சாய் பல்லவியின் ரீல் தந்தை சிவாஜி மரணம்.; நடிகர் சங்கம் இரங்கல்

சாய் பல்லவியின் ரீல் தந்தை சிவாஜி மரணம்.; நடிகர் சங்கம் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரைப்படத்துறையில் பிரபலமாக இருந்த தயாரிப்பாளர் எம்.ஆர்.சந்தானத்தின் மகனும் இயக்குனர் சந்தான பாரதியின் சகோதரருமான ஆர்.எஸ்.சிவாஜி.

தன்னுடைய 66 வயதில் இன்று காலை உயிரிழந்தார்.

இவர் மது மலர், மீண்டும் ஒரு காதல் கதை, விக்ரம், அபூர்வ சகோதரர்கள், குணா, வியட்நாம் காலனி, பவித்ரா, வில்லன், அன்பே சிவம், கோலமாவு கோகிலா மற்றும் கார்கி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் முக்கிய வேடங்களிலும் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார்.

(சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘கார்கி’ படத்தில் சாய் பல்லவி தந்தையாக நடித்திருந்தார். இவர் தான் படத்தில் முக்கியமான கதாபாத்திரமாக அறியப்பட்டார்.

அதுபோல ‘கோலமாவு கோகிலா படத்தின் நயன்தாராவின் தந்தையாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.)

சின்னத்திரைகளில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.

இணையதள தொடரிலும் நடித்து வந்துள்ளார். தன்னுடைய எதார்த்தமான நேர்த்தியான நடிப்பினால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

நேற்று (01.09.23) மாலை நடந்த உலக சினிமா விழா துவக்க விழாவில் கலந்து கொண்ட அவர் திடீர் என இன்று உயிரிழந்துள்ளது ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அன்னாரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.

#தென்னிந்திய நடிகர் சங்கம்
தலைவர் M.நாசர்

நடிகர் சங்கம்

Nadigar Sangam condolence for late Actor RS Sivaji

ரஜினியின் ‘ஜெயிலர்’ பட ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு.; சன் நெக்ஸ்டில் இல்லையே.?!

ரஜினியின் ‘ஜெயிலர்’ பட ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு.; சன் நெக்ஸ்டில் இல்லையே.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியானது.

உலகளவில் ரூ. 625 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி செப்டம்பர் 7 தேதி ஜெயிலர் படம் அமேசான் ப்ரைம் தளத்தில் ரிலீஸ் ஆகிறது. பொதுவாகவே சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்கள் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகும்.

ஆனால் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு ரஜினி நடிப்பில் சிவா இயக்கிய ‘அண்ணாத்த’ படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்திருந்தது. அந்த படத்தை 21 நாட்களில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்திருந்தனர். தற்போது ‘ஜெய்லர்’ படம் ரிலீசாகி 28 நாட்களுக்குப் பின்னர் தான் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர்

Rajinis Jailer OTT release on 7th September 2023

3வது முறையாக கவுண்டமணியுடன் இணைவது குறித்து முத்துக்காளை மகிழ்ச்சி

3வது முறையாக கவுண்டமணியுடன் இணைவது குறித்து முத்துக்காளை மகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் முத்துகாளையை கவுண்டமணி, தாங்கள் இருவரும் இணைந்து நடித்த ‘என் உயிர் நீதானே’ படத்தின் காமெடி டையலாக்கை பேசி, ரசிச்சு, சிரிச்சு, பாராட்டினார்.

எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் பிரபு நடித்த ‘என் உயிர் நீதானே’, சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்திக் நடித்த ‘அழகான நாட்கள்’ படத்திற்கு பிறகு 22′ ஆண்டுகள் கழித்து, சாய் ராஜகோபால் இயக்கத்தில் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தில் அரசியல்வாதியான கவுண்டமணிக்கு உதவியாளராக நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பில், முத்துக்காளையை தன்னருகே அழைத்து, அனைவரிடமும் ‘என் உயிர் நீதானே’ படத்தின் காமெடி டையலாக்கை பேசி, பதில் டையலாக்கை அவரை பேச சொல்லி, ரசிச்சு சிரித்தார். படக்குழுவினர் அனைவரும் அவரோடு சிரித்து, மகிழ்ந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து நடிகர் முத்துக்காளை கூறும் போது…

கவுண்டமணி அண்ணனோடு நான் நடிக்கும் 3வது படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா’. நான் வளர்ந்து வரும் நேரத்தில் இவரோடு நடித்த ‘என் உயிர் நீதானே’ படத்தின் காமெடி தான் எனக்கு அடுத்தடுத்த படவாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்தது.

தற்போது லக்கி, ஷூ கீப்பர் , முனியாண்டியின் முனிப்பாய்ச்சல், பாதகன், கோட்டை முனி, தொடு விரல், அடி ஆத்தி, உதிர், கில்லி மாப்பிள்ளை, ஸ்ரீ சபரி ஐயப்பன், சாஸ்தா, அதையும் தாண்டி புனிதமானது என பல படங்களில் நடித்து வருகிறேன்.

கவுண்டமணி அண்ணனோடு நடித்துவரும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ எனக்கு பெரும் பேரு வாங்கி தரும் என மகிழ்ச்சியோடு தெரிவித்தார் முத்துக்காளை.

3rd time Muthukalai join hands with Goundamani

RECORD MAKER ‘ஜெயிலர்’ படத்திற்காக ரூ 211.5 கோடியை சம்பளமாக பெற்ற ரஜினி

RECORD MAKER ‘ஜெயிலர்’ படத்திற்காக ரூ 211.5 கோடியை சம்பளமாக பெற்ற ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மூன்று வாரங்களுக்கு முன் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் பல்வேறு ரெக்கார்டுகளை தமிழ் சினிமாவிலும் தென்னிந்திய சினிமாவிலும் படைத்து வருகிறது.

ரஜினி பட வசூலை குறைவாக காட்ட பலர் சதி வேலைகளில் ஈடுபட்ட வந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனமே ஜெயிலர் படத்தின் வசூலை முறைப்படியாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது.

உலகளவில் ரூபாய் 625+ கோடிக்கு மேல் ‘ஜெயிலர்’ படம் வசூலித்து வரும் நிலையில் உற்சாகத்தில் உள்ள தயாரிப்பாளர் கலாநிதிமாறன் நடிகர் ரஜினிக்கும் இயக்குனர் நெல்சனுக்கும் காஸ்ட்லியான காரை பரிசளித்துள்ளார்.

மேலும் ரஜினிக்கும் வழங்கப்பட்ட காசோலையில் தொகை எவ்வளவு என்பதே பல்வேறு ரசிகர்களின் கேள்வியாக இருந்த நிலையில் இது குறித்த தகவல்கள் வந்துள்ளன.

ஏற்கனவே ரஜினிக்கு ரூ 110 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் லாபத்தில் ரஜினிகாந்த் பங்கு கேட்டு இருந்தாராம்.

அதன்படி தற்போது ரூ.100 கோடி காசோலை அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ரஜினிக்கு வழங்கப்பட்ட பி எம் டபிள்யூ எக்ஸ் 7 கார் கிட்டத்தட்ட 1.5 கோடி எனவும் கூறப்படுகிறது.

ஆக மொத்தம் ரூபாய் 211.5 கோடியை ரஜினிகாந்த் சம்பளமாக பெற்றுள்ளார் என தெரியவந்துள்ளது.

இதன்படி ஒரு படத்திற்கு 200 கோடியை சம்பளமாக பெற்ற முதல் இந்திய நடிகர் ரஜினிகாந்த் என்ற பெருமையை பெறுகிறார்.

ரஜினிகாந்த் படம் மட்டுமல்ல அவரது சம்பளமும் தான் ஒரு ரெக்கார்டு மேக்கர் சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்துள்ளது.

Rajini became the highest paid actor in India

Maran also gave him a profit-sharing cheque worth Rs 100 crore from City Union Bank.

தியேட்டர்ல விஜய் ரசிகர் ஆடி பாத்து இருப்பீங்க.; ஆனா விஜய்யே ரசிகராக மாறிய தருணம் தெரியுமா.?

தியேட்டர்ல விஜய் ரசிகர் ஆடி பாத்து இருப்பீங்க.; ஆனா விஜய்யே ரசிகராக மாறிய தருணம் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘லியோ’ படத்தை அடுத்து ‘தளபதி 68’ படத்தில் நடிக்க உள்ளார் விஜய். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் இசையமைக்க வெங்கட் பிரபு இயக்க உள்ளார்.

இந்தப் படத்தில் அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடிக்க உள்ளார். அப்பா விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவும் மகன் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகனும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் டெஸ்ட் ஷூட்டுக்காக சமீபத்தில் விஜய் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் அமெரிக்கா சென்றிருந்தனர்.

இந்த நிலையில் அங்கு உள்ள பிரபல தியேட்டரில் ‘ஈக்யுலைசர் 3’ என்ற படத்தை பார்த்துள்ளனர்.

அதில் டென்சில் வாசிங்டன் திரையில் தோன்றிய போது விஜய் ஒரு ரசிகராகவே மாறிவிட்டார். அப்போது விஜய் எழுந்து நின்று கைதட்டிய போட்டோவை இணையத்தில் பகிர்ந்து உள்ளார் வெங்கட் பிரபு.

இது தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

Actor Vijays fan boy moment at America

JUST IN ‘தெய்வமே எங்கேயோ போய்ட்டீங்க..’ நயன்தாராவின் ரீல் தந்தை ஆர்.எஸ்.சிவாஜி மரணம்

JUST IN ‘தெய்வமே எங்கேயோ போய்ட்டீங்க..’ நயன்தாராவின் ரீல் தந்தை ஆர்.எஸ்.சிவாஜி மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகர் ஆர் எஸ் சிவாஜி.

மூன்று வேடங்களில் கமல் நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் இவர் பேசிய வசனம் இன்றளவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.

ஜனகராஜ் உடன் இவர் இணைந்து..”தெய்வமே எங்கேயோ போயிட்டீங்க.. என்ற வசனத்தை இவர் பேசுவார். அது ரசிகர்கள் மத்தியில் பிரபலமான வசனமாகும். மேலும் ‘மைக்கேல் மதன காமராஜன்’ உள்ளிட்ட பல கமல் படங்களில் இவர் நடித்துள்ளார்.

2003 ஆம் ஆண்டு வெளியான பரமசிவன், வெள்ளை வானவில், ஆய்த எழுத்து மற்றும் அன்புதான் கடவுள் போன்ற பல தமிழ் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நெல்சனின் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவின் தந்தையாக நடித்திருந்தார் ஆர் எஸ் சிவாஜி.

நேற்று செப்டம்பர் 1 தேதி வெளியான யோகி பாபுவின் ‘லக்கிமேன்’ என்ற படத்திலும் இவர் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இவர் இன்று செப்டம்பர் 2ம் தேதி உடல்நல குறைவால் காலமானார்.

01-09-2023 நேற்று மாலை சென்னை தேவி கருமாரி தியேட்டரில் நடந்த உலக சினிமா விழா துவக்க விழாவில் நடிகர் ராஜேஷ், நடிகை ஷீலா ராஜ்குமார், இயக்குநர் ராசி அழகப்பன் உள்ளிட்டோருடன் நடிகர் ஆர் எஸ் சிவாஜியும் கலந்து கொண்டார். அவர் கலந்துக் கொண்ட கடைசி நிகழ்வு அதுவாகத்தான் இருக்கும்.

கூடுதல் தகவல்கள்..

இவர் 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி பிறந்தார். இவர் ப்ரொடியூசர் மற்றும் நடிகருமான சந்தானம் அவர்களின் மகன் ஆவார்.

திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, உதவி இயக்குனர் என பல்வேறு பணிகளையும் செய்துள்ளார். இவர் பி.ஏ. சைக்காலஜி படித்துள்ளார்.

Legendary Actor RS Sivaji passes away

More Articles
Follows