பிரபல நடிகரை காதலிக்கும் நித்யாமேனன்.; திருமணம் எப்போது.?

பிரபல நடிகரை காதலிக்கும் நித்யாமேனன்.; திருமணம் எப்போது.?

அழகும் திறமையும் நிறைந்த நடிகைகள் ஒரு சிலர் மட்டுமே சினிமாவில் ஜெயித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பவர் நித்யா மேனன்.

இவர் விஜய் சூர்யா விக்ரம் துல்கர் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார்.

‘ஓ காதல் கண்மணி’, ‘24’, ‘இருமுகன்’, ‘மெர்சல்’, ‘சைக்கோ’, ‘முடிஞ்சா இவனப்படி’ போயிட்டு படங்களில் இவரது நடிப்பு பாராட்டைப் பெற்றது.

தற்போது தனுஷுடன் ’திருச்சிற்றம்பலம்’ படத்தில் 3 நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார்.

மலையாள நடிகையான இவர் மலையாளத்தில் நிறைய படங்கள் செய்துள்ளார்.

மலையாளத்தில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஆறாம் திருகல்பனா’.

தற்போது படத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது.

இந்த நிலையில் பிரபலமான கேரள ஹீரோ ஒருவரை நித்யா காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

விரைவில் இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.

எனவே விரைவில் நித்யா மேனனின் திருமண அழைப்பிதழை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

South indian Actress Nithya Menen is getting married soon?

மீண்டும் விஜய்சேதுபதி உடன் இணையும் சூர்யா.; வெற்றிமாறனுடன் கூட்டணி

மீண்டும் விஜய்சேதுபதி உடன் இணையும் சூர்யா.; வெற்றிமாறனுடன் கூட்டணி

இளையராஜா இசையில் ‘சூரி’ கதையின் நாயகனாக நடிக்க வெற்றிமாறன் இயக்கும் படம் ’விடுதலை’.

இதில் விஜய்சேதுபதி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

இவர்களுடன் பவானி ஸ்ரீ, கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஆர்.எஸ்.இன்போடெய்ன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ’துணைவன்’ கதையை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இதன் 4-வது கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்தது. இங்கு 400 பேர் தங்கி பணிபுரிந்தனர்.

விரைவில் 5ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா இந்தப் படத்தில் இணைகிறாராம்.

இவர் ஏற்கெனவே .விஜய்சேதுபதி, அஞ்சலி உடன் ‘சிந்துபாத்’ படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi & Suriya

Suriya to team up with Vijay Sethupathi again.;

மம்மூட்டிக்கு வில்லனாகும் விஷால் – சிவகார்த்திகேயன் பட நடிகர்

மம்மூட்டிக்கு வில்லனாகும் விஷால் – சிவகார்த்திகேயன் பட நடிகர்

உதய் கிருஷ்ணா திரைக்கதையில் பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் மலையாள படத்தில் நடிக்கவுள்ளார் மம்முட்டி.

த்ரில்லர் பாணியில் உருவாகும் இதில் மம்முட்டி போலீஸாக நடிக்கிறார்.

இதில் மம்மூட்டியுடன் அமலாபால், ஸ்நேகா, ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் வில்லனாக தமிழ் நடிகர் வினய் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பல படங்களில் நாயகனாக நடித்த இவர் சமீபகாலமாக வில்லனாக நடித்து வருகிறார்.

இவர் ஏற்கெனவே ‘துப்பறிவாளன்’ படத்தில் விஷாலுக்கு வில்லனாகவும் ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகவும் நடித்திருந்தார்.

இந்த புதிய படம் மூலம் மலையாளத்தில் நடிகராக அறிமுகமாக உள்ளார் வினய் என்பது குறிப்பிடத்தக்கது.

thupparivaalan vinay

doctor vinay

Mammootty’s Villain Vishal – Sivakarthikeyan film actor

விஜய் படத்தை முடித்துவிட்டு பாலிவுட் செல்லும் லோகேஷ்.; ஹீரோ இவரா?

விஜய் படத்தை முடித்துவிட்டு பாலிவுட் செல்லும் லோகேஷ்.; ஹீரோ இவரா?

கமல்ஹாசன் தயாரித்து நடித்த ‘விக்ரம்’ படத்தை இயக்கியிருந்தார் லோகேஷ்.

இந்தப் படத்தின் இமாலய வெற்றி மூலம் இந்திய சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனராக உயர்ந்துள்ளார் ‘லோகேஷ் கனகராஜ்’.

இதனையடுத்து விரைவில் மீண்டும் நடிகர் விஜய்யுடன் இணைகிறார் லோகேஷ்.

தற்போது தற்காலிகமாக ‘விஜய் 67’ என இந்தப்படம் அழைக்கப்படுகிறது.

இதில் சமந்தா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவிருக்கிறாராம்.

கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இந்தப் படம் அக்டோபரில் தொடங்கும் என கூறப்படுகிறது.

இதனை முடித்துவிட்டு மைத்ரி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள ஒரு படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான பேச்சுவார்த்தை ஹைதராபாத்தில் ரகசியமாக நடைப்பெற்றதாம்.

ஏற்கனவே தமிழ் இயக்குனர் நடன இயக்குனர் பிரபுதேவா இயக்கிய படத்தில் சல்மான்கான் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல்…

விக்ரம் படத்தின் ‘அடுத்த பாகம்’ மற்றும் ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகம் ஆகிய படங்கள் லோகேஷ் இயக்கவுள்ள பட வரிசையில் நிலுவையில் உள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.
salman khan

Lokesh going to Bollywood after completing Vijay film.

கே.ஜி. எஃப் படம் பாணியில் ‘சியான் 61’.; விக்ரமுக்கு ஜோடியாக ‘வாரிசு’ நடிகை

கே.ஜி. எஃப் படம் பாணியில் ‘சியான் 61’.; விக்ரமுக்கு ஜோடியாக ‘வாரிசு’ நடிகை

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ படம் என்ன ஆனது? என்று விக்ரமுக்கு தெரியாத நிலையில் அவரது நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘கோப்ரா’ ஆகிய இரு படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.

அடுத்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் இந்த இரு படங்களும் வெளியாக உள்ளன.

இந்தப் படங்களைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் நடிகர் விக்ரம்.

தற்காலிகமாக ‘சியான் 61’ என்று பெயரிட்டுள்ளனர்

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

“இந்த படம் 19-ம் நூற்றாண்டில் கே.ஜி.எஃப்-பில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது. அந்த மக்களின் வாழ்க்கையை பேசும் படமாக இருக்கும்” என ரஞ்சித் தெரிவித்து இருந்தார்

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக ‘ராஷ்மிகா மந்தனா’ நடிக்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

தமிழில் கார்த்தி நடித்த ‘சுல்தான்’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார் ‘ராஷ்மிகா’.

தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ படத்திலும் ‘ராஷ்மிகா’ நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சியான் 61

KGF movie style ‘Chiyaan61’.; ‘Varisu’ actress opposite Vikram

‘வலிமை’ பட இயக்குனரின் பாராட்டைப் பெற்ற ‘துரிதம்’

‘வலிமை’ பட இயக்குனரின் பாராட்டைப் பெற்ற ‘துரிதம்’

இதுவரை தமிழ் சினிமாவில் பல ரோட் மூவிக்கள் வந்திருந்தாலும் அவை எதுவும் தமிழகத்தை மையப்படுத்தி வெளியானது இல்லை..

ஆனால் முதன்முறையாக அந்தக்குறையை போக்கும் விதமாக உருவாகியுள்ள படம் தான் துரிதம்.

இயக்குனர் ஹெச்.வினோத்தின் சீடர் இயக்குனர் சீனிவாசன் இந்த துரிதம் படத்தை இயக்கியுள்ளார்.

‘சண்டியர்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்த ஜெகன் இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கதாநாயகியாக மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்ற ஈடன் நடித்துள்ளார். கதாநாயகியின் தந்தையாக இயக்குனர் ஏ.வெங்கடேஷ், நாயகனின் நண்பனாக பாலசரவணன் மற்றும் பூ ராமு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, வில்லனாக ராமச்சந்திரன் (ராம்ஸ்) நடித்துள்ளார்.

புதியவரான நரேஷ் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய் மில்டனின் உதவியாளராக பணியாற்றிய வாசன் என்பவர் தான் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை நாகூரான் கவனிக்க, ஆக்சன் காட்சிகளை மணி என்பவர் வடிவமைத்துள்ளார்.

இந்தப்படம் உருவான விதம் குறித்தும், படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்தும் ஒரு தயாரிப்பாளராக படத்தின் நாயகன் ‘சண்டியர்’ ஜெகன் கூறும்போது, “உளுந்தூர் பேட்டையில் தங்கி, அங்கிருந்து சென்னை, மதுரை கோவை, சேலம் என அனைத்து திசையிலும் தினசரி பயணித்து படப்பிடிப்பு நடத்தினோம்..

குறிப்பாக வாகனங்கள் பரபரப்பாக சென்றுகொண்டு இருக்கும்போத லைவ்வாக படப்பிடிப்பு நடத்தினோம்.. இதில் ஒரு காட்சியை படமாக்கும்போது சிறிய தவறு நிகழ்ந்தாலும், ரீடேக் எடுப்பது தான் எங்களுக்கு சவாலான விஷயமாக இருந்தது. காட்சியை படமாக்கிய இடத்திற்கே திரும்பி வருவதற்காக மீண்டும் சில கிலோமீட்டர்கள் பயணித்து சுற்றிவர வேண்டி இருந்தது.

அதேபோல இப்படி ஒருமுறை மிகவும் சிரமப்பட்டு செலவு செய்து ரயில் சம்பந்தப்பட்ட காட்சி ஒன்றை படமாக்கினோம்.. ஆனால் அந்த காட்சியை ஹார்ட் டிஸ்க்கில் காபி பண்ணிவிட்டோம் என நினைத்து தவறுதலாக அழித்து விட்டார்கள். மீண்டும் செலவு வேண்டாமே என்கிற எண்ணத்தில் அதை எப்படியாவது வேறு விதமாக மேட்ச் பண்ணிவிடலாம் என இயக்குனர் கூறினார்.

ஆனால் செலவானாலும் பரவாயில்லை என மீண்டும் அந்தக்காட்சியை மறுநாள் படமாக்கினோம்.

இந்தப்படத்தை முடித்ததும், இயக்குனர் ஹெச்.வினோத்திடம் படத்தை போட்டு காட்டினோம்.. படம் பார்த்துவிட்டு நன்றாக வந்திருப்பதாகபாராட்டினார். மேலும், தான் சதுரங்க வேட்டை படம் எடுத்தபோது கூட, பலதரப்பட்ட கருத்துக்களை சொன்னார்கள். அதன் பிறகு தியேட்டர் சூழ்நிலையில் பொதுமக்கள் மத்தியில் வரும் போது மிகவும் பாராட்டப்பட்டது.

அதனால் படம் எப்படி வந்துள்ளது என்கிற கருத்துக்களை தெரிந்துகொள்ள நினைத்தால் பொதுமக்களை அழைத்து தியேட்டரில் திரையிட்டு அவர்களது கருத்துக்களை கேளுங்கள்.. அதுதான் சரியாக இருக்கும் என ஆலோசனையும் கூறினார்.

அதனால் வழக்கமாக சென்னையில் திரையுலகினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தை அழைத்து சிறப்பு காட்சியை திரையிட்டு காட்டுவதற்கு பதிலாக திருநெல்வேலி ஆலங்குளத்தில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் அந்தப்பகுதி மக்களை அழைத்து இந்தப்படத்தை திரையிட்டு காட்டினோம்.. எங்கள் வேலைக்கான அங்கீகாரம், அந்த சராசரி மக்களின் பாராட்டுக்களிலேயே கிடைத்தபோது இன்னும் நம்பிக்கை ஏற்பட்டது. சென்னையில் சிறப்பு காட்சி திரையிட்டபோதும் அதே ரிசல்ட் கிடைத்ததில் இன்னும் நம்பிக்கை ஆனோம்.

இதை தொடர்ந்து, இந்தப்படத்தை தியேட்டர்களில் தான் ரிலீஸ் செய்யவேண்டும் என முடிவு செய்தோம். விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்” என்று கூறினார் படத்தின் தயாரிப்பாளரும் ஹீரோவுமான ‘சண்டியர்’ ஜெகன்..

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

நடிகர்கள் ; ‘சண்டியர்’ ஜெகன், ஈடன், ஏ.வெங்கடேஷ், பாலசரவணன், பூ ராமு, ராமச்சந்திரன் (ராம்ஸ்) மற்றும் பலர்

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு ; ஜெகன்

இயக்கம் ; சீனிவாசன்

இசை ; நரேஷ்

ஒளிப்பதிவு ; வாசன்

படத்தொகுப்பு ; நாகூரான்

ஆக்சன் ; மணி

மக்கள் தொடர்பு ; KSK செல்வா

‘Valimai’ director praised ‘Duritham’ movie

துரிதம்

More Articles
Follows