும் டைரக்டர் ரோசன் ஆண்ட்ரூஸை வெகுவாக பாராட்டலாம்.

வரலாற்று ஆய்வுகளை திறம்பட செய்து, அதை இன்றைய ரசிகர்கள் ரசிக்கும்படி திறமையான கலைஞர்களை வைத்து விருந்து வைத்துள்ளார்.

காயம்குளம் கொச்சுன்னி… மலையாள மக்களின் மைந்தன்

Kayamkulam Kochunni movie review rating

கூத்தன் விமர்சனம்

கூத்தன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்..

ஒரு சினிமாவுக்காக வடிவமைக்கப்பட்ட செட்டிங்கை சூட்டிங் முடித்தவுடன் சினிமா கலைஞர்கள் வசிப்பதற்காக கொடுக்கிறார் பட தயாரிப்பாளர்.

அங்கு வசிக்கும் சீனியர் துணை நடிகைதான் ஊர்வசி. அவரின் மகன்தான் இப்பட நாயகன் ராஜ்குமார்.

அவரும் அவரது நண்பர்களும் இணைந்து சினிமா வாய்ப்பை தேடிக் கொண்டே ஒரு நடன குழுவை நடத்தி வருகின்றனர்.

இதுபோல் மற்றொரு இடத்தில் நாயகியும் அவரது அக்காவும் பரதநாட்டிய நடனப் பள்ளி நடத்தி வருகின்றனர்.

ஒரு சூழ்நிலையில் செட் போட்ட தயாரிப்பாளர் தனக்கு பணம் தேவைப்படுவதால் அந்த இடத்தை காலி செய்ய சொல்கிறார். இல்லை என்றால் ஒரு கோடியை அங்குள்ள குடும்பங்கள் சேர்ந்து கொடுத்தால் அந்த இடத்தை விட்டு தருகிறேன் என்கிறார்.

எனவே பணத்தை திரட்ட உலகளவில் நடக்கும் ஒரு நடனப் போட்டியில் கலந்துக் கொள்ள நினைக்கிறார் ராஜ்குமார்.

அதுப்போல் நாயகி ஸ்ரிஜிதா தன் வீட்டை அடமானத்தில் இருந்து காப்பாற்ற அந்த நடன போட்டியில் கலந்துக் கொள்கிறார்.

இந்த நடன குழுக்களுக்கு பலத்த போட்டியாக உள்ளவர்தான் நாகேந்திர பிரசாத். அவரும் இந்த போட்டியில் கலந்து கொள்ள வருகிறார்.

இறுதியில் யார் ஜெயித்தார்கள்? இடத்தை நாயகன் நாயகி மீட்டார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நாயகன் ராஜ்குமார் நடிப்பை விட சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தியுள்ளார். நல்ல உயரம். எனவே ஆக்சன் காட்சிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தலாம்.

நாயகிகள் 3 பேர் உள்ளனர். ஸ்ரிஜிதா, சோனால், கீரா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்துள்ளனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு நாகேந்திர பிரசாத். நடனத்தில் கவர முயற்சித்துள்ளார். நடிப்பில் அதே பழைய பார்முலாதான்.

துணை நடிகை படும் பாட்டை வெகு இயல்பாக காட்டியுள்ளார் ஊர்வசி. ஆனால் இவருக்கு இருக்கும் அந்த ப்ளாஷ்பேக் தேவையில்லாத ஒன்று.

ஏதோ நாயகன் நாயகியிடம் சொல்வதற்காக வைக்கப்பட்ட ஒன்றாக தெரிகிறது.

நாகேந்திர பிரசாத்தும் நாயகியின் அக்காவும் ஆடும் காட்சி நன்றாக உள்ளது. மேலும் ஒரு சில நடன காட்சிகள் சிறப்பாக இருந்தாலும், சுவாரஸ்யமான காட்சிகள் இல்லை.

மாடசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு ஆறுதல். பாலாஜியின் இசையில் பாடல்கள் ஓகே. டி.ஆர். பாடிய சங்கிஸ்தான் மங்கிஸ்தான் பாடல் தாளம் போடும் ரகம்.

கதைக்கு கொடுத்த வலுவை திரைக்கதையில் கொடுத்திருக்கலாம் இயக்குனர் வெங்கி.

கூத்தன்… டான்ஸ் பிடிக்கும்னா பாருங்க ஜீ

மனுசங்கடா விமர்சனம்

மனுசங்கடா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையில் வேலை பார்க்கிறார் நாயகன் ராஜீவ் ஆனந்த்.

ஒரு நாள் இரவு அவரது அப்பா இறந்துவிட்டதாக தகவல் வரவே ஊருக்கு புறப்பட்டு செல்கிறார்.

இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குடும்பம் என்பதால், தந்தையின் சடலத்தை பொது வழியில் செல்ல அனுமதி மறுக்கின்றனர் வேற்று சாதியினர்.

இவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட வழியோ முட்கள் நிறைந்த பகுதியாகும்.

எனவே அந்த பொது வழியில் எடுத்து செல்ல முனைகிறார். உயர் அதிகாரிகளை சந்தித்த பிறகும் இதற்கு வழியும் விடையும் கிடைக்கவில்லை.

எனவே தன் நண்பர்களுடன் உதவியுடன் கோர்ட்டுக்கு செல்கிறார். அந்த 3 நாட்களாக தந்தையின் சடலம் அவரது வீட்டிலேயே (ஐஸ் பெட்டியில்) இருக்கிறது.

ஒரு வழியாக பொது வழியி சடலத்தை எடுத்துச் செல்ல கோர்ட் அனுமதியளிக்கிறது.

அப்படியிருந்தும் ஊர் அதிகாரிகள், போலீஸ் பட்டாளம், ஜாதி வெறியர்கள் சடலத்தை எடுக்க தடுக்கின்றனர்.
பின்னர் என்ன செய்தார் நாயகன்? என்பதே படத்தின் மீதிக்கதை.

யதார்த்த நாயகனாக நடித்துள்ளார் ராஜீவ் ஆனந்த்.

ஜாதி வெறியால் அவர் படும் இன்னல்கள் அனுதாப்த்தை உண்டாக்கிறது.

காட்சிகளில் வரும், ஊர் நல்லவர், ராஜீவ்வின் நண்பர்கள், அவரது காதலி, வக்கீல் என அனைவரும் கச்சிதம்.
இது ஒரு படம் என்பதை விட ஆவணப்படம் என்பதே சரி.

ஒரே கேமரா ஆங்கிள். நேரடி ஆடியோ ஒளிப்பதிவு என்பதே படத்தின் மைனஸ் ஆகவுள்ளது.

கதைக்களமும் நடிகர்களும் சரி. ஆனால் படம் முழுவதும் இதையே பேசுவதால் ரசிகர்களுக்கு போரடித்துவிடும்.

மற்றபடி இந்த ஆவணப்படம் ஒரு நல்ல முயற்சி. படத்தின் க்ளைமாக்ஸ் யாரும் எதிர்பாராத ஒன்று. அது கண்ணீரை வரவழைக்கும்.

மனுசங்கடா… ஜாதி வெறியர்களே நீங்கள் மனுசங்களா..?

Manusangada movie review

ஆண் தேவதை விமர்சனம்

ஆண் தேவதை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், சுஜா வருணி, காளி வெங்கட், ராதாரவி, இளவரசு, அறந்தாங்கி நிஷா, மாஸ்டர் கவின், பேபி மோனிகா மற்றும் பலர்.
இசை – ஜிப்ரான்
ஒளிப்பதிவு – விஜய் மில்டன்
எடிட்டர் – காசி விஸ்வநாதன்
தயாரிப்பு – பக்ரூதின், தாமிரா, சேக் தாவூத்
பிஆர்ஓ. – ஜான்

கதைக்களம்..

சமுத்திரக்கனி மற்றும் ரம்யா பாண்டியன் இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொள்கின்றனர். சென்னையில் வாழ்கின்றனர். இவர்களுக்கு மோனிகா மற்றும் கவின் என இரட்டை குழந்தைகள் பிறக்கிறது.

குழந்தைகளை நன்றாக வளர்க்கவும் படிக்க வைக்கவும் இருவரும் வேலைக்கு செல்கின்றனர்.

குழந்தைகளை பார்த்துக் கொள்ள யாரும் இல்லாத காரணத்தால் ப்ளே ஸ்கூலில் விட்டு செல்கின்றனர்.

வேலை பளு காரணமாக வீட்டிற்கு சரியான நேரத்தில் குழந்தைகளை கூட்டி வரவும் முடியவில்லை.

இதனால் இருவருக்கும் பிரச்சினை எழ, வேறு வழியில்லாமல் சமுத்திரக்கனி தன் வேலையை விட்டு குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்கிறார்.

ஐடி கம்பெனியில் வேலை செய்யும் ரம்யா நன்றாக சம்பாதித்து ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட் வாங்குகிறார். இதனால் மிகப்பெரிய தொகைக்கு பேங்க் லோன் எடுக்கிறார்.

ஒரு சூழ்நிலையில் சமுத்திரக்கனிக்கும் இவருக்கும் பிரச்சினை எழ, என் காசில் வாழும்போது நீ இப்படி செய்ற, என் போல் சம்பாதிக்க முடியுமா? வெளியே போய் வாழ்ந்துப் பார் என சமுத்திரக்கனியிடம் சவால் விடுகிறார்.
எனவே சமுத்திரக்கனியும் தன் மகளை மட்டும் அழைத்துக் கொண்டு செல்கிறார்.

ரம்யா தன் மகனுடன் வாழ்கிறார். அவருக்கும் மகனை பார்த்துக் கொள்ள ஆள் தேவைப்படுகிறது.

மேல் அதிகாரியின் ஆசைக்கு இணங்காத காரணத்தால் ஒரு நாள் ரம்யாவுக்கு வேலை போகிறது.

அதன்பின்னர் என்ன நடந்தது..? லோன் கட்டினாரா? சமுத்திரக்கனி என்ன செய்தார்? தன் ஈகோவை ரம்யா விட்டாரா? கணவரிடம் மன்னிப்பு கேட்டாரா? என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

வழக்கமான யதார்த்த கேரக்டரில் சமுத்திரக்கனி. எதற்கும் ஆசைப்படாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்று வாழ்பவர். பொறுப்பான தந்தையாக அன்பான கணவனாக வாழ்ந்திருக்கிறார்.

ஒரே வார்த்தையில் சொன்னால் ஹவுஸ் ஹஸ்பெண்ட்டாக வாழ்ந்திருக்கிறார்.

ஐடி கம்பெனியில் வேலை செய்யும் பெண்ணாக ரம்யா மற்றும் சுஜா வருணி.

மாடர்ன் மங்கையாக ரம்யா பாண்டியன். குடும்பத்தை விட குழந்தைகளை விட வேலையே (பணமே) வாழ்க்கையாக வாழ்கிறார். ஜோக்கர் படத்தில் அசத்தியர் இதிலும் தன் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்.

குழந்தைகள் கவின் மற்றும் மோனிகா நல்ல தேர்வு. அதிலும் மோனிகா ஆடும் அந்த கடவுள் விளையாட்டு சொற்கள் படத்திற்கு ப்ளஸ். கேள்வி மேல் கேள்வி கேட்டு தந்தைக்கு உதவுவதில் ரசிக்க வைக்கிறார்.

பறக்க ஆசைப்படும் சுஜா வருணியின் வாழ்க்கை இறுதியில் பரிதாபத்தில் முடிகிறது.

ராவுத்தராக ராதாரவி. பெரிதாக வேலை என்றாலும் கொடுத்த வேலையாக சரியாக செய்திருக்கிறார்.

தன் அப்பார்ட்மெண்டில் மனைவியை சந்தேகப்படும் கணவனாக இளவரசு. யதார்த்த பேச்சில் கவர்கிறார்.
அறந்தாங்கி நிஷா கொஞ்சமே வந்தாலும் சிரிப்பூட்டுகிறார்.

அப்பார்ட்மெண்ட ஆண்டிகளிடம் சமுத்திரக்கனி பேசும்போது எல்லாம் சில கணவன்மார்கள் எரிச்சல் அடையத்தான் போகிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஜிப்ரான் இசைய்யில் பாடல்களும் பாடல் வரிகளும் படத்திற்கு கூடுதல் பலம். நிகரா தான் நிகரா பாடல் நெஞ்சை விட்டு நீங்காது நிற்கும். பேசுகிறேன் பேசுகிறேன்… மலரின் நறுமணம் பாடல்களும் ரசிக்கும் ரகமே.

காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பும் விஜய் மில்டனின் ஒளிப்பதிவு கச்சிதம்.

இயக்கம் பற்றிய அலசல்…

ரெட்டச்சுழி டைரக்டர் தாமிரா தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். ஐடி கம்பெனி பெண்கள் மற்றும் அவரது லைப் ஸ்டைல், டிரிங்ஸ் பார்ட்டி ஆகியவற்றை அப்பட்டமாக காட்டியிருக்கிறார்.

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வாழும் சில போலி மனிதர்களையும் ஜெராக்ஸ் எடுத்து காட்டியிருக்கிறார்.

பழக்கப்பட்ட அடிமையை (கணவன்களை) மனைவிகள் மன்னித்து விடுவார்கள் என்ற டயலாக் கைத்தட்டல்களை அள்ளும்.

ஆனால் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு 2ஆம் பாதியில் இல்லை. சீரியல் போல நாடகத்தன்மை இருக்கிறது. அதை குறைத்திருக்கலாம். ஒரே அட்வைஸ் மையமாக இருக்கிறது போன்ற உணர்வை தருகிறது.

ஆண் தேவதை.. அசத்தலான ஹவுஸ் ஹஸ்பெண்ட்

Aan devathai review rating

First on Net : டம்மி சி.எம்.முக்கு டாட்டா… நோட்டா விமர்சனம் – 2.5/5

First on Net : டம்மி சி.எம்.முக்கு டாட்டா… நோட்டா விமர்சனம் – 2.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

சினிமா நடிகராக இருந்து நடிகர் ஆகிறார் நாசர்.

தமிழக முதல்வர் நாசர் ஒரு ஊழல் புகாரில் சிக்குகிறார். இதனால் பதவி விலக நேரிடுகிறது.

எனவே கட்சிக்கார்ர்களையும் தன்னுடன் இருக்கும் மந்திரிகளையும் நம்பாமல் 2 வாரத்திற்கு மட்டும் டம்மி CM ஆக தன் மகன் விஜய் தேவரகொண்டாவை நியமிக்க சொல்கிறார்.

வேறு வழியில்லாமல் எம்எல்ஏ.க்களும் ஆதரவு அளிக்க கவர்னர் முன் பதவி ஏற்கிறார்.

ஆனால் பொறுப்பில்லாமல் குடித்துவிட்டு வீட்டிலேயே இருக்கிறார்.

2 வார முடிவில், நாசருக்கு சிறை தண்டனை உறுதியாகுகிறது.

இதனால் தமிழ்நாட்டில் கலவரம் வெடிக்க, சட்டம் ஒழுங்கு கெடுகிறது.

அதன் பின்னர் தன் பொறுப்பை உணர்ந்து, மூத்த பத்திரிகையாளர் சத்யராஜ் ஆலோசனை பேரில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்கிறார் விஜய்.

இதனால் முதல்வருக்கு நல்ல பெயர் மக்கள் மத்தியில் கிடைக்கிறது.

அதன் பின்னர் ஜாமீனில் வெளிவருகிறார் நாசர். அப்போது அவரை ஒரு கும்பல் கொல்ல திட்டமிடுகிறது.

அதில் இருந்து நாசர் தப்பித்தாலும் சுய நினைவை இழக்கிறார்.

அப்போது 6 மாதத்திற்குள் இடைத் தேர்தல் வர, அதில் பல தடைகளை தாண்டி வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகிறார் விஜய் தேவரகொண்டா.

அப்போது நாசருக்கு சுய நினைவு வந்தாலும் அதை தன் கட்சியிடமே மறைத்து பதவி ஏற்கிறார்.

மேலும் சில ஆளுங்கட்சி எம்எல்ஏ மீதே நடவடிக்கைகள் எடுக்கிறார்.

இதனால் நாசருக்கும் விஜய்க்கும் மோதல் உருவாக, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

இதை எல்லாம் மீறி விஜய் நல்லது செய்தாரா? ஆட்சி என்ன ஆனது? நாசர் என்ன செய்தார்..? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

இளைய முதல்வராக விஜய் தேவரகொண்டா. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் முதல்வர் ஆகிறார். ஆனால் அதில் ஏமாற்றமே.. ரசிகர்களுக்கும்தான்.

மெஹ்ரீன், சஞ்சனா என 2 ஹீரோயின்ஸ் இருந்தும் படத்தில் ரொமான்ஸும் இல்லை.

சஞ்சனாவை ஆரம்பத்தில் கனிமொழி ரேஞ்சில் காண்பித்து அவரையும் டம்மியாக்கி விட்டார்கள்.

யாசிகா ஆனந்த் ஒரு காட்சியிலும் கருணாகரன் ஓரிரு காட்சியிலும் வருகிறார்கள். அவ்வளவுதான்.

பக்கா அரசியல்வாதியாக நாசர் அருமை. தனக்கான கேரக்டரில் நிறைவை தருகிறார். ப்ளாஷ்பேக் தவிர.

சத்யராஜ் கேரக்டரில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். ஜஸ்ட் அட்வைஸ் மட்டும் செய்கிறார். அமைதிப்படை-யில் அல்வா கொடுத்தவருக்கு இப்படி ஒரு அவலநிலையா..?

எம்எஸ். பாஸ்கரின் கேரக்டர் கட்சியின் அடிமட்ட தொண்டர்களை நினைவு படுத்தும். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் முன்னேற முடியாது என்பது போல திமுக. வை நினைவுப்படுத்துகிறார்.

இதில் சத்யராஜுக்கு லவ் ப்ளாஷ்பேக் வேற. அதில் நாசருக்கும். ஆனால் எடுபடவில்லை.

தமிழக அரசியலையும், ஜெயலலிதா, சசிகலா, கலைஞர், ஸ்டாலின், ஓபிஎஸ், எடப்பாடி ஆகியோரை சுற்றியே கதை நகர்கிறது.

கூவத்தூர், சென்னை வெள்ளம், ஸ்டிக்கர் ஒட்டுதல், ஜெயா மருத்துவமனையில் அனுமதி, ஆட்சி செயல்பாடு, ஊழல் இவற்றில் கவனம் செலுத்தி திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார் டைரக்டர் ஆனந்த் சங்கர்.

சாம் இசையில் பாடல்களும் ரசிக்கும்படியாக இல்லை. மினிஸ்டர் பாடல் ஓகே ரகம். பின்னணி இசையும் சுமார்தான்.

கட்சி ஆபிஸ், அமைச்சர்கள், தொண்டர்கள் என எப்படி எல்லாமோ கெத்து காட்டியிருக்க வேண்டிய படத்தை லோ பட்ஜெட்டில் எடுத்துள்ளார் ஞானவேல்ராஜா.

முதல்வர் வருகிறார் என்றால் நூற்றுக்கணக்கான பேனர்கள் இருக்க வேண்டாமா..? பெயருக்கு பேனர்களை காட்டுகிறார்கள்.

கலவர காட்சி, ஊழல், சாமியார், ஆற்றங்கரையில் சாமியார் ஆக்ரமிப்பு என கதையை எங்கெங்கோ கொண்டு செல்கிறார்.

முக்கியமாக நோட்டா என்றால் என்ன.? ஆட்சியாளர்கள் வேட்பாளர்கள் பிடிக்கவில்லை என்றால் மக்களுக்கு ஓட்டுப் போன பயன்படுத்தும் ஆயுதம்தானே.. ஆனால் அதை ஒரு காட்சியில் கூட காட்டவில்லை.

நோட்டா… சாரி சி.எம். டாட்டா…

More Articles
Follows