‘கேங்ஸ்’ படத்திற்காக ரஜினி மகளுடன் இணையும் நடிகர் அசோக் செல்வன்

‘கேங்ஸ்’ படத்திற்காக ரஜினி மகளுடன் இணையும் நடிகர் அசோக் செல்வன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக 40 வருடங்களாக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் என்னதான் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தாலும் தன் மகள்களை நடிப்பு துறையில் இறக்கி விடவில்லை.

மாறாக ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ஆகிய இருவரையும் இயக்குனர்களாக இயங்க அனுமதித்துள்ளார்.

மூத்த மகள் ஐஸ்வர்யா ‘3’ & ‘வை ராஜா வை’ உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார். தற்போது ரஜினி நடிப்பில் உருவாகும் ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார்.

கேங்ஸ்

ரஜினியின் 2வது மகள் சௌந்தர்யா அவர்கள் ரஜினி நடித்த ‘கோச்சடையான்’ மற்றும் தனுஷ் நடித்த ‘விஐபி 2’ ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது அமேசான் பிரைம் நிறுவனத்துடன் இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

இதில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்க நோவா ஆபிரஹாம் இயக்குகிறார்.

இத்தொடருக்கு ‘கேங்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளனர். இதன் படப்பிடிப்புடன் பூஜையுடன் தொடங்கியது.

கேங்ஸ்

Soundarya Rajini and Ashok Selvan teamsup for GANGS

இப்படி செஞ்சா நல்ல படங்கள் மக்களை எப்படி சேரும்..? சேரன் ஆதங்க பதிவு

இப்படி செஞ்சா நல்ல படங்கள் மக்களை எப்படி சேரும்..? சேரன் ஆதங்க பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சேரன் நடிப்பில் இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ள திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’.

இந்த படத்தில் ஸ்ரீ பிரியங்கா, வேலராமமூர்த்தி, லால், அருள்தாஸ், தீப்ஷிகா, சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.்இந்த படம் நாளை செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் நடிகர் சேரன் இந்த படத்தின் வெளியீடு குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்…

திரையரங்க உரிமையாளர்களுக்கு இயக்குனர்/நடிகர் சேரன் வேண்டுகோள்:*

தமிழ்க்குடிமகன் –
நல்ல திரைப்படம் என பார்த்த நண்பர்கள் பாராட்டுகிறார்கள்.. பத்திரிக்கைகளில் 3.5/5, 3/5 என படத்தின் ரேட்டிங் கொடுக்கிறார்கள்..

நீண்ட நாட்களுக்கு பின் அனைவரும் கதை ரீதியாக பாராட்டும் படமாக இருக்கிறது. ஆனால் இந்த திரைப்படம் வெளியிட திரையரங்குகளும் காட்சிகளும் குறைவாகவே கிடைக்கிறது..

பிறகு எப்படி சிறந்த படங்கள் மக்களுக்கு சென்றடையும்.. எனவே திரையரங்க உரிமையாளர்கள் சிறந்த நல்ல வரவேற்பு இருக்கும் திரைப்படங்களுக்கும் காட்சிகள் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சிறிய தயாரிப்பாளர்களும் நல்ல திரைப்படங்களும் மக்களிடம் செல்ல வழி செய்யுங்கள்.

How Good Tamil movies will reach public Cheran

காலை 6 மணி முதல் ‘ஜவான்’ ஆட்டம் ஆரம்பம்..; ஷாருக்கான் ரசிகர்கள் ஜாலி

காலை 6 மணி முதல் ‘ஜவான்’ ஆட்டம் ஆரம்பம்..; ஷாருக்கான் ரசிகர்கள் ஜாலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை மும்பையில் ரசிகர்கள் பட்டாசு, மத்தளங்களுடன் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

‘ஜவான்’ திரைப்படம் வசூல் ரீதியான வெற்றி படம் என பார்வையாளர்கள் விமர்சனம்!

காலை 6 மணிக்கு தொடங்கிய சிறப்புக் காட்சிகள் பார்வையாளர்களால் பெரிய கொண்டாட்டங்களாக மாறியது.

தேசம் முழுவதும் ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படத்தின் வெளியீட்டை பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தது.

இந்த திரைப்படம் இறுதியாக இன்று முதல் திரையிடப்பட்டிருக்கிறது. திரையரங்குகளை மைதானமாக மாற்றியிருக்கும் ஜவானின் அதிர்வலை… அடுத்தடுத்த திரையரங்குகளில் நன்றாகவே தெரிகிறது.

ஆக்சன் என்டர்டெய்னருக்கான ரசிகர்கள் மும்பையில் உள்ள புகழ்பெற்ற கெயிட்டி- கேலக்ஸி திரையரங்கம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் வெளியிடப்பட்ட திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் நன்றாகவே காணப்படுகிறது.

அங்கும் அதிகாலை காட்சிக்கு ஏராளமான பார்வையாளர்கள் வருகை தந்தனர்.

மும்பையில் உள்ள கெயிட்டி -கேலக்ஸி திரையரங்கிலும்.. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள மற்ற திரையரங்குகளிலும் அதிகாலை ஆறு மணிக்கு திரையிடப்பட்ட ‘ஜவான்’ சிறப்பு காட்சிக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.

‘ஜவான்’ திரைப்பட வெளியீட்டைக் கொண்டாடும் வகையில் ரசிகர்கள் பெரிய அளவில் தங்களின் செல்போன் ஒளியை ஒளிர விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வருகை தந்திருந்த கூட்டத்தினர் ஷாருக்கான் மற்றும் ஜவான் படத்தை பாராட்டினர்.

மேலும் அந்த திரையரங்கத்திற்கு வெளியே மிகப் பெரிய அளவில் கட்-அவுட் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. இப்போது முதல் தொடங்கியிருக்கும் ஜவானின் மாயாஜாலத்தை இது எடுத்துக்காட்டுகிறது. ஒரு படத்திற்காக இப்படி ஒரு செயலை.. ரசிகர்கள் செய்வது இதுவே முதல்முறை.

மேலும் திரையரங்கிலிருந்து காட்சிகளை பகிரும் போது ரசிகர்கள் சமூக ஊடகங்களையும் புயல் போல் தாக்கினர்.

https://www.instagram.com/reel/Cw3z5b8IouG/?igshid=MzRlODBiNWFlZA==

https://www.instagram.com/reel/Cw30aZSo3w8/?igshid=MzRlODBiNWFlZA==

https://x.com/srkuniverse/status/1699571173204303977?s=46&t=5RIwNRycJ8MV9YSxIBI6Fg

https://twitter.com/TeamSRKWarriors/status/1699591230068568484?t=bpio2AhHe-6JO3SUGQy5Hw&s=19

ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார்.

கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இன்று முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

ஜவான்

Fever Grips Mumbais Gaiety Theatre As SRK Fans Celebrates Jawan FDFS

சூர்யா சீன்களில் விஷால் மறந்து கைதட்டிடுவார்… – ஆதிக் ரவிச்சந்திரன்

சூர்யா சீன்களில் விஷால் மறந்து கைதட்டிடுவார்… – ஆதிக் ரவிச்சந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா, ரித்து வர்மா, அபிநயா நடித்துள்ள படம் ‘மார்க் ஆண்டனி’.

வினோத் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசும்போது…

“நான் பழைய ஆதிக் ரவிச்சந்திரன் அல்ல.. இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா பேசுகின்ற “எல்லாத்தையும் மாத்தி மறந்து மாறி வந்திருக்கேன்” என்கிற வசனம் எனக்கே பொருந்துகிற வசனம் தான். படத்தில் மோதலே கிடையாது.

ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்கும்.. அதை அடைய ஓடிக்கொண்டிருக்கும்போது ஏற்படும் சலசலப்பு தான் கதை. இதில் மையப்புள்ளியாக ஒரு தொலைபேசி இருக்கிறது.

இந்த படப்பிடிப்பில் விஷால் தனது கதாபாத்திரத்திற்கான மேக்கப்புடன் கேரவனில் இருந்து இறங்கியபோது கிட்டத்தட்ட அங்கே கூடியிருந்த 500 பேரும் கைதட்டி வரவேற்றபோதே எங்களுக்கு படம் வெற்றி பெறும் என பாதி திருப்தி கிடைத்துவிட்டது. எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் பெரும்பாலான காட்சிகளில் விஷால் தன்னை மறந்து கைதட்டி விடுவார். கேட்டால் அருமையாக இருந்தது இன்னொரு டேக் எடு என்று கூறி விடுவார்” என்றார்.

Surya acting scenes and Vishal reactions in Mark Antony

நாங்க நடிக்க ஓடிவர்றோம்… ஆனால் விஷால் ஓடிப்போறார் – எஸ்.ஜே. சூர்யா

நாங்க நடிக்க ஓடிவர்றோம்… ஆனால் விஷால் ஓடிப்போறார் – எஸ்.ஜே. சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா, ரித்து வர்மா, அபிநயா நடித்துள்ள படம் ‘மார்க் ஆண்டனி’.

வினோத் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற நடிகர் எஸ்.ஜே சூர்யா பேசும்போது…

“பேச்சுலர்களாக சேர்ந்து ஒரு பேமிலி படத்தை எடுத்துள்ளோம். கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கிக் கொண்டிருக்கும்போது நாங்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தோம்.

எங்களை நோக்கி வேகமாக வந்த லாரி டிரைவர் பிரேக் பிடிக்க தவறிவிட்டார். அதை நான் கவனித்து விட்டேன். விஷால் அதை கவனிக்கவில்லை. ஆனால் படக்குழுவினர் இதைக்கண்டு அதிர்ச்சியில் கூச்சலிட்டதால் பயந்துபோன டிரைவர் பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்து இயக்குநர் அமர்ந்திருந்த பக்கம் வண்டியை திருப்பி விட்டார்.

நல்லவேளையாக அனைவரும் வேறு பக்கம் குதித்து தப்பித்தனர். எல்லோருமே நடிக்க ஆசைப்பட்டு ஓடிவந்து கொண்டு இருக்கிறோம்.. ஆனால் விஷாலோ நடிப்பை விட்டு டைரக்ஷன் பக்கம் போக ஆசைப்படுகிறார்” என்றார்.

We like to act but Vishal wish to direct movie says Sj Surya

‘லியோ’ படத்துல நடிக்க சான்ஸ்.. லோகேஷ் நீ அதிர்ஷ்டக்காரன்ய்யா – விஷால்

‘லியோ’ படத்துல நடிக்க சான்ஸ்.. லோகேஷ் நீ அதிர்ஷ்டக்காரன்ய்யா – விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா, ரித்து வர்மா, அபிநயா நடித்துள்ள படம் ‘மார்க் ஆண்டனி’.

வினோத் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற விஷால் பேசும்போது..

“கடவுள் விஷயத்தில் ஒருபோதும் விளையாடக் கூடாது. படப்பிடிப்பு நடத்தும்போது அதற்கான நெறிமுறையை கடைபிடித்து செய்ய வேண்டும்.

இந்த படத்தில் கருப்பண்ணசாமி சிலை முன்பாக ஒரு பக்கம் பெண்கள் நடனம் ஆடிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் சண்டைக்காட்சியும் படமாக்கப்பட்டது. இந்த படத்திற்காக கருப்பண்ணசாமியின் முகத்தை பெயிண்டர் வரைந்து முடிக்கும் முன்பே கீழே விழுந்து விட்டார்.

அதேபோல முதல் நாள், அடுத்த நாள் என படப்பிடிப்பை தொடங்கியதுமே மழை இடைவிடாமல் பெய்ததால் படப்பிடிப்பை ரத்து செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பிறகு கருப்பண்ணசாமிக்கு செய்ய வேண்டிய சுருட்டு, சாராயம், கறிசோறு என படையல் வைத்து அவரை வழிபட்டு விட்டு படப்பிடிப்பை நடத்தினோம்.

படப்பிடிப்பின் ஐந்தாவது நாளன்று சாப்பாட்டில் ஒரு ரோமம் கிடக்கிறது என்று நிர்வாகி வந்து சொன்னபோது எனக்கு ஏற்பட்ட கோபத்தில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

ஐந்து நிமிடம் கழித்து உணர்வு வந்தபோது அங்கிருந்த அனைவருமே என்னை வித்தியாசமாக பார்த்தனர். இயக்குனர் ஆதிக்கிடம் கேட்டபோது “அதை விடுங்க.. அந்த நேரத்தில் நீங்க நீங்களாவே இல்லை” என்று கூறியபோது எனக்கு சிலிர்த்தது. சண்டக்கோழி படத்தில் நடித்தபோது ராஜ்கிரண் சாருக்கு கூட அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டதை பார்த்துள்ளேன்.

ஒவ்வொரு படத்திலும் எனக்கு ஒரு அனுபவம் கிடைக்கும். ஆனால் 20 வருடம் கழித்து என்னை வியப்பில் ஆழ்த்திய நிகழ்வு இந்த படத்தில் நடந்தது.

நானும் நடிகர் சுனிலும் நடிக்கும் ஒரு காட்சியில் எனக்கு ஒரே வார்த்தை வசனம் மட்டும் தான். ஆனால் அவருக்கு நான்கு பக்க வசனம். அதை அவர் கோபம், கெஞ்சல், வருத்தம் ஆக்ரோஷம் என வெவ்வேறு விதமான முகபாவங்களுடன் நடித்துக் கொண்டிருந்தபோது என்னை அறியாமல் பிரமித்து போய் விட்டேன். அந்த காட்சி முடிந்ததும் அவரை கட்டிப்பிடித்து பாராட்டினேன்.

இந்த படத்தில் அவரது நடிப்பு, பின்னால் நடிக்க வரும் நடிகர்களுக்கு நிச்சயம் நிறைய விஷயங்களை கற்றுத் தரும். கூத்துப்பட்டறை மூலம் நடிகனாக வந்தவன் என்கிற முறையில் சொல்கிறேன்.

அதுமட்டுமல்ல எஸ்.ஜே சூர்யாவுக்கும் ஒவ்வொரு காட்சியிலும் நன்றாக டெம்போ ஏற்றுங்கள். அவரும் ஸ்கோர் பண்ண வேண்டாமா எனக் கூறி அவருக்கான காட்சிகளையும் சுவாரஸ்யப்படுத்தியுள்ளோம். எஸ்.ஜே சூர்யாவுடன் நடிக்கும்போது அவரிடம் இருந்து நிறைய பாடங்களை இலவசமாக கற்றுக்கொண்டேன்.

நான் கல்லூரியில் படித்த சமயத்தில் ஹாஸ்டல் தேர்தலுக்காக என்னக்கு சீனியரான எஸ்.ஜே.சூர்யாவை சந்தித்தபோது பார்த்த அதே கண்பார்வை, இத்தனை வருடங்களில் எத்தனை பிரச்சனைகளை அவர் சந்தித்திருந்தாலும் இப்போதும் அவரிடம் இருந்து மாறவில்லை. நானும் அதுபோல மனவலிமை கொண்டவன் தான்..

ஒரு நடிகருக்கோ நடிகைக்கோ மனநலம் என்பது முக்கியம்.. தேவைப்பட்டால் ஒரு மனநல மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். அதற்காக அவரை பைத்தியம் என யாரும் நினைக்கக் கூடாது.

ஆதிக்கின் நிஜமான சினிமா பயணம் வரும் செப்டம்பர் 15ல் இருந்து தான் துவங்கப் போகிறது. இதற்கு முன் அவர் பண்ணியது எல்லாம் சினிமாவில் நிலைத்து நிற்க நடத்திய போராட்டம் மட்டுமே. அனேகமாக ஆதிக்கிற்கு இந்த வருடம் எப்படியும் திருமணம் முடிந்து விடும் என நினைக்கிறேன்..

படத்தின் ரிலீஸ் தேதியை ஒன்றரை மாதத்திற்கு முன்பே தீர்மானித்து விட்டோம். விளையாட்டு போட்டி என்று இருந்தால் நிறைய வீரர்கள் இருந்தால் தான் சுவாரசியம். களத்தில் எந்த படம் இறங்கினாலும் போட்டியை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். ஹிந்தியில் மட்டும் ஜவான் படம் ரிலீஸ் என்பதால் ஒரு வாரம் தள்ளி செப்டம்பர் 22-ல் ரிலீஸ் செய்கிறோம்.

விருதுகளில் எனக்கு எப்போதும் உடன்பாடு இருந்தது இல்லை. எனக்கு விருது கொடுத்தால் கூட அதை பெரிதாக நினைக்க மாட்டேன். நடுவர் குழு என பத்து பேர் படம் பார்த்து கருத்து சொல்கிறார்கள் என்றால் அது அவர்கள் கருத்து மட்டும்தான்..

ஒட்டுமொத்த மக்களின் கருத்தல்ல. நான் இந்த 19 வருடமாக திரையுலகில் இருக்கிறேன் என்றால் இதுதான் எனக்கு கிடைத்த விருது. ரசிகர்கள் தான் நல்ல நடிகர் யார் என்பதை தீர்மானிக்க வேண்டும்.

லியோ படத்தில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. ஆனால் நான் ஒரே நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பவன் என்பதால் என்னால் லியோ படத்திற்காக கால்சீட் ஒதுக்க முடியவில்லை.

அப்போது லோகேஷிடம் நீ அதிர்ஷ்டக்காரன்.. உனக்கு மீண்டும் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது பயன்படுத்திக் கொள்.. நானும் அடுத்ததாக விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க தயாராகி வருகிறேன் என்றேன்.

அரசியலுக்கு நேரடியாக வந்து தான் நல்லது செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதேசமயம் மக்களிடம் சென்று நியாயமாக கோரிக்கை வைத்து தேர்தலிலும் போட்டியிடலாம். ஆனால் அதை நான் விரும்பவில்லை. அதற்காக தேர்தல் குறித்து பயமும் இல்லை. 2006ல் நான் நடிக்க வந்த புதிதில் நடிகர் ராதாரவி ஒருநாள் என்னை அழைத்து நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்துவிடு என பணம் கட்டி சேர வைத்தார்.

ஆனால் பின்னாளில் அவரையே நடிகர் சங்க தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்டு அவருடைய நாற்காலியிலேயே அமர்வேன் என்று அப்போது நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை” என்றார்

I got chance to act in Leo movie says Vishal

More Articles
Follows