ரஜினி-கமல்-அஜித்-சூர்யா வரிசையில் விஜய் இணைவாரா?

ரஜினி-கமல்-அஜித்-சூர்யா வரிசையில் விஜய் இணைவாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Theriதசாவதாரம் படத்தில் 10 வேடங்களிலும், மைக்கேல் மதன காமராஜ், படத்தில் 4 வேடங்களில் கமல்ஹாசன் நடித்திருந்தார்.

இதற்கு முன்பு நம் தமிழ் சினிமாவை சேர்ந்த மற்ற நடிகர்கள் (சிவாஜி கணேசன் தவிர) அதிகபட்சமாக 3 வேடங்களில் மட்டுமே நடித்துள்ளனர்.

மூன்று முகம் மற்றும் கோச்சடையான் ஆகிய படங்களில் ரஜினி 3 வேடங்களில் நடித்திருந்தார்.

இவரை தொடர்ந்து 3 வேடங்களில் நடித்துள்ளவர்கள்…

  • அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல்
  • வில்லாதி வில்லன் படத்தில் சத்யராஜ்
  • சிம்மாசனம் படத்தில் விஜயகாந்த்,
  • நம்ம அண்ணாச்சி படத்தில் சரத்குமார்
  • வரலாறு படத்தில் அஜித்
  • 24 படத்தில் சூர்யா ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் அட்லி இயக்கும் படத்தில் தற்போது வீஜய் நடித்து வருகிறார்.

இப்படத்தில் விஜய்யும் 3 வேடத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஒருவேளை இது உறுதியானால் 3 வேடங்கள் வரிசையில் விஜய்யும் இணைந்துவிடுவார்.

Will Vijay join in series of Triple role characters

மாணவர்களுக்கு சிவகார்த்திகேயன் அட்வைஸ்

மாணவர்களுக்கு சிவகார்த்திகேயன் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல மார்கெட் இருந்து வருகிறது.

அதிலும் பெண் ரசிகைகள் இவரை அன்புடன் அண்ணா என்று பாசத்துடன் அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள +2 மாணவர்கள் தங்கள் பொதுத் தேர்வை எழுத உள்ளனர்.

எனவே அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

மேலும் ஆரோக்கியமாக இருங்கள். தேர்வை தைரியத்துடன் எதிர்கொள்ளுங்கள் என்று ஆலோசனையும் கொடுத்து, தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Sivakarthikeyan‏Verified account @Siva_Kartikeyan 10m10 minutes ago
Best wishes to all my brothers and sisters on their 12th std exams.. Stay healthy,Be confident and do well

Sivakarthikeyan advice to Students

வித்தியாசமான படத்தில் அறிமுகமாகும் ‘டப்ஸ்மாஷ்’ மிருணாளினி

வித்தியாசமான படத்தில் அறிமுகமாகும் ‘டப்ஸ்மாஷ்’ மிருணாளினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nagal mirlaniசினிமாவில் நமக்கு சான்ஸ் கிடைக்காத என்று லட்சணக்கான இளைஞர்கள் காத்திருக்கிறார்கள்.

ஆனால் ஒரு சிலர் மட்டுமே சினிமா சான்ஸையே தன்னை தேடி வர வைப்பார்கள்.

அப்படியொரு பெண்தான் ‘டப்ஸ்மாஷ்’ புகழ் மிருணாளினி.

‘டப்ஸ்மாஷ்’இல் தன்னுடைய அழகான முகபாவனைகளை பதிவு செய்து, இணையங்களில் ஒரு ரசிகர் வட்டத்தையே உருவாக்கி வைத்திருக்கும் இவர் தற்போது சினிமாவில் அறிமுகமாகிறார்.

அதுவும் இதுவொரு வித்தியாசமான படம்.

நகல் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஒரே ஒரு கேரக்டர்தானாம். அந்த கேரக்டரில்தான் இந்த மிருணாளினி நடிக்கிறார்.

இயக்குநர்கள் சசி மற்றும் சுசீந்திரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் எஸ் குமார் இப்படத்தை இயக்குகிறார்.

‘கரிஸ்மாட்டிக் கிரியேஷன்ஸ்’ சார்பில் தயாரிக்கிறார் மணிகண்டன் சிவதாஸ்.

இதுகுறித்து இயக்குனர் கூறியதாவது…

“நகல் படத்தில் ஒரே ஒரு பெண் கதாபாத்திரம் மட்டும் தான். அதனால் எங்கள் படத்தின் கதாநாயகியை தேர்வு செய்யும் பணி எங்களுக்கு சற்று சவாலாகவே இருந்தது.

தன்னுடைய பாவனைகளால் இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் தர கூடிய ஒரு நடிகை தான் எங்கள் படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு, நாங்கள் மிருணாளினியை தேர்வு செய்தோம்.

குறுகிய காலத்தில், தன்னுடைய டப்ஸ்மாஷ் காணொளிகளால், தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை சமுகவலைத்தளங்களில் உருவாக்கி இருக்கிறார் மிருணாளினி.

நகல் படத்தின் கதையை கேட்ட அடுத்த கணமே அவர் எங்கள் படத்தில் நடிக்க ஒப்பு கொண்டார். ஒரு பெண்ணின் அமானுஷிய அனுபவங்களை மையமாக கொண்டு தான் எங்களின் ‘நகல்’ படத்தின் கதை நகரும்” என்றார்.

Dubsmash fame Mirnalini plays the female lead in single characterized film

விஜய்யின் ‘பைரவா’ நஷ்டம்… கோவை விநியோகஸ்தர் புலம்பல்

விஜய்யின் ‘பைரவா’ நஷ்டம்… கோவை விநியோகஸ்தர் புலம்பல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bairavaa stillsபரதன் இயக்கத்தில் விஜய் நடித்த பைரவா படம் கடந்த பொங்கலுக்கு வெளியானது.

படம் வரவேற்பை பெற்ற போதிலும் அப்போது நடந்த ஜல்லிக்கட்டு பிரச்சனை காரணமாக சில இடங்களில் எதிர்ப்பார்த்த வசூலை தரவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கோயமுத்தூர் விநியோகஸ்தர் ஒருவர் பைரவா படத்தால் தனக்கு ரூ 1.70 கோடி வரை எனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதை நான் யாரிடம் சென்று முறையிடுவது என புலம்பி வருகிறார்.

‘நான் வரி கட்டுகிறேன்; நாட்டை விட்டு ஓடமாட்டேன்…’ குஷ்பூ

‘நான் வரி கட்டுகிறேன்; நாட்டை விட்டு ஓடமாட்டேன்…’ குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress khushbooசினிமா, டிவி நிகழ்ச்சிகள், அரசியல் என அனைத்திலும் வெற்றி பவனி வருபவர் நடிகை குஷ்பூ.

இவரது பாஸ்போர்ட் வரும் 2022ஆம் ஆண்டு வரை செல்லுபடியாகும்.

இந்நிலையில், அதில் புதிதாக ஸ்டாம்ப் ஒட்ட புதிதாக சில பக்கங்களை இணைக்க வேண்டி, பாஸ்போர்ட் அலுவலக அதிகாரியை அணுகியுள்ளார்.

ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது குஷ்பு மீது சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அந்த அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் குஷ்பு வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘இது குறித்து கீழ் நீதிமன்றத்தை அணுகுமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

இதுகுறித்து குஷ்பூ கூறியதாவது…

‘நான் இந்தியாவில் வசிக்கிறேன். என் குழந்தைகள் இங்கு தான் படிக்கிறார்கள்.

அவர்களை விட்டு நான் ஓடமாட்டேன்.

25 ஆண்டுகளாக நம் நாட்டில் வரி செலுத்தி வருகிறேன்.

இந்த பிரச்சனைக்கு பின்னால் அரசியல் சதி இருக்கிறது” என்றார்.

மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த்-சத்யராஜ் வாழ்த்து

மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த்-சத்யராஜ் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth MK Stalinதிமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 65வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

தன்னுடைய பிறந்தநாளில் எந்தவிதமான ஆடம்பர செலவுகளை செய்ய வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டனர்.

ஸ்டாலினுக்கு திமுக தலைவர் கருணாநிதி மற்றும் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ் உள்ளிட்டோர் அலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை ஸ்டாலினுக்கு தெரிவித்துள்ளனர்.

More Articles
Follows